PDA

View Full Version : கடலோரக் குற்றங்கள்-நிறைவு



சிவா.ஜி
30-03-2008, 11:30 AM
பாகம்-1

1917..........வியாபாரத்துக்கு வந்த ஆங்கிலேயர்கள்...ஆட்சியாளர்களாகி போட்டுக்கொண்டிருந்த ஆட்டமெல்லாம்...ஆட்டம் கண்டுகொண்டிருந்த காலம். அவசர அவசரமாய் கொள்ளையடித்த பொருட்களையெல்லாம் ஏறக்கட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்த ஆஸ்திரேலியாவுக்கும் ஒரு பகுதியை அனுப்பிவைக்க தீர்மானித்த மகாராணி அரசாங்கம்...இந்தியத் தங்கத்தை கப்பலேற்றி அனுப்ப முடிவு செய்தது.ஆனால் உலகநாடுகளின் பார்வைக்கு இவர்களின் திருட்டுபுத்தி தெரியக்கூடாது என்பதற்காக அதை ரகசியமாய் செய்ய முடிவெடுத்தனர். கப்பல் தயாரானது. கேப்டன் ரஸ்ஸலும்,உடன் பாதுகாப்புக்கு கப்பற்படை அதிகாரி ராபர்ட் ஸ்டீவும் அவருடைய ஒரு பிரிவு வீரர்களும் ரகசியமாய் தயார்படுத்தப்பட்டனர். மும்பையிலிருந்து புறப்பாடு என ஏற்பாடு.

சரக்கு ஏற்றும் பகுதி...இரண்டு அடுக்குகளாக பிரிக்கப்பட்டு...உள் அடுக்கில் டன் கணக்கில் இருந்த தங்கப் பெட்டிகளும்,அதனைச் சுற்றி வெளி அடுக்கில் பார்ப்பவர்களுக்காக பருத்திப் பஞ்சு மூட்டைகளும் ஏற்றப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.ராணுவ வீரர்கள் சாதாரண கப்பல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டார்கள்.எல்லாம் மிகச் சரியாகத் திட்டமிடப்பட்டதும் பயணத்துக்கான நாள் குறிக்கப்பட்டது.

பணியாளர்களுக்கு உணவு சமைக்கும் வேலையில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்கு ஆஸ்தான உதவியாளராக..மருதமுத்து. இருவரும் தென்கோடி பகுதியான நாகர்கோவில் பகுதியான குளச்சலைச் சேர்ந்தவர்கள்.மிக ரகசியமாக ஏற்றப்படும் சரக்கு இன்னதென சுந்தரலிங்கத்தால் முதலில் விளங்கிக்கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் அந்தக் காரியத்தின் ரகசிய செயல்பாடுகள் அவருக்கு சந்தேகத்தை தோற்றுவித்தது.கப்பலின் உள்ளே சர்வ சுதந்திரத்துடன் உலவும் அனுமதி பெற்றவரென்றாலும்...சரக்கு ஏற்றும் சமயத்தில் அவரையும்,அவருடைய உதவியாளர்களையும் உள்ளே அனுமதிக்காததிலிருந்து மிக முக்கியமான...மிகவும் மதிப்புள்ள பொருளை இந்தமுறை கொண்டுபோகிறார்கள் என்று யூகிக்க முடிந்தது.

அது தங்கப்பாளங்கள்தான் என்பதையும் அவர் தெரிந்துகொண்டார்....பெட்டிகளில் அடுக்கப்பட்டிருக்கிறது...கனமான பூட்டும் போடப்பட்டிருக்கிறது....அந்தவகைப் பூட்டுகளை ஆங்கிலேயர்கள் மிக விலையுயர்ந்த பொருட்கள் இருக்கும் பெட்டிகளுக்குத்தான் உபயோகப்படுத்துவார்கள். சாதாரணமாக இரண்டுபேரால் இலகுவாய் தூக்கிவிட முடிந்த அளவில் இருந்த அந்தப் பெட்டிகளை மிகக் கஷ்டப்பட்டு அவர்கள் தூக்கியதிலிருந்தும்,வழக்கமாய் பயணிக்கும் வேலையாட்கள் மாற்றப்பட்டு புதிய ஆட்களை தயார்படுத்தியதிலிருந்தும்,அந்த புதுமுகங்களெல்லாம் கப்பற்படையைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களது நடவடிக்கைகளிலேயே தெரிந்ததாலும்...சர்வ நிச்சயமாய் சுந்தரலிங்கத்தால் அதை யூகிக்கமுடிந்தது.

அந்த நிமிடம்வரை அவருடைய மனதில் எந்த திட்டமும் இல்லை. ஆனால் போகும் வழியை கேப்டன் அவர்களுக்கு விளக்கிச் சொன்னபோதுதான்...மெல்ல அந்த திட்டம் அவருடைய மனதில் உருவானது.இலங்கையைச் சுற்றிக்கொண்டு போகவேண்டி இருந்ததால்...கப்பல் செல்லும் பாதையிலிருந்து ...தான் சர்வ சகஜமாய் புழங்கிக்கொண்டிருந்த கடல் பகுதி அருகில்தான் இருக்கும் என்பதை கணக்கிட்டு....திட்டத்தை உருவாக்கினார். தன் ஆஸ்தான உதவியாளரான மருதமுத்துவுக்கு அந்த திட்டத்தைச் சொன்னதும்...அவனுக்கு கை,காலெல்லாம் நடுங்கத்தொடங்கிவிட்டது.சாத்தியமா...இல்லை சாவு நிச்சயமா...என்று உதறலுடன் சுந்தரலிங்கத்தைக் கேட்டான்.

துணிந்தவனுக்குத் துக்கமில்லை....கவலைப்படாதே எல்லாம் நல்லபடியாக நடக்குமென்று அவனுக்கு தைரியம் சொல்லிவிட்டு...தனது திட்டத்தின் அடுத்த பகுதியை விளக்கினார்.


தென்தமிழகம்

குளச்சல் ஒரு கடலோர கிராமம். அந்த கிராமத்து வாலிபன் பாண்டியன், திடகாத்திர வாலிபன்.சுந்தரலிங்கத்தின் உறவுக்காரனென்றாலும் மிக நெருங்கிய நன்பன். அந்த வட்டாரத்தில் அவனுடைய துணிச்சலுக்கு நல்ல பேர் இருந்தது.கையில் ஒரு கடிதத்தை வைத்துக்கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.அது சுந்தரலிங்கத்திடமிருந்து வந்திருந்தது.தங்களுக்குப் பழக்கமான அந்தக் கரைப்பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு, குறிப்பிட்ட தினத்தில் நள்ளிரவுக்கு மேல் வந்து நிற்குமாறும்...நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள சில பொருட்களை ஏற்றிச் செல்ல ஏற்பாடையும் செய்யுமாறும்...எழுதிவிட்டு...பின் குறிப்பாக..நம்மிடமிருந்து எடுக்கப்பட்ட பொருளை நாமே திரும்ப எடுத்துக்கொள்வது திருட்டு அல்ல...அதனால் நான் கொண்டுவரும் பொருளைப் பற்றின
தவறான சந்தேகம் வேண்டாம்.ஆனால் சந்தேகமே இல்லாமல் நம் வாழ்க்கையை இது உயர்த்தும்.மிக எச்சரிக்கையாய் நடந்துகொள்.நான் அங்கு திரும்ப வந்த பிறகு பிரிட்டிஷார் என்னைத் தேடிக் கண்டுபிடித்து கொன்றுவிடுவார்கள்.என்
உயிரைப் பற்றிக் கவலையில்லை...ஆனால் நம் குடும்பமும்,மருதமுத்துவின் குடும்பமும் உன்னால்தான் காப்பாற்றப் படவேண்டும்.உன்னைத்தான் நான் வெகுவாக நம்பியிருக்கிறேன்....என்று எழுதியிருந்தது.

கடிதத்தை ஒன்றுக்கு மூன்றுமுறை படித்துப்பார்த்துவிட்டு..குழம்பிப்போனான். சுந்தரலிங்கம் கொண்டுவரப்போகிற பொருள் என்னவாக இருக்கும்,எப்படி அதைக் கரைவரைக் கொண்டுவரப்போகிறார்..அவர் வேலை செய்யும் கப்பல் வெள்ளைக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும், காவல் நிறைந்திருக்கும் அத்தனையையும் மீறி எப்படி அவரால் இதை சாதிக்க முடியும் இப்படி பலவேறான சந்தேகங்கள் கேள்விகளாய் குடைந்தன. தன் உயிருக்கே ஆபத்து வரும், நிச்சயம் இறக்கவேண்டிவரும் என்று அவரே சொல்வதைப் பார்த்தால் மிக மிக ஆபத்தான ஒரு காரியத்தில்தான் இறங்கியிருக்கிறார் என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட வேலையில் என்னைத்தான் முழுதுமாக நம்புவதாகச் சொல்லியிருக்கிறாரே...எப்படி என்னால் அவருக்கு உதவமுடியும் என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டாலும்...அந்தக் கடிதத்தின் பின் குறிப்பு அவனை சமாதானப்படுத்தியது.

தன்னை நம்பி இந்தக் காரியத்தில் இறங்கிவிட்டார்...கண்டிப்பாக எந்த கஷ்டம் வந்தாலும் இதில் அவருக்குத் துணையாக இருக்கவேண்டுமென உறுதி செய்துகொண்டு அந்தக் கடிதத்தை தன் நாட்குறிப்புப் புத்தகத்தில் மடித்து வைத்துவிட்டான். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோருக்கு அணில் உதவியாய் அவ்வப்போது சிலவற்றை செய்துகொண்டிருந்தான். அந்த நிகழ்வுகளை..பதித்து வந்த அந்த நாட்குறிப்பை...(நாட்குறிப்பென்றால் நாள்தோறும் அதில் எழுதும் பழக்கமில்லை. தன்னைப் பாதித்த நிகழ்ச்சிகளை,தனக்குத் தோன்றியதை...இப்படி அவ்வப்போது எழுதி வந்தான்.)மிகப் பத்திரமாக பாதுகாத்தான். அதனாலேயே அந்தக் கடிதத்தையும் அதனுடனே வைத்தான். அந்த நாட்குறிப்பை, பழம்பொருட்களைச் சேகரிக்கும் பழக்கத்தில் ஒரு நலிந்துவிட்ட சிற்றரசர் குடும்பத்தாரிடம் வாங்கிய ஒரு சின்ன அழகிய வேலைப்பாடுடன் கூடிய மிகப் பழைய காலத்து மரப்பெட்டியின் உள்ளறையில் வைத்தான்.

சுந்தரலிங்கம் குறிப்பிட்டிருந்த அன்றையதினம்......வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகு..மெல்ல வெளியேறினான் பாண்டியன். மங்கிய வெளிச்சத்தில் தெருவை சுற்றி நோட்டமிட்டான்.அந்த ஊரிலிருந்த அனைவரும் கடுமையான உழைப்பாளிகள்...அதுவுமல்லாமல் பட்டணத்தவர்களைப் போல அவர்களுக்கு கேளிக்கை என்பதெல்லாம் தினமுமல்ல... வருடம் ஒருமுறை நடக்கும் திருவிழாவும் தெருக்கூத்தும்தான். அதனாலேயே வெகு சீக்கிரமே கஞ்சியைக் குடித்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்துக்குப் போய்விடுவார்கள்.அப்படியே அன்றும் அனைவரும் உறங்கியிருந்தார்கள்.

எங்கோ ஒரு உழவுமாடு கத்தும் சத்தமும்,சில் வண்டுகளின் சத்தமும்,பஞ்சாரத்தில் அடைபட்டுருந்த கோழிகளின் குக்குர்குரும் தான் கேட்டது. வேகமாக அதே சமயம் சத்தம் வராமல் நடந்து ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த மாட்டுவண்டி இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். சக்கரங்களில் அவன் இட்டு வைத்திருந்த மசையால்..அதிக சத்தம் வராமல் அவை உருண்டன.வண்டியை ஓட்டிக்கொண்டு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். தான் கொண்டு வந்திருந்த மாட்டுவண்டியை ஓரமாக மறைவிடத்தில் நிறுத்திவிட்டு...ஒரு பாறையின் மேல் அமர்ந்தான். பலவித எண்ணங்கள் மனதில் ஓடினாலும்...எதோ ஒருவித பரபரப்பு உடலில் ஓடிக்கொண்டிருந்தது.

குறைந்த நிலா வெளிச்சத்தில் தண்ணீருக்கு மேல் தாவிய மீன்களின் மின்னல் வெட்டு மட்டும் அந்த கரிய கடலின் உடல்மீது தோன்றிக்கொண்டிருந்தது.காற்றில் சில்லிப்பு கூடியிருந்தது. நள்ளிரவைக் கடந்த சமயமல்லவா...ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு தயாராய் இருந்த மனது குளிரை உணரச் செய்யாததால்.....குளிர் உறைக்காமல்,தன் கண்முன்னாலேயே நிகழப்போகும் விபரீதத்தை அறியாமல்..பார்வையைக் கடல்மீதே பதித்து காத்திருக்கத் தொடங்கினான்.அலைகளின் ஓசை..வம்புபேசுபவர்களின் இரைச்சலைப் போல ஓயாது கேட்டுக்கொண்டிருந்தது.......


தொடரும்

செல்வா
30-03-2008, 07:52 PM
ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு தயாராய் இருந்த மனது குளிரை உணரச் செய்யாததால்.....குளிர் உறைக்காமல்,தன் கண்முன்னாலேயே நிகழப்போகும் விபரீதத்தை அறியாமல்..பார்வையைக் கடல்மீதே பதித்து காத்திருக்கத் தொடங்கினான்.அலைகளின் ஓசை..வம்புபேசுபவர்களின் இரைச்சலைப் போல ஓயாது கேட்டுக்கொண்டிருந்தது.......
ம் நல்ல துவக்கம் கொடுத்திருக்கிறீர்கள் அண்ணா.....
தொடருங்கள்...
சுந்தரலிங்கத்தின் திட்டம் என்ன?

தங்கப் பாளங்கள் ஆஸ்திரேலியா சென்று சேர்ந்ததா?

அந்த விபரீதம் என்ன?

விடைகளுக்காக காத்திருக்கிறோம்....
நெஞ்சில் . திடுக் திடுக்குடன்....

சிவா.ஜி
31-03-2008, 04:16 AM
நன்றி செல்வா.முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன்.சோதனை முயற்சிகளை நம் மன்றத்தில்தானே செய்யமுடியும்.கொட்டுகளையும்,முதுகுதட்டுகளையும் சமமான மனநிலையில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இங்குதானே கிடைக்கும்.

சிவா.ஜி
31-03-2008, 04:24 AM
பாகம்-2

2007ன் ஒரு மார்ச்சு மாதம்....சென்னை வெயில் மக்களை நனைத்துக்கொண்டிருந்தது.இதெல்லாம் ஒரு வெயிலா என அந்த மாநகரத்து மக்கள் வழிந்தோடும் வியர்வையையும் பொருட்படுத்தாமல்....நூற்றில் முப்பதுபேர் மற்ற எழுபது பேரை ஏமாற்ற ஆவலோடு ஓடிக்கொண்டிருந்தனர்.மஞ்சள்பையோடு வந்த பட்டிக்காட்டான்களும் மிட்டாய்கடைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.நாற்சந்திகளில் காவலர்கள் கப்பம் வசூலித்துக்கொண்டிருந்தனர்.வாலில் தீவைத்த மாடுகளைப் போல தண்ணீர் லாரிகள் அன்றைய பலி தேடி அசுர வேகத்தில் பறந்து கொண்டிருந்தன.சாவகாசமாக பள்ளியெழுந்து தாங்கள் இந்த உலகத்திலுள்ளோரில் வித்தியாசமானவர்கள் என்ற மிதப்பில் தரையிலிருந்து ஒரு அங்குலம் உயர பறந்து அலுவலகம் போய்க்கொண்டிருந்தனர் மென்பொருள் வல்லுனர்கள்.

இந்த சென்னை மாநகரத்தின் அண்ணா சாலையின் பின்பக்கமிருந்த ஏராள சந்துகளில் ஒரு சந்தில்தான் அந்த சேட்டுக்கடை இருந்தது.சேட்டின் பையன்கள் பிறந்து வளர்ந்ததே இந்த சிங்காரச் சென்னையில்தான் என்பதால் தமிழில் பிளந்து கட்டிக்கொண்டிருந்தார்கள்.சரளமாய் அவர்கள் உதடுகள்...த்தா...வை உச்சரித்துக்கொண்டிருந்தன.அது ஒரு புராதானப் பொருட்களை வாங்கி விற்கும் கடை.வெளியே நியாயத்தை ஷோரூமில் வைத்துவிட்டு உள்ளே குடோனில் அநியாயத்தை அடுக்கிவைத்திருந்தார்கள்.

ஏமாந்தவர்களிடமிருந்து மிகப் புராதானமான அரிய பொருட்களை அடிமாட்டுவிலைக்கு வாங்கி அதை புத்திசாலி வெளிநாட்டுக்காரனிடம் எக்கச்சக்கவிலைக்கு விற்றுக்கொண்டிருந்தார்கள்.ஒரு பெரிய கும்பலே இவர்களுக்காக நிழல் வேலைகளைச் செய்துவந்தது.கஸ்டம்ஸ் அதிகாரிகளிலிருந்து உள்ளுர் போலீஸ்வரை சேட்டுப் பணத்தில் சிக்கன் சாப்பிடாதவர்கள் யாருமில்லை.

இந்த மகா கனம்பொருந்திய கீர்த்திலால் சேட்டின் இளையமகன் கன்வர்லால்..அப்பாவை ஏப்பமிட்டுவிடுமளவுக்கு கிரிமினல் மூளைக்காரன்.கீர்த்திலால் இப்போதெல்லாம் பஜன் கீர்த்தனைகளில் பாவத்தைக் கரைத்துக்கொண்டிருக்கிறார்.வியாபாரத்தின் முழுபொறுப்பையும் கன்வர்லாலே ஏற்று நடத்திக்கொண்டு வருகிறான்.

அப்பாவோ முடிந்தவரை வன்முறைகளைத் தவிர்த்துவந்தார். ஆனால் மகன்...சாம,பேத,தானத்தையெல்லாம்...அவன் அமர்ந்திருந்த இலவம்பஞ்சு திண்டுக்கு கீழ் வைத்துவிட்டு அழுத்தமாய் அதன் மீது அமர்ந்துகொண்டு தண்டத்தை மட்டுமே சர்வசகஜமாய் செய்துவந்தான்.

அன்று கடையில் கன்வர்லால் இருந்தான்.பக்கத்தில் அடியாளின் அத்தனை லட்சணத்தோடு இரண்டுபேர் நின்றுகொண்டிருந்தார்கள்..

கஜா....தஞ்சாவூர் பக்கத்துல ஏதோ ஒரு வில்லேஜ்லருந்து கொண்டு வந்தீங்களே அந்த சிலை....அது நிஜமாவே 500 வர்ஷம் பழசான்ண்டா....நம்ம சேதுபாஸ்கர்...அதாண்டா..அந்த ஆர்கியாலஜியில இருக்கானே அவன்...ஹாங்...அவன்தான் சொன்னான்.நல்ல துட்டு கிடைக்கும் சேட்டுன்னான்.பார்ட்டிக்கும் சொல்லிட்டேன்.நாளைக்கு நைட் அம்பாள் பிரான்ஸ்க்குப் போகப்போறார்...நீங்கப் போய் அந்த கஸ்டம்ஸ் ஆளப் பாத்து சொல்லிட்டு வாங்க.சாலா அவன் ஒரு பேராசைப் புடிச்ச நாய்...என்ன ஏதுன்னு பொருளைப்பத்தி தோண்டித்தோண்டிக் கேப்பான்...வழக்கம்போல சிலைதான்...ஆனா..இது அவ்ளோபெரிய வேல்யூ இல்லாதது...பாண்டிச்சேரியிலருந்து போன ஒரு இந்து குடும்பத்துக்கு அது தேவைன்னு கேட்டதால அதை அனுப்பறோம் அப்படீன்னு மட்டும் சொல்லுங்க.புரியுதா.பேமெண்டுக்கு என்னைப் பாக்க வரவேண்டான்னு சொல்லிட்டுவாங்க.பொருள் போய் சேர்ந்ததும் தானா வந்துடுன்னு சொல்லிடுங்க.போனமுறைமாதிரி வந்து நிக்கப்போறான்....ஏற்கனவே புது கமிஷனருக்கு நம்ம மேல ஒரு கண் இருக்கு.....

சரி சேட்டு....நாங்க கிளம்பறோம்...
என்று உடனிருந்தவனையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

சிறிது நேரத்தில் மைக்கேல் உள்ளே வந்தான்.அவனுடன்..கெச்சலான தேகத்தில்...கருப்பாக இருந்த ஒரு இளைஞனும் வந்தான்.அவன் கையில் ஒரு மரப்பிடி போட்ட ஏதோஒரு ஜவுளிக்கடையின் சாக்குப் பை இருந்தது.

வாய்யா மைக்கலு....எங்க கொஞ்சநாளா ஆளக்காணோம்...வேலூரா,பாளையங்கோட்டையா...கிண்டலாக அவனை வரவேற்ற கன்வர்லாலை பார்த்து...

வெள்ளாடாத சேட்டு...என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருப்பவனைக் கண்ஜாடையில் காட்டி அடக்கி வாசி என்றான்.

சேட்டும் புரிந்துகொண்டு...சரி சரி தம்பி யாரு...

ஊருக்கு புத்சு சேட்டு...கையில ஒரு பொருளை வெச்சிகினு...உன் கடை அட்ரஸைக் கேட்டுகினு இருந்தாரு...அதான் கையோட புட்ச்சி இங்க வலிச்சிகினு வந்துட்டேன்.

எத்தினி கினு போடுவய்யா நீ...சரி..என்னப்பா எதுக்கு என் கடையை கேட்ட என்று அந்த வாலிபனைப் பார்த்துக் கேட்டான்.

அந்த தேகத்துக்கு ஏற்றார்போல சச்சின் டெண்டுல்கரைப் போன்ற மெல்லிய குரலில்..

ஒரு தடவை எங்க ஊருக்கு நீங்க வந்து எங்க தெருவுல இருந்த பெர்னாண்டஸ்கிட்டருந்து பழைய காலத்து காசு எல்லாம் வாங்கிட்டு போனீங்களே....என்றதும்

யோசித்துக்கொண்டே எந்த ஊருப்பா...

குளச்சல்ங்க....

குளச்சலா...ம்...ஹாங்...ஆமா..ஆமா.. அந்த கடலுக்குப் பக்கத்துல இருக்கற ஊர்தானே....நாகர்கோயிலுக்குப் பக்கத்துல இருக்கில்ல...ஞாபகம் இருக்கு...சொல்லு..

அவர்கிட்டதாங்க உங்க கடையைப் பத்தி விவரம் கேட்டுக்கிட்டு வந்தேன்.

ரொம்ப நல்லது...என்ன விஷயம்...உன்கிட்ட ஏதாவது அந்த மாதிரி பொருள் இருக்கா...

பதில் சொல்லாமல்...கையில் வைத்திருந்த பைக்குள்ளிருந்து அந்த அழகிய வேலைப்பாடோடிருந்த...சின்ன மரப்பெட்டியை வெளியில் எடுத்தான்.

இது எங்க தாத்தாவோடதுங்க.அவர் இறந்து பத்துவருஷமாச்சு...இதுவரைக்கும் அவர் ஞாபகமா இதை வெச்சிருந்தோம்.இப்ப குடும்பத்துல ஒரு கஷ்டம்.பெர்னாண்டஸ்தான் சொன்னாரு...இது ரொம்ப பழைய பெட்டிடா...இப்பவெல்லாம் இந்தமாதிரி கிடைக்காது...அன்னைக்கு என்கிட்ட அந்த பழைய காசெல்லாம் வாங்கிட்டுப் போனாரே அவர்கிட்ட இதைக் குடுத்தா நிறைய பணம் கொடுப்பார்ன்னு.பெட்டி மட்டுமில்லைங்க...இதுல அந்தக் காலத்து காசும் கொஞ்சம் இருக்கு....
என்று சொல்லிக்கொண்டே அதை கன்வர்லாலிடம் நீட்டினான்.

உட்கார்ந்த இடத்திலிருந்தே அதை வாங்கிப் பார்த்த கன்வர்லாலுக்கு அவனுடைய புராதானப் பொருள்களின் மீதிருக்கும் அனுபவம் சொல்லிவிட்டது...மிகப் பழமையானதுதானென்று.உடனே அவனுடைய வியாபாரமூளை கணக்குப் போடத் துவங்கிவிட்டது.இதைப்போல பெட்டிகளின் மீது ஐரோப்பியர்களுக்கு மிகுந்த மோகம் என்பதால் நல்ல விலைக்குப் போகும்.அதே சமயம் ஏதோ நாணயங்களைப் பற்றி வேறு சொல்கிறானே.... எப்படிப்பட்ட நாணயங்கள் பார்க்கலாமென்று திறந்தான்.

பெட்டி வெளியில் தெரிந்ததைவிட உள்ளே சிறிதாக இருந்தது.அத்தனைக் கணத்திலா மரத்தை உபயோகித்திருப்பார்கள்...ஆனால் அந்த அளவுக்கு அதன் எடையும் அதிகமாகத் தெரியவில்லையே...ஒருவேளை இதுதான் இந்தப் பெட்டியின் சிறப்பம்சமோ என்று நினைத்துக்கொண்டே அந்த நாணயங்களை கையில் எடுத்துப்பார்த்தான்.பழங்கால தமிழ் எழுத்துகள் தெரிந்தது.உடனே தன் அருகில் இருந்த இழுப்பறையைத் திறந்து ஒரு புத்தகத்தை வெளியில் எடுத்தான்.அது ஆர்கியாலஜி சம்பந்தப்பட்ட இதழ்களின் தொகுப்பு.

அதில் பழங்காலத்து இந்திய நாணயங்களின் படங்கள் அச்சிடப்பட்டு..விவரங்களும் எழுதப்பட்டிருந்தன.கையிலிருந்த நாணயத்தையும் பார்த்துவிட்டு பக்கங்களிலிருந்த நாணயங்களின் படங்களையும் பார்த்துக்கொண்டு வந்தவன்...அந்தப் பக்கத்திற்கு வந்ததும் இன்ப அதிர்ச்சியில் திகைத்துப்போனான்.இவை பாண்டியர் காலத்து நாணயங்கள்.மிக அரிதாகக் கிடைப்பவை.இன்றைக்குக் காலை ஜான்வி முகத்துல விழித்தது நல்லதாகவே இருக்கிறதே...ஒரு மாக்கான் மாட்டியிருக்கிறான்.அடிமாட்டு...ம்ஹீம்..அடி ஆட்டு விலைக்கு வாங்கிவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்துக்கொண்டு....

அடடா....இது ரொம்ப பழசு இல்லையேப்பா...இதுக்கு அவ்ளோ காசும் கிடைக்காதே...அதுவுமில்லாம இந்தப் பெட்டியும் அழகான வேலைப்பாடு இருக்கே தவிர அந்த ஆண்டிக் வேல்யு...அதாவது புராதான மதிப்பு அவ்ளோ இல்லையே...என்ன செய்யலாம்...என்று சொல்லிவிட்டு அந்த வாலிபனின் முகத்தைப் பார்த்தவனுக்கு கொஞ்சமே கொஞ்சம் பாவமாக இருந்தது....அழுதுவிடுவான் போல இருந்தான் அந்த வாலிபன்.

பதைப்பதைப்புடன்...சார்...ரொம்ப நம்பிக்கையா வந்தேன் சார்.பஸ் செலவுக்குக்கூட கடன் வாங்கிட்டுதான் சார் வந்தேன்....

சரி...சரி..உன்னப் பாத்தா பாவமாத்தான் இருக்கு....இந்த மாதிரி பொருளுக்கெல்லாம் நான் வழக்கமா 5 ஆயிரமோ 6 ஆயிரமோத்தான் தருவேன்...உனக்காக 10 ஆயிரம் தரேன்..சந்தோஷமா....

ஒன்றுக்கும் உதவாத நாணயங்களுக்காக பெர்னாண்டஸுக்கு மூவாயிரம்தான் கொடுத்திருக்காரு, எனக்கு பத்தாயிரம் கிடைக்குதே என சந்தோஷத்தோடு ரொம்ப நன்றி சார்....என்றான்.

சிறிதளவும் மனசாட்சியின்றி பத்தாயிரம் எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு...

ஆமா உங்க தாத்தாவுக்கு இதெல்லாம் எப்படி கிடைச்சது..?என்று கேட்டதும்,

அவரு அந்தக்காலத்துல சுதந்திரப் போராட்டத்துல கலந்துகிட்டு வெள்ளக்காரங்களுக்கு எதிரா நிறைய போராட்டமெல்லாம் செஞ்சிருக்கார்.அப்பவே அவருக்கு இந்த மாதிரி பொருளெல்லாம் சேகரிக்கறது பொழுதுபோக்கா இருந்துதாம்.எங்க பாட்டி சொல்வாங்க..
ஆனா சொத்துதான் எதுவும் சேக்காம செத்துப்போய்ட்டார்.

ஆமா எந்த உண்மையான சுதந்திரபோராட்ட தியாகிங்க சொத்து சேத்திருக்காங்க இவரு சேக்கறதுக்கு..சரி அவர் பேர் என்ன...?

பாண்டியன் சார்...

தொடரும்

மதி
31-03-2008, 05:56 AM
அட்டகாசமா போகுது தொடர்...
கலக்கல்..
தொடருங்கள்..

சிவா.ஜி
31-03-2008, 08:22 AM
நன்றி மதி.குறைகளையும் தயவுசெய்து சொல்லுங்கள்.நல்ல படிப்பாளிகள் இருக்கும் இந்த மன்றத்தில் எழுதுகிறேன் என்ற அச்சத்தோடுதான் எழுதுகிறேன்.

சிவா.ஜி
31-03-2008, 11:20 AM
பாகம்-3

1917........
அந்த குளிரான இரவில் பாண்டியன் காத்துக்கொண்டிருந்த நேரத்தில்....அரபிக்கடலில் அந்த தங்கம் சுமந்த கப்பல் சீரான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. ஆஸ்தான சமையல்காரரான சுந்தரலிங்கத்துக்கு அன்று வேலை அதிகமாக இருந்தது. கூடுதலாக ஒரு வேலையும் இருந்தது. மருந்து கலக்கும் வேலை. இரவு உணவுக்கு முன் கண்டிப்பாக சூப் சாப்பிடும் அந்த வெள்ளைக்காரர்களின் பழக்கம் அவருடைய திட்டத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. சாப்பிட்ட சிறிதுநேரத்தில் ஆழ்ந்த உறக்கத்துக்கு...கிட்டத்தட்ட மயக்கநிலைக்குக் கொண்டுபோகும் அந்த மருந்தை சூப்பில் கலந்தார்.

வெகு எச்சரிக்கையாக கேப்டன் மற்றும் அவருடைய இரண்டு உதவியாளர்களின் உணவில் கலக்கவில்லை.அவர்கள் சரக்கு இருக்கும் பகுதிக்கு வர வாய்ப்பில்லை என்பதை நன்கு தெரிந்துகொண்டதாலும்,அவர்கள் இல்லாமல் கப்பல் பயணிக்காது என்பதாலும் அப்படி செய்தார். படைவீரர்களுக்கான உணவில் சூப் மட்டுமல்லாது மற்ற உணவிலும் அதைக் கலந்தார். உள்ளுக்குள் ஒரு பயப்பந்து உருண்டுகொண்டிருந்தாலும் வெகு சாமர்த்தியமாக அதை மறைத்துக்கொண்டிருந்தார். மருதமுத்துவுக்குத்தான் அந்த பக்குவம் இன்னும் வரவில்லை. இவனது நடுக்கமே நம்மைக் காட்டிக்கொடுத்துவிடப்போகிறதோ என அச்சம் ஏற்பட்டு அவனை தனியாக அழைத்து தைரியம் சொன்னார். அவனது நடுக்கம் வெகுவாகக் குறைந்தாலும்...லேசான தடுமாற்றம் அவன் செயல்களில் இருந்தது.

கேப்டனின் உதவியாளர்களை உணவுபற்றி விசாரிக்கும் சாக்கில் அந்த சுக்கான் இருந்த அறைக்குப் போய் தங்களுடைய இலக்கு இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறதென்று தெரிந்துகொண்டார். சரியான சமயம் இதுதான் என்று பரபரப்போடு உணவைத் தயார் செய்து அனைவரையும் மேசைக்கு அழைத்தார். எதிர்பார்த்ததைப்போல...அதிகாரிகள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு,ஏற்றிக்கொண்ட போதையாலும்,சுந்தரலிங்கத்தின் மருந்தாலும் வெகு சீக்கிரமே உறங்கிவிட்டார்கள்.

மருதமுத்துவிடமும்,மற்ற சமையல் உதவியாளர்களிடமும் வீரர்களுக்கு உணவு பறிமாறுமாறு சொன்னார். பின் தங்கள் உதவியாளர்களையும் அதே உணவைச் சாப்பிடச் சொல்லிவிட்டு, இவரும் மருதமுத்துவும் பேருக்குச் சாப்பிட்டார்கள். இரவுமுழுவதும் விழித்திருக்கவேண்டிய வீரர்களும் அப்படி அப்படியே சாய்ந்தார்கள். மருதமுத்துவை..ஒவ்வொரு அறையாய்ப் போய் எல்லோரும் உறங்கிவிட்டார்களா என்று உறுதி படுத்திக்கொண்டு சரக்கு இருக்கும் இடத்துக்கு வந்துவிடும்படி சொல்லிவிட்டு,சரக்கு வைக்கும் பகுதிக்குப் போனார்.

ஒரு நிமிடம் நின்று அதை நோட்டம் விட்டவர்,மருதமுத்து வந்து சேர்ந்த உடனே...வெளியே இருந்த பஞ்சுப்பொதிகளை மாற்றி வைத்துவிட்டு தங்கம் நிறைந்திருக்கும் அந்த கனமான பெட்டிகளை தூக்கிப்பார்த்தார். ஒவ்வொன்றும் எப்படியும் நூறு கிலோ எடை இருக்குமென்று அவருடைய மூளை கணக்குப்போட்டுவிட்டது. இவற்றை சுமந்து செல்லப்போகும் லைஃப் போட் என்று சொல்லப்படும் அவசரகால படகு 500 கிலோவுக்குமேல் தாங்காது என்பதால் ஐந்து பெட்டிகள் போதுமென்று தீர்மானித்தார். மருதமுத்துவை அழைத்து...இருவருமாக ஐந்து பெட்டிகளையும் அந்த படகுக்கு அருகில் ஒவ்வொன்றாய் வேகமாக..கொண்டு வந்து சேர்த்தார்கள்.


இவர்கள் பெட்டிகளை இடம் மாற்றிக்கொண்டிருந்த அதே சமயம்...கேப்டன் தன் அறையிலிருந்தபடியே அவரது உதவியாளரை அழைத்தார். அவனிடம் நீ போய் சுந்தரலிங்கத்திடம் சொல்லி ஸ்டராங்காய் ஒரு ப்ளாக் டீ கலந்து எடுத்துக்கொண்டு வா என்றார். அவன் மீண்டும் சுக்கான் இருந்த பகுதிக்குப் போய் மற்றவனிடம் கவனமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சுந்தரலிங்கத்தைத் தேடி அவரது அறைக்குப் போனான்.

சுந்தரலிங்கமும்,மருதமுத்துவும் அந்த ஐந்து பெட்டிகளையும் அங்கே கொண்டு வந்து சேர்ப்பதற்குள் வெகுவாகக் களைத்துப் போய் விட்டார்கள். சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு...மீண்டும் தம் கட்டி அந்தப் பெட்டிகளைத் தூக்கி தொங்கவிடப்பட்டிருந்த அந்த படகில் ஏற்றினார்கள். அலைகளின் தாளத்தில் ஆட்டம் போட்ட கப்பலின் அந்த ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து பெட்டிகளை தொங்கும் படகில் ஏற்ற மிக சிரமப்பட்டார்கள். பின் தங்களுடைய எல்லா உடமைகளையும் எடுத்துக்கொண்டு படகுக்கு வந்து சேர்ந்தார்கள்.

அந்தப் படகை நீர்மட்டத்துக்கு கொண்டுபோக உதவியாக இருக்கும் விசையை இயக்கினார்கள். படகு மெதுவாக கீழே இறங்கத்தொடங்கியது. மருதமுத்துவை அதனுள் ஏற்றிவிட்டு,சிறிது தாமதித்து அதே சங்கிலியைப் பிடித்துக்கொண்டு அதனுள் இறங்க தீர்மானித்திருந்தார் சுந்தரலிங்கம்....படகு நான்கு அடி கூட இறங்கியிருக்காது....சட்டென்று ஏதோ அசைவு தெரிய திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தார் சுந்தரலிங்கம்...

அருகில் அந்த கேப்டனின் உதவியாளன் நின்றிருந்தான்.


தொடரும்

மதி
31-03-2008, 01:08 PM
கதையோட்டம் நன்றாக இருக்கு...மேலும் தொடருங்கள்..சிவாண்ணா

சிவா.ஜி
31-03-2008, 01:13 PM
தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி மதி.

lolluvathiyar
31-03-2008, 01:51 PM
ஆகா இப்பதான் இதை கவனித்தேன் அதற்க்குள் 3 பாகம் முடித்து விட்டீர்கள். இது போன்ற கதை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதை நான் சொல்ல வேன்டியதே இல்லை. காரனம் உங்களுக்கே தெரியும் ஆர்கியாலாஜி, வரலாறு கலந்தாலே எனக்கு கொள்ளை பிரியம். மேலும் திர்லிங்கையும் கல்ந்து அடிக்கிறீர்கள். என்ன கதை மிக வேகமாக போய் கொன்டிருகிறது. பாராட்டுகள் சிவாஜி
அடுத்த பாகத்துக்கு ஆவலுடன் காத்திருகிறேன்

சிவா.ஜி
31-03-2008, 02:04 PM
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி வாத்தியார்.நீங்கள் அடிக்கடி வருவதில்லை..அதுதான் உங்கள் கண்ணில் படவில்லையென்று நினைக்கிறேன்.வேலைப்பளு அதிகமோ?

சிவா.ஜி
01-04-2008, 05:17 AM
பாகம்-4

அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது.அவனை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. திகைத்து நின்றவரிடம் அவன்,என்ன செய்கிறீர்கள் இங்கே என்று கேட்டுவிட்டு எட்டிப்பார்த்தவன்..படகையும்,மருதமுத்துவையும் பார்த்ததும் அவசரமாய் தன் கைத்துப்பாக்கியை எடுக்க முயற்சித்தான். திகைத்து நின்ற சுந்தரலிங்கம் உடனடியாய் சுதாரித்துக்கொண்டு அவன் மேல் அசுர வேகத்தில் பாய்ந்து அவனைக் கீழேதள்ளி...வாயைப் பொத்திக்கொண்டே தன்னிடமிருந்த கத்தியை எடுத்து அவன் தொண்டையில் ஆழமாக இறக்கினார்.

படகு கீழே இறங்கிக்கொண்டிருந்தது...தண்ணீரைத் தொட்டதும் இணைப்பு விடுவிக்கப்பட்டு கப்பலோடான தொப்புள்கொடி உறவு அறுந்துவிடும்...அதற்குள் இவன் துடிப்பும் அடங்கவேண்டுமே..கத்தி வெகு ஆழமாகப் பாய்ந்திருந்ததால் துடிப்பும் வெகுசீக்கிரம் அடங்கத் தொடங்கியிருந்தது. கத்தியை மீண்டும் ஒருமுறை அவனுடைய இதயத்தில் பாய்ச்சிவிட்டு இனி சந்தேகேமேயில்லாமல் இவன் இறந்துவிடுவான் என்று நம்பிக்கை வந்ததும்..அவனை அப்படியே விட்டு விட்டு கப்பலில் ஓரத்திற்கு வந்து எட்டிப்பார்த்தார். நல்லவேளை இன்னும் தண்ணீரைத் தொடவில்லை.

அங்கிருந்தே வெகு வேகமாகப் பாய்ந்து அந்தச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டே சரசரவென்று கீழிறங்கவும்,படகு தண்ணீரைத் தொடவும் சரியாக இருந்தது. படகு கப்பலுடனான தன் இணைப்பைத் துண்டித்துக்கொள்ள...இவர்களை பின்னால் விட்டுவிட்டு அந்த பெரிய கப்பல்...வேகமாக முன்னால் போய்க்கொண்டிருந்தது.

படகில் அமர்ந்துகொண்ட சுந்தரலிங்கம்...ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளிப்படுத்திவிட்டு...படகில் இருந்த உறுதியான கம்பிகளில் அந்த பெட்டிகளைக் கயிறைக்கொண்டு இறுக்கப் பிணைத்தார். அலையில் ஆடினால் சரிந்துவிழும் அபாயமிருந்ததால் அப்படிச் செய்தார். மருதமுத்துவைப் பார்த்தார். முகமெல்லாம் வெளிறிப்போய்....பயத்தில் வெலவெலத்துப் போயிருந்தான். ஆதரவாக அவனது கையைப் பிடித்த சுந்தரலிங்கம் கையில் எரிச்சலை உணர்ந்தார்.

பெட்டிகளைக் கட்டும்போதுகூட அந்த எரிச்சலை உணரவில்லை. சங்கிலியில் தொங்கிக்கொண்டு வந்ததால் தோல் கிழிந்து ரத்தமாக இருந்தது. பையில் வைத்திருந்த துணியை எடுத்து கைகளில் சுற்றிக்கொண்டு துடுப்பை எடுத்து..மருதமுத்துவிடம் ஒன்றைக்கொடுத்துவிட்டு...மற்றொன்றை தான் துணிசுற்றிய ககைகளில் வைத்துக்கொண்டு தண்ணீரை வேகமாகத் தள்ளத்தொடங்கினார். கால்சட்டைப் பையில் வைத்திருந்த திசைக்காட்டியை எடுத்துப் பார்த்ததில் அவர் போக வேண்டிய இலக்கு தெரிந்தது. வலியையும் பொருட்படுத்தாமல் வெகு வேகமாக துடுப்பை போட்டார்.

மருதமுத்துவும் திடகாத்திரமான ஆளென்பதால் இருவரின் துடுப்புப்போடுதலால் படகு நீரைக்கிழித்துக்கொண்டு முன்னேறியது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை ஆசையோடு பார்த்தார்கள். சாதித்துவிட்டோம் என்ற பெருமிதத்தில் இருவருக்கும் அச்சம் அகன்று முதல்முறையாய் சிரிக்க முடிந்தது.

சில மணி நேரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அன்றைய ஆங்கிலேய அரசாங்கம் அமைத்திருந்த தெரு விளக்குகளின் ஒளி மினுக்க கரை தென்படத்தொடங்கியது. இன்னும் இரண்டு மைல் தொலைவுதான் இருக்கும். இன்னும் சிறிது நேரத்தில் நம் இடத்தை அடையப்போகிறோம்....என்று நினைத்துக்கொண்டுஅந்தசமயத்தில்தேவைப்பட்ட...மிகமிக அவசியமான டார்ச் விளக்கை...பைக்குள் இருந்து எடுக்க பையைத் திறந்தார். பகீரென்றது.....அது அங்கு இல்லை.

இங்கிருந்து அதை அடித்துக்காட்டினால்தான் கரையிலிருக்கும் பாண்டியனும் அங்கிருந்து விளக்கை காண்பிப்பான். அப்போதுதான் சரியான இடத்துக்குப் போய்ச் சேர முடியும் என்பதால் அது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. துடுப்பை வைத்துவிட்டு எல்லா இடங்களிலும் தேடினார். படகின் மூலையில் இருந்தது. பையைக் கீழே போடும்போது அதிலிருந்து உருண்டுபோய் அங்கே விழுந்திருந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் அதை எடுத்துகொண்டு அதற்கு உயிர்ப்பூட்டினார்.

அணைத்து...எரித்து...அணைத்து...எரித்து...மூன்றுமுறை அவர் காட்டியதும்...கரையிலிருந்து அதே போல மூன்றுமுறை ஒளிர்ந்தது. சுந்தரலிங்கம் சந்தோஷத்தில் மருதமுத்துவை கட்டிப்பிடித்துக்கொண்டார். இதோ என் முன்னால் என் ஊரின் கரை..கரையில் பாண்டியன்.....வந்தே விட்டோம்..என்று பரவசத்துடன்..எழுந்து நின்றார்.

அதுவரை அமைதியாக வம்பு பேசிக்கொண்டிருந்த அலைகள் திடீரென்று பேச்சு வாக்குவாதமாகி...வாக்குவாதம் கைகலப்பில் வளர்ந்து...பின் வெட்டுக்குத்து அளவுக்குப் போய்விட்டது. வெகு ஆவேசமாய் அலைகள் அடித்துக்கொண்டன. அந்த ஆவேச அலைத்தாக்குதலில் ஏற்கனவே மிகுந்த பாரத்திலிருந்த அந்தப் படகு பேயாட்டம் போட்டது....இருவரும் தாயக்கட்டைகளாக உருட்டப்பட்டார்கள். எதைப் பிடிப்பது என இலக்கில்லாமல்..சுந்தரலிங்கம் கனத்த அந்தப் பெட்டியில் தலையை மோதிக்கொண்டதில் உடனடி மயக்கத்துக்குப் போனார்.

ஏற்கனவே பீதியில் இருந்த மருதமுத்து தலைவனைத் தொடரும் தொண்டனாக அவனும் மயங்கி விழுந்தான். முன்னிலும் பெரிதாய் ஒரு ராட்சஸ அலை மேலெழுந்து அந்தப்படகை கவிழ்த்து முற்றிலுமாக தண்ணீருக்குள் அமிழ்த்தியது...ஆழத்துக்கு கொண்டுபோனது......இரண்டுபேருமே கப்பலில் பணிபுரிந்ததால் நீச்சலில் சிறந்தவர்கள்தானென்றாலும்,குழந்தையாய் இருந்ததிலிருந்தே இந்தக்கடலில் நீந்தி விளையாடிவர்கள் தானென்றாலும்..அந்த நேரத்தில் அவை எதுவுமே அவர்களைக் காப்பாற்றவில்லை.

கவிழ்ந்த படகின் அடியில் இவர்கள்...இவர்களுக்குமேல் ஐந்து அதிகனமுள்ள பெட்டிகள்...வெகு வேகமாய் அவர்களை ஆழத்துக்கு அழைத்து சென்றது. அதிக செல்வம் ஆளை அழிக்குமென்பது இதுதானோ.....தங்கப் பெட்டிகளுடன் இரண்டுபேரும் ஜலசமாதியாகிவிட்டார்கள்

கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பாண்டியனுக்கு அலைகளின் கோரத்தாண்டவம் மட்டும்தான் தெரிந்தது. படகு அமிழ்ந்ததையோ,அது ஆழத்துக்குப் போனதையோ அவனால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை. சுந்தரலிங்கத்தின் டார்ச் படகோடு சேர்ந்து ஆடிய ஆட்டத்தை மட்டுமே அவனால் அந்த இருளில் காணமுடிந்தது. பின் அந்த ஆட்டமும் அடங்கிப்போனதும்...அவனால் யூகிக்க முடிந்தது...கடலரசனின் பசிக்கு இருவரும் பலியாகிவிட்டார்களென்பதை.

இருந்தும் உள்ளுக்குள் ஒரு நப்பாசை. படகு கவிழ்ந்தாலும்,இருவரும் நல்ல நீச்சல் வீரர்கள்,அதுமட்டுமல்லாமல்....இந்த பிரதேசம் முழுதுமே அவர்களுக்கு மிகப் பரிச்சயமானது...எப்படியும் நீந்தி வந்து விடுவார்களென்று காத்திருந்தான். நேரம் ஆக ஆக நிலை கொள்ளாமல் தவித்தான்........கடல்... குறும்பு செய்து விட்டு தான் எதுவுமே செய்யவில்லையே என நடிக்கும் சின்னப்பையனைப்போல அமைதியாக இருந்தது.

சேவல் சத்தம் கேட்பதற்குள் விழித்துக்கொள்ளும் பழக்கமுடைய கிராமத்தவர்கள். வெள்ளென எழுந்து அன்றைய வேலைகளுக்குத் தயாராவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அனைவரும் எழுந்துகொள்ளுமுன் வீடு போய்ச் சேர வேண்டுமென்று எண்ணிக் கொண்டு...மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டவன், மீண்டும்,மீண்டும் கடலையே திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டு வந்தான். அந்த இருவரும் இனி வரமாட்டார்கள் என்ற அதிர்ச்சியான உண்மையை சிரமத்துடன் ஒத்துக்கொண்டாலும்,அது தந்த வேதனையையை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

கலங்கிய மனதுடன்,சுந்தரலிங்கம் எதைக் கொண்டுவந்தார் என்பதையே தெரிந்துகொள்ளாமல்....அவரையும் கண்முன்னாலேயே இழந்துவிட்டு,தளர்ந்துபோய்....வீட்டுக்கு வந்தான். நல்லவேளை வீட்டிலிருந்தவர்கள் இன்னும் விழிக்கவில்லை.

வெளியே வேலைக்குப் போகாமல் சுணக்கத்துடன் இருக்கும் மகனை இதுவரை அவனைப் பெற்றவர்கள் பார்த்ததில்லை. அந்த அதிசயத்தை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவனிடமே...

என்னடா பாண்டியா...ஒரு மாதிரி இருக்கே..என்ன ஆச்சு..?எனக் கேட்டதும்,என்ன சொல்வது எனத் தெரியாமல் சற்று யோசித்துவிட்டு....

ஒண்ணுமில்ல...ராத்திரி நீங்கள்லாம் தூங்கினதுக்கப்புறமா..நம்ம கந்தசாமி வந்து அய்யா கூப்பிட்டனுப்பிச்சதா சொன்னான். சரி உங்களைத் தொந்தரவு செய்ய வேணாமேன்னு அப்படியே கிளம்பிப் போயிட்டேன். வெள்ளைக் காரங்க ஜெயில்லருந்து தப்பிச்சு வந்த ரெண்டு பேரை பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிகிட்டு போய் தங்க வைக்க வேண்டியிருந்தது. அதான் ராத்திரி முழுக்கத் தூக்கமில்ல. வேற ஒண்ணுமில்லம்மா...நீங்க போங்க...நான் கொஞ்சம் அப்படியே கண்ணசந்துட்டு...பொறவு வாரேன்...என்று அடிக்கடி அவன் செய்துகொண்டிருந்த ஒரு காரியத்தை அந்த நேர சமாளிப்புக்குப் பயன்படுத்திக்கொண்டான்.

அவர்கள் வேலைக்குப் புறப்பட்டு போனதும்,இரவு சம்பவங்களே அவனை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன. ஏதோ யோசித்தவனாக அந்த நாட்குறிப்பை எடுத்து தான் கண்ட அனைத்தையும் எழுதி முடித்தான். இந்த நாட்குறிப்பு இன்னும் பல வருடங்களுக்குப் பிறகு எத்தனையெத்தனை சம்பவங்களை உருவாக்கப்போகிறது என்பதை உணராமலேயே....அதனைப் பத்திரப்படுத்தினான்.

தொடரும்

செல்வா
01-04-2008, 06:02 AM
வெகு வேகமாய் அவர்களை ஆழத்துக்கு அழைத்து சென்றது.அதிக செல்வம் ஆளை அழிக்குமென்பது இதுதானோ.....தங்கப் பெட்டிகளுடன் இரண்டுபேரும் ஜலசமாதியாகிவிட்டார்கள்
இங்கே தொடரும் போடலாமோ என நினைத்தேன் ... நீங்கள் முடித்த இடம் பார்த்ததும் இதை விட அது நன்று எனத் தெளிந்தேன்...
விறுவிறுப்பா போகுது .. தொடருங்க....

அதெல்லாம் சரி அண்ணா.....

சாவகாசமாக பள்ளியெழுந்து தாங்கள் இந்த உலகத்திலுள்ளோரில் வித்தியாசமானவர்கள் என்ற மிதப்பில் தரையிலிருந்து ஒரு அங்குலம் உயர பறந்து அலுவலகம் போய்க்கொண்டிருந்தனர் மென்பொருள் வல்லுனர்கள்
ஏனிப்படி... ஒரு தாக்கு...

இதயம்
01-04-2008, 06:08 AM
கையை கொடுங்கள் சிவா முதலில்..!! அசத்தல் கதைக்கு என்னுடைய பாராட்டுக்கள்..!!!

பொதுவாக நேரமின்மையால் கதை படிப்பதில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. சிவா இந்த கதையின் கரு பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்ட போது மிகவும் அற்புதமாக இருந்தது. இதை அவசியம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இது பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்த பிறகு இந்த கருவை தொடர்கதையாக்கி வாசகர்களை கவரும் வகையில் அளிப்பாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது உண்மை. ஆனால், இது வரை வந்திருக்கும் 3 அத்தியாயங்களை படித்த வகையில் என் எதிர்பார்ப்பிற்கு மேலாகவே அருமையாக எழுதி அசத்தி வருகிறார் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. சிவாவிடம் முன்பு இருந்த கத்துக்குட்டி எழுத்தாளர் காலமாகி வெகுநாளாகிவிட்டதை இந்த கதையின் சரளமான ஓட்டம் தெளிவுபடுத்துகிறது. ஆங்காங்கே சிறு, சிறு லாஜிக் உதறல்கள் இருந்தாலும் இது ஒரு கற்பனை கதையே என்பதால் அவற்றை புறந்தள்ள வேண்டியது மிக அவசியம்.

எனக்கு பிடித்த நாவலாசிரியரான கோவை ராஜேஷ்குமாரிடம் ஒரு சிறப்பு இருக்கிறது. அவர் எழுதும் நாவல்களில் அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இருவேறு கதைகள் மாறுபட்ட கதாபாத்திரங்கள், கதைக்களனுட போகும். இறுதியில் அவை ஓரிடத்தில் இணைந்து கதையின் முடிச்சை அவிழ்த்து மிகவும் அழகாக கதை முடியும். அதே பாணியை சிவாவும் இந்த கதையில் பின்பற்றியிருப்பது மிகவும் இரசனைக்குரியது. ஆனால், அந்த பெரியவரின் பெயர் பாண்டியன் என்று சொன்னதன் மூலம் சஸ்பென்ஸ் முடிச்சை முன்பதாகவே அவிழ்த்தது கொஞ்சம் ஏமாற்றமே என்றாலும் குறைந்த அத்தியாயங்கள் கொண்ட இந்த கதையில் இது தவிர்க்க இயலாதது என புரிகிறது. அதே போல் பெரும் எதிர்பார்ப்புடன் தங்கம் கடத்தப்பட்டு பாண்டியனிடம் ஒப்படைக்க வந்த படகும், கூடவே கடத்தல் தங்கமும் சற்றும் எதிர்பாராமல் கடலுக்குள் ஜலசமாதியானது எதிர்பாரா முடிவு..! வரலாற்று நிகழ்வுடன் கற்பனையை புகுத்தி கதை படைத்திருப்பது புதுமையாக இருக்கிறது..!!

சிவாவின் எழுத்துக்களில் சமீபகாலமாக ஏகப்பட்ட முதிர்ச்சியை காண்கிறேன். அவர் ஒரு நல்ல கதை சொல்லியாக பரிமளித்துக்கொண்டு வருவதும் மிகவும் வரவேற்கத்தக்கது. ஒரு கதையை படிக்கும் போது அந்த கதையின் நிகழ்வுகள் காட்சிகளாய் விரிவது தான் ஒரு எழுத்தாளனின் வெற்றி..! இந்த கதையை படித்த போது என் மனக்கண்ணில் கப்பல், சேட்டுக்கடை, கடல், பாண்டியனின் வீடு என்று அத்தனை கதைக்களன்களும், கதை மாந்தர்களும் மனக்கண்ணில் காட்சிகளாய் விரிந்ததன் காரணம் சிவாவின் எளிய, சீரான எழுத்து நடையும், இயல்பான வர்ணனைகளும் தான். சிவா ஒரு எழுத்தாளராக அபார வெற்றி பெற்றுவிட்டார். அதுமட்டுமில்லாமல் கதை மாந்தர்கள் தங்கள் இயல்பு தாண்டி முரண்காட்டாமல் முழுதும் பொருந்தி உரையாடுவது மற்றுமொரு சிறப்பு. ஒரு சிறிய மாற்றம் அவசியம். உரையாடல்களை வர்ணனைகளோடு இணைக்காமல் தனித்தனியாக வரி, வரியாக எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஒரு எழுத்தாளனுக்கு கதை மட்டுமல்ல, அதை உண்மையான நிகழ்வு போல் தோற்றமளிக்க வைக்க பொது அறிவும் மிகவும் அவசியம். இந்த கதையில் சிவாவின் பொது அறிவையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இன்னொரு முக்கியமான விஷயம், எந்த ஒரு விஷயத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது அதில் வெற்றியடைவது உறுதி என்பது நிதர்சனம். இன்றைய வெற்றிகரமான எழுத்தாளராக பரிமளிக்கும் ராஜேஷ்குமார் விஞ்ஞானம், தொழில்நுட்பம், மருத்துவம், கணினியியல், வானயியல் துறை சார்ந்த கதைகளை எழுதும் போது அது தொடர்பானவர்களிடமிருந்து சரியான தகவல்களை பெற்று எழுதுவார். காசு கொடுத்து வாங்கி படிக்கும் வாசகன் பயனடைய வேண்டும் என்ற நல்லெண்ணம் + தொழில் பக்தியின் பிரதிபலிப்பு இது. அந்த அர்ப்பணிப்பை நான் சிவாவிடமும் காண்கிறேன். ஒரு கதையை எழுதுவதற்கு முன் அதற்கு தேவையான தகவல்கள், ஆதாரங்களை இணையத்திலிருந்து தேடி எடுத்தே எழுதுகிறார். ஒரு அற்புத எழுத்தாளர் உருவாகிக்கொண்டிருப்பதன் முன்னோட்டம் இது..!!

நான் அலுக்காமல் பத்தி, பத்தியாக எழுதுபவன் என்ற பெயர் மன்றத்தில் இருக்கிறது. 10 விரல்களையும் கொண்டு பத்தி, பத்தியாக நான் எழுதுவது பெரிய விஷயமில்லை. ஆனால் இரு விரல்களை மட்டும் கொண்டு தட்டச்சி இத்தனை சரளமாய் பெரிய கதையை எழுதியிருக்கும் சிவா என்னை வியக்க வைக்கிறார். அவரின் ஈடுபாடும், இரசனையும் மிகவும் பாராட்டிற்குரியது. எழுத்தாளன் தன்னுடைய எழுத்துக்களின் மூலம் தன்னை வெளிப்படுத்தாமல் இருக்கமுடியாது என்பது உண்மை. சிவாவின் இயல்புகளை அவர் எழுத்தின் நெடுகிலும் அதை உணர்ந்தேன். வர்ணனை, உரையாடல்களில் இருக்கும் மெலிதான நகைச்சுவை மாங்காய் கீற்றில் தடவிய உப்பு, மிளகாய் தூளாய் ருசித்தாலும் உண்மை காரமாய் உறைக்கிறது. தேசபக்தி இழையோடும் இந்த கதையை பெரும் உழைப்பு கொண்டு சிவா எழுதியிருந்தாலும் இக்கதைக்கு மன்றத்தினரின் பின்னூட்ட ஊக்கம் அதிகமில்லாதது கொஞ்சம் மன வருத்தமே..! அதற்கு அத்தியாயங்களின் நீளமும் காரணமோ என தோன்றுகிறது. அவற்றை பிரித்து இரண்டாக்கி போட்டிருந்தால் இன்னும் நிறைய பேரை படிக்க தூண்டியிருக்கும் என்பது எண்ணம். அது மட்டுமில்லாமல் கதையில் நிறைய திருப்பங்கள் இருப்பதால் இது கதையின் விறு விறுப்பை குறைக்காது. அதே போல் கதையில் இருக்கும் சில எழுத்துப்பிழைகளையும் நீக்கினால் இக்கதை பட்டை தீட்டிய வைரமாய் இன்னும் ஜொலிக்கும்.!

சிவா தன் படைப்புக்களை மற்றவர்களின் பாராட்டுக்காக மட்டும் எழுதாமல் தன் ஆத்ம திருப்திக்காகவும் எழுதுகிறவர் என்பது நான் அறிந்த உண்மை. அதனால் தான் அவரின் எந்த படைப்பும் சோடை போவதில்லை. அவருக்கு நம்மவர்களின் ஊக்கம் இல்லாவிட்டாலும் அவர் தன் பணியில் தளரப்போவதில்லை என்றாலும் நம்மை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் நல்ல பல கருத்துக்களை கொண்டு, பெரும் நேரத்தை பயன்படுத்தி எழுதியிருக்கும் இக்கதையை படித்து, நிறை குறைகளை தெரிவிக்க வேண்டியது நம் கடமை.!! ஏறக்குறைய அவரின் கதை அளவுக்கு என் பின்னூட்டம் நீ............ண்டு போய் விட்டாலும் என் மனதில் பட்டதை நான் எழுதியாக வேண்டும் என்று நினைத்ததால் அனைத்தையும் எழுத வேண்டியதாகிவிட்டது. கதையின் மற்ற பாகங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சிவா இன்னும் பல படைப்புகளை படைத்து உயர்வு பெற மனமாற வாழ்த்துகின்றேன்..!!

சிவா.ஜி
01-04-2008, 06:31 AM
அதெல்லாம் சரி அண்ணா.....

ஏனிப்படி... ஒரு தாக்கு...

மன்னிக்கவும் செல்வா...நான் ஊரில் இருந்தபோது சந்தித்த பெரும்பாலானவர்கள் இப்படித்தான் நடந்துகொண்டார்கள்.அது என்னை மிகவும் பாதித்ததால்தான் இப்படி எழுதிவிட்டேன்.நீங்களும் அதே துறையைச் சேர்ந்தவர் என்பதால் இது உங்களை சங்கடப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
01-04-2008, 06:38 AM
அத்தியாயங்களின் நீளமும் காரணமோ என தோன்றுகிறது. அவற்றை பிரித்து இரண்டாக்கி போட்டிருந்தால் இன்னும் நிறைய பேரை படிக்க தூண்டியிருக்கும் என்பது எண்ணம். அது மட்டுமில்லாமல் கதையில் நிறைய திருப்பங்கள் இருப்பதால் இது கதையின் விறு விறுப்பை குறைக்காது. அதே போல் கதையில் இருக்கும் சில எழுத்துப்பிழைகளையும் நீக்கினால் இக்கதை பட்டை தீட்டிய வைரமாய் இன்னும் ஜொலிக்கும்.!

மிக நீண்ட...அதே சமயம்...மிக மிக உற்சாகமளிக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கு மனம் நிறைந்த நன்றி இதயம்.நீங்கள் சொல்வது மிகச் சரி.கதை சொல்லும் ஆர்வத்தில் தட்டச்சத் தொடங்கி நீண்டுவிட்டது.உடனே பதித்துவிடும் என் வழக்கமான ஆர்வக்கோளாறால்..அதை பிரித்து இரண்டு அல்லது மூன்று பாகங்களாக்கிப் போடவேண்டுமென்று தோன்றவேயில்லை.இனி வரும் பாகங்களில் உங்கள் ஆலோசனைப் படி செய்கிறேன்.

கண்டிப்பாக எழுத்துப் பிழைகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன்.நீண்ட நாட்களுக்குப் பிறகு மன்றம் வந்த பின்னால்தான் தமிழில் நிறைய எழுதுவதால்...ன,ண..இவற்றில் எப்போதும் எனக்கு ஒரு குழப்பமான நிலையே இருக்கிறது.இயன்றவரை பிழையில்லாமல் எழுதுகிறேன்.
மீண்டும் என் மனமார்ந்த நன்றி.

சிவா.ஜி
01-04-2008, 06:42 AM
பாகம்-5

வீட்டுக்கு வந்தும் சேட்டுக்கு அந்த பெட்டி நினைவாகவே இருந்தது.தால் ரொட்டி சாப்பிடும்போதும்,மனைவி ஜான்வி மசாலா பான்பீடாவை மடித்துக்கொடுத்தபோதும்,தன் கனத்த உருவத்தை படுக்கையில் சாய்த்தபிறகும் கன்வர்லாலின் சிந்தனையெல்லாம் அந்தப் பெட்டியையே சுற்றிச் சுற்றி வந்தது. வெளியே தெரியும் அளவுக்கும்,பெட்டியைத் திறந்ததும் பார்த்ததும் தெரியும் அளவுக்கும் வித்தியாசமிருக்கிறதே.....என்ன மரமாக இருக்கும்...இரண்டு அடுக்குகளால் இடையில் வெற்றிடம் விட்டு செய்திருப்பார்களா?......அல்லது...அல்லது....ரகசிய அறை ஏதாவது இருக்குமா..பளிச்சென மின்னல் தாக்கியதைப்போல துள்ளி எழுந்து அமர்ந்தான். இவன் எழுந்த வேகத்தில் கட்டில் ஆடிய ஆட்டத்துக்கு உறங்கிக்கொண்டிருந்த ஜான்வி அலறியடித்துக்கொண்டு எழுந்தாள். பூகம்பம்தான் வந்துவிட்டதோ என்று.

க்யா ஜி...கொஞ்சம் மெதுவா எழக்கூடாதா....நான் பயந்தே போய்ட்டேன்..

இவள் சொன்னது எதுவும் அவன் காதில் விழவேயில்லை. கட்டிலிலிருந்து எழுந்து,அவசரவசரமாய் உடைமாற்றிக்கொண்டு,பின்னால் தொடர்ந்த மனைவின் குரலை அப்படியே தேய விட்டுவிட்டு போர்டிகோ வந்தான். அவசரத்துக்கு கையில் கிடைத்த இன்னோவாவின் சாவியை அதன் அருகில் வைத்து அழுத்தியதும் கார் கதவுகளின் தானியங்கி பூட்டு கிர்க் என்று திறந்துகொண்டது. தன் கொழுத்த உடலை அதற்குள் திணித்துக்கொண்டு சடுதியில் புறப்பட்டான்.

வரும் வழியெல்லாம் என்னென்னவோ யோசனைகள்...பெட்டியைப்பார்த்தால் ஏதோ ராஜகுடும்பத்தவர்களிடமிருந்ததைப் போல இருக்கிறது. ரகசிய அறை என்று ஏதாவது இருந்தால் அதில் ஏதேனும் விலையுயர்ந்த வைரங்கள் இருக்கக்கூடும் என்றும்,இல்லையானால்...ஏதாவது வரைபடம் இருக்கலாமென்றும்(எத்தனை ஹிந்திப் படம் பார்த்திருப்பான்)பலவாறாக யோசித்துக்கொண்டே அனிச்சையாய்...வழக்கமான வழியில் இரவுநேர குறைந்த போக்குவரத்தின் புண்ணியத்தில் வெகு சீக்கிரம் கடைக்கு வந்து சேர்ந்துவிட்டான். காரிலிருந்து இறங்கி படியில் ஏறும்போதே அதில் படுத்திருந்த பைரவரை எட்டி உதைத்ததும்...அது வள் என்று குரைத்துக்கொண்டு அடுத்த கடைக்கு ஓடிவிட்டது. எதிர்த்த கடை படியில் படுத்திருந்த லுங்கி போர்த்திய சென்னைத் தமிழன்,தூக்கம் கலைந்த எரிச்சலில் சுத்தமான சென்னை வசவு ஒன்றை உதிர்த்துவிட்டு மீண்டும் சுருங்கிக்கொண்டான்.

உள்ளே நுழைந்ததும் மீண்டும் ஷட்டரை மூடிவிட்டு....நேரே அந்தப் பெட்டி வைத்திருந்த அலமாரிக்குப் போய் அதை எடுத்துக்கொண்டு தன் ஆஸ்தான ஆசனத்தில் வந்து அமர்ந்தான். அவசரமாய் பெட்டியைத் திறந்து பார்த்ததும் அந்த வித்தியாசத்தை உணர்ந்தான். பின் பக்க சுவர் அகலமாக இருந்தது. அதனால்தான் பெட்டியின் உள்கூடு சிறிதாகத் தோன்றுகிறது. அப்படியென்றால் அந்த அகலமான பகுதியில்தான் உள்ளறை இருக்க வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டு, அதன் மேல்பக்கத்தில் விரல்களால் மெள்ள தடவிப்பார்த்தான். எங்காவது ஓர் இடத்தில் மெலிதான மேடு தென்படுகிறதா என்று. கனக்கச்சிதமாய் தட்டையாய் இருந்தது. பெட்டியை கவிழ்த்து அடிப்புறத்தில் ஏதாவது குமிழ்போல இருக்கிறதா எனப் பார்த்தான். இல்லை. பக்கச் சுவர்களிலும் இல்லை. ரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. ச்சே...பேன்...த் என்று ஹிந்தியில் ஒரு வசை சொல்லை சொல்லிவிட்டு...அந்தப் பெட்டியை கீழே வைத்துவிட்டு ஆழமாக ஒரு மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டே அமைதியாய் யோசித்தான்.

மீண்டும் பெட்டியைத் திறந்து...இந்தமுறை அந்த அகலமான பகுதியின் மேல்பக்கத்தில் லேசாக விரலால் ஒவ்வொரு இடமாக அழுத்திப் பார்த்தான். வலது மூலையில் அழுத்தியதும்....க்ளக்.....இடது பக்கத்திலிருந்து மேல் பலகை மட்டும் திறந்தது. உடனடியாக மலர்ந்தான். குல்கயா...திறந்துவிட்டது சீசேம் என்று வெற்றிப் புன்னகையுடன் அந்த பலகைத் துண்டை லேசாக விரலால் மேலே தூக்கினான். மனசுக்குள் பரபரப்பு...என்ன இருக்கும்...என்ற எதிர்பார்ப்பு...திறந்ததும் கண்ணில் பட்டது அந்த நாட்குறிப்பு புத்தகம். அதைக் கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் உள்ளே இன்னும் மிச்சமிருக்கும் நம்பிக்கையுடன் உற்றுப்பார்த்தான்..ம்ஹீம்...எதுவுமில்லை...குச் நஹி....

அந்த நாட்குறிப்பை பிரித்துக்கூட பார்க்காமல் ஆயாசமாய் அருகிலிருந்த உருண்ட திண்டில் சாய்ந்துகொண்டான். சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்திருந்தவன்....கொஞ்ச நேரத்தில் எப்படியெல்லாம் கற்பனைகளை வளர்த்துக்கொண்டோமென்று நினைத்ததும் லேசான புன்முறுவல் காட்டினான். நாட்குறிப்பை மீண்டும் அந்த பெட்டிக்குள் வைத்துவிட்டு கடையை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான்.

வழக்கம்போல அன்று கடையில் அமர்ந்திருந்தவன்....கஜா வந்ததும்...

கஜா...அமெரிக்காவுல இருக்கற குப்தாவை காண்டாக்ட் பண்ணனுண்டா....அருமையான பாண்டியர் காலத்து காசுங்க கிடைச்சிருக்கு...இப்பத்தைய மார்கெட் விலை என்னன்னு கேக்கனும்.....

இப்பவேவா....

ஏன் அதுக்கு நேரம் குறிக்கனுமா...?போனைப் போடுறா....

எண்களை அழுத்திவிட்டு...தொடர்பு கிடைத்ததும் கன்வர்லாலிடம் அந்தக் கைப்பேசியை நீட்டினான்.

ஹலோ...குப்தாவா...ம்...நல்லா போய்ட்டிருக்கு....அதுவா....இன்னும் செட்டில் ஆகலையா...இரு ஒரு நிமிஷம் என்று கைப்பேசியை கையால் பொத்திக்கொண்டு...

கஜா...போன வாட்டி அனுபிச்ச அசைன்மெண்ட்டுக்கு குப்தாவுக்கு இன்னும் கமிஷன் செட்டில் ஆகலையாமே...ஏன் என்னாச்சு...

அந்த அமெரிக்காக்காரன்...டோனியை பிடிக்க முடியல சேட்டு...நானும் ஒரு வாரமா முயற்சி பண்றேன்...லைன்லயே கிடைக்க மாட்டேங்கறான்....இன்னைக்கு மறுபடியும் முயற்சி செஞ்சி பாக்கறேன்...

சரி...சரி...சீக்கிரமா புடி அவனை...

மீண்டும் கைப்பேசியை காதுக்குக் கொண்டுபோனான்.

குப்தா....ம்....கவலைப்படாதே இன்னைக்கு கிடச்சிடும்....அப்புறம் என் கிட்ட...என்று தொடங்கி நாணயங்களின் விவரத்தை சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தான்.

மீண்டும் அந்தப் பெட்டியை எடுத்து மடிமீது வைத்துக்கொண்டு திறந்தான். கண்ணில்பட்ட அந்த நாட்குறிப்பைப் பார்த்ததும் நேற்றைய இரவின் நினைவு வந்தது. லேசாகச் சிரித்துக்கொண்டே அதை எடுத்து தூக்கி வீசினான்.

தூரத்தில் போய் விழுந்த நாட்குறிப்பிலிருந்த அந்த மடித்துவைத்திருந்த காகிதம் வெளியே விழுந்தது. சேட் தூக்கி வீசிய அந்த புத்தகத்தைத் தொடர்ந்த கஜாவின் பார்வையில் அந்த காகிதம் பட்டது. தன் கனத்த சரீரத்தை அந்தப்பக்கமாய்க் கொண்டுபோய் குனிந்து அதை எடுத்தான்.

என்ன கஜா அது....?

என்னாவோ காயிதம் சேட்டு நீ தூக்கிப் போட்ட பொஸ்தகத்துலருந்து விழுந்திச்சி....

கொண்டா அதை...

வாங்கிப் பிரித்து அதில் எழுதியிருந்த வாசகங்களைப் படித்ததும்...சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தான்.

தொடரும்

அமரன்
01-04-2008, 08:17 AM
முடிந்தால் படிப்பேன்.
இதயத்தில் டென்சன்..
பெருஞ்சுமை.:)

மதி
01-04-2008, 08:57 AM
திக்..திக்..
திக்..திக்...

அசத்தல்..

சிவா.ஜி
01-04-2008, 12:38 PM
முடிந்தால் படிப்பேன்.
இதயத்தில் டென்சன்..
பெருஞ்சுமை.http://www.tamilmantram.com:80/vb/
முதலில் சுமையை குறையுங்கள் அமரன்.எல்லாம் நல்லபடியாய் நடக்க வாழ்த்துகள்.

சிவா.ஜி
01-04-2008, 12:39 PM
திக்..திக்..
திக்..திக்...

அசத்தல்..
நன்றி மதி.

அக்னி
01-04-2008, 01:01 PM
சிவா.ஜி க்கு...

தொடர்கதை எழுதுங்கள் என்ற எனது வேண்டுகோளை விரைந்து பூர்த்தி செய்கின்றமைக்கு மிகுந்த நன்றிகள்... :icon_03:

இத்தனை நாட்கள் இத்திறனை ஒளித்து வைத்திருந்தமைக்குக் கண்டனங்கள்... :sauer028:
மிகவும் சிறப்பான எழுத்தாற்றலுக்குப் பாராட்டுக்கள்... :icon_clap:

விறுவிறுப்பாக சுவாரசியமாக உயிரோட்டமாக
உள்ளது கதை.


வெளியே நியாயத்தை ஷோரூமில் வைத்துவிட்டு உள்ளே குடோனில் அநியாயத்தை அடுக்கிவைத்திருந்தார்கள்.

:icon_b:
இலகுத் தமிழில் கிழிக்கப்படும் வேசம்...

இதயம் அவர்கள் சொன்னதுபோல், எனக்கும் மிகவும் பிடித்த ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரின் நாவல்களின் விறுவிறுப்பை, சிவா.ஜி அவர்களின் எழுத்திலும் இன்பமாய் அனுபவிக்கின்றேன்.

மீண்டும் எனது பாராட்டுக்களும்.., எழுத்துலகில் அழியாப் புகழ் பெற பிரார்த்தனைகளோடு, வாழ்த்துக்களும்...

அக்னி
01-04-2008, 01:08 PM
பிடிச்சிட்டோமில்ல... :lachen001: பிடிச்சிட்டோமில்ல... :icon_rollout:
:icon_clap::icon_clap::icon_clap:


எனக்கு பிடித்த நாவலாசிரியரான கோவை ராஜேஷ்குமாரிடம் ஒரு சிறப்பு இருக்கிறது. அவர் எழுதும் நாவல்களில் அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இருவேறு கதைகள் மாறுபட்ட கதாபாத்திரங்கள், கதைக்களனுட போகும்.
அதுக்காக நம்மள எல்லாம் வார்த்தைக்கு வார்த்தை பிழை பிடிக்கப்படாது. :icon_nono:

சிவா.ஜி
01-04-2008, 01:19 PM
அழகான பின்னூஉட்டத்திற்கு மிக்க நன்றி அக்னி.உண்மையிலேயே...நீங்கள் சொன்ன பிறகுதான்...இந்தக் கதைக்கான கரு எனக்குத் தோன்றியது.உடனே இதயத்திடம் பகிர்ந்து கொண்டேன்..அவரும் ஊக்க்கப்படுத்தியதால்...ஆரம்பித்துவிட்டேன்.செல்வாவும்,மதியும் தொடர்ந்து கொடுக்கும் ஊக்கம் எனக்கு இன்னும் நன்றாக எழுதவேண்டுமென்ற ஆர்வத்தைக் கொடுக்கிறது.தற்போது உங்கள் பின்னூட்டமும்,இதயத்தின் பின்னூட்டமும்...மிகுந்த தைரியத்தைக் கொடுத்து..எனக்கு பக்க பலமாக இருக்கிறது.மனம் நிறைந்த நன்றிகள் அக்னி.
(அதுக்காக...பத்தாயிரம் வார்த்தை பிழையில்லாமல் தட்டச்சும் இதயத்தின் எழுத்துகளில் ஒரே ஒரு பிழையை பூதக்கண்ணாடியில் காட்டுவது டூ மச்)

செல்வா
01-04-2008, 01:28 PM
(அதுக்காக...பத்தாயிரம் வார்த்தை பிழையில்லாமல் தட்டச்சும் இதயத்தின் எழுத்துகளில் ஒரே ஒரு பிழையை பூதக்கண்ணாடியில் காட்டுவது டூ மச்)
ஆ.... அது எப்படிண்ணா... எலி விழுந்தா யாராவது பேசுவாங்கள? ஆனா புலி விழுந்தா எல்லாரும் பேசுவாங்க.... அப்படித்தான்....
ஆனா அக்னி பண்றத பாக்கும் போது... கண்ணி வச்சு காத்திருந்த மாதிரி தெரியிது.... இத் யமண்ணா... கவனம்...
ஏதோ நம்மால முடிஞ்சது... :icon_rollout::aetsch013:

(இந்த திரிக்கும் தனியா விமர்சனத் திரி போடச் சொல்லலாம்னு உள்மனசு சொல்லுது அடிதடி நடக்குறத பொறுத்து பாக்கலாம்.... :icon_ush: )

அக்னி
01-04-2008, 01:29 PM
(அதுக்காக...பத்தாயிரம் வார்த்தை பிழையில்லாமல் தட்டச்சும் இதயத்தின் எழுத்துகளில் ஒரே ஒரு பிழையை பூதக்கண்ணாடியில் காட்டுவது டூ மச்)
பத்தாயிரம் அல்ல... அதற்கும் மேலே...
இவ்வளவு காலமாக எழுதும் இதயத்திடமிருந்து என் கண்ணில் பட்ட முதலாவது பிழை இதுதான்.
இதுகூட எழுத்துப் பிழை அல்ல. தட்டச்சிடுகையில் ஏற்பட்ட தவறுதல்.
அதுவாச்சும் மாட்டிச்சேன்னு சந்தோஷப்பட்டா.., விடமாட்டேன்கிறீங்களே...

சிவா.ஜி
01-04-2008, 02:01 PM
மீன் அதிகமா சாப்பிடுவீங்களா அக்னி...பார்வை எத்தனைக் கூர்மை...அடேங்கப்பா....

யவனிகா
01-04-2008, 02:24 PM
:icon_b:கதை ஆரம்பித்ததிலிருந்தே சிலவரிகள் கூட படிக்க இயலாவண்ணம் விதி சதி செய்து கொண்டிருந்தது. சதியை முறியடித்து இன்று மூச்சு விடாமல் அண்ணாவின் கதையைப் படிச்சாச்சி...:traurig001::traurig001:

கலக்கறீங்க சிவா அண்ணா...எனக்கு பிடிச்சது போல நடை...பிளாஷ் பேக்கும் கூட விறுவிறுக்கும் வகையில்...:icon_b:

இந்த மாதிரி தொல்பொருட்கள்,புதையல் வேட்டை,புராதனக் கதைன்னாலே கொஞ்சம் கூடுதல் ஆர்வம் எனக்கு...கதை பிரம்மிக்க வைக்கிறது. நெட்டில் வேறு தேடிகிறேன் என்று சொன்னீர்கள்.எவ்வளவு டெடிகேட்டடாக வேலை செய்கிறீர்கள் அண்ணா...அதுக்கே உங்களை தனியாகப் பாராட்டணும்...

பத்திகளை சிறியதாக்குங்கள் அண்ணா....பெரிய பத்திகள் கதையின் சுவாரசியத்தை தடுக்கும்.

அருமையான கதை...இன்னைக்கு கனவில் இந்தக் கதைதான் வரப்போகிறது.சேட்டுக்கு முன்னால உங்க தங்கச்சி தங்கம் தேடப் போயிருவேன் போல...அதுவும் இப்ப தங்கம் விக்கிற வெலைக்கு...பாளம் பாளமா தங்கமா....ஆத்தாடி!!!:mini023::mini023:

சோகக் கதைகளையும் தத்துவக் கதையும் குடும்பக் கதைகளையும் புரியாத கவிதைகளையும் படித்து களைத்திருந்த மூளைக்கு சூப்பர் காம்ப்ளான் அண்ணா உங்க கதை.

க்ரைம் கதைகள் எழுதுபவர்கள் இலக்கிய வாதிகளா....? இந்தக் கேள்வி ராஜேஷ்குமார் முன்பு வைக்கப்பட்டபோது அவர் சொன்னார்.

கடைசி தட்டு மனிதர்களையும்...எழுகின்ற எழுத்து சென்றடையும் என்றால் அதுவே இலக்கியம்...மாடுமேய்க்கும் சிறுவன் கூட அரணாக் கயிற்றில் க்ரைம் நாவல் செருகியபடி மாடு மேய்க்கிறான் என்றால்...ராஜேஷ்குமார் இலக்கியவாதி தானே...

அது போலத் தான் அண்ணா...குழப்பமாக தலையைப் பிய்த்துக் கொண்டு யோசிக்க வைக்கும் இலக்கியவாதிகள் மத்தியில்...கதை இலக்கியவாதியாய் உங்களைக் கொண்டாடலாம் தப்பே இல்லை.

அழகிய எழுத்துநடை...அருமையான கதை ஓட்டம்...விறுவிறு பகுதிகள்...பிசிறில்லாத கதை...தொட்டுக்க தகவல்கள் வேற...

கடலோரக் குற்றங்கள்
பிரம்மிப்பின் உச்சங்கள்
சிவா அண்ணாவின் தொப்பியில் இன்னுமொரு இறகு

வாழ்த்துக்கள் அண்ணா...:icon_b::icon_b::icon_b:

இதயம்
01-04-2008, 02:40 PM
பத்தாயிரம் அல்ல... அதற்கும் மேலே...
இவ்வளவு காலமாக எழுதும் இதயத்திடமிருந்து என் கண்ணில் பட்ட முதலாவது பிழை இதுதான்.
இதுகூட எழுத்துப் பிழை அல்ல. தட்டச்சிடுகையில் ஏற்பட்ட தவறுதல்.
அதுவாச்சும் மாட்டிச்சேன்னு சந்தோஷப்பட்டா.., விடமாட்டேன்கிறீங்களே...
எலுத்துப்பிலை எணக்கு எப்பொலுதும் பிடிக்கத விசயம். அது அங்கிலமா இறுந்தாலும் சறி, தமிலா இறுந்தாளும் சறி..! ஒறு படைப்பை எலுதிணா அத முடிச்சாதும் ஒறு முரை எலுத்துப்பிலை சறி பாக்குரது எண் வளக்கம். ஆணா இந்த பதுவுக்கு அப்பாடி சொய்யல. அக்ணி சொண்னது போள் அது வேகாம அடிச்சதிள் தவரியது. இத்லேர்ந்து ஒன்னு தெறியுது. தப்பூ கன்டு பிடிக்க அக்ணி மாதிறி ஆலுங்க கன்னுல விலக்கென்னை உத்திக்கிட்டு இறுக்காங்க..! ஜக்கிறதையா இருக்கனும்..!!

( ஸ்ஸ்ஸ்.. இப்பவே கண்ணை கட்டுதே..!! அக்னி இப்ப திருப்தியா..? வாத்தியார் எப்படித்தான் அவ்வளவு அழகா எழுதுறாரோ...தெரியலை..!! நீங்க தெய்வம் வாத்தியார்..!!)

அக்னி
01-04-2008, 02:48 PM
எலுத்துப்பிலை எணக்கு எப்பொலுதும் பிடிக்கத விசயம். அது அங்கிலமா இறுந்தாலும் சறி, தமிலா இறுந்தாளும் சறி..! ஒறு படைப்பை எலுதிணா அத முடிச்சாதும் ஒறு முரை எலுத்துப்பிலை சறி பாக்குரது எண் வளக்கம். ஆணா இந்த பதுவுக்கு அப்பாடி சொய்யல. அக்ணி சொண்னது போள் அது வேகாம அடிச்சதிள் தவரியது. இத்லேர்ந்து ஒன்னு தெறியுது. தப்பூ கன்டு பிடிக்க அக்ணி மாதிறி ஆலுங்க கன்னுல விலக்கென்னை உத்திக்கிட்டு இறுக்காங்க..! ஜக்கிறதையா இருக்கனும்..!!

( ஸ்ஸ்ஸ்.. இப்பவே கண்ணை கட்டுதே..!! அக்னி இப்ப திருப்தியா..? வாத்தியார் எப்படித்தான் அவ்வளவு அழகா எழுதுறாரோ...தெரியலை..!! நீங்க தெய்வம் வாத்தியார்..!!)
என்ன கொடுமை இது...???
:sprachlos020:

செல்வா
01-04-2008, 09:02 PM
என்ன கொடுமை இது...???
:sprachlos020:
இதுதான் இதயத்தோட வேலைநிறுத்தம்......

சிவா.ஜி
02-04-2008, 04:23 AM
http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/

இந்த மாதிரி தொல்பொருட்கள்,புதையல் வேட்டை,புராதனக் கதைன்னாலே கொஞ்சம் கூடுதல் ஆர்வம் எனக்கு...கதை பிரம்மிக்க வைக்கிறது.

பத்திகளை சிறியதாக்குங்கள் அண்ணா....பெரிய பத்திகள் கதையின் சுவாரசியத்தை தடுக்கும்.

அதுவும் இப்ப தங்கம் விக்கிற வெலைக்கு...பாளம் பாளமா தங்கமா....ஆத்தாடி!!!http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/

http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/
எனக்கும் இந்த மாதிரி கதை பிடிக்கும் யவனிகா. அதனாலத்தான் இந்தக் கருவைப் பிடிச்சேன். ஆனா மனசுல இருக்கறதை இன்னும் நல்ல வெளிப்படுத்த முடியல. உங்க எல்லோருடைய ஊக்கத்தைப் பார்த்து மேலும் மேலும் முயல்கிறேன்.

தங்கம்ன்னு சொன்னாலே நகைக் கடக்காரங்க காசு வாங்கிடுவாங்க போல அந்த விலை விக்குது...அதான்...கற்பனையிலாவது தங்கப் பாளங்களைப் பாக்க்கலாமின்னு நினைச்சேன். நாம மரப்பாலம் தானே பாத்திருக்கோம். தங்கப் பாளம் எங்கேப் பாக்கறது.

அப்புறம் நல்ல ஆலோசனைக்கு நன்றிம்மா. இனி பத்தி பிரிக்கும்போது கவனமா இருக்கேன்.

சிவா.ஜி
02-04-2008, 04:55 AM
பாகம்-6

சுந்தரலிங்கத்தின் கடிதம் இப்படி இருந்தது.......
பாண்டியா நான் ஒரு முக்கியமான செயலில் இறங்கியிருக்கிறேன். பம்பாயிலிருந்து எங்கள் கப்பல் ஆஸ்த்திரேலியா போகப்போகிறது.அது இலங்கையைச் சுற்றிக்கொண்டு போவதால் நம்முடைய பகுதியைத் தாண்டித்தான் போகும்.
அந்தக்கப்பலிலிருந்து நான் தப்பிக்கப்போகிறேன்.என்னுடன் மருதமுத்துவும் வருவான்.எங்களுடன் நாங்கள் கொண்டுவரப்போகும் பொருளை கரையிலிருந்து நம் வீட்டுக்கு கொண்டுபோக வேண்டும். இதற்கு உன் உதவிதேவை. அதனால் நாம் வழக்கமாக படகில் புறப்படும் அந்த இடத்துக்கு நீ புதனன்று நள்ளிரவுக்கு மேல் வந்து காத்திருக்கவும். நாங்கள் அருகில் நெருங்கியதும்..
நான் படகிலிருந்து டார்ச் விளக்கை மூன்றுமுறை அணைத்து எரியவைப்பேன். நீயும் அதைப் பார்த்ததும்
அதேபோலவே செய்தால் நான் கரையை உறுதி செய்துகொள்வேன். மறக்காமல்...வண்டிக்கு ஏற்பாடு செய்துவிடு. நூற்றுக்கணக்கான கிலோ எடையிருக்கும் பொருட்களை ஏற்றிச்செல்லவேண்டியிருக்கும்.

பின் குறிப்பு: நம்மிடமிருந்து எடுக்கப்பட்ட பொருளை நாமே திரும்ப எடுத்துக்கொள்வது திருட்டு அல்ல...
அதனால் நான் கொண்டுவரும் பொருளைப் பற்றின தவறான சந்தேகம் வேண்டாம்.
ஆனால் சந்தேகமே இல்லாமல் நம் வாழ்க்கையை இது உயர்த்தும். மிக எச்சரிக்கையாய் நடந்துகொள்.
நான் அங்கு திரும்ப வந்த பிறகு பிரிட்டிஷார் என்னைத் தேடிக் கண்டுபிடித்து கொன்றுவிடுவார்கள்.
என் உயிரைப் பற்றிக் கவலையில்லை...ஆனால் நம் குடும்பமும்,மருதமுத்துவின் குடும்பமும் உன்னால்தான் காப்பாற்றப் படவேண்டும். உன்னைத்தான் நான் வெகுவாக நம்பியிருக்கிறேன்....

என்று எழுதியிருப்பதைப் பார்த்ததும்..அவனுடைய கிரிமினல் புத்திக்கு அது சுவாரசியத்தைக் கொடுத்தது. ஆஹா...அந்தக் காலத்துலயே நம்ம மக்கள் என்னவோ செஞ்சிருக்காங்க....வெள்ளைக்காரன் கப்பலிலிருந்து பொருளைத் தட்டிக்கொண்டு வருவதானால்....அது நிச்சயம் விலையுயர்ந்த பொருளாய்த்தான் இருந்திருக்க வேண்டும். அதுவும் நூற்றுக்கணக்கான கிலோ என்றால் என்னவாக இருக்கும்...?ஆர்வம் மேலிட..அந்த நாட்குறிப்பை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

பக்கங்களைப் புரட்டி படிக்கத் தொடங்கியதும்...ஆரம்பப் பக்கங்களில் இருந்த சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சிகளைப் படித்துவிட்டு...இது இல்லை...இது இல்லை என மனதுக்குள் சொல்லிக்கொண்டே...வேகமாகப் புரட்டினான். பளிச்சென்று அவன் கண்ணில் பட்டது அந்த தேதி. கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த புதன் கிழமை. வெகு ஆவலோடு அதை படித்தான். படிக்கப் படிக்க...அவனுடைய முகபாவங்கள் மாறிக்கொண்டே வந்தது. படித்து முடித்ததும்...சிந்தனையில் ஆழ்ந்தான்.

கடிதத்தில் எழுதியிருந்ததையும்...அந்த நாட்குறிப்பில் எழுதியிருந்ததையும்...ஒன்றுக்குடன் ஒன்று இணைத்துப்பார்த்து...யோசித்தான். ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. அந்தப் பொருள் மிகவும் விலைமதிப்புள்ளது. அதனால்தான் நம் குடும்பம் இதனால் உயரும் என்று எழுதியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல...பிரிட்டிஷார் கொன்றுவிடுவார்களென்றால்...அது நிச்சயம் தங்கமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு...மேலும் பக்கங்களைப் புரட்டினான்.....

வெள்ளி தை 1917
நேற்றைக்கு முந்தைய தினத்தின் நிகழ்ச்சிக்குப் பிறகு..இன்று ஆங்கிலேய இராணுவத்தினர் கிராமத்துக்கு வந்தார்கள். சுந்தரலிங்கத்தின் குடும்பத்தாரிடம் அவனைப் பற்றி விசாரித்தார்கள்...திரும்பத்திரும்ப...அவன் கொண்டு வந்த பொருளை எங்கே வைத்தான்...என்று மிரட்டிக் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்கள். உண்மையாகவே அவர்களுக்கு ஒன்றும் தெரியாததால்....தவித்துப்போய்விட்டார்கள். ஊருக்குள் இருப்பவர்களிடம் விசாரித்தார்கள். பிறகு என்னிடமும் கேட்டார்கள். நான் வாயே திறக்கவில்லை....ஆனால்...அவர்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டதில் எனக்கு தெரிந்துவிட்டது...சுந்தரலிங்கம் கொண்டு வந்தது தங்கம்...அதுவும் நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ளது. ஆனால் என்ன பிரயோஜனம்....படகு கவிழ்ந்திருக்கும் ஆழத்துக்கு நம்மால் போகவே முடியாதே........

அந்த நாட்குறிப்பு புத்தகத்துக்கு அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தான்.

மேற்கொண்டு பாண்டியன் எழுதியிருந்த எதுவும் எனக்குத் தேவையில்லை......அன்று அவனால் முடியாதது இப்போது என்னால் முடியும். நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள தங்கம்....அமைதியாய் இப்போதும் கடலுக்கடியில் தூங்கிக்கொண்டிருக்கிறது.....ஆஹா...கன்வர்லால்...தும் கிஸ்மத் வாலா ரே...அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்...

கன்வர்லால்...நீ அதிர்ஷ்டசாலிடா....

உண்மையிலேயே இந்தப் பெட்டியில் புதையலுக்கான ரகசியம்தான் இருந்திருக்கிறது.....நாம் நினைத்தது சரியே...என்று அவனுக்கு அவனே பாராட்டிக்கொண்டான். உடம்பு முழுவதும் புதிதாக இரத்தம் பாய்ந்ததைப் போல உணர்ந்தான். ஏற்கனவே சிவந்திருந்த அந்த உருண்டை முகம்...மேலும் சிவந்தது...பரவசத்தில்.

கஜாவுக்கு மாறி மாறி சேட்டு கான்பித்துக்கொண்டிருந்த முகபாவங்களைப் பார்த்து ஒன்றும் புரியவில்லை...அதே குழப்பத்தோடு..

என்னா சேட்டு...என்னென்னவோ பண்றே.....அப்படி என்னாதான் எழுதியிருக்கு அந்த பொஸ்தகத்துல....

சுற்றுமுற்றும் பார்த்த கன்வர்லால், அங்கே வேலையாட்கள் இருந்ததால்....கஜாவைப் பார்த்து

என் கூட வா...உனக்கு எல்லாத்தையும் விவரமா சொல்றேன்...

கஜாவை அழைத்துக்கொண்டு....கடைக்கு பின்பக்கமிருந்த தனியறைக்கு கூட்டிக்கொண்டு போனான்.


டே...கஜா...புதையல் கிடைச்சிருக்குடா....தங்கப் புதையல்....உற்சாகமாய் அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.

திடகாத்திரமான கஜாவே...திணறித்தான் போனான்.

சேட்டு...வுடு சேட்டு...மூச்சே நின்னுடறமாதிரி இருக்கு...

கஜாவை தன்னிலிருந்து பிரித்து...அவனுடைய இரண்டு தோள்களையும் அழுத்தமாகப் பற்றிக்கொண்டு அவனைப் பார்த்து...

ரொம்பப் பெரிய வேலை ஒண்ணு வந்திருக்கு....நிறைய ஏற்பாடெல்லாம் செய்ய வேண்டியிருக்கு.....ஆனா...இந்த விஷயத்தை...தப்பித்தவறிக்கூட யார்கிட்டயும் மூச்சு விடக்கூடாது...

தொடரும்

மலர்
02-04-2008, 07:08 AM
ஆறு பாகத்தையும் இப்போ தான் படிச்சி முடிச்சேன்....சிவா அண்ணா....வாவ் சூப்பரா இருக்குண்ணா.... ஒவ்வொரு பாகமும் விறுவிறுப்பா போகுது... அவட்டாரில்ல ஓடுற குதிரையை விட உங்க கற்பனை குதிரை வேகமா ஓடுது....ன்னா பாத்துக்கோங்களேன்...கதையை சுவாரஸ்யமாக கொண்டு போறதுக்கு ஸ்பெஷல் என்னுடைய பாராட்டுக்கள்.... தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....

மலர்
02-04-2008, 07:13 AM
எலுத்துப்பிலை எணக்கு எப்பொலுதும் பிடிக்கத விசயம். அது அங்கிலமா இறுந்தாலும் சறி, தமிலா இறுந்தாளும் சறி..! ஒறு படைப்பை எலுதிணா அத முடிச்சாதும் ஒறு முரை எலுத்துப்பிலை சறி பாக்குரது எண் வளக்கம். ஆணா இந்த பதுவுக்கு அப்பாடி சொய்யல. அக்ணி சொண்னது போள் அது வேகாம அடிச்சதிள் தவரியது. இத்லேர்ந்து ஒன்னு தெறியுது. தப்பூ கன்டு பிடிக்க அக்ணி மாதிறி ஆலுங்க கன்னுல விலக்கென்னை உத்திக்கிட்டு இறுக்காங்க..! ஜக்கிறதையா இருக்கனும்..!! இதயம் அண்ணா....நான் ரொமப நாளா தமிலு படிக்க தேடின வாத்தியாருக்குறிய எல்லா குவாலிபிகேஷனும் உங்களுக்கு இருக்கு....என்க்கு கொஞ்சம் டியூசன் கத்து கொடுங்களேன்....மலரு அப்புறம் நிறைய கதை கட்டுரை கவிதை எல்லாம் எழிதி கீழ பெரிய எழுத்துல நன்றி : இத் யம் அண்ணான்னு போடும்.....

சிவா.ஜி
02-04-2008, 07:16 AM
ஆறு பாகத்தையும் இப்போ தான் படிச்சி முடிச்சேன்....சிவா அண்ணா....வாவ் சூப்பரா இருக்குண்ணா.... ஒவ்வொரு பாகமும் விறுவிறுப்பா போகுது... அவட்டாரில்ல ஓடுற குதிரையை விட உங்க கற்பனை குதிரை வேகமா ஓடுது....ன்னா பாத்துக்கோங்களேன்...கதையை சுவாரஸ்யமாக கொண்டு போறதுக்கு ஸ்பெஷல் என்னுடைய பாராட்டுக்கள்.... தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....
ஆறு பாகத்தையும் பொறுமையா படிச்சுப் பின்னூட்டம் போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிம்மா. கற்பனைக் குதிரையை இன்னும் வேகமா ஓட்டப்பாக்கிறேன். தடுமாறி விழாம இருந்தாச் சரி.

மதி
02-04-2008, 08:29 AM
தங்க வேட்டை தொடரட்டும்...

வழக்கமா நான் தான் ஒவ்வொரு பாகத்துக்கும் முதல் பின்னூட்டம் போடுவேன். இன்னிக்கு மலரம்மா முந்திக்கிட்டாங்க.

மலர்
02-04-2008, 08:51 AM
தங்க வேட்டை தொடரட்டும்...வழக்கமா நான் தான் ஒவ்வொரு பாகத்துக்கும் முதல் பின்னூட்டம் போடுவேன். இன்னிக்கு மலரம்மா முந்திக்கிட்டாங்க.ஹாஹ்ஹா....அது ஒன்ணுமில்லை மதி....நேத்து தான் சொன்னீங்களா....
அதான் இன்னிக்கு மட்டும் முந்திகிட்டேன்....:D

மதி
02-04-2008, 09:46 AM
ஹாஹ்ஹா....அது ஒன்ணுமில்லை மதி....நேத்து தான் சொன்னீங்களா....
அதான் இன்னிக்கு மட்டும் முந்திகிட்டேன்....:D

முதல்ல நெட் கனெஷன் குடுத்தது யாரு...? :eek::eek::eek:

சிவா.ஜி
02-04-2008, 11:28 AM
தங்க வேட்டை தொடரட்டும்...

வழக்கமா நான் தான் ஒவ்வொரு பாகத்துக்கும் முதல் பின்னூட்டம் போடுவேன். இன்னிக்கு மலரம்மா முந்திக்கிட்டாங்க.

இதை தங்க வேட்டைங்கறதைவிட தங்கத் தேட்டைன்னுதான் சொல்லனும்...எல்லாம் தேட்டை போடறதுலதான இறங்கியிருக்காங்க..

நன்றி மதி. ஆமா இந்த முறை மல்ரு முந்தியாச்சு. அதுக்காக மலரை அம்மான்னு சொல்லி வயசுல பெரியவங்களா காட்டிடக்கூடாது....இப்பவும் அந்தப் பூப்போட்ட தொப்பி வெச்சிக்கிட்டு இருக்கிற பாப்பாதானே..ஹி..ஹி..

மலர்
02-04-2008, 11:45 AM
முதல்ல நெட் கனெஷன் குடுத்தது யாரு...? :eek::eek::eek:

ம்ம்ம் வருவீங்களே.... இதை மட்டும் கேக்க முதல் ஆளா வருவீங்களே...
அஸ்கு பிஸ்கு நான் சொல்ல மாட்டேன்ப்பா....
ஆரும் குடுக்கலை... மலரே எடுத்துக்கிச்சி....
------
ஏன்னா பொதுசொத்து எல்லாம் நம்ம சொத்துமாதிரி நினைச்சி
பாதுக்காக்ணுமின்னு அரசாங்கம் சொல்லுதுல்ல
ஸோ.... சும்மா வேஸ்ட்டா போற நெட் கனெக்ஷனை பாதுகாப்பா இருக்கட்டுமேன்னு இன்னிக்கு மலரு சுட்டுக்கிட்டு............ஹீ.........ஹீ.....

சிவா.ஜி
02-04-2008, 12:01 PM
ஸோ.... சும்மா வேஸ்ட்டா போற நெட் கனெக்ஷனை பாதுகாப்பா இருக்கட்டுமேன்னு இன்னிக்கு மலரு சுட்டுக்கிட்டு............ஹீ.........ஹீ.....

அப்ப மல்ரு இனிமே நெட்-ஐ சுட்ட கெட்டிக்கார மலர் என்று அழைக்கப்படுவார்.....

சிவா.ஜி
02-04-2008, 01:42 PM
பாகம்-7

கஜாவிடம் தங்கம் கடலில் முழுகிவிட்டதைப் பற்றி சொன்ன கன்வர்லால், அதை நாம்தான் எடுக்கப் போகிறோம் என்று சொல்லிவிட்டு,


கன்வர் லால் தன் திட்டத்தை விளக்கத் தொடங்குமுன்..கண்ணை மூடிக்கொண்டு...சிறிது நேரம் யோசித்தான்.

கஜா...இது ஒரு மிகப் பெரிய வேலை. கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் சுத்தளவுக்கு கடலை அலசனும். தரையிலன்னா இது ரொம்ப சுலபம். கடலோட ஆழத்துக்குப் போகனும். ஆபத்து நிறைய இருக்கு. ஆனா நாம செய்யற தொழில்ல..எப்பதான் ஆபத்து இல்ல...?

இப்போதைக்கு என்கிட்ட எந்த திட்டமும் இல்லை.நான் இப்ப நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்குப் போறேன். ரெண்டு லார்ஜை அடிச்சிட்டு யோசிச்சா திட்டம் தயாராகும். அப்புறமா உன்னைக் கூப்பிடறேன். இப்ப நீ போய் அந்த டோனியை போன்ல பிடி. வேற எதெல்லாம் பாக்கி இருக்கோ எல்லாத்தையும் சீக்கிரமா முடிச்சிடனும். இதுல இறங்கிட்டம்ன்னா....வேற எதையும் கொஞ்ச நாளைக்கு கவனிக்க முடியாது. ஆனா...இந்த வேலை மட்டும் முடிஞ்சிட்டா...ஆஹா...நினைச்சிப் பாக்கவே எவ்ளோ சந்தோஷமா இருக்கு. கோடியில புரளலாம்.

கண்ணை மூடிக்கொண்டு அந்த சந்தோஷத்தை அவன் அனுபவிப்பது கஜாவுக்குத் தெரிந்தது.

சற்று கழிந்து,

சரி கஜா நான் கிளம்பறேன். நீயும் கிளம்பு. நான் உன்னைக் கூப்பிடறேன்.

வெளியே வந்த கன்வர்லால்...கடையில் வேலை செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து..

இன்னைக்கு கடை லீவ். எல்லாரும் வீட்டுக்குப் போங்க. நாளைக்கு வந்தா போதும்.

கடை ஊழியர்கள் சந்தோஷமாய்க் கிளம்பிப்போனார்கள். போகும்போதே கைப்பேசியில்....ரஞ்சிதம் புள்ளைங்க இஸ்கூலுக்கு போயிட்டாங்களா...நீ ரெடியா இரு சினிமாவுக்குப் போகலாம்.....என்று ஒருத்தரும், ஊரப்பாக்கத்துல இருக்கற ப்ளாட்டைப் போய் பாத்துட்டு வந்துடலாம் என்று இன்னொருத்தரும், இப்படி ஆளுக்கு ஆள் அன்றைய திடீர் விடுமுறையை திட்டமிட்டுக்கொண்டே போனார்கள்.

அனைவரும் போனதும் கஜாவை அனுப்பிவிட்டு இ.சி.ஆர் சாலையிலிருக்கும் தன் கடலோர ஓய்வு பங்களாவுக்குக் கிளம்பினான் கன்வர்லால். கடலைப் பாத்துக்கிடே யோசனைப் பண்ணினா ஏதாவது நல்ல ஐடியாவாக் கிடைக்கும் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே தன் காரை சந்திலிருந்து திருப்பி முக்கியச் சாலையின் இயந்திர எறும்புக்கூட்டத்தின் இரண்டாயிரத்து முப்பத்தியாறாவது வாகனமாக தன்னுடையதையும் இணைத்துக்கொண்டு ஊர்ந்தான்.

மாலை நான்கு மணி. கன்வர்லாலுக்கு ஏற்றிக்கொண்ட மேல்நாட்டு சரக்கின் வீரியம் குறையத்தொடங்கியிருந்தது.சரக்கு உள்ளே போனவுடன் மூளை சுறுசுறுப்பாகி யோசித்ததில், கிட்டத்தட்ட 90 சதவீதம் திட்டத்தை தயாராக்கிவிட்டான். மீண்டும் ஒருமுறை அதை மனத்திரையில் ஓட்டிப்பார்த்து பிழை திருத்தி, திருப்தியானவுடன் கஜாவை அழைத்தான்.

அரை மணி நேரத்தில் கஜா அங்கிருந்தான். அவனை உட்காரச் சொல்லிவிட்டு, சொல்லத் தொடங்கினான்.அந்த பொன்னிற திரவத்தை மீண்டும் ஒரு கோப்பையில் ஊற்றிக்கொண்டு...

உன்கிட்ட நான் பாக்குற பெரிய ஆச்சர்யமே இந்த உன்னோட குடிக்காத பழக்கம்தாண்டா. இந்தத் தொழில்ல இருந்துகிட்டு தண்ணியடிக்காம இருக்கியே...நீ கிரேட்டுடா..எப்பிடிடா முடியுது...?

சேட்டு நாம செய்யறது ஒண்ணும் சாதாரண வேலைங்க இல்ல. எந்த நேரத்துலயும் ஆபத்து நம்மை சுத்தி நின்னுக்கிட்டே இருக்கு. கொஞ்சம் அசந்தா ஆளை அடிச்சிடும். இதைக் குடுச்சிட்டு மட்டையாகி எங்கேயாவது மல்லாந்து கெடந்தம்னா எவனாவது போட்டுத்தள்ளிட்டுப் போய்ட்டே இருப்பான். அதான் இந்த சனியனைத் தொடறதேயில்ல..என்று சொல்லிவிட்டு அவசரமாய் நாக்கைக் கடித்துக்கொண்டான், சேட்டுக் கையில் அந்த சனியனைப் பார்த்துவிட்டு.

சரி..சரி...உனக்கு இது சனியன்...எனக்கு ஜிகிரி தோஸ்த்து....இது போனாத்தான் மூளையே வேலை செய்யுது..என்னா பண்ணச் சொல்ற..?

ஓக்கே...நம்ம விஷயத்துக்கு வருவோம். படகு முழுகின இடம் குளச்சல் கிராம கடல் பகுதி. டைரியில எழுதியிருக்கறதை வெச்சுப் பாத்தா....பாண்டியன் சுந்தரலிங்கம் அடிச்சிக் காமிச்ச டார்ச் வெளிச்சத்தைப் பாத்திருக்கான். அப்ப படகு ரொம்ப தூரத்துல இல்ல..

அதெப்படி சேட்டு...ராத்திரியில வெளிச்சம் ரொம்ப தூரத்துலருந்து கூடத்தான் கண்ணுக்குத் தெரியும்..நீ எப்படி கிட்டன்னு சொல்ற...?

ஆமாடா எனக்கும் தெரியும். ஆனா..படகு கவுந்து போனதையும் பாண்டியன் பாத்திருக்கான். அப்ப ரொம்ப தூரம் இருக்காதில்ல. சரி ஒரு மூணு கிலோ மீட்டருன்னே வெச்சிக்கலாம். இப்ப நமக்குத் தெரிய வேண்டியது...பாண்டியன் நின்னுக்கிட்டிருந்த இடம் எதுங்கறதுதான். கிராமமோ,டவுனோன்னா இத்தனை வருஷத்துல ரொம்ப மாறியிருக்கும். ஆனா இது கடல் கரை. மாற்றதுக்கு சான்ஸ் இல்ல. அதனால அந்த இடத்தைக் கண்டுபிடிக்கறது கஷ்டமில்ல. அது தெரிஞ்சதும் அடுத்து நாம செய்ய வேண்டியது அங்கேருந்து மூணு கிலோமீட்டர் சுத்தளவுக்கு ஆழத்துல போய் தேடறதுதான். ரொம்ப கஷ்டமான வேலைதான். ஆனா கிடைக்கப் போறதும் ரொம்ப பெருசாச்சே. கஷ்டப்பட்டுதான் ஆகனும். எத்தனை நாளானாலும் பரவால்ல.

கோஸ்டல் கார்டு ஆளுங்க சந்தேகப் படாத அளவுக்கு நாம செய்யறதை சாமர்த்தியமா செய்யனும்.

அவங்கதான் எப்பவுமே சுத்திக்கிட்டே இருப்பாங்களே...எப்படி அவங்களுக்குத் தெரியாம இந்த வேலையை செய்யப் போறோம்...கஜா கேட்ட கேள்விக்கு,

நான் எப்ப சொன்னேன் அவங்களுக்குத் தெரியாம செய்யனுன்னு. தெரிஞ்சேதான் செய்யப் போறோம். இன்னும் சொல்லப்போனா அவங்க கிட்ட அனுமதி வாங்கிக்கிட்டுதான் இந்த வேலையை செய்யப் போறோம்.

ஆச்சர்யத்துடன் பார்த்த கஜா...என்னா சேட்டு சொல்ற...எப்படி அது?

மடையா...நாம என்ன தங்கம் எடுக்கப் போறோம்ன்னா சொல்லி அனுமதி வாங்கப் போறோம். ஒரு டாக்குமெண்ட்ரி படத்துக்காக ஆழ்கடல்ல ஷூட் பண்னப் போறதா சொல்லித்தான் பெர்மிஷன் வாங்கனும். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்தப் பகுதியில மீன்பிடிப்பு அதிகம் இல்லை. அமைதியான இடம் அதனாலத்தான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தோம்ன்னு சொல்லனும்

அப்புறம் நமக்கு முக்கியமாத் தேவை நல்ல ப்ரொஃப்ஷனல் டைவர்ங்க.

டிரைவரா...எதுக்கு நாந்தான் நல்லா கார் ஓட்டுவனே...

அரே பக்வான்....டிரைவர் இல்லடா...டைவர்..அப்படீன்னா கடல்ல முழுகி தேடறவங்க. இதுக்குன்னே தொழில் முறையில இந்த வேலையைச் செய்யறவங்க நிறைய இருக்காங்க. அவங்கள்ல நாலு பேர் வேணும். ஒரு அவுட்டோர் ஷூட்டிங் வேன் ஒண்ணு வேணும்...
சரி..அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ நமக்குத் தெரிஞ்ச பசங்க நாலு பேரை ரெடி பண்ணு. நம்பிக்கையானவங்களா இருக்கனும். கழுத்தை அறுத்தாக்கூட கன்வர்லால்ன்னு பேர் வாயிலருந்து வரக்கூடாது...புரியுதா..?

புரிந்தது என்பதைப்போல தலையை ஆட்டிக்கொண்டே..நீ கவலைப் படாதே சேட்டு...ஏற்பாடு பண்ணிடறேன். நம்மகிட்ட அதுமாதிரி பசங்க இருக்காங்க. காசி மேட்டுல இருக்கானுங்க. கடல்லாம் அவனுங்களுக்குத் தண்ணிபட்டபாடு...

கஜா சொல்வதை காதுகள் கேட்டாலும் சிந்தனை நல்ல தொழில்முறை ஆழ்கடல் முங்குவோரை,அதிலும் நமக்கு நம்பிக்கையானவர்களை எப்படி பிடிப்பது என்பதில் லயித்தது.

சட்டென்று நினைவுக்கு வந்தான் தனசேகரன். ஆஹா இவனை மறந்து விட்டோமே...ஜகஜ்ஜாலக் கில்லாடியாயிற்றே.....உடனே அவனைப் பார்க்க வேண்டும்.....

தொடரும்

மதி
02-04-2008, 02:17 PM
வேட்டை ஆரம்பமாகிவிட்டது.. ஷூட்டிங்கா..
யாரு கையில துப்பாக்கி முளைக்கப் போகுதோ?

அப்பாடா இந்த பாகத்துக்கு முந்தியாச்சு..!

சிவா.ஜி
02-04-2008, 02:31 PM
இதுக்கு மேலத்தான் துப்பாக்கியெல்லாம். கடலுக்குள்ள ஆழமா போயிடலாம். நன்றி மதி.
(அடுத்த பதிவுக்கு கொஞ்சம் லேட்டாகும். தகவல்கள் திரட்டிக்கிட்டிருக்கேன்)

செல்வா
02-04-2008, 02:32 PM
அருமை அண்ணா..... கதை மிக விறு விறுப்பாக போகிறது.... அடுத்த பாகம் எப்போ அடுத்த பாகம் எப்போனு ... தேடுது... சீக்கிரம் கொடுங்கோ....

சிவா.ஜி
02-04-2008, 02:53 PM
ரொம்ப நன்றி செல்வா. நீங்களே நல்லாருக்குன்னு சொல்றது..சந்தோஷமா இருக்கு.

இதயம்
03-04-2008, 05:23 AM
கதையின் சுவராஸியம் கூடிக்கொண்டே போகிறது. ஒரு சேட்டின் குணநலன்களை, தொழில் முறை யுத்திகளை கன்வர்லால் மூலம் சும்மா புட்டு, புட்டு வைக்கிறீர்கள் (எல்லாம் சினிமா சொல்லித்தந்ததா அல்லது சொந்த அனுபவமா..?). வர்ணனைகள் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் புதுமையாக, இரசிக்கும் வகையில் எழுதுகிறீர்கள். அநேகமாக நீங்கள் எழுதிய கதைகளில் மாஸ்டர் பீஸாக இது இருக்கும் என்பது என் கருத்து.

தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறித்த சிந்தனையில் படிப்பவர்களின் மனம் பரபரக்கிறது. அடுத்தடுத்த பாகங்களுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்..!!

சிவா.ஜி
03-04-2008, 05:28 AM
நன்றி இதயம். கொஞ்சம் சினிமா, கொஞ்சம் நேரிடை அனுபவம்(எங்க ஊர்ல நிறைய மார்வாடி சேட்டுங்க இருக்காங்க)

சுவாரசியத்தைக் கூட்ட இன்னும் முயற்சிக்கிறேன்.

சிவா.ஜி
03-04-2008, 07:55 AM
பாகம்-8

கன்வர்லால் நினைத்ததில் கொஞ்சமும் குறைவில்லாமல் கில்லாடியாகத்தானிருந்தான் தனசேகர். அவனுக்கு தொடர்பில்லாதத்
துறையே இல்லையென்பதைப்போல எல்லா இடத்திலும் அவனுக்கு தெரிந்த,விசுவாசமானவர்களை வைத்திருந்தான்.
அதுமட்டுமல்லாமல்...சர்வதேச அளவிலும் அவனுக்கு நல்ல தொடர்பு இருந்தது.

போன அத்தியாயத்தில் குறிப்பிட்ட அதே இ.சி.ஆர் சாலை பங்களா. இந்த முறை கன்வர்லால்,கஜா இருவருடன் தனசேகரும்
இருந்தான். கன்வர்லாலின் விவரிப்பை முழுவதும் ஒரு வார்த்தைக்கூட குறுக்கே பேசாமல் கேட்டுக்கொண்டான். எந்த டென்ஷனும்
இல்லாமல் இருந்த அவன் முகத்தைப் பார்த்த கன்வர்லாலுக்குத்தான் டென்ஷன் அதிகரித்துக்கொண்டே போனது.

என்ன தனா...ஏதாச்சும் சொல்லு...இப்படி சும்மா இருந்தா..எப்படி...பாரு சேட்டு ஹார்ட்டு எப்டி துடிக்குதுன்னு..?

இரு சேட்டு நீ பாட்டுக்கு குத்தாலம் அருவி மாதிரி எல்லாத்தையும் கொட்டிட்ட....கொஞ்சம் யோசிக்க வேணாமா?

யோசி...யோசி...ஆனா ஜல்தியா யோசி...

தனசேகர் கேசுவலான டி ஷர்ட்டில்தான் இருந்தான். ஜீன்ஸ் வெளுத்திருந்தது. பார்வைக்கு ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தில்
பணிபுரிபவனைப் போல ஒரு தோற்றம். ஆனால் பரபரப்பே இல்லாமல் பக்காவாய் எல்லா வேலைகளையும் செய்து கொடுப்பான்.
நேரிடையாக எந்தக் காரியத்திலும் ஈடுபடமாட்டான். ஒரு மீடியேட்டராகத்தான் பெரும்பாலும் செயல்புரிவான்.

சேட்டு....தரையிலன்னா பிரச்சனையில்ல...இது ரொம்ப ஆழத்துல.....தண்ணிக்குள்ள....அதுவும் கடலுக்குள்ள இறங்கி செய்யற சமாச்சாரம். நிறைய செலவு வெக்கிற விஷயமாச்சேய்யா....?

செலவப் பத்திக் கவலையில்ல தனா. எவ்ளோ ஆனாலும் பரவால்ல. எனக்கு பக்காவா ஒரு ப்ளான் குடு.

அதான் நீயே பக்காவா போட்டு வெச்சிருக்கியேயா...ஆனா எப்படி அதை செயல்படுத்தறதுன்னு இப்ப யோசிக்கனும். அப்புறம் முக்கியமான ஒண்ணு என்னோட கமிஷன் எவ்ளோ இப்பவே தீர்மானிச்சுடலாம்.

அதுக்கென்னா தனா...அப்புறமா பேசிக்கலாமே....இப்ப அடுத்து என்ன செய்றதுன்னு சொல்லு.

சொல்றேன் சேட்டு...ஆனா இந்த அப்புறம்ங்கற பிஸினெஸ் எல்லாம் வேணாம். பத்து பர்செண்ட் குடுத்துடு.

இன்னா தனா பத்து ஜாஸ்தியா இருக்கே....

பத்துக்கு பால்மாறாதய்யா....நான் உன் கூடவே இருக்கேன். சாதாரணமா நான் கை காமிச்சு வுட்டுட்டு போய்ட்டே இருப்பேன். ஆனா இந்த வேலையில நானும் கூடவே இருக்கேன்யா. அதுக்குத்தான் இவ்ளோ.

சரி. தரேன். சொல்லு.

ஓக்கே...இப்ப நம்ம முன்னாடி இருக்கறதுல முக்கியமான ரெண்டு விஷயம்...தங்கம் இருக்கிற சரியான இடத்தைக் கண்டு பிடிக்கறது. அடுத்தது அதை வெளியே கொண்டு வர்றது. இடத்தைக் கண்டு பிடிக்கறது ஒண்ணும் இப்ப பெரிய விஷயம் இல்லன்னு நினைக்கிறேன். நான் ஒரு வாட்டி நம்ம அண்டர்வாட்டர் ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்டுல இருக்கற ஒரு ஆள் கூட பேசிக்கிட்டிருக்கும்போது அவன் சொன்னது ஞாபகம் வருது. GPS உபயோகிச்சு அதாவது குலோபல் பொசிஷனிங் சிஸ்டம் உபயோகிச்சு சரியா எந்த இடத்துல அந்த உலோகப் பொருள் இருக்குன்னு கண்டுபிடிச்சிடலாம்.அதுக்கப்புறமா..ஏதோ ஒரு டிவைஸ் இருக்காம். ஆள் தண்ணிக்குள்ள போகாமலேயே ஆழத்துல இருக்குற பொருளைக் கரெக்ட்டா கண்டுபிடிச்சிட முடியுமாம். அந்த டிவைஸ் பேர் கூட...side scan sonar...இதுக்கு இன்னொரு பேர் கூட சொல்லுவாங்களாம் bottom classification sonar. இதை அவங்க கடல் படுகையோட மேப் தயாரிக்கறதுக்கு உபயோகிப்பாங்க. வைட் ரேஞ்சுல இது சென்ஸ் பண்ணி ஆப்ஜெக்ட் இருக்கிற இடத்தை தெளிவா சொல்லிடும்...

ஆஹா...என்னெல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கய்யா நீ...கில்லாடிதான். அப்ப இந்த ஒரு மெஷின் போதுமே தங்கம் இருக்கிற சரியான லொக்கேஷனைத் தெரிஞ்சிகிறதுக்கு.

அது மட்டும் பத்தாது சேட்டு. மொதல்ல அந்தப் பகுதியோட ஆழத்தை கண்டுபிடிக்கனும்.அது ரொம்ப சுலபம்.Depth sounding sonar equipment ங்கறதை வெச்சுக் கண்டுபிடிச்சிடலாம்.அப்புறமா இந்த டிவைசை உள்ளே அனுப்பனும். உள்ளருந்து அது குடுக்கற இன்ஃப்ர்மேஷனை மானிட்டர் பண்ணனும். அடுத்து டைவர்ஸை அனுப்பி அதை வெளியே கொண்டு வரனும்.

தனசேகர் சொல்லச் சொல்ல சேட்டும்,கஜாவும் வாயைப் பிளந்துகொண்டு கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

எப்படி தனா இதெல்லாம்...ஆச்சர்யமாய் கேட்ட சேட்டை ஒரு புன்முறுவலோடு பார்த்துக்கொண்டே...

அடிப்படையில நான் ஒரு எஞ்சினீயரிங் படிச்சவன். எப்படியோ இந்த திரை மறைவு தொழிலுக்கு வந்துட்டேன். இருந்தாலும் இண்டெர்நெட்டை நோண்டிக்கிட்டெ இருக்கறது எனக்கு பொழுதுபோக்கு. நல்ல வேலை செய்யறவங்களுக்கு மட்டுமில்ல...நம்மள மாதிரி சட்டவிரோத செயலைச் செய்யறவங்களுக்கும் இணையம் தனக்குள்ள நிறையவே வெச்சிருக்கு. அது மட்டுமில்லாம நாமெல்லாம் என்ன அந்தக் காலத்து கிரிமினல்களா...மரப்பெட்டியில தங்கத்தை வெச்சு தண்ணியில கடத்தறதுக்கு? லேட்டஸ்ட் டெக்னாலஜியை உபயோகிச்சுத்தானே இந்த வேலைங்கள செஞ்சிக்கிட்டு வரோம். அப்படி தெரிஞ்சிக்கிட்டது கொஞ்சம், அப்புறம் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அந்த ஆர்க்கியாலஜி ஆள்கிட்ட தெரிஞ்சிக்கிட்டது மீதி.

சூப்பர் தனா. நல்ல வேளை உன் ஞாபகம் வந்துச்சி. எப்படி செய்யப் போறோம்ன்னு கவலைப் பட்டேன்....இப்ப நம்பிக்கை வந்துடிச்சி...ம்...சொல்லு.

சோ....இந்த காரியத்துக்காக நாம கொஞ்சம் பொருள்களையெல்லாம் வாங்கனும். லோக்கல் மார்க்கெட்டுல வாங்க முடியாது. நீ உன் ஆளு குப்தாவுக்கு சொல்லி நான் குடுக்கற லிஸ்ட்ல இருக்கற பொருளையெல்லாம் அமெரிக்காவுலருந்து ஒரு கன்சைன்மெண்ட்ல அனுப்பச் சொல்லு. கஸ்டம்ஸ் தொந்தரவு இல்லாம அது நம்மக்கிட்ட வந்து சேர்ந்துடும். முக்கியமா அண்டர் வாட்டர் வீடியோ கேமரா, ஃப்ளாஷ்,இதெல்லாம் வேணும். ஸ்கூபா டைவர்ஸ்ங்க உபயோகிக்கற suit எல்லாம் சரிப்படாது. அது 40,50 மீட்டர் ஆழத்துக்குத்தான் லாயக்கு. நம்ம பொருள் இருக்கறது எப்படியும் 500 மீட்டர் ஆழம் இருக்கும். எப்படியும் முதல்ல நாம ஆழம் பார்த்துட்டுத்தானே அடுத்த செயல்ல இறங்குவோம்....பொடி வைத்து பேசி விட்டு சிரிப்புடன் சேட்டைப் பார்த்தான் தனா...

ஹா...ஹாஹ்ஹா....ரொம்ப கரெக்ட். ஆழம் தெரியாம காலை விடக்கூடாது.....


தொடரும்

அமரன்
03-04-2008, 09:34 AM
முதல் பாகத்தைப் படித்ததும் லப் டப் எகிற துவங்கியது. அடுத்து என்ன என்று எட்டிப்பார்க்கும் முனைப்பில் இதயம் துள்ளி வெளியே வந்து விடுமோ என்ற அச்சப் பெருஞ்சுமை அழுத்தியது. ஆதலால், கதை முடிந்தால்தான் படிப்பேன் என்ற முடிவில் அடமாக இருந்தேன். அதை சுருக்கமாக சொன்னேன். அதுவே வம்பாகிப் போயிட்டுது. தனிமடலிலும் பொதுவிலும் ஆறுதல்களும் குசல விசாரிப்பும் பெருகி உசுப்ப உட்கார்ந்தேன்.. ஒரே மூச்சாக எட்டுப்பாகத்தையும் படித்தேன். பிடிக்கவில்லை.. சிவா செய்தது பிடிக்கவில்லை.. (இந்த இடத்தில் தொடரும் போட்டு முடிக்க, கதையின் தாக்கம் விதைத்து முளைக்க வைத்த ஆசைக்கு ஆசை. கிடைக்கும் அர்ச்சனைகளை நினைத்து கட்டுப்படுத்திக் கொண்டேன்.)

கணிணியின் மயக்கம் தெளிவித்ததும் தானாக வந்து விழும் வார்த்தைகள், இப்போது முரண்டு பிடிக்கிறன. ஆச்சரியப்படவைக்கும் திறமையை இதுகாலும் மறைத்து வைத்த நண்பர் சிவாவை வைய, அவைகளுக்கும் இஷ்டமில்லைப் போலும்..

1917, 2007 என இரு நேர்கோட்டுத் தடங்களைப் பார்த்ததும் கண்முன் விரிந்தது பயணத்தின் வெற்றி. தொடர்ந்த வாசிப்பின் பின்னால் கண்களே விரிந்தன. பாராட்டுகள் சிவா..

கைதட்டல்களை பாராட்டுகள் என்ற வார்த்தையில் அடக்கி விடுவதால் பாதகமில்லை. தலைக் குட்டல்களை பிழை என்ற ஒற்றை பதத்தில் பொதித்து விடுவதால் சாதமில்லை. தவிர, நண்பன் முகத்துக்கு முன்னால் அவனைப் புகழாதே. முதுக்குப் பின்னால் அவனை இகழாதே எனும் பிடியில் அழுங்கு நான்..

90 ஆண்டு காலவித்தியாசத்தில் பறக்கும் கதையில் கதை மாந்தன் பாண்டியன் வாழ்வுக்காலம் 80. கதைக்காலத்துக்கு முந்திய அவனது வாழ்வுக்காலம் அதிகபட்சம் 20 ஆக ஆவது இருக்க வேண்டும். நூறு ஆண்டுகள் வாழ்ந்த பெருமை பாண்டியனுக்கு..

நாயை உதைத்தால் கடிக்கும், அல்லது வள்ளென்று கத்தி மறையும் போன்ற நிதர்சனங்களை, நிகழ்வுகளை நிழலாட வைக்க, வார்த்தைகளை வாரி இறைப்பது அவசரத்தில் நேரத்தை கரைத்து விட்டு, சிந்திக்க நேரம் இல்லாத வாசகனுக்கு பயன்மிக்கது.

எதிர்காலம் அறியாமல் காத்திருந்தான் போன்ற சிலவற்றை அடிக்கடி கேட்டால், சலிப்படைவது என்னியல்பு.

பெட்டி கைமாறுவது, திருப்பம் வருகிறது என்பதுக்கான சமிக்கை.. அவ்விடத்தின் "பின்குறிப்பு" பொருத்தம்.

டார்ச்சை வெளிச்சம் டார்ச்சர் பண்ணிய பாண்டியனின் படகைக் கண்டதான குறிப்பு மலைப்பு.

சாதனங்களின் பட்டியல், குடித்தால் நிலை பிறழும்.. நினைவாட்சி உச்சம் பெறும்.. சிவாவின் தேடல் எமக்குத் தந்த பொக்கிசங்கள். இன்னும் எதிர்பார்க்கின்றேன்..

எங்கவீட்டுச் சாப்பிட்டில் அதிகமாக எறும்பு இருப்பதில்லை. மீனை நான் அதிகம் உண்பதில்லை. அதனால் முகக்கண்பார்வை கூர்மை சற்று மந்தம் எனக்கு..

மதி
03-04-2008, 11:53 AM
உண்மை தான்.. அழம் தெரியாம காலை விடக்கூடாது.....

தனா மூலமா நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம் சிவாண்ணா.. உங்க தேடல் வியக்க வைக்கிறது..

சிவா.ஜி
03-04-2008, 11:54 AM
அமரனின் அசத்தல் ரக பின்னூட்டம் பார்த்து அசந்துவிட்டேன்.எட்டுபாகத்தையும் அலசிப் பிழிந்து சாரத்தை ஈரம் காயாமல் இங்கே தெளித்திருக்கும் தெள்ளிய வரிகள் மனதில் இனம் புரியா மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

அந்தக்காலத்து மனிதர்க|ள் ரசாயனமில்லா உணவை உண்டு 100 வயதுக்கும் மேல் வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவனாகத்தான் நான் பாண்டியனைக் காட்டியிருக்கிறேன்.

மேலும் எடுத்துக்கொண்ட கருவுக்கு சிதைவில்லாமல்,அதே சமயம் ரசிக்க வைக்கும் விதத்தில் எழுத வேண்டுமென்று சிரமிக்கிறேன். பிழைகளைப் பொறுத்துக்கொள்ளுங்கள். இன்னும் கடக்கவேண்டிய தூரம் அதிகம். அதற்குள் என்னை செம்மைப் படுத்திக்கொள்கிறேன்.

மிக்க நன்றி அமரன்.

சிவா.ஜி
03-04-2008, 11:58 AM
உண்மை தான்.. அழம் தெரியாம காலை விடக்கூடாது.....

தனா மூலமா நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம் சிவாண்ணா.. உங்க தேடல் வியக்க வைக்கிறது..

என்னைச் சொல்லலியே...?(சும்மா) சரிதான் மதி. எதிலும் ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாதுதான்.

தேவைப்பட்ட சில விஷயங்களைத் தருகிறேன,அதிகமாகிவிட்டாலும் கதையோட்டத்தை பாதிக்கும். தொடர்ந்த உற்சாகத்திற்கு மிக்க நன்றி மதி.

அமரன்
03-04-2008, 02:28 PM
சிவா! ஊக்கம் கெடுக்கும் நோக்கம் எள்ளளவும் எனக்கில்லை. பல நேரம் செலவிட்டு சமைத்ததை, ஐந்து/பதினைந்து நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு, பக்குவமில்லாத உறவிடம் பிழை சொல்வது, சாப்பாட்டுக்கு தங்கிணதொம் போடும் நிலைக்கும் இட்டுச்செல்லும். பக்குவமான உறவானால் நிறைசுவை விருந்தி நோக்கி எடுத்து செல்லும். நீங்கள் பக்குவமானாவர். நான் சொன்னவை எனக்குத் தெரிந்த ஆக்கப் பக்குவம். தொடர்ந்து படையல் வைங்க.. புசித்து சிலாகிக்க நாம் ரெடி..

மலர்
03-04-2008, 04:06 PM
அப்பாடா இந்த பாகத்துக்கு முந்தியாச்சு..!
:traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001:
நற.....நற.... :sauer028: :sauer028:
பேசாம அடுத்தடுத்த பாகத்துக்கு எல்லாம் இப்பவே துண்டு போட்டு வச்சிருங்களேன்... :eek: :eek:
இன்னும் வசதியா இருக்கும்....

அமரன்
03-04-2008, 05:09 PM
:traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001:
நற.....நற.... :sauer028: :sauer028:
பேசாம அடுத்தடுத்த பாகத்துக்கு எல்லாம் இப்பவே துண்டு போட்டு வச்சிருங்களேன்... :eek: :eek:
இன்னும் வசதியா இருக்கும்....
எட்டாவது பாகத்துக்கு உன் சார்பாக நான் பதில் போட்டிருக்கேனே மலரு. கவலை கொல்.

மலர்
03-04-2008, 05:16 PM
எட்டாவது பாகத்துக்கு உன் சார்பாக நான் பதில் போட்டிருக்கேனே மலரு. கவலை கொல்.
கொன்னுட்டேன் அமரு.... :icon_shades: கவலையை சொன்னேன்.... :D :D
முதல்ல பதில் போட்டதுக்கு ... :aktion033::aktion033:
-------
ஹையா..... :icon_rollout: :icon_rollout:
மதி நிறைந்த மதி.... :icon_cool1::icon_cool1:
இப்போ என்ன பண்ணுவீங்க :icon_tongue::icon_tongue: இப்போ என்ன பண்ணுவீங்க..... :icon_shout::icon_shout:

மதி
03-04-2008, 06:55 PM
ஆள் வச்சு துண்டு போட்டு இடம் புடிக்கறதெல்லாம் ஓவரு...

செல்வா
03-04-2008, 10:07 PM
அண்ணா... கலக்குறீங்க அண்ணா.... நீங்க குடுக்கிற தகவல்கள் எல்லாம் பாக்கும்போது ... எவ்வளவு ஊழைப்பு இந்த எழுத்துகளுக்கு பின்னால இருக்குண்ணு உணர முடியுது. உழைப்பு என்னிக்குமே வீணாகாது... தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் அண்ணா..

சிவா.ஜி
04-04-2008, 05:24 AM
அண்ணா... கலக்குறீங்க அண்ணா.... நீங்க குடுக்கிற தகவல்கள் எல்லாம் பாக்கும்போது ... எவ்வளவு ஊழைப்பு இந்த எழுத்துகளுக்கு பின்னால இருக்குண்ணு உணர முடியுது. உழைப்பு என்னிக்குமே வீணாகாது... தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் அண்ணா..

தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி செல்வா. பெரிய உழைப்பெல்லாம் ஒன்றுமில்லை. கதைக்குத் தேவை என்பதால் சேகரித்த தகவல்கள் அவை.

lolluvathiyar
04-04-2008, 06:53 AM
அதுக்குள்ள நிரைய பாகம் எழுதி முடித்து விட்டார். இதை சாதர்னமாக பாராட்ட முடியாது, நீன்ட ஊக்கம் அளித்த அமரன் இதயம் அவர்களுக்கு சிவா ஜி சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த கதையில் நம்ம சிவாஜி டெக்னாலகஜியை நோன்டி தந்திருக்கிறாரு. (இந்த அன்டர் வாட்ட சோனார் சமாசாரங்களை எங்கியோ படிச்சுட்டு தான் இவருக்கு இப்ப கதை தோனி இருக்கும்) என்னனவோ சொல்லராரு டார்ச் லைட் அடிக்கு தூரம் எல்லாம் சொல்லராரு ஆகா ஒரு ஆங்கில கதை படிப்பது போல இருக்கு.
சிவாஜிக்கு இந்த மிசன் இம்பாசிபிள் பாசிபிள் ஆக கூடியதுதான். தொடருங்கள் சிவாஜி

சிவா.ஜி
04-04-2008, 07:33 AM
நன்றி வாத்தியார். உண்மையிலேயே...கதை தோன்றினதுக்கப்புறமாத்தான் அது சம்பந்தமா தகவல்களை தேடிப் பிடிச்சேன். இங்கிலாந்துலருந்து கப்பல்ல தங்கம் ஆஸ்திரேலியா போனதைப் பத்தி எப்பவோ படிச்சிருக்கேன். அதுல கிடைச்ச ஸ்பார்க் தான் இந்த கதை உருவாகக் காரணம்.

அமரன்
04-04-2008, 07:49 AM
காலைல இருந்து காத்திட்டு இருக்கேங்கோ... கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க...

சிவா.ஜி
04-04-2008, 08:26 AM
பாகம்-9

அந்த சந்திப்பைத் தொடர்ந்து வேலைகள் வெகு விரைவாக நடந்தன. தனசேகர் தன் அனைத்து தொடர்புகளையும் பயன்படுத்தினான்.
ஏன், எதற்கு என கேள்வி கேட்ட குப்தாவிடம்...

விவரம் கேக்காம சொன்னதை அனுப்பிட்டு காசை வாங்கிக்கய்யா...என்று கனவர்லால் சொன்னதும்..அவனும் அப்படியே அந்த உபகரணங்களை அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைத்து விட்டான்.

கஸ்டம்ஸிலிருந்து அந்த கன்சைன்மெண்ட்டை கொண்டு வருவதற்குள் லஞ்ச ஆபீசர்களின் ஆயிரத்தெட்டுக் கேள்விகளுக்கும் பதில் சொல்லியே கன்வர்லாலுக்கு தாவு தீர்ந்துவிட்டது.காசையும் வாங்கிக்கிட்டு கேள்வி வேற கேக்கறானுங்க...கோபமாய் இரண்டு வசவையும் சொல்லிக்கொண்டான்.

வந்து சேர்ந்ததை தனாவுடன் சரி பார்த்தார்கள். அனைத்தும் திருப்தியாகவே இருந்தது. சாதனங்கள் வந்துவிட்டன,ஆனால் அதை இயக்குவதற்கு ஆள் வேண்டும். அதற்கும் தனாவே ஆளைப் பிடித்தான். தொழில் முறை ஆழ்கடல் மூழ்குவோரை தேர்ந்தெடுத்துவிட்டு அவர்களைச் சென்னையிலேயே இருக்கும்படி சொல்லி விட்டு அழைக்கும்போது வந்தால் போதும் என்ற கட்டளையை போட்டுவிட்டு அனைவரும் நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். இருப்பதிலேயே நல்ல தங்கும் விடுதியான ஆசாத் லாட்ஜில் அறை எடுத்துக்கொண்டார்கள். அங்கிருந்து குளச்சலுக்கு 17 கிலோ மீட்டர்தான் என்பதாலும்,வேறு பெரிய நகரம் குளச்சலுக்கு அருகில் இல்லாததாலும் நாகர்கோவிலேயே தங்க தீர்மானித்தார்கள்.

கூட வந்திருந்த ஆட்களை ஹோட்டலிலேயே விட்டுவிட்டு தங்கள் ஸ்கார்ப்பியோவில் கன்வர்லாலும்,தனாவும்,கஜாவும் குளச்சலுக்கு வந்தார்கள். சரித்திரத்தில் இடம்பெற்ற பிரதேசம். டச்சுக்காரர்களுக்கும் மார்த்தாண்ட வர்மா என்ற அரசருக்கும் ஏற்பட்டப் போரில் இந்தியப் படைகள் வெற்றி பெற்ற இடம். அதை தனா கன்வர்லாலுக்குச் சொன்னதும்..

அச்சா...அன்னைக்கு டச்சுக்காரங்களுக்கு எதிரா நம்ம இந்தியன் ஜெயிச்சிருக்கான். அப்ப நல்ல ராசியான இடம்தான். நமக்கும் இந்த தேடுதல்ல வெற்றிதான் என்று கட்டைவிரலை உயர்த்திக் காண்பித்தவனை, கிண்டலாகப் பார்த்துக்கொண்டே....

அன்னைக்கு கிடைச்ச வெற்றி நாட்டை எதிரிங்ககிட்டருந்து காப்பாத்த போட்ட சண்டையில கிடைச்சது...ஆனா இப்ப நாம செய்யப் போறது தேசத்துக்காகவோ...பொதுநலனுக்காவோ இல்ல...பக்கா கிரிமினல் வேலை. இதுக்கு அந்த செண்டிமெண்ட்டெல்லாம் வேலைக்காகாது. வேணுன்னா உன் திருப்திக்கு இந்த மண்ணை எடுத்துக் கொஞ்சம் நெத்தியில பூசிக்கோ சேட்டு என்று சொன்ன தனாவைப் பார்த்து கோபமாக..

என்ன தனா கிண்டலா....சேம்சைட் கோல் போடற..?

சும்மா விளையாட்டுக்குச் சொன்னா...இப்படி கோவிச்சுக்கறயே சேட்டு..சரி..சரி.. அதை விடு. அந்த சூசைராஜைப் போய் பாக்கனும் அவர்கிட்டதான் லேட்டஸ்ட் வசதிகளோட ஒரு போட் இருக்கு. அதை வாடகைக்கு எடுத்துக்கலாம். நாளைக்கு அந்த அவுட்டோர் யூனிட் வண்டியில சாதனங்களையெல்லாம் ஏத்திக்கிட்டு இங்கே வந்துடலாம். நாளைக்கு முதல் நாள் சும்மா அப்படியே ஒரு ரவுண்டு போய்ட்டு இடத்தைப் பாத்துட்டு வந்துடலாம்.

எதுக்கு சும்மா போகனும்...அப்படியே ஆழம் எவ்வளவுங்கறதையும் கண்டுபுடிச்சிட்டு வந்துடலாமே...

அசத்துறியேயா சேட்டு...ரொம்ப வேகமா இருக்கியே. ஒரு நாள் ரிலாக்ஸ் பண்ணிக்கலான்னு நினைச்சா...பயங்கர வேகத்துல இருக்கே.

ஆமா தனா...ரெஸ்டெல்லாம் கிடையாது. அந்த தங்கக் கட்டிங்களைத் தடவிப்பாக்கனுன்னு இப்பவே கை பரபரங்குது.

ம்...அடங்கு...அடங்கு....இந்த வேலையெல்லாம் ரொம்ப நிதானமாத்தான் செய்யனும். பதட்டம் நம்மைக் காட்டிக்குடுத்துடும். கோஸ்டல் கார்ட் ஆளுங்க கேட்டா காட்டறதுக்கு அந்த பர்மிஷன பேப்பரைத் தயாரா வெச்சிக்க. இங்க நீ இந்த டாக்குமெண்ட்ரியை தயாரிக்கற தயாரிப்பாளர். நான் டைரக்டர். கேமரா, கேமராமேன் எல்லாரும் இருப்பாங்க..ஆனா ஷூட்டிங் எதுவும் நடக்காது.

ஆனா...ஏதாவது ஆபத்துன்னா இந்த ஷூட்டிங் நடக்கும் என்று கைத்துப்பாக்கியை எடுத்துக் காண்பித்த கன்வர்லாலைப் பார்த்ததும்,

அட அதை உள்ள வை சேட்டு. எவனாவது பாத்துத் தொலைச்சா பேஜாராயிடும். சரி வா ஒரு குத்துமதிப்பா அந்த பாண்டியன் காத்துக்கிட்டிருந்த இடத்துக்குப் போய் பாக்கலாம். அந்த இடத்தைக் கண்டுபிடிக்கனுன்னு அவசியம் இல்லன்னாலும்...சும்மாப் போய்ப் பாத்துட்டு வரலாம்.

நடக்கத்தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே அவர்களின் பின்னாலிருந்து சார் என்ற குரல் கேட்டதும், திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தான் கன்வர்லால்.

பாண்டியனின் பேரன் வந்துகொண்டிருந்தான்.

என்ன சார் நீங்க இங்க...மறுபடியும் ஏதாவது பழையகாலத்துக் காசு வாங்க வந்திருக்கீங்களா...அவன் கேட்டதும்

சட்டென்று..எதுவும் சொல்லத் தோன்றாமல்...லேசான தடுமாற்றத்துடன்....ம்.ஆ...ஆமா..நாகர்கோவிலுக்கு வந்தேன். இங்கே அந்த...என்று அவன் சொல்லத் தொடங்கியதும்...தனா...குறுக்கிட்டு...யார்ங்க இது...என்று கேட்டுவிட்டு கன்வர்லாலைப் பார்த்து சைகை செய்தான்.

இந்தப் பையனா....நம்ம கடைக்கு ஒரு தபா வந்திருக்காரு. நீங்க கூட நம்மக் கடையில ஒரு பெட்டியைப் பாத்து நல்லாருக்குன்னு சொன்னீங்களே அதைக் குடுத்தது இந்தப் பையன் தான். இவங்க தாத்தாவோடதுதான் அது.

இருவரும் திடீரென்று மரியாதையுடன் பேசிக்கொள்வதைப் பார்த்து கஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

தம்பி இவர் ஒரு டைரக்டர்...ஏதோ டாக்குமெண்ட்ரி படம் எடுக்கறாங்களாம். நான்தான் பண உதவி செய்யறேன். இங்கேதான் எடுக்கப் போறாங்க அதான் இடத்தைப் பாக்க வந்தோம்.

தமிழ் படமா சார்.?

இல்லப்ப இது தண்ணிக்குள்ள எடுக்கற படம். நீ டிஸ்கவரி சேனல்ல பார்த்திருப்பியே அந்த மாதிரி...தனா சொன்னான்.

ஓ அப்படியா...சரி...சார் நீங்க கொடுத்த பணம் ரொம்ப உதவியா இருந்தது சார். ரொம்ப நன்றி என்று கன்வர்லாலைப் பார்த்து சொன்னதும்..தன் பையிலிருந்து நான்கு 500 ரூபாய்த் தாள்களை எடுத்து அவனிடம் கொடுத்தான் கன்வர்லால்.

எ..எதுக்கு சார்..?

பரவால்ல வெச்சுக்கோ...அந்த பெட்டிக்கு எனக்கு நல்ல விலை கிடைச்சது. அதனால உனக்கு இன்னும் கொஞ்சம் கொடுக்கனும்போல தோணுச்சி அதான்...வெச்சுக்கோ..

எதிர்பாராமல் கிடைத்த அந்தப் பணத்தைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷமாகி ரொம்ப நன்றி சார்...நான் வரேன்...இங்க பக்கத்துலதான் எங்க வீடு. வேகமாக நடந்து மறைந்தான்.

என்னா சேட்டு..திடீர்ன்னு பணத்தை எடுத்துக்குடுத்துட்டே...

இல்ல தனா...இவ்ளோ பெரிய புதையல் கிடைக்க இவன் தானே காரணம்...அதான் மனசுல தோணுச்சி..சட்டுனு எடுத்துக் கொடுத்திட்டேன்.

ம்...அப்பப்ப நல்ல எண்ணமெல்லாம் கூட உனக்கு தோணுதுய்யா...சிரித்துக்கொண்டே தனா,

சேட்டு இந்தப் பையனோட உதவி ஏதாவது தேவைப்படுமா...?

வேணா தனா...இவனை இதுக்குள்ள கொண்டு வரவேண்டாம். அநாவசியத் தொல்லையாயிடும். சரி வா போலாம்.

மூன்று பேரும் கடலை நோக்கி நடந்தார்கள்.

பின்னால் ஏதோ சத்தம் கேட்கத் திரும்பிப்பார்த்த கஜா..கன்வர்லாலில் தோளைத் தட்டி கிசுகிசுப்பான குரலில் சொன்னான்.....

சேட்டு போலீஸ் வருது.

தொடரும்

அமரன்
04-04-2008, 08:35 AM
சீரான வேகத்தில் போய்க்கொண்டிருந்த கதை நகர்வில், நவாத்தியாயத்தில் திடீர் திடீரெனெ திருப்பங்கள். வேக அதிகரிப்புக்கு உதவியாக உள்ளன.. கிரைம் நடக்க முன்னர் வரும் பொலிஸ், இடையே வந்த பாண்டியன் பேரன்... பொடி வைத்து எழுதும் விதமாக அமைந்துள்ளது. தொடருங்கள் சிவா.. சரித்திரப் பக்கமும் உங்கள் தேடல் படர்ந்திருக்கு.. உழைப்புக்கு வாழ்த்துகள்.

மதி
04-04-2008, 08:53 AM
அட..அமரன் முந்திக்கிட்டாச்சா..?
விறுவிறுப்பாய் நகர்கிறது கதை.... தெளிவாய் முடிச்சுகளுடன். அடுத்து என்ன.. அடுத்து என்ன..?

சீக்கிரம் பதியுங்க..

சிவா.ஜி
04-04-2008, 09:15 AM
நன்றி அமரன். நன்றி மதி. இருப்பா..மதி....கொஞ்சம் மூச்சு வாங்கிக்கறேன். அடுத்த பாகம் நாளைக்குப் போட்டுடறேன்.

அமரன்
04-04-2008, 09:21 AM
நன்றி அமரன். நன்றி மதி. இருப்பா..மதி....கொஞ்சம் மூச்சு வாங்கிக்கறேன். அடுத்த பாகம் நாளைக்குப் போட்டுடறேன்.
நல்லா வாங்கிக்கோங்க.. கடல்ல மூழ்கவேண்டுமல்லவா.:D

செல்வா
04-04-2008, 10:30 AM
ஆகா அண்ணா..... அசரவைக்கிறீங்க போங்க.... தகவல்கள தேடிப்பிடிக்கிறது பெரியவிசயமில்ல அத தகுந்த இடத்துல பயன்படுத்தறது தான் பெரிய விசயம். உங்க மேல கோபம்... தொடரும் போட்டதுக்கு


நல்லா வாங்கிக்கோங்க.. கடல்ல மூழ்கவேண்டுமல்லவா.:D

முத்தெடுக்கவா இல்ல தத்தளிக்கவா?

அமரன்
04-04-2008, 10:54 AM
முத்தெடுத்துப் பின் வாழ்த்திலும் நன்றியிலும் தத்தளிக்க

மலர்
04-04-2008, 02:54 PM
பாகம்-9
கஸ்டம்ஸிலிருந்து அந்த கன்சைன்மெண்ட்டை கொண்டு வருவதற்குள் லஞ்ச ஆபீசர்களின் ஆயிரத்தெட்டுக் கேள்விகளுக்கும் பதில் சொல்லியே கன்வர்லாலுக்கு தாவு தீர்ந்துவிட்டது.காசையும் வாங்கிக்கிட்டு கேள்வி வேற கேக்கறானுங்க...கோபமாய் இரண்டு வசவையும் சொல்லிக்கொண்டான்.
சேட்டு போலீஸ் வருது. தொடரும்
கதை சும்மா.... டாப் கியர்ல விறுவிறுப்பா போகுதுண்ணா.. :icon_b: :icon_b:

என் கண்ணே பட்டிரும் போல... சுத்தி போடுங்கோ.... :D :D

ஒவ்வொரு பாகமும் சஸ்பென்ஸாவே போகுது...??:sauer028: :sauer028:

தொடந்து எழுத பாராட்டுக்கள் அண்ணா....

அமரன்
04-04-2008, 02:59 PM
கொன்னுட்டேன் அமரு.... :icon_shades: கவலையை சொன்னேன்.... :D :D
முதல்ல பதில் போட்டதுக்கு ... :aktion033::aktion033:
பகிர்ந்துகொண்டால் சந்தோசம் இரட்டிப்பாகும். கொன்னுட்டேன் மலரு; கொன்னுட்டாய் மலருன்னு எனது சந்தோசத்தையும் இரட்டிப்பாக்க, தினமும் உன் பதிவுகளைப் படிக்கிறேன் தங்க மங்கையே..

சிவா.ஜி
04-04-2008, 03:13 PM
கதை சும்மா.... டாப் கியர்ல விறுவிறுப்பா போகுதுண்ணா.. :icon_b: :icon_b:

.
ரொம்ப நன்றிம்மா மலரு....உங்க எல்லோருடைய ஊக்கத்துல...உற்சாகமா இருக்கு.

அக்னி
04-04-2008, 04:01 PM
கோபம் வருகின்றது சிவா.ஜி...
உண்மையிலேயே கோபம் வருகின்றது.
போட்ட தொடரும் கோபத்தைத் தூண்டுகின்றது.
எதிர்பார்ப்பில் வரும் கோபம். காத்திருக்க வைக்கும் கோபம்.
இதுவே உங்கள் எழுத்தின் வெற்றி...
ஆகையால் பூரிப்பாய் மாறுகின்றது கோபம்...
பாராட்டுக்களுடன் காத்திருக்கின்றேன்...


தன் காரை சந்திலிருந்து திருப்பி முக்கியச் சாலையின் இயந்திர எறும்புக்கூட்டத்தின் இரண்டாயிரத்து முப்பத்தியாறாவது வாகனமாக தன்னுடையதையும் இணைத்துக்கொண்டு ஊர்ந்தான்.

புதுமையான காட்சி விரிப்பில், நடக்கையில் பரவச மிதப்பு...

சிவா.ஜி
04-04-2008, 04:17 PM
பாராட்டுக்களுடன் காத்திருக்கின்றேன்...
.
அதிகமாய் காக்க வைக்காமல் அடுத்த பாகத்தை சீக்கிரமே கொடுத்துவிடுகிறேன் அக்னியாரே....

உங்கள் பாராட்டுக்கு மனம் நிறைந்த நன்றி.

சிவா.ஜி
05-04-2008, 04:25 AM
பாகம்-10

கன்வர்லாலும், தனசேகரரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். தனா எந்த பரபரப்புமில்லாமல்...அருகே வந்த அந்த போலீஸ் அதிகாரியை பார்த்தான்.

சார்...அங்க நிறுத்தியிருக்கற ஸ்கார்பியோ உங்களோடதா..? கேட்ட அதிகாரியிடம்

ஆமா சார்...ஏன் கேக்கறீங்க..?

சார் எவனோ ஒரு குடிகார பய ட்டூ வீலர்ல வந்து பின் பக்கத்துல மோதிட்டான். டெயில் லாம்ப் டேமேஜ் ஆயிடிச்சி. அங்க இருந்த நான் இதைப் பாத்துட்டு பக்கத்துல இருந்தவங்கக் கிட்ட விசாரிச்சதுல...நீங்க மூணு பேரும் இந்தப்பக்கமா வந்ததா சொன்னாங்க....அதான் உங்களைப் பாத்து சொல்லிட்டு போகலான்னு வந்தேன்...

இவருக்கு என்ன இவ்வளவு அக்கறை...பெரிய ஆளுங்க...காக்கா புடிக்க வந்திருப்பாரு...கேவலமான ஆளுங்கய்யா...என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே கன்வர்லால்...

ரொம்ப நன்றி சார் தகவலுக்கு. திரும்பி வந்து பார்த்துட்டு கன்ப்யூஸ் ஆகியிருப்போம். பரவால்ல சார் நாங்க பாத்துக்கறோம்...நீங்க.....

நான் வள்ளிநாயகம். இந்த ஏரியா இன்ஸ்பெக்டர். நீங்க இங்கே கடலுக்குள்ள ஏதோ படம் எடுக்கப் போறதா எங்களுக்கு இன்ஃபர்மேஷன் வந்தது. நீங்க பெர்மிஷனுக்கு அப்ளை பண்ணீங்களே அந்த ஆபீஸ்லருந்து. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைன்னா சொல்லுங்க சார்.

கன்வர்லாலுக்கு ஆச்சர்யத்துடன் கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது. இந்த ஆள் ஏதாவது பிரச்சனை செய்வாரா என்று. எதற்கும் இருக்கட்டுமென்று...

ரொம்ப நன்றி சார். டிபார்ட்மெண்ட் பயங்கர ஃபாஸ்டா இருக்கீங்க. ஊருக்கு புது ஆளுங்க வந்ததும் உடனே தகவல் கிடைச்சிடுது. பரவால்ல நம்ம தமிழ்நாட்டு போலீஸோட நெட்வொர்க் நல்லாவே இருக்கு.

என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க...இந்த ஏரியாவுல எந்த சம்பவம் நடந்தாலும் எங்களுக்கு உடனுக்குடனே தகவல் தெரிஞ்சிடும்.. எங்க கம்யூனிகேஷன் அவ்ளோ ஸ்ட்ராங்.

யோசனையுடன் தனாவைப் பார்த்த கன்வர்லாலின் பார்வை...கேட்ட ஏதாவது சிக்கலாகுமா என்ற கேள்வியைப் புரிந்துகொண்ட தனா...ஒன்றுமில்லை நீ பதட்டப் படாதே என்று அதே மௌன மொழியில் பதில் சொல்லிவிட்டு,இன்ஸ்பெக்டரைப் பார்த்து..

சார்...இப்போதைக்கு எந்த உதவியும் வேண்டாம். தேவைப்படும்போது கண்டிப்பா உங்கக்கிட்ட வரோம். நாங்க ஸ்பாட்டைப் பாக்க போயிக்கிட்டிருக்கோம்...தனா கடைசி வார்த்தையை இழுத்ததில் இருந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டு,

ஓக்கே சார். எப்ப எந்த உதவி வேணுன்னாலும் என்கிட்ட வாங்க சார்.

சொல்லிவிட்டு போய்விட்டார்.

என்ன தனா...இந்த ஆளு தொந்தரவா இருப்பாரா..?

இல்ல சேட்டு...இந்த ஆளைப் பாத்தாலே கரப்டட்ன்னு நல்லா தெரியுது. இந்த மாதிரி ஆளுங்களோட உதவி நமக்கு எப்ப வேணுன்னாலும் தேவைப்படும். சரிவிடு...நாம தேடாமலேயே நமக்கு ஏத்த மாதிரி ஒரு ஆள் கிடைச்சிட்டார். உன் செண்டிமெண்ட் வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி சேட்டு. நிச்சயம் வெற்றிதான்..நட...

ஹி...ஹி...நாந்தான் அப்பவே சொன்னேனே...

கஷ்டம்ய்யா...என்று நினைத்துக்கொண்டே தனா வேகமாய் நடந்தான்.

திரும்ப அறைக்கு வந்ததும் கன்வர்லால்....பாப்ரே...ரொம்ப டயர்ட் ஆயிடிச்சி தனா. ரொம்ப நடக்கவெச்சிட்டே...என்று சொல்லிக்கொண்டே மெத்தையில் துணிமூட்டையைப் போல சரிந்தார்.

சேட்டு நாளைக்குக் காலையில நம்ம யூனிட் அங்க போகுது. முதல் வேலையா இப்ப நாம வாடகைக்கு எடுத்திருக்கிற இந்த போட்ல போய் ஆழம் கண்டுபிடிக்கனும். அப்படியே பேருக்கு கொஞ்ச நேரம் கேமராவை பயன்படுத்தனும். மூணு கிலோமீட்டர் சுத்தளவுக்கு போய் ஒரு கிளான்ஸ் பாத்துட்டு வரனும். நாளான்னைக்கு வேலையை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.

அடுத்த நாள் திட்டமிட்டபடி இந்த மூன்று பேரும்...கூட அழைத்து வந்திருந்த மற்ற நான்கு பேரும் அந்த சொகுசுப் படகில் கடலுக்குப் போய் ஆழத்தைக் கண்டுபிடித்தார்கள். சில இடங்களில் 400 மீட்டராக இருந்தது...அடுத்த 10 அடியிலேயே 600 மீட்டராக இருந்தது. தோராயக் கணக்கில் அந்தப் பிரதேசத்தின் அதிக பட்ச ஆழம் 600 மீட்டர் தான் என்பதை உறுதி செய்து கொண்டதும், நாளைக்கே அந்த சோனார் என்ற சாதனத்தை ஆழத்துக்கு அனுப்பவேண்டுமென்று முடிவு செய்தார்கள். இவர்கள் படகில் இருந்த சமயம் அங்கே ரோந்து வந்துகொண்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் இவர்களை விசாரித்தார்கள். தங்களிடமிருந்த அனுமதிக் கடிதத்தைக் காண்பித்து தாங்கள் செய்யபோகும் காரியத்தைப் பற்றியும் விளக்கமளித்ததும் திருப்தியாகி படையினர் போய் விட்டனர்.

படகுக்குள் இருந்த அறையில் எல்லா சாதனக்களையும் வைத்து பத்திரப்படுத்திவிட்டு...அறைக்குத் திரும்பினார்கள்.

தனா தன் கைப்பேசியை உபயோகித்து சென்னையில் அவர்கள் தேர்ந்தெடுத்த டைவர்களைத் தொடர்புகொண்டு நாளை புறப்பட்டு வருமாறு சொன்னான்.

அடுத்து அந்த சோனார் இயந்திரத்தை கையாளப்போகும் வல்லுநரையும் தொடர்புகொண்டு அவரையும் நாளை வரச் சொன்னான்.

களைப்பு தீரக் குளித்துவிட்டு மூன்று பேரும் இரவு உணவை அறைக்கே வரவழைத்து சாப்பிட்டார்கள்.

உறங்கப் போவதற்கு முன் சேட்டு படுக்கையில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு ஏதோ ஜபிப்பதைப் பார்த்ததும்...தனா சிரித்துக்கொண்டான். இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. எல்லா மொள்ளமாறி வேலையையும் செய்ய வேண்டியது. அதுக்கு ஆண்டவனையும் பார்ட்னராக்கிக்க வேண்டியது. செஞ்ச பாவத்தை தீர்த்துக்கறேன்னு சொல்லிட்டு லட்சலட்சமா கொண்டு போய் அந்த ஏடுகுண்டலவாடா உண்டியல்ல கொட்ட வேண்டியது...கொடுமைடா சாமி...என்று நினைத்துக்கொண்டே படுக்கையில் அமர்ந்தான்.

அழைப்புமணி சத்தம் கேட்டது.

கஜா யாருன்னு போய் பாரு.

கதவைத் திறந்த கஜா வெளியே ஒரு ஆசாமி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு...யார் நீங்க...என்ன வேணும்...கேட்டதும்,

உள்ள இருக்கிற தனசேகரைப் பாக்கனும்.

தனசேகருக்குத் தெரிந்தவன் போல இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு அவனை உள்ளே வர அனுமதித்துவிட்டு கதவை சாத்தினான்.

உள்ளே வந்த அந்த ஆளைப் பார்த்ததும் தனா...எஸ்..யாரு நீங்க...என்று கேட்டதும்,

அப்ப உங்களுக்கு இவரைத் தெரியாதா தனா சார் என்று கேட்ட கஜா...ஒரு முறைப்புடன் அந்த ஆளை அனுகினான்.

அவருக்கு என்னைத் தெரியாது. ஆனா எனக்கு அவரைத் தெரியும். நான் கோஸ்டல் கார்ட்ல ஒரு ஆபீஸர்.

கன்வர்லால் சடக்கென்று எழுந்து நின்றுவிட்டான்.


தொடரும்

அமரன்
05-04-2008, 07:35 AM
சபாஷ் சிவா.. டெக்கினிக்கலான மூவ்கள் பல கதையில் நுழைந்துவிட்டன. சேட்டு துவண்டுபோகாமல் இருக்க தனா பயன்படுத்தும் டெக்கினிக்கல்ஸ் வாழ்க்கைப் பாடம். உளவியல் சார்ந்து செயல்படும் தனா பாத்திரம் அருமை. சில உண்மைகளை எள்ளி நகையாடி இருப்பது உதட்டோரச் சிரிப்புக்கு கேரன்டி. இப்பவெச்சிருக்கீங்க ஒரு சஸ்பென்ஸ்.. இதுவரை இக்கதையில் இடம்பெறாதது.உங்கள் வளர்ச்சி பிரமிக்க வைக்குது.. அப்படியே காத்திருக்கேன் அடுத்த பாகத்துக்காக..

யவனிகா
05-04-2008, 08:24 AM
கதை இன்னும் விறுவிறுப்பாக ஓட்டம் எடுக்கத் துவங்கி விட்டது.
களத்துக்கே போயாச்சி...தங்கவேட்டைக்கு...கைக்குக் கிடைக்குமா...?
இதில இடையிடையே போலீஸ்காரர் தொல்லை வேற..அடுத்த பாகம் எப்போண்ணா?

இதயம்
05-04-2008, 08:36 AM
ஊக்கம் என்பது உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும், வெறியோடு வளர வைக்கும் சக்தி என்பதற்கு இந்த கதையும், இதன் படைப்பாளி சிவாவும் காரணம். வெறும் நான்கு பாகங்களுக்குள் முடியும் என்று என்னிடம் சிவா சொன்ன இந்த கதை, 10 அத்தியாயங்களை தாண்டியும் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் பயணிக்கிறது. ஊக்கமென்பது இதன் அசுர வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்தாலும், அதன் பிரதிபலிப்பாக சிவாவிடமிருந்து வெளிப்பட்ட அவரின் அர்ப்பணிப்பும், கடும் உழைப்பும் இந்த கதையின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள். அத்தியாயத்திற்கு அத்தியாயம் விறுவிறுப்பை கூட்டி பிரமிக்க வைக்கிறார். பாராட்டுக்கள் சிவா..!!

திடுக் திருப்பங்களால் திணறிப்போயிருக்கும் இதயம், அடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறது..!!

சிவா.ஜி
05-04-2008, 10:45 AM
இப்பவெச்சிருக்கீங்க ஒரு சஸ்பென்ஸ்.. இதுவரை இக்கதையில் இடம்பெறாதது.உங்கள் வளர்ச்சி பிரமிக்க வைக்குது.. அப்படியே காத்திருக்கேன் அடுத்த பாகத்துக்காக..
மிகவும் நன்றி அமரன். உங்கள் அனைவரின் ஊக்கமே எனக்கு பலம். தொடர்கிறேன்...தொடருங்கள்.

சிவா.ஜி
05-04-2008, 10:46 AM
கதை இன்னும் விறுவிறுப்பாக ஓட்டம் எடுக்கத் துவங்கி விட்டது.
களத்துக்கே போயாச்சி...தங்கவேட்டைக்கு...கைக்குக் கிடைக்குமா...?
இதில இடையிடையே போலீஸ்காரர் தொல்லை வேற..அடுத்த பாகம் எப்போண்ணா?
நன்றிம்மா...கிரைம் கதையில போலீஸ்கார் இல்லாமலா...? சீக்கிரம் அடுத்த பாகம் போட்டுடறேன்.

சிவா.ஜி
05-04-2008, 10:49 AM
ஊக்கம் என்பது உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும், வெறியோடு வளர வைக்கும் சக்தி

திடுக் திருப்பங்களால் திணறிப்போயிருக்கும் இதயம், அடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறது..!!
மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் இதயம். இங்கே கிடைக்கும் இந்த ஊக்கமும், கதையை ஊன்றிப்படித்து அளிக்கும் வளமான பின்னூட்டங்களும் ஆனந்தத்தையும்,அச்சத்தையும் ஒருசேர அளிக்கிறது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமே என்ற அச்சம். செய்ய முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது. உங்கள் தொடர்ந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

அமரன்
05-04-2008, 11:01 AM
நான் அதிட்டக்காரன் சிவா. சமீபகாலப் படங்களின் முதல் ஷோ எனக்காக அமையும் பாக்கியம்..

சிவா.ஜி
05-04-2008, 11:47 AM
நான் அதிட்டக்காரன் சிவா. சமீபகாலப் படங்களின் முதல் ஷோ எனக்காக அமையும் பாக்கியம்..
நீங்கள் அல்ல அமரன் நான் தான். இப்படிபட்ட உறவுகள் வெகுஜன பத்திரிக்கையில் எழுதுவோருக்குக் கூட கிடைக்காது. உடனுக்குடன் கிடைக்கும் ஊக்கம் உற்சாகத்தை வாரி வழங்குகிறது.

lolluvathiyar
05-04-2008, 12:23 PM
இப்ப கொஞ்ச பிசியா இருக்கேன், அடிகடி மன்றம் வரமுடிவதில்லை, ஆனால் மன்றம் வந்தவுடன் முதல் வேலையா இந்த திரிக்கு வந்துட்டு தான் அடுத்த வேலையே. கதை இப்ப கொஞ்சம் திர்லிங் ஸ்டார்ட் ஆயிருச்சு. விருவிருப்பா போகுது. குற்றவாளிகளுக்கே உன்டான பதற்றம், ஊழல் ஆட்களின் பிகேவியர் பேட்டனை அழகா காட்டி கொன்டு செல்கிறீர்கள். தொடருங்கள்

சிவா.ஜி
05-04-2008, 01:21 PM
இப்ப கொஞ்ச பிசியா இருக்கேன், அடிகடி மன்றம் வரமுடிவதில்லை, ஆனால் மன்றம் வந்தவுடன் முதல் வேலையா இந்த திரிக்கு வந்துட்டு தான் அடுத்த வேலையே.
ரொம்ப ரொம்ப நன்றி வாத்தியார். இத்தனை பிஸியிலும் இந்தக் கதையைப் படிப்பது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. உங்கள் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி.

சிவா.ஜி
05-04-2008, 02:01 PM
பாகம்-11


கோஸ்டல் கார்ட் என்றவுடன் பதட்டத்துடன் எழுந்து நின்ற கன்வர்லால்....

சார் அதான் நாங்க பர்மிஷன் வாங்கியிருக்கோமே. இப்ப எதுக்கு இங்கே வந்தீங்க...?

தனாவும் தலையசைத்து தானும் அதையே கேட்க நினைத்ததை ஆமோதித்தான். தொடர்ந்து...

உங்களுக்கு என்னை எப்படித் தெரியும் சார்...? என்று கேட்டதும்,

சென்னைக் கஸ்டம்ஸ் ஆபீஸ்ல இருக்கிற செல்வராஜை நீங்கள் அடிக்கடி பார்க்க வருவீர்கள். அவன் என்னுடைய நன்பன். அப்போது
உங்களை அங்கே பார்த்திருக்கிறேன். நீங்கள் வந்ததும் என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் செல்வராஜ் என்னை அங்கேயே இருக்கச்
சொல்லிவிட்டு உங்களுடன் தனியாகப் போய்விடுவான். ஒருமுறை உங்களைப் பற்றிக்கேட்டதற்கு லேசாக உங்கள் தொழிலைப் பற்றி
சொன்னான். பயப்படாதீங்க...நான் ஒண்ணும் நீங்க நினைக்கற மாதிரி நேர்மையான அதிகாரி இல்லை.

கன்வர்லால் அந்த கடைசி வரியைக் கேட்டு நிம்மதிப் பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தினான்.

ஆனால் தனசேகர் முகம் மாறியதைக் கவனித்தவன், ஏதோ பிரச்சனை என்று நினைத்ததும் மீண்டும் குழப்பமானான்.

சரி என்னை உங்களுக்குத் தெரியும். ஆனா இப்ப எதுக்கு இங்கே வந்திருக்கீங்க...?

ஒரு விஷமச் சிரிப்புடன்,

நீங்க எங்க பெரிய ஆபீஸர் கிட்ட சொன்னதையெல்லாம் கேட்டேன். சத்தியமா நீங்க படம் எடுக்க வரலைன்னு எனக்குத் தெரியும்.

ஏதோ நிழலான வேலையில இறங்கியிருக்கீங்க. அது கடல் சம்பந்தப்பட்டது. நீங்க உங்க படகுல வெச்சிருந்த சாதனங்களையெல்லாம் பார்த்தால் ஏதோ பெரிய அளவு திட்டத்தோடு வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் சொல்றது சரிதானே...?

தனாவும்,கன்வர்லாலும் சிறிய திகிலோடு பார்த்துக்கொண்டபடியே...

சார் அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல...நாங்க நிஜமாவே....என்ற தனாவை இடையில் வெட்டி

வேணாம் மிஸ்டர் தனசேகர். பொய் சொல்லாதீங்க. எனக்கு சர்வ நிச்சயமாய் தெரியும். கடல் சார்ந்த வேலை என்பதால் என்னால்
உங்களுக்கு உதவ முடியும். என்னையும் இதில் பங்குதாரராகச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கிட்டத்தட்ட கட்டளையிடும் தொணியில் அந்த ஆபீஸர் சொன்னதும்...கன்வர்லாலுக்கு குழப்பம் மறைந்து சுரு சுருவென்று கோபம் ஏறத்தொடங்கியது. தனா அவன் கைகளைப் பிடித்து லேசாய் அழுத்தி அமைதியாய் இருக்கச் செய்து விட்டு,

ஓக்கே சார். நீங்க நினைச்சது சரிதான். நீங்களாகவே வந்து எங்களோட இணைஞ்சிக்கறதா சொல்றது ரொம்ப சந்தோஷம். உங்க உதவிகண்டிப்பா எங்களுக்குத் தேவைப்படும்.அது சரி இப்ப நீங்க இங்கே வந்தது யாருக்காவது தெரியுமா?

ரொம்ப சந்தோஷம் தனசேகர். இல்லை யாருக்கும் தெரியாது இன்ஃபேக்ட் கீழே ரிசப்ஷன்ல இருக்கறவங்களுக்கு கூடத் தெரியாது.
எனக்கும் உங்களுக்கும் தொடர்பிருக்கிறதா யாருக்கும் தெரியக்கூடாது...அதுல நான் ரொம்பவே எச்சரிக்கையா இருக்கேன்.

கில்லாடி சார் நீங்க. ரொம்ப ஆழமா யோசிக்கிறீங்க. சரி ரொம்ப நேரம் நீங்க இங்கே இருக்கக் கூடாது...ஒரு நிமிஷம் இருங்க..எங்களை வந்துப் பாத்துட்டு வெறுங்கையோட திரும்பிப்போனா நல்லாருக்குமா...சின்னதா ஒரு டோக்கன் அட்வான்ஸ் மாதிரி நாங்க குடுக்கற இந்த அன்பளிப்பை மறுக்காம ஏத்துக்கனும்..சொல்லிவிட்டு தன் சிறிய கைப்பெட்டியைத் திறந்தான் தனா.

வாயெல்லாம் பல்லுடன்...அந்த ஆபீஸர் தனா கொடுக்கப் போவதை வாங்கிக்கொள்ளும் பரபரப்பில் இருந்தார். திரும்பிய தனாவின்
கையிலிருந்ததைப் பார்த்ததும் முகம் வெளிறினார்.

ஆபீஸர் சார்....ரொம்ப வசதியா யாருக்கும் தெரியாம இங்கே வந்திருக்கீங்க...அப்படியே யாருக்கும் தெரியாமலேயே போயிடுங்க
ஆபீஸர். கஷ்டப்பட்டு படியிறங்கி கீழே போக வேண்டிய அவசியமில்லை. நேரா மேலப் போய்டுங்க என்று சொல்லிக்கொண்டே அந்த சைலன்ஸர் பொருத்திய கைத்துப்பாக்கியால் சுட்டான்.

அந்த உலோக எமன் துப்பிய தோட்டா வெகு ஆவலுடன் அந்த ஆபீஸரின் இதயத்தை நோக்கி காதலுடன் பாய்ந்து, உத்தரவின்றி
உள்ளே நுழைந்தது. இதயம் உடனடியாக தன் ரத்தப் பாய்ச்சலை வெளிப்புறமாக மாற்றிக்கொண்டு சிவப்பு திரவத்தை வெளியே
தள்ளியது.

கன்வர்லாலும், கஜாவும் கொஞ்சமாய் அதிர்ந்துதான் போய்விட்டார்கள்.

ஏன் தனா...இந்த ஆள் நம்க்கு உபயோகமா இருந்திருப்பானே...அவசரப்பட்டுட்டியே...

இல்ல சேட்டு...இந்த மாதிரி ஆளுங்க ஆபத்தானவங்க. அவன் பேசின முறை சரியில்லை. இப்பவே இப்படி பேசுறவன் கிடைக்கப்
போறது மிகப்பெரிய தொகைன்னு தெரிஞ்சா ரொம்பவே தொந்தரவு கொடுப்பான். அதான் ஆரம்பத்துலயே அந்த தொல்லையை இல்லாமஆக்கிட்டேன். கஜா உங்க ஆளுங்களைக் கூப்பிட்டு பாடியை பேக் பண்ணி நம்ம நாளைக்குக் கொண்டு போகப்போற ஏதாவது ஒருபெரிய பெட்டியில வெச்சுடு. நாளைக்கு அதை கடலுக்கு அர்ப்பணிச்சுடலாம்....

இத்தனை விரைவில் பக்காவாய் சிந்தித்து தீர்மானிக்கும் தனாவின் திறமையை நினைத்து கன்வர்லால் ஆச்சர்யப்பட்டான்.

காலையில் மற்ற பெட்டிகளோடு உடல் இருந்த பெட்டியையும் வண்டியில் ஏற்றியபோது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

பெட்டிகளுடன் படகு கடலுக்குள் போனது. கணிசமான தொலைவு வந்ததும் தனாவின் உத்தரவுபடி நின்றது. சமிக்கைகள்
புரிந்துகொள்ளப்பட்டு பெட்டியோடு அந்த உடல் கடலார்ப்பணம் செய்யப்பட்டது.

ஒரு பெரிய வேலையை தொடங்கறதுக்கு முன்னால ஏதாச்சும் பலி கொடுக்கனுன்னு சொல்வாங்க...நாம பெரிய பலியாக்
குடுத்திருக்கோம். தனா....இனிக் கவலையில்லை. சரி எப்படியும் நாளைக்குத்தான் டைவர்ஸ்ஸும், அந்த சோனார் ஆப்பரேட்டரும்
வருவாங்க...அதுவரைக்கும் என்ன செய்யறது.?

கேட்ட கன்வர்லாலைப் பார்த்தும், எதுவும் சொல்லாமல் யோசனையில் இருந்தான் தனசேகர்.

சேட்டு கஜாவைப் பார்த்தான். கஜா தனாவைப் பார்த்தான்.

நைட்டு அவனை சுடும்போது யோசிக்கல....இப்ப யோசிச்சிப் பாத்தா இதனால ஏதாவது சிக்கல் வருமோன்னு பாக்கறேன். இவன்
ட்யூட்டியிலதான் இருக்கான். இன்னைக்கு வேலைக்குப் போயிருக்க மாட்டான். முன்னறிவிப்பு இல்லாம வேலைக்கு போகாம
இருக்கறதுக்கு இது சாதாரண சிவில் வேலை கிடையாது. இராணுவ வேலை. துருவ ஆரம்பிச்சுடுவாங்களே...

என்ன தனா நீயே இப்படி சொன்னா எப்படி? அதுக்குத்தான் அப்பவே சொன்னேன்...நீதான் பொசுக்குன்னு சுட்டுட்ட...இப்ப என்ன
செய்யப்போறோம்...?

பொலம்பாத சேட்டு....எல்லாம் நான் பாத்துக்கறேன்....

சேட்டுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த அதே நேரத்தில் இவர்களுக்காக இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் ஹோட்டலில்
காத்துக்கொண்டிருந்தார்.

தொடரும்

செல்வா
05-04-2008, 02:26 PM
ஆஹா........ முதல் காட்சி எனக்குத் தான் எனக்குத் தான்....:huepfen024::huepfen024:

அந்த உலோக எமன் துப்பிய தோட்டா வெகு ஆவலுடன் அந்த ஆபீஸரின் இதயத்தை நோக்கி காதலுடன் பாய்ந்து, உத்தரவின்றி
உள்ளே நுழைந்தது. இதயம் உடனடியாக தன் ரத்தப் பாய்ச்சலை வெளிப்புறமாக மாற்றிக்கொண்டு சிவப்பு திரவத்தை வெளியே
தள்ளியது.

எப்படிண்ணா இதெல்லாம் சும்மா காதல் கவித எழுதுற மாதிரி.. பூனு ஊதிவிட்டுட்டு போறீங்க....:icon_clap::icon_clap::icon_clap:
கலக்குறீங்க அண்ணா.... :4_1_8::080402gudl_prv::080402gudl_prv:
இனிமே என்ன ஒரே :auto003::sport-smiley-003::sport-smiley-005::sport-smiley-002::waffen093::violent-smiley-010::violent-smiley-004::violent-smiley-027::violent-smiley-027:

சிவா.ஜி
05-04-2008, 02:31 PM
எப்படிண்ணா இதெல்லாம் சும்மா காதல் கவித எழுதுற மாதிரி.. பூனு ஊதிவிட்டுட்டு போறீங்க....

ஹி..ஹி...ரொம்பநாளா கவிதை எழுதலையே...அதோட பாதிப்பா இருக்கும்..நன்றி செல்வா.

மலர்
05-04-2008, 04:04 PM
மன்றத்துக்குள்ள நுழையவும் அய்கேஷ் இல்லாமலே கை தானா இந்த
திரி பக்கம் ஓடி வந்திடுது.....
ஏதோ ஒண்ணு இழுக்குதுங்கோ.....
அந்த உலோக எமன் துப்பிய தோட்டா வெகு ஆவலுடன் அந்த ஆபீஸரின் இதயத்தை நோக்கி காதலுடன் பாய்ந்து, உத்தரவின்றி உள்ளே நுழைந்தது. இதயம் உடனடியாக தன் ரத்தப் பாய்ச்சலை வெளிப்புறமாக மாற்றிக்கொண்டு சிவப்பு திரவத்தை வெளியே தள்ளியது.
வாவ்.... எப்பிடி எல்லாம் தோணுதுண்ணா....
சூப்பரா போகுதுண்ணா....
----------
ஓரே நாளில் ரெண்டு பதிவு..... :D :D
எப்பிடிண்ணா எப்பிடி..... :confused: :confused:
எங்கேயோ போயீட்டீங்க போங்க.....:icon_rollout: :icon_rollout:
தொடந்து எழுத பாராட்டுக்கள்....

அமரன்
05-04-2008, 05:12 PM
விறுவிறுப்பு விலைவாசிபோல எகிறுது சிவா. ஒருபக்கம் எதிர்பார்ப்பை தூண்டினாலும் திடீர் திடீர் திருப்பங்கள், அடிக்கடி கிடைக்கும் பணியிட மாற்றச் சலிப்பையும் வேறு சிலருக்கு கொடுக்குமோ என்ற சிறு அச்சமும் எழாமல் இல்லை.

செல்வாவைக் கவர்ந்த கவித்துவ வரிகளுடன்,


இல்ல சேட்டு...இந்த மாதிரி ஆளுங்க ஆபத்தானவங்க. அவன் பேசின முறை சரியில்லை. இப்பவே இப்படி பேசுறவன் கிடைக்கப்
போறது மிகப்பெரிய தொகைன்னு தெரிஞ்சா ரொம்பவே தொந்தரவு கொடுப்பான். அதான் ஆரம்பத்துலயே அந்த தொல்லையை இல்லாமஆக்கிட்டேன். கஜா உங்க ஆளுங்களைக் கூப்பிட்டு பாடியை பேக் பண்ணி நம்ம நாளைக்குக் கொண்டு போகப்போற ஏதாவது ஒருபெரிய பெட்டியில வெச்சுடு. நாளைக்கு அதை கடலுக்கு அர்ப்பணிச்சுடலாம்....


இந்த வரிகளை படித்தபோது மெய்சிலிர்ப்பு.. தற்கால சில நடிகர்கள் கண்முன் வந்தார்கள்.. பேசினார்கள்.. சென்றார்கள்..
தொடருங்கள் அல்ல எங்கள்.. அதனால தொடருங்கள்.. நாமும் தொடர்வோம்..

சிவா.ஜி
05-04-2008, 05:30 PM
மன்றத்துக்குள்ள நுழையவும் அய்கேஷ் இல்லாமலே கை தானா இந்த
திரி பக்கம் ஓடி வந்திடுது.....
ஏதோ ஒண்ணு இழுக்குதுங்கோ.....

----------
ஓரே நாளில் ரெண்டு பதிவு..... :D :D
எப்பிடிண்ணா எப்பிடி..... :confused: :confused:

ரொம்ப ரொம்ப நன்றிம்மா. நீ சொன்ன அந்த முதல் வரிதாம்மா ஒரே நாள்ல ரெண்டு பதிவைப் போட வெக்குது. உங்க எல்லாரோட ஊக்கம்தான் எனக்கு பலம்.

சிவா.ஜி
05-04-2008, 05:34 PM
விறுவிறுப்பு விலைவாசிபோல எகிறுது சிவா. ஒருபக்கம் எதிர்பார்ப்பை தூண்டினாலும் திடீர் திடீர் திருப்பங்கள், அடிக்கடி கிடைக்கும் பணியிட மாற்றச் சலிப்பையும் வேறு சிலருக்கு கொடுக்குமோ என்ற சிறு அச்சமும் எழாமல் இல்லை.


இந்த வரி புரியவில்லை அமரன். ஆனால் திடீர் திடீரென்ற திருப்பம் சலிப்பைக் கொடுக்குமென்றால் கவனத்தில் கொள்கிறேன்.

உங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி அமரன்.

அமரன்
05-04-2008, 05:45 PM
எனக்கு அப்படியான மனநிலை சிவா.. திடீர் திருப்பங்கள் நிமிர வைக்கும்.. ஆனால் சிலருக்கு சலிப்பைக் கொடுக்கலாம்.. அதனால அத்தியாயத்துக்கு ஒரு திருப்பம் என்றிருந்தால் சிறப்பு. இது எனது கருத்து மட்டுமே.. மற்ற வாசகர்கள் என்ன சொல்றீங்கப்பா..

சிவா.ஜி
06-04-2008, 05:38 AM
பாகம்-12

இரவு நடந்த சம்பவத்தைப்போல பல சம்பவங்களை பார்த்தவர்கள்தான் இந்த மூன்று பேரும் என்றாலும்....இதுவரை ஒரு ராணுவ அதிகாரியைக் கொன்றதில்லை. அதனால் சிறிதே சஞ்சலமான மனதை நடுக்கடலில் தாக சாந்தி செய்து ஆற்றிக்கொண்டார்கள்.

திரும்பக் கரைக்கு வந்த போது சுத்தமாய் பயம் அவர்களை விட்டு அகன்றுவிட்டிருந்தது. வெகு உற்சாகமாய் ஹோட்டலுக்கு வந்தவர்கள் நேரே சென்னையிலிருந்து வந்தவர்கள் தங்கியிருந்த அறைக்குப் போனார்கள். அவர்களிடம் விசாரித்துவிட்டு, நாளை தயாராய் இருக்கும்படி சொல்லிவிட்டு தங்கள் அறைக்குப் போய் கதவைத் திறக்கும் போதே அறையின் உள்ளே தொலைபேசி அலறிக்கொண்டிருந்தது. கஜா ரிசீவரைக் காதுக்கு கொடுத்தான். முகம் மாறினான். பதில் சொல்லி விட்டு மாறிய முகத்தோடு சேட்டையும்,தனாவையும் பார்த்து,

இன்ஸ்பெக்டர் வந்து பாத்துட்டுப் போயிருக்கார். நாம வந்த உடனே தகவல் சொல்லச்சொல்லி ரிசப்ஷன்ல சொல்லிட்டு போயிருக்காரு.

சேட்டுக்கு வியர்த்தது. தனா வழக்கம் போல உணர்வுகளை வெளியேக் காட்டிக்கொள்ளாமல்,

பயப்படாதே சேட்டு எந்த இன்ஸ்பெக்டர்ன்னு பாப்போம். அந்த வள்ளிநாயகம்ன்னா ஒண்ணும் பிரச்சனையில்லை. முதல்ல எதுக்கு
வந்துட்டுப் போனார்ன்னு தெரிஞ்சிக்கலாம். அவசரப்பட்டு நாமே நம்மைக் காட்டிக்கொடுத்துடக்கூடாது. கஜா அவரோட பர்சனல் நம்பர்இருக்கில்ல. கூப்பிடு.

கஜா அழைத்தான். வள்ளிநாயகம் ஹலோ சொன்னதும் சார் ஒரு நிமிஷம்,என்று சொல்லிக்கொண்டே கைப்பேசியை தனாவிடம்
நீட்டினான்.

சார் நான் தனா பேசறேன். நீங்க ஹோட்டலுக்கு எங்களைப் பாக்க வந்திருந்தீங்களா...
------------------
மறுமுனையில் கிடைத்த பதிலைத் தொடர்ந்து...
ஓக்கே சார். காத்துக்கிட்டிருக்கோம். தொடர்பைத் துண்டித்துவிட்டு..
அவர்தான் வந்திருக்காரு. இன்னும் கொஞ்ச நேரத்துல அவரே வர்றதா சொன்னார். கவலைபடாதே சேட்டு...வரட்டும் பேசிக்கலாம்...

இன்ஸ்பெக்டர் வந்ததும் அமரச் சொல்லிவிட்டு பழரசம் கொடுத்தார்கள். ஆசையாய் வாங்கிப் பருகிக்கொண்டே..

ஒண்ணுமில்ல சார்...கோஸ்டல் கார்டு ஆளுங்க அவங்கக்கூட இருந்த ஒரு அதிகாரி நேத்து டவுனுக்குப் போறதா அனுமதி வாங்கிகிட்டு
வந்தவர் ராத்திரி திரும்பலையாம். இன்னைக்கு வேலைக்கும் வரலன்னு எங்களுக்கு இன்ஃபார்ம் செஞ்சாங்க. சாதாரனமா அவங்க
தங்கிக்கிட்டிருக்கற இடத்துலருந்து டவுனுக்கு வர்றவங்க ஒரு குறிப்பிட்ட இடத்துலருந்துதான் ஆட்டோ பிடிப்பாங்க. அங்கே
விசாரிச்சதுல அவரை நேத்து ராத்திரி இந்த ஹோட்டல் வாசல்ல இறக்கி விட்டதா தகவல் வந்தது. ஆனா திரும்பி வந்ததா எந்த
தகவலும் இல்லை. உங்க ப்ரொஜெக்ட்டுக்காக உங்களைப் பாக்க வந்திருப்பாரோன்னு நினைச்சிதான் உங்க கிட்ட விசாரிக்கலாம்ன்னு
வந்தேன். நைட்டு அவர் இங்கே வந்திருந்தாரா சார்...?

சேட்டு உடனடியாக

இல்ல சார். அவர் எதுக்கு எங்களைப் பாக்க வரணும்....

சொன்னவரின் பதட்டத்தை குறித்துக்கொண்டார் வள்ளிநாயகம்.

தனா சேட்-ஐ முறைத்ததையும் அவர் அறியாமல் பார்த்துவிட்டார்.

இன்ஸ்பெக்டர் சார்...அவர் இங்கே வரலை. நாங்க நேத்தைக்கு ரொம்ப டயர்டா இருந்ததுனால சீக்கிரமாவே சாப்பிட்டுவிட்டு
தூங்கிட்டோம். தனா சொன்னதை நம்புவதைப்போல தலையை ஆட்டிவிட்டு,

ஓக்கே சார். சாரி ஃபார் த டிஸ்டர்பென்ஸ். மறுபடியும் பாப்போம். ஏதாவது உதவி தேவைப்பட்டா கண்டிப்பா சொல்லுங்க.

அவர் விடை பெற்றுப் போனதும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட சேட்டு...அடுத்து தனா முறைத்ததும் விழித்தார்.

ஏன் சேட்டு எதுக்கு அவ்ளோ பதட்டப் படறே...எங்கப்பன் குதிருக்குள்ள இல்லங்கற மாதிரி இருக்கு நீ பேசினது. எனக்கு இப்பக்கூடசந்தேகமாத்தான் இருக்கு. அந்த ஆளோட பார்வையே சரியில்லை. எப்படியும் துருவ ஆரம்பிச்சிடுவான். கண்டுபிடிச்சிட்டான்னா...ஒரு பெரியத் தொகையை எதிர்பார்ப்பான். எதுக்கும் ஏற்பாடு பண்ணி வெச்சுக்க.

அடுத்த நாள்..அத்தனை பேரும் கடலுக்குள் போனார்கள். GPS-ஐ உபயோகித்து உலோகப் பொருள்கள் ஏதாவது சிக்குகிறதா என்று
பார்த்தார்கள். மொத்தம் மூன்று இடங்களைக் காட்டியது. மிகப்பரந்த இட வித்தியாசத்தில் அவை இருந்ததால் மூன்றையுமே ஆராய
வேண்டும். அதில் எது அவர்கள் தேடி வந்தது என்பதைத் தெரிந்துகொள்ள அதிகமாகவே சிரமப்பட வேண்டியிருந்தது.

முதலில் தங்கள் படகு நின்றுகொண்டிருந்த இடத்துக்கு மிக அருகில் இருந்த பகுதியில் அந்த சைட் சோனார் இயந்திரத்தை
இறக்கினார்கள். இது சமீபத்திய தயாரிப்பு என்பதால் அதனால் உணரப்பட்டவைகள் தெளிவான படங்களாகவே அச்சாக்கியது. அது ஒரு உடைந்த கப்பலின் பாகங்கள். அதனுள் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என உறுதி செய்து கொள்ள
Underwater video camera வை அனுப்பி படமெடுத்தார்கள். கிடைத்த படங்களை படகிலிருந்த கணிணி திரையில் பெரிதாக்கிப்
பார்த்தபோது அங்கே தங்கம் இல்லையென்பதும் அது அந்த சுந்தரலிங்கம் கொண்டுவந்த அவசரகால படகு இல்லையென்பதும்
தெரிந்தது.

பிறகு விசாரனை என்று வந்தால், அதிகாரிகளுக்கு காண்பிக்க உண்மையாகவே கொஞ்சம் ஆழ்கடல் படபிடிப்பும் நடத்தினார்கள்.
உண்மையிலேயே வெகு அழகாக...வித்தியாசமான ஆழ்கடல் உயிரினங்கள் அதில் பதிவாகியிருந்தது. ஆக்டோபஸ் தெளித்த
கறுஞ்சாந்து போன்ற திரவம் கேமிராவின் முன் படலமாய் பரவியதை அழகாகப் பதிந்திருந்தது.

இதற்கே அன்றைய நாள்முழுவதும் ஆகிவிட்டது.

மனசு உட்றாத சேட்டு. அவ்ளோ சீக்கிரமா அது கிடைச்சுட்டா அப்புறம் அதுக்கு மதிப்பில்லை. நாளைக்குப் பாப்போம். கண்டிப்பா கிடைக்கும்...

எல்லோருக்கும் தைரியம் சொல்லிவிட்டு தனசேகர் காரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்து அயர்வாய் கண்னை மூடிக்கொண்டான்.

சோர்வுடன் அறைக்குத் திரும்பியவர்களை மீண்டும் இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் வரவேற்றார்.


தொடரும்

மலர்
06-04-2008, 05:40 AM
அப்பாடா....
இன்னைக்கு தான் முதல்ல இடம் கிடைச்சிருக்கு...

இல்ல சார். அவர் எதுக்கு எங்களைப் பாக்க வரனும்....
சொன்னவரின் பதட்டத்தை குறித்துக்கொண்டார் வள்ளிநாயகம்.
ஆஹா....
நுழலும் தன் வாயாற்கெடுமிங்கிற மாதிரில்ல ஆயிட்டு...
ம்ம் எங்களை பாக்க வந்தார்... அப்புறம் கிளம்பிபோயிட்டாருன்னு
சொல்லி சமாலிச்சிருக்கலாம்.... :eek: :eek:
விதி யாரை விட்டது.... :cool:
இந்த போலிஸாச்சும் நல்ல போலிஸா.... :confused: :confused:

சிவா.ஜி
06-04-2008, 06:43 AM
எவ்வளவு பெரிய கிரிமினல்களா இருந்தாலும் சின்னச் சின்ன தவறுகள் செய்வாங்க அப்படீங்கறது கிரிமினாலஜியில ஒரு பாடம். அதுலயும் சேட்டு ஒரு டென்ஷன் பார்ட்டி....

நன்றிம்மா மலரு...இன்னைக்கே அடுத்த பாகத்தையும் போட்டுடறேன்.

மதி
06-04-2008, 06:44 AM
அண்ணா...சூப்பருங்கோ...
மீதிய அப்பறம் எழுதறேன்..

மலர்
06-04-2008, 06:56 AM
அதுலயும் சேட்டு ஒரு டென்ஷன் பார்ட்டி.... . அதுவும் சரி தான்... :rolleyes:
தனா பதில் சொல்லுறதா இருந்திருந்தா கொஞ்சம் யோசிச்சி
சொல்லியிருப்பாரு.... நம்ம சேட்டு கவுத்துட்டாரு... :icon_p:

நன்றிம்மா மலரு...இன்னைக்கே அடுத்த பாகத்தையும் போட்டுடறேன்
ஆஹா.... வெல்கம்.... வெல்கம்.... :icon_rollout: :icon_rollout:
கரும்பு தின்ன கசக்கும்மா என்ன..........??? :icon_rollout: :icon_rollout:

மலர்
06-04-2008, 07:08 AM
அண்ணா...சூப்பருங்கோ...
மீதிய அப்பறம் எழுதறேன்..
வேலை..........வேலை................வேலை........:D :D
மொக்க மதிக்கு.......
வேலை..........வேலை................வேலை........:D :D

இதயம்
06-04-2008, 07:13 AM
கதை எழுதுவது என்பது எல்லோருக்கும் கை வரப்பெறாத கலை. வெறும் கருவை ஒரு கதையாக சுவராஸியமாக நீட்டி முழக்க பெரும் திறமை அவசியப்படும். அந்த திறமையில் சிவா வல்லவர் என்பதை நிரூபித்து வருகிறார்.

அமரன் சொன்ன விஷயம் பற்றியும் பேச வேண்டும். ஒரு கதையில் திருப்பங்கள் என்பவை கதையின் சுவாராஸியத்தை கூட்டும் விட்டமின்கள்..! அவை இல்லாவிட்டால் அதைத்தான் ஜவ்வு என்று நம்மவர்கள் சொல்வார்கள்..!! ஆனால், இன்னொரு விஷயமும் இதில் இருக்கிறது. ஒரு கதையின் சுவாராஸியத்தை கூட்டும் முனைப்பில் வேண்டுமென்றே அதிக திருப்பங்களை ஏற்படுத்தும் போது கதை தன் இயல்பு தன்மையை இழந்து செயற்கைத்தனம் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. இது கதையின் வெற்றியை பாதிக்கும்.

என்னைப்பொறுத்தவரை ஒரு அத்தியாயம் முடியும் போது வலுக்கட்டாயமாக ஒரு திருப்பத்தை வைப்பதை விட, கதையின் இயல்பை சிதைக்காமல் வரும் திருப்பத்தின் போது அத்தியாயத்தை முடிப்பது சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. அந்த வகையில் சிவாவின் திருப்பங்களில் இது வரை சறுக்கல் இல்லை என்றே நினைக்கின்றேன். தொடருங்கள் சிவா..!!

சிவா.ஜி
06-04-2008, 08:54 AM
அமரன் சொன்ன விஷயம் பற்றியும் பேச வேண்டும். ஒரு கதையில் திருப்பங்கள் என்பவை கதையின் சுவாராஸியத்தை கூட்டும் விட்டமின்கள்..! அவை இல்லாவிட்டால் அதைத்தான் ஜவ்வு என்று நம்மவர்கள் சொல்வார்கள்..!! ஆனால், இன்னொரு விஷயமும் இதில் இருக்கிறது. ஒரு கதையின் சுவாராஸியத்தை கூட்டும் முனைப்பில் வேண்டுமென்றே அதிக திருப்பங்களை ஏற்படுத்தும் போது கதை தன் இயல்பு தன்மையை இழந்து செயற்கைத்தனம் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. இது கதையின் வெற்றியை பாதிக்கும்.

என்னைப்பொறுத்தவரை ஒரு அத்தியாயம் முடியும் போது வலுக்கட்டாயமாக ஒரு திருப்பத்தை வைப்பதை விட, கதையின் இயல்பை சிதைக்காமல் வரும் திருப்பத்தின் போது அத்தியாயத்தை முடிப்பது சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. அந்த வகையில் சிவாவின் திருப்பங்களில் இது வரை சறுக்கல் இல்லை என்றே நினைக்கின்றேன். தொடருங்கள் சிவா..!!

மிகவும் உபயோகமான, தேவையான கருத்தைச் சொன்னதற்கு உங்களுக்கும், அமரனுக்கும் மிக்க நன்றி இதயம். என் கதையில் அந்த சறுக்கல் இல்லையென்று சொல்லி உற்சாகத்தை ஊட்டியிருக்கிறீர்கள். இதனை முடிவுவரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். நிச்சயம் முயற்சிப்பேன்.

சிவா.ஜி
06-04-2008, 09:01 AM
பாகம்-13

ஏற்கனவே சோர்ந்திருந்தவர்கள் அவரைப் பார்த்ததும் மேலும் சுரத்திழந்து விட்டார்கள். அவரையும் அழைத்துக்கொண்டு அறைக்குப் போனவர்கள் எதுவும் பேசும் மனநிலையில் இல்லாதவர்களைப் போல மூன்று பேரும் ஆளுக்கொரு இடத்தில் அமர்ந்துகொண்டார்கள்.

வள்ளிநாயகமே ஆரம்பித்தார்.

சார் தொந்தரவுக்கு மன்னிச்சுடுங்க...

தனா அவரது குழைவில் ஏதோ விபரீதத்தை உணர்ந்தான்.

விசாரணையோட ஒவ்வொரு முடிச்சும் உங்ககிட்ட வந்துதான் அவிழ்கிறது. ஹோட்டலுக்குள் நுழைந்தவரை வரவேற்பாளரும் பார்க்கவில்லை. அதே சமயம் அவருக்குத் தெரிந்தவர்களோ சொந்தக்காரர்களோ இந்த ஹோட்டலில் தங்கியிருக்கவில்லை.
அவரை மூன்றாவது மாடியின் வராந்தாவில் பார்த்ததாக ஹோட்டல் பணியாள் ஒருவன் சொல்லியிருக்கிறான். இந்த அறை இருப்பது மூன்றாவது மாடி. ஸோ.....

என்ன இன்ஸ்பெக்டர் எங்களை சந்தேகப் படறீங்களா...

சந்தேகம் இல்லை சார்...கிட்டத்தட்ட உறுதியே செஞ்சிட்டேன். டாக் ஸ்குவாடை கொண்டு வந்தால் தெளிவாகிவிடும்..

சேட்டு வியர்க்கத்தொடங்கியிருந்தார். கஜா அசையாமல் இருந்தான்.

தனா...அதிரடியாய்..

ஓக்கே சார் டீலிங்குக்கு வருவோமா...என்றவுடன்..

ஆச்சர்யமாய் அவனைப் பார்த்துக்கொண்டே..

ஓ கிரேட்...தனா நீங்க ரொம்ப ஷார்ப். டக்குன்னு விஷயத்துக்கு வந்துட்டீங்களே...சரி நான் ஏற்கனவே உங்கக்கிட்ட சொன்ன மாதிரி நான் உங்க பக்கம்தான். இதுக்கு என்ன செய்யனும்ன்னு உங்களுக்கே நல்லா தெரியும். நீங்க அதை செய்தா நான் செய்ய வேண்டியதை கரெக்ட்டா செஞ்சிடுவேன்...

நேரடியாக வள்ளிநாயகமும் விஷயத்துக்கு வந்துவிட்டதால் மற்ற காரியங்கள் வெகு விரைவாக நடந்தேறியது.

அன்று இரவே கஜாவை சென்னைக்கு அனுப்பி பணத்தோடு வரும்படி சொன்னான் கன்வர்லால்.

பணத்தோடு திரும்பி வர இரண்டு நாட்களாகிவிட்டது. கஜா சோர்ந்திருந்தான். கண்களில் கடுமையான களைப்பு தெரிந்தது.

கன்வர்லால் வள்ளிநாயகத்தின் குடும்பத்தையே தன் வசவுக்குள் கொண்டுவந்து திட்டித் தீர்த்துவிட்டான். கணிசமான பணம் கைமாறியது. இறந்த அதிகாரி காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப் பட்டார்.

இந்த வேலைகளுக்காக இரண்டுநாள் முழுதாய் ஆகிவிட்டதால் கடலுக்குப் போகவில்லை.

மூன்றாவது நாள் அதிர்ஷ்டம் இவர்கள் பக்கமிருந்தது. இரண்டாவது தேடலிலேயே தங்கப் பெட்டிகள் இவர்களுக்கு காட்சியளித்துவிட்டன. பெட்டிகளை திரையில் பார்த்தே கன்வர்லாலுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. கட்டிக்கொள்ளப் பாய்ந்தவனைப் பார்த்து...சட்டென்று அகன்று போய்விட்டான் கஜா...மீண்டும் ஒருமுறை மூச்சடைத்து திணற விருப்பமில்லாமல்.

மாட்டிக்கொண்டது தனா....வுடுய்யா சேட்டு...அப்பா சாமி...தனா வெளிப்படுத்திய முனகலை தூர நின்றுகொண்டு வெடிச்சிரிப்போடு ரசித்தான் கஜா.

எல்லோருமே அதி உற்சாகமாக இருந்தார்கள். இனி தங்கத்தை வெளியே கொண்டு வர வேண்டியதுதான் பாக்கி.

அவற்றை வெளியே கொண்டு வரவேண்டுமானால் படகிலிருந்து இறக்கப்படும் உறுதியான கயிற்றில் அவைக் கட்டப்பட வேண்டும்.

இதற்கெனவே பிரத்தியேகமாகக் கொண்டு வரப்பட்ட கேப்ஸ்யூல் என்ற ஆழ்கடல் மூழ்கு தானியங்கி வாகனத்தை படகுக்கு கொண்டு போனார்கள். இரண்டு பேர் அதனுள் அமர்ந்து கொள்ள அந்த வாகனம் தங்கத்தை நாடி மூழ்கத்தொடங்கியது.

90 ஆண்டுகளுக்கு முன்னால் அமிழ்ந்து ஆழத்தில் அமைதியாய் அமர்ந்திருந்த அந்த படகு...அன்று சலனப்பட்டது. அதனை சமீபித்த அந்த வாகனத்திலிருந்து இரண்டு பேரும் வெளிப்பட்டார்கள்....முழுவதுமாய் வெளியேறியவர்களின் நீர்முழ்கு உடை தாறுமாறாய்க் கிழியத்தொடங்கியது....கூடவே அவர்களின் உடலும்...அத்தனை ஆழத்தில் உண்டாகும் அதிகபட்ச அழுத்தத்தை தாங்கும் சக்தி அந்த உடைகளுக்கு இல்லாதிருந்தது. கவசமே சிதறும்போது உடல் என்ன செய்யும்....

மூச்சுவிட்டுக்கொள்ளக் காற்று இருந்தது...உள்ளிழுத்துக்கொள்ள உணர்வில்லாமல் உடல் சிதறிப்போனது.

தொடரும்

யவனிகா
06-04-2008, 09:10 AM
அண்ணா எப்படின்னா....? இந்த ஸ்பீடிலே சல்லுன்னு போறீங்க?
தேவையான இடத்தில பிரேக்...தேவையான இடத்தில புஃல்ஸ்பீடு...இன்னும் கொஞ்சம் இடத்தில காமடி ரிலாக்ஸ்ன்னு.....
எங்க எல்லாரையும் வேற ஏத்திருக்கீங்க உங்க வண்டில...நல்லா இருக்குன்னா டிரைவ்...

சில இடங்கள் சர்வ நிச்சயமாய் அட போட வைக்கின்றன...நான் போடுவதற்குள் செல்வா கோட் செய்து பின்னூட்டம் கொடுத்துவிட்டார்.மலரும்...நேற்று சுபாவின் கதையில்"ரத்தப்பூ பூத்தது போல" அப்படின்னு ஒரு வரி படிச்சேன் தோட்டா துளைச்சதை சொல்லும் போது...,உங்க கதையில் தோட்டா துளைக்கும் சம்பவம் வரும் போது கதையை விட மனசு வேகமாக ஓடியது...அண்ணா என்ன சொல்லி இருப்பார் என்று....? அதை விட அசத்தல்...வாய் விட்டே சபாஷ் சொல்லியாச்சு...கேட்டுச்சா?
தொடருங்கள் அண்ணா...சாப்பாடு வடித்துவிட்டு வந்து 13 ஆம் பாகம் படித்து விட்டு சுடச்சுட விமர்சிக்கிறேன்....

மலர்
06-04-2008, 09:39 AM
90 ஆண்டுகளுக்கு முன்னால் அமிழ்ந்து ஆழத்தில் அமைதியாய் அமர்ந்திருந்த அந்த படகு...அன்று சலனப்பட்டது. அதனை சமீபித்த அந்த வாகனத்திலிருந்து இரண்டு பேரும் வெளிப்பட்டார்கள்....முழுவதுமாய் வெளியேறியவர்களின் நீர்முழ்கு உடை தாறுமாறாய்க் கிழியத்தொடங்கியது....கூடவே அவர்களின் உடலும்...அத்தனை ஆழத்தில் உண்டாகும் அதிகபட்ச அழுத்தத்தை தாங்கும் சக்தி அந்த உடைகளுக்கு இல்லாதிருந்தது. கவசமே சிதறும்போது உடல் என்ன செய்யும்....
மூச்சுவிட்டுக்கொள்ளக் காற்று இருந்தது...உள்ளிழுத்துக்கொள்ள உணர்வில்லாமல் உடல் சிதறிப்போனது. தொடரும்
அண்ணன் இது எனக்கு புரியலை....

ஆழ்கடலில் இப்பிடி எல்லாம் கூட ஆகுமா...
அப்போ மூச்சை அடக்கி அந்த காலத்துல முத்து எடுத்தாங்கன்னு
நாம படிக்கிறோமே.... அது எப்பிடி...??

மலருக்கு கொஞ்சம் விம் போட்டு விளக்குங்களேன்.....??
விளங்காமல் முழிக்குது......... :sprachlos020: :sprachlos020:

சிவா.ஜி
06-04-2008, 10:10 AM
http://www.tamilmantram.com:80/vb/[/IMG] http://www.tamilmantram.com:80/vb/

அதுவாம்மா...சின்ன உதாரணம்....அறிவியல்பூர்வமா விளக்கம் வேண்டாம். ஒரு குடம் தண்ணியை தலையில ஊத்தினா..நல்லாருக்கும். தாங்கிக்கலாம். அதுவே குற்றாலத்துல தலையில விழற தண்ணிக்கு தலை கொஞ்சம் ஆட்டம் கொடுக்கும். ஏன்னா ஒரு கிலோ பொருளை இன்னொரு ஒரு கிலோ பொருள் மேலே வைப்பதற்கும், 100 கிலோ பொருளை அதே ஒரு கிலோ பொருள்மீது வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கில்ல. கடலோட மேல்மட்டத்துல பிரெஷெர் பூஜ்யமா இருக்கும். நாமா ஆழத்துக்குப் போகப்போக நம்ம மேல சுமை அதிகரிச்சிக்கிட்டே போகுது. அதாவது தண்ணீருக்கும் எடையிருக்கில்ல. அத்தனை எடையும் நம்ம மேலத்தானே அதோட அழுத்தத்தை பிரயோகிக்கும். அதுதான் அந்த நீரழுத்தம். 600 மீட்டர்ங்கறது நீரழுத்தம் அதிகமா இருக்கும் இடம். அதனாலத்தான் அத்தனை அழுத்தத்தையும் தாங்கக்கூடிய சக்தியுள்ள பொருளால செய்த பிரத்தியேக ஆடைகளைத்தான் அங்கே உபயோகிக்க முடியும்.
இப்ப வர்ற எலக்ட்ரானிக்ஸ் வாட்செல்லாம் பார்ர்த்திருப்பியே அதுல 100 மீட்டர் வாட்டர் ரெசிஸ்டென்ஸ்...150 மீட்டர் வாட்டர் ரெசிஸ்டென்ஸ் அப்படி போட்டிருப்பாங்கல்ல...அது என்னன்னா...அந்த கடிகாரத்துல உபயோகிச்சிருக்கிற கேஸ்கட் அதாவது பின்னாலருக்கற மூடியை வாட்ச்சோட உடல் பாகத்தோட இணைக்குற இடைவெளியில இருக்கிற கேஸ்கட் 100 மீட்டர் ஆழத்துல உண்டாகிற நீரழுத்தத்தை தாங்கக்கூடிய சக்தியுள்ளதுன்னு அர்த்தம். அதுக்கு மேலே (கீழே) போனா அழுத்தம் அதிகரிச்சு கேஸ்கட் டேமேஜ் ஆகிடும். தண்ணீர் வாட்ச்சுக்குள்ள போயிடும்.

இப்போ இங்கே அதுதான் ஆகியிருக்கு..துணியைக் கிழிச்சி...அப்புறம் உடலைக்கிழிச்சி....

கொஞ்சமாவது விளங்கற மாதிரி சொன்னேனா மலரு.

அப்புறம் முத்தெடுக்கறது...அதிக ஆழத்துல இல்லை. அதனால பிரச்சனையில்லை. இப்பவும் சில பேரோட பேரெல்லாம் கின்னஸ்ல வந்திருக்கு. அதாவது பிரத்தியேகமான உடை அணியாம எவ்வளவு ஆழம் கடல்ல போயிருக்காங்கன்னு. (அதிக பட்சம் 100 மீட்டர்)

lolluvathiyar
06-04-2008, 10:12 AM
ஆகா ஒரே நாளில் மூனு பாகம் எழுதீட்டு போறாரு சிவா ஜி படுவேகமா கொன்டு போறாரு, அதுகுள்ள கொலை அதை மறைக்க லஞ்சம் (வழக்கம் போல நம்ம போலீஸ் திறமையை காட்டிவிட்டார்). கடலில் தேடல் காட்சிகள், இறுதியில் தங்கம் கிடைத்து விட்டது. அதற்க்கு ஆட்கள் பலியும் ஆகிறார்கள்.
ஒரு ஆங்கில படம் பார்த்த அனுபவம் வந்து கொண்டு இருக்கிறது. அடுத்த பாகத்துக்கு காத்திருகிறேன்.

மலர்
06-04-2008, 10:19 AM
கொஞ்சமாவது விளங்கற மாதிரி சொன்னேனா மலரு. மல்ருக்கு நல்லாவே விளங்கிச்சின்னா.....
ஹீ..ஹீ...... விம்மை வச்சி விளக்க சொன்னால் புளியை வச்சே
நல்லா விளக்கிட்டீங்கன்னா....

http://smileys.smileycentral.com/cat/36/36_3_11.gif (http://www.smileycentral.com/?partner=ZSzeb001_ZNxmk789YYIN)நன்றி.....

மதி
06-04-2008, 05:05 PM
அசத்தறீங்க அண்ணா...
கலக்கல் திருப்பங்கள்..
கண்ணுக்கு தெரிந்தது இன்னும் கைக்கு எட்டல..
ஆவலுடன் அடுத்த பாகம் எதிர்பார்த்து..

அமரன்
06-04-2008, 08:26 PM
பன்னிரண்டாவது பாகத்தில் துவங்கி பதின்மூன்றாம் பாகத்தின் நிறைவுவரை எதிர்பார்த்தபடி நடந்து (நான் படித்த நாவல்கள் எல்லாமே கிரைம்தாங்கோ).. கடைசீல எதிர்பார்ப்பை எகிறச்செய்து விட்டீர்கள். நீரின் ஆழத்துக்கு செல்லச் செல்ல அழுத்தம் அதிகரிக்கும் என்ற அறிவியலை சரியாகப் பயன்படுத்துக்கொண்டமைக்கு ஒரு சபாஷ். அடுத்த பாகத்திற்காகக் காத்திருக்கிறேன் சிவா...

நான் சொல்ல நினைப்பதை தெளிவாக சொல்லமுடியாமல் போய்விடுகிறது. ஏனென்றே தெரியவில்லை.. எனது தமிழை பழுது பார்க்க வேண்டும். தெளிவாக உரைத்த இதயத்துக்கு மனப்பூர்வமான நன்றி.. இதுவரை தொய்வில்லாமல் கதை நகர உதவிய திருப்பங்களே, சுவாரசியத்தை குறைத்துவிடக்கூடாது என்பதற்காகவே அதைச் சொன்னேன் சிவா.

சிவா.ஜி
07-04-2008, 04:06 AM
அசத்தறீங்க அண்ணா...
கலக்கல் திருப்பங்கள்..
கண்ணுக்கு தெரிந்தது இன்னும் கைக்கு எட்டல..
ஆவலுடன் அடுத்த பாகம் எதிர்பார்த்து..

ரொம்ப நன்றி மதி. கைக்கு எட்டும் நாள் தூரமில்லை.

சிவா.ஜி
07-04-2008, 04:08 AM
இதுவரை தொய்வில்லாமல் கதை நகர உதவிய திருப்பங்களே, சுவாரசியத்தை குறைத்துவிடக்கூடாது என்பதற்காகவே அதைச் சொன்னேன் சிவா.

நிச்சயமாக உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயல்வேன் அமரன். விரைவில் நிறைவுபெறும். தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றிகள் பல.

சிவா.ஜி
07-04-2008, 04:35 AM
பாகம்-14

கேப்ஸ்யூல் உள்ளே இறங்கத்தொடங்கியதிலிருந்து அதன் உள்ளே பொருத்தியிருந்த கேமரா சுடுகின்ற எல்லாக் காட்சிகளையும் படகில் இருந்த படியே திரையில் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டார்கள். கெட்டியான இருளில் வாகனத்தின் ஃப்ளாஷ் விளக்குகள் பாய்ச்சிய வெளிச்சத்தில் இரண்டு பேருடைய உடல்களும் சிதைவதைப் பார்க்க முடிந்தது.

தனா முதல் முறையாக பதட்டப்பட்டான். தலையில் கையை வைத்துக்கொண்டு அதிர்ச்சியாய் அமர்ந்துவிட்டான். ஏற்கனவே டென்ஷன் பார்ட்டியான கன்வர்லால் மேலும் பதட்டமாகி...உடனடியாக தன் பையிலிருந்து மாத்திரைகளை எடுத்து அப்படியே விழுங்கி எகிறிய இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தினான்.

உடனடியாக தானியங்கி வாகனத்தை இயக்கி மேலே கொண்டு வந்தார்கள். தனா அவசரமாய் படகில் வைத்திருந்த மீதமிருந்த ஆழ்கடல் நீச்சலாடைகளை வெளியே எடுத்து ஆராய்ந்தான். முகம் கோபத்தில் விகாரமாகியது.

சேட்டு அந்த குப்தா தப்பு பண்ணிட்டான்யா....அவன்தான் பண்ணான்னாலும்...நாமளும் சரியா கவனிக்காம இருந்துட்டோம். ச்சே...புல்ஷிட்...

என்ன தனா.....என்ன பிரச்சனை?

நான் ஆரம்பத்துலயே சொன்னேன் சாதாரண ஸ்கூபா டைவிங் ஆளுங்க உபயோகிக்கற ஸ்யூட் வேலைக்காது, இன்னும் அதிகமான ஆழத்துல உபயோகிக்கற உடைகள் வேணுன்னு. ஆனா பாரு அவன் 50 மீட்டர் ஆழத்துல மட்டுமே உபயோகிக்க தகுந்த உடைகள வாங்கி அனுப்பியிருக்கான்.

வெட் ஸ்யூட்-ல 3 mm லருந்து 8 mm வரைக்கும் இருக்கு...நமக்குத்தேவை deep sea 8 mm Titanium Action Plus வகையைச் சேர்ந்த உடைகள்...ஆனா அவன் வாங்கி அனுப்பியிருக்கறது Lycra 3mm. இது வெறும் 50 மீட்டர் வரைக்கும்தான் உதவும். அதான் நம்ம ஆளுங்க படபிடிப்புக்காக உபயோகிக்கும்போது அதிக ஆழத்துக்குப் போகாததால நம்மால தெரிஞ்சிக்க முடியல.

சரி...எல்லாத்தையும் பேக் பண்ணுங்க உடனே ஹோட்டலுக்குப் போகலாம். மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு அங்கே போய் யோசனை பண்ணிக்கலாம்.

எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு புறப்படுவதற்கு முன் எச்சரிக்கையாய் அந்த இடத்தை குறிக்க ஒரு நகராத மிதவையை நிறுத்திவிட்டு கிளம்பினார்கள். டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்பட்ட அந்த மிதவையை இவர்களிடமிருக்கும் ரிசீவரால் அடையாளம் காண முடியும்.

அறைக்கு வந்ததும்....தனா,

சரி சேட்டு உடனே குப்தாவுக்குப் போனைப்போடு. உடனே இன்னைக்கே...இப்பவே நான் சொன்ன அந்த ஆடைகளை வாங்கி DHL ல அனுப்பச் சொல்லு. வெறும் நீர்மூழ்கி ஆடைகள்ங்கறதால கஸ்டம்ஸ் தொந்தரவு இருக்காது. நம்மகிட்ட இருக்கற ஒரு டைவர்-ஓட அட்ரஸைக் குடுங்க. கஜா உடனே சென்னைக்குப் போகட்டும். நாளைக்குக் கிடைச்சுடும் அதை எடுத்துக்கிட்டு உடனே இங்கே வரணும், அது வந்தாத்தான் நம்மளால வேலைகளைத் தொடரவே முடியும்.

மள மளவென்று தனா கொடுத்த கட்டளைகளை உடனடியாக செயல்படுத்தினான் கன்வர்லால்.

கஜா வண்டி எடுத்துக்கிட்டு மதுரைக்குப் போய் ஃப்ளைட்ல சென்னை போயிடு. நாளைக்கு பொருள் கிடைச்சதும் அதே மாதிரி மதுரை வந்து ஒரு டாக்ஸியில இங்கே வந்துடு. ஜாக்கிரதை. நீ வந்தாத்தான் மேற்கொண்டு வேலை நடக்கும். சரி உடனே நீ கிளம்பு. நான் குப்தாக்கிட்ட பேசிக்கறேன்.

கஜா கிளம்பிப்போனதும், கன்வர்லால் குப்தாவிடம் பேசத்தொடங்கியதுமே...தனா சொல்லிவிட்டான்....அதிகம் திட்டாதே பின்னால் ஆசைதீர திட்டிக்கொள் இப்போது காரியம் ஆகவேண்டும் என்று. அதனால் சேட் அடக்கியே வாசித்தான்.

நாளைக்கு கண்டிப்பா வந்துடும் தனா....சரி...அந்த பாடிங்களால ஏதாவது பிரச்சனை வருமா....?

அத்தனை டென்ஷனிலும் தனாவுக்கு சிரிப்பு வந்தது.

என்னா சேட்டு நீதான் வீடியோ பாத்தியே...உடம்பு சிதைஞ்சி போயிடிச்சி. அதுவுமில்லாம 600 மீட்டர் ஆழத்துலருந்து உடம்பு வர்றதுக்குள்ள உருத்தெரியாமப் போயிடும். அதைப் பத்திக் கவலைப் படாதே. ஆனா பாக்கி இருக்கிற ரெண்டு டைவர்ஸ்ங்க ஷாக்குல இருக்காங்க. அவங்களை சரி கட்டனும். ஸ்யூட் வந்ததும் ஒருநாள் வேலைதான். சரி வா அவங்க ரூமுக்குப் போய்ட்டு வந்துடலாம்.

அந்த அறையில் அவர்கள் இல்லை. கூட இருந்தவர்கள் சொன்னார்கள்,

வந்ததிலிருந்தே அவங்க சரியில்லையா..பேயடிச்சவங்க மாதிரி இருந்தாங்க. இப்பதான் அஞ்சு நிமிஷம் முன்னாலதான், பார்-க்குப் போய்ட்டு வந்துடறோன்னு சொல்லிட்டு போனாங்க.

கையில ஏதாவது கொண்டு போனாங்களா....தனா கேட்டதும்,

ஆமாங்க...தோள்பை ஒண்ணு கொண்டு போனாங்க. இது எதுக்குன்னு கேட்டதுக்கு வரும்போது சரக்கு வாங்கிட்டு வர்றதுக்குன்னு சொன்னாங்க.

மை காட்....உடனே நீங்க நாலு பேரும் கிளம்பிப் போங்க. அவங்க இங்கேருந்து ஓடிப்போகத் திட்டம் போட்டு கிளம்பிட்டானுங்க...அவங்க போறதுக்குள்ள நீங்கப் போய் அவனுங்களை இழுத்துட்டு வாங்க...எங்க ரூமுக்கு வந்துடுங்க...

அறைக்கு வந்ததும்...தனாவுக்கு வெறுப்பாய் இருந்தது. அடுத்தடுத்து அதிர்ச்சிகளை அவனே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அரை மணியில் அந்த இருவரையும் திரும்பப்பார்த்ததும் சமாதானமடைந்தான். கன்வர்லாலும்தான்.

தொடரும்

மதி
07-04-2008, 05:12 AM
விறுவிறுப்பு குறையாமல் கதையை நகர்த்தும் விதம் அருமை... இந்த கதைய எழுத நீங்க நிறைய ஹோம்வொர்க் பண்ணிருக்கறது தெரியுது...!
வாழ்த்துக்கள் அண்ணா..
தொடருங்க...

மதி
07-04-2008, 05:12 AM
அப்பாடி இந்த பாகத்துக்கு நான் முந்திக்கிட்டேன்..

அமரன்
07-04-2008, 06:49 AM
சூடு வெச்ச ஆட்டோ மீட்டர் எப்படி இருக்கும்னு கதை ஓட்டத்தின் வேகத்தை வைத்து அறிந்துகொண்டேன். பாராட்டுகள் சிவா. குற்றம்.. அடுத்தது என்ன...? அப்படீன்னு ஒருசத்தம் எனக்குள்ள..

சிவா.ஜி
07-04-2008, 06:54 AM
நன்றி மதி மற்றும் அமரன். அடுத்த பாகத்தில் நிறைவு செய்துவிடுகிறேன். தொடர்ந்த உங்களின் ஊக்கம் உற்சாகமளிக்கிறது.

சிவா.ஜி
07-04-2008, 12:57 PM
நிறைவுப்பகுதி

மூன்றாவது நாள் அனைத்து ஏற்பாடுகளுடன் அந்த மிதவை இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஓடிப்போகவிருந்த அந்த இரண்டு ஆழ்கடல் மூழ்குவோரையும் அழைத்துவந்து...சமாதானப் படுத்தி,தைரியமூட்டி தயார்படுத்தியிருந்தார்கள். இறந்துபோன அந்த இருவருக்கும் தருவதாக சொன்ன பணத்தையும் சேர்த்து தருவதாக சொல்லி, ஆசைகாட்டி அழைத்து வந்திருந்தார்கள்.

மீண்டும் கேப்ஸ்யூல் நீருக்குள் பயணப்பட்டது. இந்த முறை பக்காவான ஏற்பாடுகளுடன். மூழ்கிய படகுக்கு அருகில் சென்றதும், கேப்ஸ்யூலில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த துளையின் வழியாக கையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்து சோதித்துக்கொண்டு வெளியேறினார்கள். மேலிருந்து நீண்டிருந்த அந்த வெகு உறுதியான கயிறால் அந்த ஐந்துப் பெட்டிகளையும் சேர்த்துக்கட்டிவிட்டு மேலே இருப்பவர்களுக்கு சிக்னல் கொடுத்ததும் படகில் இருந்த விஞ்ச் அந்தப் பெட்டிகளை மெள்ள மேலே இழுக்கத் தொடங்கியது.

நீண்ட கால தூக்கம் கலைந்த தள்ளாட்டத்துடன் பெட்டிகள் அசைந்து அசைந்து மேலே போவதை சற்று நேரம் நின்று பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீண்டும் வாகனத்தில் அமர்ந்து இயக்கினார்கள்.

படகில் இருந்தவர்களுக்கு உடலெல்லாம் பரவசத்தால் சொல்ல முடியாத ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. வெகு வெகு ஆவலுடன் அந்த விஞ்ச்சின் சுற்றும் சக்கரத்தையும், கடல் மட்டத்தையும் மாறி மாறிப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தார்கள். படகின் நாலாபுறமும் நான்கு பேர் நின்றுகொண்டு எல்லைப் படையினர் வருகிறார்களா எனக் கண்காணித்துக்கொண்டிருந்தார்கள்.

நீர் மட்டத்துக்கு பெட்டிகள் வந்ததும் விஞ்சை நிறுத்திவிட்டு மீண்டும் ஒரு முறை எல்லாப் பக்கங்களிலும் சுற்றிப் பார்த்து உறுதி செய்து கொண்டு, விஞ்ச்சை இயக்கி பெட்டிகளை படகின் மேல்புறத்துக்கு கொண்டு வந்தார்கள். கன்வர்லால் முகம் சந்தோஷத்தில் தர்பூசணிப் பழத்தைப் போல பூரித்துப்போய் இருந்தது. கஜாவும் வழக்கத்துக்கு மாறாய் இளகியிருந்தான். அவன் முகத்திலும் சந்தோஷம்.

உடனடியாக அந்தப் பெட்டிகளை உள் அறைக்குக் கொண்டு போனார்கள்.

கஜா சீக்கிரம் அந்த பூட்டைக் கட் பண்ணு....

தங்கத்தைப் பார்க்கும் ஆவலில் கன்வர்லால் பரபரத்தான்.

பூட்டு துண்டிக்கப்பட்டவுடன் பெட்டியைத் திறந்தான். சற்று சிரமத்துடன் திறந்தது.

கன்வர்லாலும், கஜாவும்...மூச்சடைத்து நின்றுவிட்டார்கள். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையுடன் 100 கட்டிகளாக அந்தப் பெட்டியில் இருந்தது. சேட்டு கணக்குப் போட்டுவிட்டான்..

கஜா 500 கிலோ இருக்குண்டா.. பாப்ரே...இவ்ளோ தங்கத்தை இப்பதான் முதல்தடவையாப் பாக்குறேன்...சொல்லிக்கொண்டே தனாவைப் பார்த்த கன்வர்லால் குழப்பமானான்.

இறுக்கமான முகத்துடன் இருந்த தனாவைப் பார்த்து...

என்னா தனா...ஏன் முகமெல்லாம் இப்படி இருக்கு. சந்தோஷமா இல்லையா..?

சேட்டு. நம்ம பேசினபடி..தங்கம் கிடைக்கிறவரைக்கும் உன்கூட இருந்துட்டேன். இனி நீ உன் வழியில போ. நான் என்வழியிலப் போறேன். சரி இப்ப என்னோட பத்து சதவீதத்தைக் கொடுக்கறியா?

கன்வர்லால் இதை எதிர்பார்க்கவில்லை. கஜாவும் இதை விரும்பவில்லை என்பது தெரிந்தது.

என்ன தனா இவ்ளோ கறாரா பேசற...அதெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்....சொல்லிக்கொண்டிருந்தவனை இடையில் வெட்டி,

இல்ல சேட்டு இப்பவே செட்டில் பண்ணிடு..என்ற தனாவிடம்

அட நமக்குள்ள என்ன தனா..? சென்னைக்குப் போய் செட்டில் பண்ணிடறேன். என் மேல நம்பிக்கையில்லையா?

இல்ல சேட்டு...இந்தத் தொழில்ல யாரை எவ்ளோ நம்பனுன்னு எனக்குத் தெரியும். நீ இப்பவே செட்டில் பண்ணு.

சரி. நம்பவேண்டாம். ஆனா என்கிட்ட இப்ப அவ்ளோ பணம் இல்லன்னு உனக்குத் தெரியுமில்ல...

பணத்தை யார் கேட்டது...50 கிலோ தங்கத்தை குடுத்துடு...நான் போயிடறேன்.

எப்படி எடுத்துட்டுப் போவே...கரைக்கு வந்து, அட்லீஸ்ட் ஹோட்டலுக்கு வந்து எடுத்துக்க...

அதைப் பத்தி நீ கவலைப் படாதே...அங்கப் பாரு எங்க ஆளுங்க வேற ஒரு போட்ல வராங்க. அதுல ஏறி நான் இப்படியே தூத்துக்குடி போயிடுவேன். சீக்கிரமா இந்த பெட்டியில தங்கத்தைப் போடு.

தடாலடியாக எதுவும் செய்ய முடியாமல் தனாவின் ஆட்களின் படகு அருகே வந்துவிட்டிருந்தது. அவர்கள் கைகளில் துப்பாக்கியைப் பார்த்துவிட்டு தனா சொன்னதைப் போலவே செய்தான்.

தனா ஏறிக்கொண்ட படகு போவதைப் பார்த்துக்கொண்டே..

சாலா புத்தியை காமிச்சிட்டான்...என்று வெறுப்புடன் தனா போன திசையைப் பார்த்து துப்பினான்.

அடுத்து.......

கஜா...நாம சீக்கிரமாக் கிளம்பனும். இந்த தங்கத்தையெல்லாம் நாம கொண்டுவந்த மத்த பெட்டிங்களுக்கு மாத்து. இந்த பழைய பெட்டிக்குள்ள நாம கொண்டுவந்த மணல் மூட்டையைப் போட்டு தண்ணியில தள்ளிவிட்டுடு. கரைக்குப் போனதும் உடனே இந்த பெட்டிங்களை காருக்கு மாத்திட்டு நாம ஹோட்டலுக்குப் போயிடுவோம். உங்க ஆளுங்க இந்த போட்ல இருக்கற மத்த பொருள்களை எல்லாம் கொண்டு வரட்டும். ஜல்தி...

கரைக்கு வந்து சேர்ந்து அவசரமாய் அந்தப் பெட்டிகளை ஸ்கார்ப்பியோவுக்கு மாற்றினார்கள். கன்வர்லால் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு அந்தப் பெட்டிகளையே ஆசையாய் தடவிக்கொண்டிருந்தான். கஜா ஓட்டுநர் இருக்கையில் அமரவும்...நாலாபுறத்திலிருந்தும் போலீஸ் வாகனங்கள் பறந்து வந்து ஸ்கார்பியோவை முற்றுகையிட்டு நிற்கவும் சரியாக இருந்தது.

கஜாவும், சேட்டும் வெலவெலத்துப்போய்விட்டார்கள்.

ஒரு காரிலிருந்து சென்னைக் கமிஷனர் இறங்கி வந்துகொண்டிருந்தார். உடன் வள்ளிநாயகம்.

இறங்கி வாய்யா சேட்டு. ஆட்டம் குளோஸ். வா.

நனைந்த நியூஸிலாந்து செம்மறியாட்டைப் போல இறங்கி வந்தான் கன்வர்லால்.

வெரிகுட் ஜாப் சேட்டு. பெரிய வேலைதான் பண்ணியிருக்கே. எங்களுக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு பாக்கறியா. சென்னையிலேயே உன்னை கண்காணிச்சிக்கிட்டுதான் இருந்தோம். நீ ஆண்டிக் பொருளை விக்கிறேன்னு சொல்லிக்கிட்டு சிலை கடத்தல் செஞ்சிக்கிட்டிருந்தது தெரிய வந்தது. அதுக்காகவே எங்க இன்ஃபார்மர் ஒருத்தரை உன் கடையில வேலைக்குச் சேர்த்தோம். உன்னைக் கைது செய்ய ரெடியா இருந்தப்பத்தான்...இந்த தங்க சமாச்சாரம் தெரிய வந்தது. உன்னோட தனியறையில நாங்க வெச்ச ட்ரான்ஸ்மீட்டர் மைக் மூலமா எல்லா விஷயமும் எங்களுக்குத் தெரிஞ்சிடிச்சி.

நீ எப்படியும் இந்த தங்கத்தை வெளியே எடுத்துடுவேன்னு தெரியும். அதான் அரசாங்கத்துக்கு செலவில்லாமக்கிடைக்கப் போறதை ஏன் தடுக்கனுன்னுதான் உங்களையே எடுக்க வெச்சோம். உங்களைக் கண்காணிக்கறதுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிதான் இந்த வள்ளிநாயகம். உங்களோட ஒவ்வொரு அசைவையும் வாட்ச் பண்ணிக்கிட்டிருந்து சரியான நேரத்துல எனக்குத் தகவல்களைக் கொடுத்தார்.

இடையில அந்த கோஸ்டல் கார்ட் ஆபீஸர் விஷயம்தான் நாங்க எதிர்பார்க்காதது...

இதுவரை தலை கவிழ்ந்து கேட்டுக்கொண்டிருந்த கன்வர்லால்..சடாரென்று நிமிர்ந்து...சார் இந்த ஆள் ஒரு மோசமான ஆள். என்கிட்டருந்து லட்சக்கணக்குல பணம் வாங்கியிருக்கார்.

தெரியும் அந்தப் பணத்தை பைசா குறையாம அரசாங்கத்துக்கிட்ட ஒப்படைச்சுட்டார்.

வள்ளிநாயகத்தை அனல் கக்கும் பார்வையால் பார்த்தார் சேட்.

வள்ளிநாயகம் லேசான சிரிப்பைக்காட்டினார். அதில் நக்கல் தெரிந்தது.

எங்களை மடக்கிட்டீங்க தனசேகர் விஷயத்துல கோட்டை விட்டுட்டீங்களே சார். அவன் அம்பது கிலோ தங்கத்தோட எஸ்கேப் ஆயிட்டானே...கன்வர்லால் சொன்னதும்,

யார் சொன்னது எஸ்கேப் ஆயிட்டான்னு, கொஞ்சம் அந்தப் பக்கம் பாருங்க...

காவலர்களின் பாதுகாப்பில் தனாவும் அவனுடைய ஆட்களும் வந்துகொண்டிருந்தார்கள்.

போலீஸ்ல மோசமான அதிகாரிங்க இருக்கத்தான் செய்றாங்க. ஆனா போலீஸ் டிபார்ட்மெண்ட் முழுசுமே அப்படி கிடையாது. தமிழ்நாட்டுப் போலீஸை சாதாரனமா நினைச்சுடாத சேட்டு.

இழுத்துட்டுப் போங்கையா இந்த தங்க மகன்களை.

அவர்கள் இழுத்து செல்லப் பட்டவுடன் காரில் ஏறப்போன கமிஷனரிடம் வள்ளிநாயகம்...

சார் ஒர் நிமிஷம்.

என்ன நாயகம்..?

பொதுவா இந்த மாதிரி கேஸ்ல இன்ஃபார்மருக்கு 20 சதவீதம் ஊக்கத்தொகையா கொடுப்பாங்களே...

ஆமா ஆனா இந்தக் கேஸ்லத்தான் அது மாதிரி யாரும் இல்லையே..

நேரடியா இல்லைதான் சார்...ஆனா அந்த பாண்டியனோட பேரனுக்கு இந்தத் தொகையை கொடுக்கனுன்னு நான் விருப்பப்படறேன் சார். அவன் மூலமா அந்த சுந்தரலிங்கம், மருதமுத்து குடும்பங்களுக்கும் இந்தப் பணத்தோட ஒரு பகுதி போய்ச்சேரனும்....
கஷ்டப்பட்டு இதையெல்லாம் செஞ்சிட்டு குடும்பத்துக்கு ஒண்ணுமே கொடுக்காம இறந்துவிட்ட அவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் ஊதியமாக இருக்கும், அவங்க குடும்பங்களுக்கும் உதவியா இருக்குமே....

சொன்ன வள்ளிநாயகத்தைப் பெரூமையோடு பார்த்த கமிஷனர்.

அப்படியே செஞ்சிடலாம் என்றார்.


நிறைவடைந்தது

மதி
07-04-2008, 01:05 PM
அசத்திட்டீங்க சிவாண்ணா...
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல்... செமத்தியான வேகத்துடன் சென்றது...

நல்லதொரு க்ரைம் கதையை தந்தமைக்கு நன்றி.. வாழ்த்துகள்

சிவா.ஜி
07-04-2008, 01:09 PM
கடைசிவரை கூடவே வந்து உற்சாகப் படுத்தியதற்கு மிக்க நன்றி மதி.

அமரன்
07-04-2008, 01:15 PM
கலக்கல்.. அதிரடியாக முடிச்சிடீங்க.. மனித நேயத்தை தாங்கிய விறைப்புக் காக்கிகளை கதையில் காட்டியது மெய்ச்சிலிர்ப்பு. பாலில் கலந்த விஷம் போல ஒரு சில அதிகாரிகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கே களங்கம். வழக்கமான, தேவையா பஞ்ச். அடுத்தது எப்போ.. அத்தியாயம் இல்லீங்க.. தொடர்..

சிவா.ஜி
07-04-2008, 01:22 PM
ரொம்ப நன்றி அமரன். உங்கள் அனைவரின் ஊக்கத்திற்கு மனம் நிறைந்த நன்றி. அடுத்தது இன்னும் சிறிது தாமதித்து. இந்தக் கதைக்காவே நேரத்தை செலவழித்ததால், நான் மன்றத்தின் பல பகுதிகளிலும் பார்வையிட்டு பின்னூட்டமிட தவறிவிட்டேன்.

முதலில் அதையெல்லாம் முடித்துக்கொண்டு பிறகு தொடங்குகிறேன்.

அக்னி
07-04-2008, 01:25 PM
என்னது... நிறைவடைந்து விட்டதா...
சரி சரி... முதல் தடவை என்பதால் மன்னித்து விடுகின்றோம்...
அடுத்த நாவல் பெரிய நாவலாத் தந்துடணும்... சரியா...

பாகம் 13 இலிருந்து கதை விரைவு பெற்று முற்றுப் பெற்றுவிட்டது. ஏன் இந்த திடீர் விரைவு?
ஆனால் சுவாரசியத்திற்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை. மிகவும் எதிர்பார்க்க வைத்து, ரசிக்கவைத்து, இன்புற வைத்துவிட்டீர்கள் சிவா.ஜி...

நான்,
1. அந்தப் பெட்டிகளில் தங்கம் இருக்காது ஏமாற்றமடைவார்கள்...
அல்லது,
2. பாண்டியனின் பேரன் தலையிட்டு தங்கத்தை அரசாங்கத்திடம் சேர்ப்பான்...
என்றே எண்ணியிருந்தேன். இந்த முடிவை நான் ஊகிக்கக் கூட இல்லை.
என்னைப் பொறுத்தவரையில், திருப்பங்கள் நிறைந்த நிறைவான நாவல்.

மிகச் சிற்சில லாஜிக் மீறல்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால்,
புதிதாகப் பல விடயங்களை அறியவைத்த,
சிவா.ஜி யின் எழுத்தாற்றலை அவரது கடின உழைப்பின் பின்னணியில், அறிய வைத்த,
இத்தொடர் கதைக்கு பெரியதொரு ”சபாஷ்...”

உங்கள் எழுத்தாற்றலை மென்மேலும் வெளிப்படுத்த வேண்டுமென்று,
வாழ்த்துக்களுடனும், பாராட்டுக்களுடனும் கோரி நிற்கின்றேன்...

யவனிகா
07-04-2008, 01:33 PM
விறு விறு கதை....

முடிவை முன்கூட்டியே யூகித்திருந்தாலும்..கதை நகர்த்திக் கொண்டு சென்றவிதம் நிஜமாகவே அருமையாக இருந்தது...

தமிழ்நாடு போலீஸ் முதலிலேயே கண்டுபிடித்து விட்டார்களா...இதுதாங்கண்ணா ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி..

இவ்வளவு சுவாரசியமான கதையை இவ்வளவு வேகமாக தந்த சுறுசுறுப்பு சிவா அண்ணன்னுக்கு ஜே!!

எங்கும் ஓட்டைகள் வராமல்,சறுக்காமல்,நேர்த்தியாக தொடர்கதை எழுதுவது சிரமம்.சிரமத்தை சிறப்பாக முடித்துள்ளீர்கள் அண்ணா...

சேட் கேரக்டர்,தனா கேரக்டர் அருமையான பாத்திரங்கள்...பொறுப்பை நிறைவாக செய்திருக்கிறார்கள்...அதே திருப்தியோட கொஞ்ச நாள் கவர்ன்மெண்ட் களி சாப்பிடட்டும்...

அண்ணா அடுத்தது யாரை களி சாப்பிட தயார் செய்யப் போறீங்க...யாரா இருந்தா என்ன? எங்களுக்கு வடை பாயாசத்தோட உங்க கையால கதை விருந்து கிடைக்கும் இல்லையா?

வாழ்த்துக்கள் அண்ணா!!!

சிவா.ஜி
07-04-2008, 01:37 PM
இந்த விரைவு அவசியமாகப் பட்டது அக்னி. இழுவையாகிவிடக்கூடாதே என்பதால்..விரைவைக் கூட்டினேன். ஆனால் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டதாய் நினைக்கிறேன். தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றிகள் அக்னி. உங்களுக்கு பிரத்தியேக நன்றிகள். இந்த தொடர் எழுத தூண்டிய காரணி நீங்கள். ஒச்சின் ஸ்பஸிபா.

மலர்
07-04-2008, 05:36 PM
ம்ம்ம் விறுப்பா போன கதையை அதே விறுவிறுப்பு கொஞ்சமும்
குறையாமல் முடிச்சிட்டீங்கண்ணா.....

பாராட்டுக்கள்.....அண்ணா...

கிரைம் நாவல் மாதிரி உங்கள் எழுத்தில் உங்களிடம் இருந்து
திகில் :sprachlos020: :sprachlos020: நாவலையும் எதிர்பாக்கும்

மோகினி பிசாசின் சொந்தக்காரி
மலர்.....:D :D :D

சிவா.ஜி
07-04-2008, 05:43 PM
ஆஹா...மலரு....உன் சொந்தங்களை வெச்சு எழுதனுமா....முயற்சி பண்றேம்மா. ஆனா கொஞ்சம் கஷ்டம் தான். ரொம்ப நன்றி மலரு. தொடர்ந்து படிச்சி பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்தியதுக்கு நன்றிம்மா.

மலர்
07-04-2008, 05:55 PM
ஆஹா...மலரு....உன் சொந்தங்களை வெச்சு எழுதனுமா....முயற்சி பண்றேம்மா.
மல்ரு.... :traurig001: :traurig001:
உனக்கு தேவையா...... தேவையா.....
இனிமேயாச்சும் அடங்குவியா.... :sauer028: :sauer028:
சிவாஅண்ணா...
திகில்ன்னா.... பேய் பிசாசு எல்லாம் இல்லாமலே
கொலை எல்லாம் நடந்தா கூட ஒரு திகில் வருமே
அது மாதிரி..... :mad: :mad:

லவ் ஸ்டோரியா படிச்சி போர் அடிக்குதுல்ல....
அதான் ஒரு சேன்ஞ்க்காக.... :D :D :D

சிவா.ஜி
07-04-2008, 07:09 PM
விறு விறு கதை....

முடிவை முன்கூட்டியே யூகித்திருந்தாலும்..கதை நகர்த்திக் கொண்டு சென்றவிதம் நிஜமாகவே அருமையாக இருந்தது...

கதையை இவ்வளவு வேகமாக தந்த சுறுசுறுப்பு சிவா அண்ணன்னுக்கு ஜே!!
வாழ்த்துக்கள் அண்ணா!!!
நீங்களும் ஒரு மிகத் தேர்ந்த கதைசொல்லி. உங்களால் யூகிக்க முடியாதா என்ன? தங்கச்சி படு ஸ்மார்ட்டில்ல....

கதையை இவ்ளோ சீக்கிரம் எழுதி முடிச்சதுக்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம். நீங்க ஊருக்குக் கிளம்பறதுக்குள்ள முடிக்க நினைச்சிதான் வேகமா எழுதினேன். ஆனா வேகமா முடிக்கனுமேன்னு முடிக்கல.

என்னோட கூடவே இந்த வேட்டையில பங்கெடுத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிம்மா.

அக்னி
07-04-2008, 07:39 PM
இந்த தொடர் எழுத தூண்டிய காரணி நீங்கள்.
இது எனக்குத்தான் பெருமையே சிவா.ஜி...
நானே எழுதி முடித்த பெருமையில் இருக்கின்றேன்... :huepfen024:

ஒச்சின் ஸ்பஸிபா.
:smilie_flags_kl: :icon_hmm::icon_hmm::icon_hmm:
:music-smiley-012:
கரஸோ... :icon_b:
யா கhச்க் எத்தத் றஸ்கா மொனோகோ... :4_1_8:

pathman
08-04-2008, 05:11 AM
பாராட்டுகள் சிவாஜி அவர்களே. கதையை மிகவும் நன்றாக நடத்தி சென்றிருக்கிறீர்கள்
யாரும் எதிர்பாரத கிளைமாக்ஸ்.

ஒரு குட்டி ராஜேஸ் குமாராக வளர எனது வாழ்த்துகள்

சிவா.ஜி
08-04-2008, 05:14 AM
பாராட்டுகள் சிவாஜி அவர்களே. கதையை மிகவும் நன்றாக நடத்தி சென்றிருக்கிறீர்கள்
யாரும் எதிர்பாரத கிளைமாக்ஸ்.

ஒரு குட்டி ராஜேஸ் குமாராக வளர எனது வாழ்த்துகள்

கதையை முழுதும் வாசித்து உற்சாகப் பின்னூட்டமளித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் பத்மன். உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி.

lolluvathiyar
09-04-2008, 08:34 AM
மிகவும் ஆர்வமாக படித்து வந்த இந்த கதை நிரைவு அடைந்து விட்டது என்ற அறிந்தவுடன் வருத்தம் அடைந்தேன், அட இனி எதை ஆர்வமாக படிப்பது என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு ஆசையை தூன்டி எழுதி இருந்தார் சிவா ஜி. என்ன கடைசி பாகத்தை படித்தவுடன் தான் கொஞ்சம் அதர்ச்சி அடைன்து விட்டேன், இப்படி ஒரு முடிவை முற்றிலும் எதிர்பார்க்க முடியவில்லை. போலீஸ் துரையில் நல்லவர்கள் நேர்மையானவர்கள் இருப்பார்கள் என்று கனவிலும் கூட நினைக்க முடியாத போது சிவாஜி அவர்கள் கதையில் அப்படி ஒரு முடிவு வந்த கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது. ஆனால் இதைவிட சிற ந்த முடிவு இருக்க முடியாது. கதையின் ஓட்டம் தான் இதில் சிறப்பம்சம், கடல் அதில் அடியில் சொல்ல கூடிய சாதனங்கள் பற்றிய ஒரு அலசல் அலசி விட்டார். கதை ஆர்வமாக சென்றதுக்கே அது தான் முக்கிய காரனமாக அமைந்தது

இது போன்ற புதையல் கதை நிரைய படித்திருகிறோம். புதையலுக்காக கேவலமாக அலைவார்கள், கொலை, கொள்ளை எல்லாம் சகஜமாக இருக்கும். மிக பழைய ஒரு கதை ராபர்ட் லூயிஸ் ஸ்டிவன்சன் எழுதிய தி டிரெசர் ஐலன்ட் (Treasure Island) புதையல் வேட்டை பற்றீயது அதில் ஆரம்பத்தில் ஒரு பாடல் வரும் அதன் ஆங்கில வரி
Fifteen men in the dead mans chest
இதன் அர்த்தம் புதையல் ரகசியம் வைத்திருந்த ஒருவனின் பினத்துக்கு 15 பேர் அலைந்தார்களாம் அந்த அளவுக்கு கொலைகாரர்களாக மாறி விட்டார்களாம் உங்கள் கதையை படித்தவுடன் இந்த பாடல் தான் நினைவுக்கு வந்தது.

அருமையான கதையை பாராட்டி சிவா ஜிக்கு 250 இபணம் வழங்குகிறேன்

சிவா.ஜி
09-04-2008, 09:28 AM
என்ன கடைசி பாகத்தை படித்தவுடன் தான் கொஞ்சம் அதர்ச்சி அடைன்து விட்டேன், இப்படி ஒரு முடிவை முற்றிலும் எதிர்பார்க்க முடியவில்லை. போலீஸ் துரையில் நல்லவர்கள் நேர்மையானவர்கள் இருப்பார்கள் என்று கனவிலும் கூட நினைக்க முடியாத போது சிவாஜி அவர்கள் கதையில் அப்படி ஒரு முடிவு வந்த கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது.

வாத்தியார் நானும் உங்கள் கட்சிதான். தமிழக போலீஸ் என்றாலே கேவலமானவர்கள்தான். ஆனால் இந்தக் கதையில் நான் கனவுகாணும் நல்ல போலீஸை காட்டியிருக்கிறேன். தமிழ்நாட்டு போலீஸ் எந்தவிதத்திலும் லாயக்கில்லாதவர்கள். பணத்தைக்காட்டினால் குலைக்கும் வர்க்கங்கள்.

உங்கள் தொடர்ந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி. இ-பணத்திற்கும் மிக நன்றி.

செல்வா
09-04-2008, 09:35 AM
என் பங்குக்கு அண்ணாவுக்கு ஆயிரம் இ-பணங்கள் :)

சிவா.ஜி
10-04-2008, 05:54 AM
என் பங்குக்கு அண்ணாவுக்கு ஆயிரம் இ-பணங்கள் http://www.tamilmantram.com:80/vb/

இ-பண அன்பளிப்புக்கு மிக்க நன்றி செல்வா.

meera
12-04-2008, 07:58 AM
சிவா அண்ணா,


கைய கொடுங்க. சூப்பரூஊஊஊஊஊஊஊஉ அண்ணா.
நான் இந்திரா செள்ந்தரராஜன் ,ராஜேஸ்குமாரின் தீவிர ரசிகை.உங்க கதையை படிக்கும் போது இன்னொரு ராஜேஸ்குமாரை பார்த்த திருப்ப்தி இருந்தது.ஆனா கதை தான் சட்டுனு முடிச்சுட்டீங்க. அசத்தலான முடிவு அண்ணா.இன்னும் இது மாதிரி நீங்க நிறைய எழுத வாழ்த்துகள்.:icon_b::icon_b:

சிவா.ஜி
12-04-2008, 08:57 AM
ஆஹா தங்கையோட பாராட்டைபார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. ரொம்ப நன்றிம்மா. உங்க எல்லோருடைய ஊக்கத்துல இன்னும் எழுதனுன்னு தோணுது. எழுதறேம்மா.

செல்வா
12-04-2008, 11:14 AM
அடுத்தாப்ல மலரோட உறவினர்கள் கதையாச்சே... எப்போ அண்ணா ஆரம்பிக்க போறீங்க...

சிவா.ஜி
12-04-2008, 04:46 PM
மல்ரூ கொஞ்சம் உதவி பண்ணும்மா...

SivaS
11-06-2008, 09:46 AM
என்னத்த சொல்ல முடிலப்பா என்ன ஒரு வேகம், திறில், சுவாரசியம்!!!!
தொடர் நாடகம் பொல இழுக்காம நறுக் என்று ஒரு சரித்திரத்தயே சொல்லிடீங்க
நானும் யோசிச்சேன் எப்படி இப்படி பெரிய பின்னூட்டம் அனுப்புறாங்க என்று இப்ப தானே எனக்கும் வந்திடுது

சிவா.ஜி
11-06-2008, 10:25 AM
ரொம்ப நன்றி சிவா. உற்சாகமான உங்க பின்னூட்டத்துக்கு மனதார நன்றி.

அக்னி
11-06-2008, 10:27 AM
அதெல்லாம் இருக்கட்டும்... அடுத்த கதை எங்கே...

சிவா.ஜி
11-06-2008, 10:35 AM
விரைவில் வரும் அக்னி சார்.

இளசு
20-06-2008, 09:03 PM
மன்றத்தில் இராகவன்,லியோ மோகன் போன்ற சாதனைக் கதையாளர்களின் வரிசையில் சிவாவுக்கு நிரந்தர இடம் பிடித்துக் கொடுத்த கதை..

பல இடங்களில் சுஜாதா எழுதியதா என எண்ண வைத்த பல வர்ணனைகள்..

நேற்று முழுமூச்சாய் அத்தனை பாகங்களையும் வாசித்தேன்.

இன்று விமர்சனம் எழுதும்போதும் ---

அவள் குரல் தேய...
........வது வாகனமாக...
லுங்கி போர்த்திய சென்னைத்தமிழன்...
இதயப்பாய்ச்சல் திசை மாறி...
பூகம்பமாய் அதிர்ந்த படுக்கை....


என பல அழகான கதையோடிழைந்த வர்ணனைகள் இன்னும்
நினைவிலிருந்து சுட்ட முடிகிறதே!


கதை முடிச்சும், சம்பவ - வசனக் கோர்வையும் மிக இலகுவாய்
சொல்ல முடிந்த திறத்துக்கு சபாஷ்!

அறிவியல் உண்மைகளை , ஒரு செய்திக்குறிப்பில் இருந்து வளர்த்த கதைக்குள் பொருத்திய திறமைக்கு இன்னொன்று!

இத்தனை பெரிய தொடரை விறுவிறுப்பாய், சூடாறாமல் பரிமாறிய ஈடுபாட்டுக்கு மூன்றாம் சபாஷ்!

ஆரம்பநிலை எழுத்தாளர் என்ற கட்டத்தைத் தாண்டி
சிவாவின் எழுத்துச் சிறகுகள் விரிவதைக் கண்டு

தாயுள்ளம் போல் பூரித்து நிற்கின்றேன்..

வாழ்க - நீங்களும்..உங்கள் எழுத்தும்!

------------------------------------------

இதயம், அமரன், அன்பு, அக்னி, மலர், மதி, செல்வா, யவனி ,வாத்தியார்- உள்ளிட்ட
அனைவரும் தொடர்ந்து அளித்த பின்னூட்டங்கள்..

மன்றம் போன்ற தளங்களில் மட்டுமே கிடைக்கும் சத்தூட்டங்கள்..

சிவா.ஜி
21-06-2008, 04:19 AM
இத்தனை அலுவல்களுக்கிடையிலும் அனைத்து பாகங்களையும் படித்து, சின்னச் சின்ன சம்பவங்களையும் குறிப்பிட்டு.....அடடா....என்ன சொல்வது இளசு?

நீங்கள் கடைசியில் குறிப்பிட்டிருந்த வரிகளைத்தான் நானும் சொல்ல வேண்டியிருக்கிறது. இது மன்றமன்றி வேறெங்கு நிகழும்? சாதாரணக் களிமண்ணையும் ஒரு உருவமாக்குவது இப்படிப்பட்ட பின்னூட்டங்களே. மனம் நிறைந்து நிற்கிறேன். மிக்க நன்றி இளசு.