PDA

View Full Version : சூரியன்



நாகரா
29-03-2008, 12:43 PM
இமைகளைச் சுட்டு விலக்கி
விழிகளுக்குத் தன்னைப் புரியவைக்கும்
வான போதகன்

கிரண மந்திரம் பேசி
விழிகளுக்கு உலகை விளக்கும்
ஆகாய குரு

விழித் திரையில்
தன் கிரணத் தூரிகையால்
உலகை வரையும் ஓவியன்

தன் ஒளிப் பேனாவால்
விழித் தாள்களில்
உலகை எழுதும்
புதுக் கவிஞன்

தன் சுடும் மெய்யைச்
சுடச்சுடத் தந்து
என் மெய் சுடும்
வானவன்

தன் வெயில் நிழலால்
புவி தழுவும்
வான மரம்

கடல் நீருறிஞ்சி
மண்ணில் உப்பைச் செய்யும்
விண்ணகத் தொழிலாளி

kavitha
04-04-2008, 11:09 AM
ஒவ்வொரு பத்தியுமே ஒரு குறுங்கவிதை.


இமைகளைச் சுட்டு விலக்கி
விழிகளுக்குத் தன்னைப் புரியவைக்கும்
வான போதகன்
பிறந்த குழந்தைகளை இதனால் தான் வெயிலில் காட்டச்சொல்கிறார்களோ?

நாகரா
04-04-2008, 12:25 PM
ஒவ்வொரு பத்தியுமே ஒரு குறுங்கவிதை.


பிறந்த குழந்தைகளை இதனால் தான் வெயிலில் காட்டச்சொல்கிறார்களோ?

உமது பின்னூட்டத்துக்கு நன்றி கவிதா.

அமரன்
04-04-2008, 02:24 PM
முதல்வனுக்கு கவிச்சரம்.. அசத்தல் ரகம்.

சூரிய மழையில் நனைந்து காணாமல் போகும் இலைநுனி ஈரத்தை கண்ணுற்றவாறு, வெயில் நிழல் முரண் பிரயோகம் இரசித்தேன்..

கவிதையில் லயித்தேன்..

பாராட்டுகள்..

நாகரா
04-04-2008, 03:49 PM
முதல்வனுக்கு கவிச்சரம்.. அசத்தல் ரகம்.

சூரிய மழையில் நனைந்து காணாமல் போகும் இலைநுனி ஈரத்தை கண்ணுற்றவாறு, வெயில் நிழல் முரண் பிரயோகம் இரசித்தேன்..

கவிதையில் லயித்தேன்..

பாராட்டுகள்..
உமது பாராட்டுகளுக்கும் லயிப்புக்கும் நன்றி அமரன்.