PDA

View Full Version : ஓகனேக்கல்: தமிழகத்திற்கு கன்னட அமைச்சர்கள் கெடு!



ராஜா
30-03-2008, 12:30 PM
http://www.hogenakkal.com/hogenakkal_falls_main.jpg


பெங்களூர்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு ஏப்ரல் 9ம் தேதிக்குள் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் ஒரு தமிழக பேருந்தையும் கர்நாடகத்திற்குள் விட மாட்டோம். தமிழ் டிவி சானல்களை தடுத்து நிறுத்துவோம், தமிழ்ப் படங்கள் திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஓகனேக்களை தங்களது மாநிலத்திற்குச் சொந்தமானது என்று கன்னட அமைப்புகள் வீம்பாக கூறி வருகின்றன. இதுதொடர்பாக அவ்வப்போது ஓகனேக்கலுக்குள் நுழைந்து போராட்டமும் நடத்தி வந்தன.

இந்த நிலையில் புதிதாக ஒரு மிரட்டலை கன்னட அமைப்புகள் விடுத்துள்ளன. இதுகுறித்து கன்ன ரக்சன வேதிகே என்கிற கன்னட அமைப்பின் தலைவர் நாராயண கெளடா பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏப்ரல் 9ம் தேதி வரை தமிழக அரசுக்குக் கெடு விதிக்கிறோம்.

அதற்குள் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். கர்நாடக மக்களின் எதிர்ப்புக்கு மாறாக தமிழக அரசு இந்தத் திட்டத்தை அமல்படுத்த முனைகிறது.

பிரச்சினைக்குரிய இடத்தில் அவசரம் அவசரமாக இவ்வாறு குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்த நினைப்பது கண்டனத்துக்குரியது. எனவே இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறுத்தாவிட்டால், கர்நாடகத்திற்குள் ஒரு தமிழக பேருந்தையும் நுழைய விட மாட்டோம். தியேட்டர்களில் தமிழ்ப் படங்களைத் திரையிட விடாமல் தடுத்து நிறுத்துவோம். கர்நாடகம் முழுவதும் தமிழ் டிவி சேனல்கள் தடை விதிக்கப்படும் என்று அவர் மிரட்டலாக தெரிவித்தார்.

Source: Oneindia

சிவா.ஜி
30-03-2008, 12:38 PM
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்......

சுகந்தப்ரீதன்
30-03-2008, 12:50 PM
ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறுத்தாவிட்டால், கர்நாடகத்திற்குள் ஒரு தமிழக பேருந்தையும் நுழைய விட மாட்டோம். தியேட்டர்களில் தமிழ்ப் படங்களைத் திரையிட விடாமல் தடுத்து நிறுத்துவோம். கர்நாடகம் முழுவதும் தமிழ் டிவி சேனல்கள் தடை விதிக்கப்படும் என்று அவர் மிரட்டலாக தெரிவித்தார்.
Source: Oneindia

கண்டிப்பா இந்தியாவோட இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்காமா விடமாட்டாங்க போலிருக்கு இந்த கர்நாடக அரசியல்வாதிகள்..!! தமிழர்களுடன் வேற்றுமை பாராட்டுவதில் மட்டும் இந்த கார்நாடக அரசியல்வாதிகளிடம் எத்தனை ஒற்றுமை என்று பாருங்கள் தமிழ்நாட்டு மக்களே..?!

தங்கவேல்
30-03-2008, 01:20 PM
அரசியலில் சூடு ஏத்த இந்த அறிக்கை. இதற்கு எத்தனை பேர் பலியாகப் போகின்றார்கள் என்பது தான் விடை. பலி முடிந்தவுடன் தானாகவே சரி ஆகிவிடும் இந்தப் பிரச்சினை.
எந்த ஆத்மாக்கள் வாழ்க்கையில் இருந்து விடுபட போகின்றனவோ தெரியவில்லை. அறிக்கை விடும் அரசியல் வாதிகளுக்கு அவர்களின் மேல் உள்ள கேசுகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடும்.

அன்புரசிகன்
30-03-2008, 02:38 PM
மூஞ்சூறு தான் போகமுடியவில்லை. இதில் விளக்குமாற்றையும் எடுத்துச்சென்ற கதை தான் இது...

வெளிநாடுகளின் ஒவ்வொரு இந்தியனும் படும் இன்னல்கள் (இந்தியன் மட்டுமல்ல தெற்காசியன் எனலாம்) அவற்றை தீர்த்துவைக்க உயர் தூதுவராலயங்கள் எந்த நடவெடிக்கையும் எடுக்காது. இங்கே கன்னடம் மலயாளம் தமிழ் என பலரும் வேதனைப்படுகின்றனர். அதுக்காக எவராவது கொடி தூக்கினால் பரவாயில்லை.

இங்கே ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரருக்கு ஓரு பிரச்சனை என்றால் அவர்களது வெளிநாட்டு தூதுவர்கள் முதல் இந்நாட்டு மன்னர் உளவுத்துறைவரை (EMIR CID) அனைவரும் சூழ்ந்துவிடுவர். ஆனால் இலங்கை இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் நாட்டுக்காரருக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒருவரும் திரும்பியும் பார்க்கமாட்டார்கள்.

என்று தான் தீருமோ இந்தப்பிரச்சனைகளும்..............