PDA

View Full Version : உதவுங்கள் ஒரு மனிதன் வாழ



தங்கவேல்
29-03-2008, 02:49 AM
நேற்று மதியம் ஹேர் கட் செய்யலாம் என்று கோவையில் இருக்கும் இஎஸ்ஐ ஆஸ்பிட்டலின் எதிர்புறம் இருக்கும் சந்தில் உள்ள நிமல் என்ற முடி திருத்தும் நிலையத்துக்குச் சென்றேன். வயதானவர் ஒருவர் இருந்தார். முதன் முதலில் அந்தக் கடையில் முடி திருத்திக் கொள்ளலாமென்று எண்ணி சார் எவ்வளவு என்று கேட்க, 35 ரூபாய் சார் என்றார்.

ஒரு வழியாக நாற்காலியில் அமர்ந்தவுடன் அவரும் முடி திருத்த ஆரம்பித்தார். பின்புறம் உள்ள பெஞ்சில் சிவப்பாக பெண் தன்மையுடன் உயரமாக அழகே வடிவான ஒரு 16 வயது சிறுவன் ஒருவன் அமர்ந்திருக்க கண்டேன்.

மெதுவாக பெரியவரிடம் ” பையன் யார் ? “ என்று கேட்க, அவரின் “ இரண்டாவது குழந்தை எனவும் அவருக்கு மூன்று குழந்தைகள் “ எனவும் சொன்னார். புறம்போக்கு நிலத்தில் வீடு இருப்பதாகவும் சொன்னவர் பையன் வீட்டில் தான் இருக்கிறான் என்றும் சொன்னார். ” ஏன் ? “என்று கேட்டேன்.

அவன் பிறந்திலிருந்து அவனுக்கு HEMOPHILIA -A என்ற நோய் இருப்பதாகவும், இவருக்குப் பின்னர் அவனை யார் கவனித்துக் கொள்ள போகிறார்களோ என்று சோகத்துடன் சொல்ல அது என்ன அப்படிப்பட்ட நோய் என்று கேட்டேன்.

உடலில் எங்காவது அடிபட்டி தோல் கிழிந்து விட்டால் ரத்தம் சிறிது நேரம் வரும். பின்னர் தானாகவே நின்று விடும் அல்லவா ? ஆனால் இந்தப் பையனுக்கு அடிபட்டால் ரத்தம் நிற்காமல் கொட்டும் எனவும், அத்துடன் பிட்ஸும் வந்து விடும் என்றும் அதற்கு வெளி நாட்டில் இருந்து தான் மருந்து வருகிறது எனவும் சொல்ல எனக்கு திக் என்றாகி விட்டது.

தினமும் அவனுக்கு மாத்திரை செலவு ரூபாய் 20 ஆகிறதாம். எங்காவது அடிபட்டால் அதற்கு தனி மருந்தும் வாங்க வேண்டுமாம். அன்றைய பொழுதில் நான் தான் அவருக்கு முதல் வாடிக்கையாளர் என்றும் நான் கொடுக்கும் 35 ரூபாய்தான் இன்றைய வருமானம் என்றும் சொன்னார்.

மனதில் வேதனை சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்ள, அவரிடம் எனக்கு இணைய தளத்தில் நல்ல பரிச்சயம் இருப்பதாகவும் இந்தச் செய்தியினை இணைய தளத்தில் வெளியிட்டு உதவுகிறேன் எனவும் சொன்னேன். என்னால் முடிந்தது இந்த உதவி தான் . யாராவது நண்பர்கள் உங்கள் மகனுக்கு உதவ முன்வரலாம் என்று சொல்லி விட்டு விபரங்களை வாங்கி கொண்டு வந்தேன்.

அந்த விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. முடிந்தவர்கள் அந்தப் பையனுக்கு உதவி செய்யலாம்.

NAME : N. S. ASAI
FATHER NAME : N. SHANMUGAM
ADDRESS : 97/60 A, SELVARAJA PURAM, CHITHAMANI PUDUR, IRUGUR VIA, COIMBATORE
PHONE NUMBER : 00 91 97901 66634

DICEASES : HEMOPHILIA - A
FACTOR DEFICIENCY 8% < 1 %

TABLETS NEED

1. TEGRETOL CR400
2. DOLO 650
3. METROGYL 400
4. MOX 500

அன்புரசிகன்
29-03-2008, 03:02 AM
மனிதருக்கு எத்தனைவிதமான நோய்கள்.. அனைத்தும் சரியாகும்..... எனதிறைவனை பிரார்த்திக்கிறேன்....