PDA

View Full Version : மாங்கனி காவியம் - விமர்சனம்..!!ஆதி
25-03-2008, 08:46 AM
அன்பு உறவுகளே, எனது மாங்கனிக் காவியம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=337453#post337453) தொடர்பான உங்கள் பொன்னான விமர்சனங்களை இங்கே தாருங்களேன்...!!

அன்புடன்
ஆதி.

செல்வா
25-03-2008, 08:58 AM
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் புலவரே...... தயக்கமென்ன தடையுடைத்து நடவுங்கள்......
கருவை மட்டும் கண்ணதாசனிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்... பிறவற்றை உங்கள் மனம்போல் .......
அன்பு வாழ்த்துக்கள் ஆதி.... உடல்நலனையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

ஆதி
25-03-2008, 09:07 AM
கருவை மட்டும் கண்ணதாசனிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்... பிறவற்றை உங்கள் மனம்போல் .......
அன்பு வாழ்த்துக்கள் ஆதி.... உடல்நலனையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

முதல் வாழ்த்து குருவிடம் இருந்து வந்ததே என் பெரும் பாக்கியம்.. :D

கரு மட்டுமே கண்ணதாசனுடையது செல்வா மற்ற அனைத்தும் என் எண்ணப்படிதான்
எழுதப்போகிறேன்.. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் காவியத்தைச் சிதைக்காமல் கதைப் போக்கை என் மனம் போல் கொஞ்சம் மாற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்..
அதாவது கண்ணாதசன் காவியத்தை முடித்த இடத்தில் இருந்து என் தொடர்க் கவிதை ஆரம்பமாகும்..

உடல் சுகத்தை நிச்சயம் கவனித்து கொள்கிறேன் செல்வா, குரு சொன்னப் பிறகும் கேட்க மாட்டேனா என்ன ?

அன்புடன் ஆதி

அமரன்
25-03-2008, 09:17 AM
முயற்சி வெற்றி பெற வாழ்துகிறேன் ஆதி. எம்மைப் பாதித்த படைப்புகளை, மாற்றி அமைக்க சமகாலம் தூண்டும். அல்லது தொடரத் தூண்டும். உங்களுக்கு அந்த தூண்டல் கிடைத்துள்ளது.

தமிழ்த்தாயின் தவப்புதல்வர் ஒருவர் முடித்த இடத்திலிருந்து தொடர்வது என்பது என்வரையில் புதிதாக உள்ளது. ஒரு வாசகனாக, உங்கள் எழுத்துகளின் ரசிகனாக ஆவல் அதிகரிக்கிறது. விதிகளுடன் முரண்படாது இருக்க பொறுப்பாளன் மனம் விரும்புகிறது.

ஆதி
25-03-2008, 09:50 AM

மன்றவிதி மீறல்கள் இருக்காது அமரன்..

நம்ம அக்கா ஒருமுறை கேட்டாங்க புத்தம் படிப்பியா ஆதி..

நிறையப் படிப்பேன் அக்கா..

யாரைப்பிடிக்கும் ?

கண்ணதாசனை, என் ராஜ குரு அவர்தான்

அவ்வளவு மதிக்கிறேன் நான் கவியரசரை.. அவரின் காவியத்தை எழுதும் போது கண்ணும் கருத்துமாய் மன்றவிதிகளை நான் கடைப்பிடிப்பேன்..

வாழ்த்துக்கு நன்றி அமரன்..

அன்புடன் ஆதி

நம்பிகோபாலன்
25-03-2008, 10:03 AM
வாழ்த்த வயதில்லை என நினைக்கிறேன்.
தங்களின் பதிப்பை மிகுந்த ஆவலோடு
எதிர்பார்கிறேன்.

ஆதி
25-03-2008, 10:06 AM
வாழ்த்த வயதில்லை என நினைக்கிறேன்.
தங்களின் பதிப்பை மிகுந்த ஆவலோடு
எதிர்பார்கிறேன்.

நம்பி நான் ரொம்ப சின்னப்பையனுங்கோ.. :D

வயதானவனில்லை.. எனக்கு 27 வயசுதானுங்க ஆகுது வாழ்த்த வயதில்லை னு சொல்லி என்னை வயதுடையவனாக ஆக்காதீங்க.. :)

உங்கள் ஆவல்களை தித்திப்பாய் பூர்த்தி செய்ய நிச்சயம் முயற்சிப்பேன்..

அன்புடன் ஆதி

நம்பிகோபாலன்
25-03-2008, 10:14 AM
உங்கள்கவியில் உள்ள முதிர்ச்சியே அதற்கு காரணம்.
ஆதி என்ற மன்ற கண்ணதாசனின் எழுதுக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

ஆதி
25-03-2008, 10:32 AM
உங்கள்கவியில் உள்ள முதிர்ச்சியே அதற்கு காரணம்.
ஆதி என்ற மன்ற கண்ணதாசனின் எழுதுக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

கண்ணதாசன் அமர்ந்திருந்த அந்த ராஜக் கட்டிலில் அமரத்தான் ஒவ்வொரு கவிஞனும் பிரியப்படுகிறான்.. உண்மையில் அனைத்துப் பெருங்கவிஞர்களின் கனவும் அதுவே.. ஆனால் அந்தக் கட்டிலில் உட்கார்ந்துவிட்டதாய் இதுவரை எந்தக் கவிஞனும் வாய்திறந்து சொல்லவில்லை..

ஒருமுறை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.. சிங்கப்பூரில் நடந்த திரைப்பட விழாவில், வைரமுத்துவைப் பற்றிப் பேசினார்.. அந்தப் பேச்சில் வைரமுத்து கண்ணதாசனையும் விஞ்சிவிட்டதாக சொன்னார்.

மறுநாள் வைரமுத்து கண்ணதாசனோடு என்னை சமமாய் பேச எனக்கு எந்தத் தகுதியுமில்லை, அப்படி இருக்க அவரை நான் விஞ்சிவிட்டதாக சொல்வதை என்னால் ஏற்கமுடியாது.. எனக்கு கவியரசு என்றப்பட்டம் இனி வேண்டாம் என்று கவியரசுப் பட்டத்தைத் துறந்தார்.. அதற்கு மறுநாள் நம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.. கவியரசுப் பட்டம்தானே வேண்டாம், சரி கவிப்பேரரசு என்று பட்டம் கொடுத்து கௌரவித்தார்.. இப்படி சாதித்தக் கவிஞர்களே கண்ணதாசனுக்கு இணையாகத் தன்னைச் சொல்லிக்கொள்ள நாணமுறும் போது, என்னை மன்றக் கண்ணதாசன் என்று சொல்லி கவியரசோடு ஒப்பிட வேண்டாம் நம்பி.. அந்த தகுதி எனக்கு சிறிதுமில்லை..

அன்புடன் ஆதி

நம்பிகோபாலன்
25-03-2008, 10:47 AM
தங்கள் தன்னடக்கம்
வெகுவாக கவர்கிறது.....
வாழ்த்துக்கள்

யவனிகா
25-03-2008, 01:04 PM
ஆதி களமிறங்கியாச்சா...சிலநேரங்களில் ரீமேக் ஒரினினலை விட அதிகம் கவரும்.நான் மாங்கனி காவியம் படித்ததில்லை. ஆதியின் நடையில் தவறாது படிப்பேன்.
உம் நாவிலும் தமிழ் வந்து நடமாடும்...
எம் கண்ணிலும் காதிலும் தேனூறும்...
மாங்கனி வெங்காயாய் காத்திருக்கிறது
கனித்து ததும்பி தமிழ் ரசமூற..
காத்திருக்கிறோம் ஆதி...

சிவா.ஜி
25-03-2008, 01:08 PM
அன்பு ஆதி....இப்போதே மனம் பரபரக்கிறது....இந்த காவியத்தை வாசித்து சுவைக்க.கண்னதாசனின் தாசன் நான்.திரையிசைப் பாடல்களையும் தரமான இலக்கியமாக்கிய ஒப்பற்ற கவிஞர் அவர்.
மிக ஆவலாய் எதிர்பார்க்கிறேன்.....அவரைப் பற்றின ஆதியின் வரிகளை.வாழ்த்துகள் தம்பி.

ஆதி
25-03-2008, 01:37 PM
ஆதி களமிறங்கியாச்சா...சிலநேரங்களில் ரீமேக் ஒரினினலை விட அதிகம் கவரும்.நான் மாங்கனி காவியம் படித்ததில்லை. ஆதியின் நடையில் தவறாது படிப்பேன்.
உம் நாவிலும் தமிழ் வந்து நடமாடும்...
எம் கண்ணிலும் காதிலும் தேனூறும்...
மாங்கனி வெங்காயாய் காத்திருக்கிறது
கனித்து ததும்பி தமிழ் ரசமூற..
காத்திருக்கிறோம் ஆதி...

அக்கா உங்க ஒவ்வொருப் பின்னூட்டமும் என் கண்ணில் ஒரு பெயரறியா மகிழ்ச்சியை
நீராய் தளும்ப விட்டுப்போகும் இந்த பின்னூட்டமும் அப்படிதான்.. உங்க வாழ்த்துப்படியே தமிழாள் எழிலாய் எந்நாவில் நடமாடட்டும்..

அக்கா அரச கட்டளைப் படம் பார்த்திருக்குறீங்களா எம்.ஜி.ஆர் உடையப்படம் இந்த காவியத்தை சிறிது மாற்றித்தான் அந்த படத்தை எடுத்திருப்பார்கள்..

அன்புடன் ஆதி

ஆதி
25-03-2008, 01:43 PM
அன்பு ஆதி....இப்போதே மனம் பரபரக்கிறது....இந்த காவியத்தை வாசித்து சுவைக்க.கண்னதாசனின் தாசன் நான்.திரையிசைப் பாடல்களையும் தரமான இலக்கியமாக்கிய ஒப்பற்ற கவிஞர் அவர்.
மிக ஆவலாய் எதிர்பார்க்கிறேன்.....அவரைப் பற்றின ஆதியின் வரிகளை.வாழ்த்துகள் தம்பி.

அண்ணா உங்க பின்னூட்டத்த படித்த பிறகு எனக்கு பதட்டமும் பயமும் அதிகமாகுது, உங்க எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யனும் அதுவும் கண்ணதாசனின் தாசன் என்று வேற சொல்லிட்டீங்க அவரின் காவிய*த்திற்கு என் படைப்பால் எந்த குறைசொல்லும் வந்திட கூடாது இல்ல அதான் பயம் அண்ணா..

வாழ்த்துக்கு நன்றிகள் அண்ணா.. என் முழுமுயற்சியையும் இதில் செலவிடுகிறேன் அண்ணா..

அன்புடன் ஆதி

மதி
25-03-2008, 01:52 PM
அடடே..
நான் படித்ததில்லை மாங்கனி காவியம். உற்சாகமுடன் தொடரை துவங்குங்கள் ஆதி. படிக்க நாங்கள் இருக்கிறோம்.

சிவா.ஜி
25-03-2008, 01:54 PM
நல்லதொரு படைப்பைத் தொடங்கியிக்கும் அன்புத்தம்பிக்கு எங்க எல்லோருடைய ஆசியும்,ஆதரவும் எப்போதுமே உண்டு.படைப்பாளிக்கு இந்த பயம் அவசியம்தான்.அதுதான் படைப்பை நல்லமுறையில் கொண்டுவர உதவும்.
தமிழ்த்தேன் பாய ஆரம்பித்துவிட்டது...தொடர்ந்து....பாயவிடுங்க....சுவைக்க காத்திருக்கிறோம்.

ஆதி
25-03-2008, 02:11 PM
அடடே..
நான் படித்ததில்லை மாங்கனி காவியம். உற்சாகமுடன் தொடரை துவங்குங்கள் ஆதி. படிக்க நாங்கள் இருக்கிறோம்.

எனக்கும் கல்லூரி போகும்வரை இந்த காவியம் பற்றி தெரியாது, கல்லூரியில் ஒரு நாளே எங்களுக்கு பாடமும் எடுத்து வேலையும் செய்த ஒரு தமிழ் ஐய்யா அவர் முகம் தவிர பெயர் கூட எனக்கு ஞாபகமில்லை அவர்தான் இந்த காவியம் பற்றி பேசினார், ஒரு சில வார்த்தைகள்தான் சொன்னார், என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது.. பிறகொருனாள் இந்தப் புத்தகம் என் கண்ணில் தற்செயலாய்ப் பட்டது உடனே வாங்கிவிட்டேன்.. மூச்சுவிடாமல் அன்றே படித்து முடித்தேன்.. அடடா என் கவிஞன் பெருங்கவிஞந்தான் எத்தனை அழகாய் நேர்த்தியாய் சுவையாய் சுவாரஸ்யமாய் புனைந்திருக்கிறான்.. மாங்கனி அந்த தையல் மீது த்னிவொரு மையல் படர்ந்துவிட்டது எனக்கு, நான் காதலித்த முதல் பெண் மாங்கனிதான்..

உங்க ஊக்கத்திற்கு நன்றி மதி..

அன்புடன் ஆதி

செல்வா
25-03-2008, 02:25 PM
ஆதி களமிறங்கியாச்சா...சிலநேரங்களில் ரீமேக் ஒரினினலை விட அதிகம் கவரும்.

ஆதி, அக்கா இருவருக்கும். இதை ரீமேக் என எண்ணாதீர்கள். கண்ணதாசனின் படைப்பில் ஆதியின் மனங்கவர்ந்த கதையை தன்போக்கில் எழுதுகிறார் ஆதி. இங்கே கண்ணதாசனையும் ஆதியையும் சொன்ன விடயங்களை வைத்து ஓப்புமைப்படுத்தலாமே ஒழிய சொல்லும் விதத்தை வைத்து ஒப்புமைப் படுத்த வேண்டிய அவசியமில்லை. கவிநடையையும் மொழியையும் ஒப்பவேண்டிய தேவையில்லை. கண்ணதாசன் கண்ணதாசன் தான். ஆதி ஆதி தான். இருவரது சூழலும் சிந்தனையும் செயல்களும் வேறே வேறே....

கவலைப்படாதே ஆதி... நாங்களிருக்கிறோம் உன்னுடன். நான் கண்ணதாசனுடன் உன்னை ஒப்புமைப்படுத்தப் போவதில்லை... நான் கண்ணதாசனின் மாங்கனி படித்ததும் கிடையாது. நான் வாசிக்கப் போவது ஆதியின் மாங்கனி அவ்வளவே...

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் ........ காட்டை வெந்து தணியவைப்பாய்...

கண்ணதாசனைப் பற்றிய கவலை வேண்டாம் உனக்கு... இதோடு கண்ணதாசனை நீ மறக்கிறாய்... மாங்கனி முடியும் வரை உன் மனதிலிருப்பது மாங்கனி மட்டுமே...

ஆதி
25-03-2008, 05:04 PM
கண்ணதாசனைப் பற்றிய கவலை வேண்டாம் உனக்கு... இதோடு கண்ணதாசனை நீ மறக்கிறாய்... மாங்கனி முடியும் வரை உன் மனதிலிருப்பது மாங்கனி மட்டுமே...

உண்மையான கருத்து செல்வா, கண்ணதாசனை மறக்கிறேன் மாங்கனியை மட்டும் இனி எண்ணி கனிந்து இருக்கிறேன் கவிதை முடியும் வரை..

அன்புடன் ஆதி

செந்தமிழரசி
26-03-2008, 05:37 AM
கவலைப்படாதே ஆதி... நாங்களிருக்கிறோம் உன்னுடன். நான் கண்ணதாசனுடன் உன்னை ஒப்புமைப்படுத்தப் போவதில்லை... நான் கண்ணதாசனின் மாங்கனி படித்ததும் கிடையாது. நான் வாசிக்கப் போவது ஆதியின் மாங்கனி அவ்வளவே...

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் ........ காட்டை வெந்து தணியவைப்பாய்...

கண்ணதாசனைப் பற்றிய கவலை வேண்டாம் உனக்கு... இதோடு கண்ணதாசனை நீ மறக்கிறாய்... மாங்கனி முடியும் வரை உன் மனதிலிருப்பது மாங்கனி மட்டுமே...

செல்வா அவர்களின் கருத்தை அப்படியே நானும் வழி மொழிகிறேன் ஆதி ;)

வாழ்த்துக்கள் :icon_b:

ஆதி
26-03-2008, 08:02 AM
செல்வா அவர்களின் கருத்தை அப்படியே நானும் வழி மொழிகிறேன் ஆதி ;)

வாழ்த்துக்கள் :icon_b:

தமிழரசியின் வாழ்த்தை தமிழாள் வாழ்த்தாய் எண்ணிப் பூரிக்கிறேன்..

வாழ்த்துக்கு நன்றி அரசி..

அன்புடன் ஆதி

செல்வா
26-03-2008, 10:03 AM
பழையனின் அரசவை
வெண்ணிலா தேகத்தில்
மின்னலைப் பாய்ச்சியா ?
பொன்னிலா ? வைரப்பொடியிலா ?
எதில் படைத்தான் என்றே!

மங்காத ஒளிமலரின்
வடிவழகைக் கண்டால்
கொடுங்காமரும் கைகூப்பி
கும்பிட்டுதான் போவார்

முழுதும் இரசித்தேன் என்றாலும் மிகவும் கவர்ந்தவை இவை....

பங்காளி:D அமரா... கவிச்சமர் விமர்சனம் போன்று மாங்கனிக்கும் ஒரு விமர்சனத் திரி துவங்கலாம் என்பது என் அவா..... கனியின் சுவைகுன்றாது... இரசிக்கவும் ருசிக்கவும்....
உனது ஆலோசனை தேவை....

மனோஜ்
26-03-2008, 10:08 AM
படைப்பு சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் ஆதி

சிவா.ஜி
26-03-2008, 11:21 AM
தமிழ் விளையாடும்,சந்தம் சதிராடும்,வார்த்தைகளின் அலையாடும் இந்த கவியில் ஒரு சிலையாட...அதுவும் நன்றே நடமாட.....கவித்தேன் புசித்து உள்ளம் களியாட....துறவுபூண்டு வந்தவளின் வரவு கண்டு....பழையனின் அவை மட்டுமே வணங்கவில்லை.....நானும் வணங்குகிறேன்.

உங்கள் தமிழ் மகுடிக்கு நாகமாகி மயங்க இணங்குகிறேன்.

தொடருங்கள் ஆதி...சுவைக்கத் தாருங்கள் மீதி.

நம்பிகோபாலன்
26-03-2008, 11:46 AM
அருமை.தொடருங்கள் ஆதி...

kavitha
26-03-2008, 11:56 AM
இப்பதிவைப்படித்ததும் மாங்கனி காவியத்தையும், அரச கட்டளையையும் பார்க்க ஆவல் விழைகிறது ஆதி.
அதைப்படித்து பார்த்தவர்களைவிடவும் உங்கள் தொடர்கவிதை சிறக்கும் என்றே தோன்றுகிறது.
நல்ல ரசிகர்களிடம் நல்ல கவிஞர்கள் குடியிருப்பது இயல்பு.

ஒரு கதாபாத்திரத்திற்காக கண்ணீர் விட்ட இந்த உயிரின் படைப்பில் உயிரோட்டமில்லாமல் போகாது.

தொடர்ந்து எழுதுங்கள். சேர்த்துவைத்துப்படித்தாலும் தாமதமாகவேனும் என் பதில் வரும். இப்பதிவிற்கு எனது ஆதரவும்...
ஒரு சிறு விண்ணப்பம்... இதே பதிவில் தொடராமல் புதுப்பதிவிற்கு புதுத்திரிகளிட்டால் காவியத்தின் சுவாரசியம் குறையாது இருக்கும்.

செல்வாவின் எண்ணப்படி விமர்சனத்திற்கு தனி திரி துவங்குதல் நலம்.

ஆதி
26-03-2008, 12:26 PM
முழுதும் இரசித்தேன் என்றாலும் மிகவும் கவர்ந்தவை இவை....

பங்காளி:D அமரா...

நானும் நீங்க சொன்ன வரிகளில் சிலவற்றை ரசித்தே எழுதினேன்,

அதுபோல் வேலேந்திய விழியாள் வேந்தன் மகள், என்பது எனக்குப் பிடிச்சிருந்துது..

அப்பறம், குரு எப்ப பங்காளியானாரு.. தன் அறிவை பங்கிட்டு வழங்குவதால் பங்காளியோ ? :D

அன்புடன் ஆதி

ஆதி
26-03-2008, 12:27 PM
படைப்பு சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் ஆதி

சிறப்பான வாழ்த்துக்கு நன்றி மனோஜ்..

அன்புடன் ஆதி

ஆதி
26-03-2008, 12:35 PM
தமிழ் விளையாடும்,சந்தம் சதிராடும்,வார்த்தைகளின் அலையாடும் இந்த கவியில் ஒரு சிலையாட...அதுவும் நன்றே நடமாட.....கவித்தேன் புசித்து உள்ளம் களியாட....துறவுபூண்டு வந்தவளின் வரவு கண்டு....பழையனின் அவை மட்டுமே வணங்கவில்லை.....நானும் வணங்குகிறேன்.

உங்கள் தமிழ் மகுடிக்கு நாகமாகி மயங்க இணங்குகிறேன்.

தொடருங்கள் ஆதி...சுவைக்கத் தாருங்கள் மீதி.

சந்த ஓட்டத்தில் சிந்தி போய்விட்டேன் அண்ணா..

அசத்தல் பின்னூட்டம் மனதிலும் மின்னோட்டம்..

பின்னூட்டத்திற்கு நன்றிகள் அண்ணா..

அன்புடன் ஆதி

செல்வா
26-03-2008, 12:40 PM
அப்பறம், குரு எப்ப பங்காளியானாரு.. தன் அறிவை பங்கிட்டு வழங்குவதால் பங்காளியோ ? :D

ஹீ....ஹீ.... அது இரகசியம்.... சபைக்கு வந்தால் ஆபத்து....

ஆதி
26-03-2008, 01:27 PM
அருமை.தொடருங்கள் ஆதி...

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி நம்பி..

அன்புடன் ஆதி

ஆதி
26-03-2008, 02:29 PM
இப்பதிவைப்படித்ததும் மாங்கனி காவியத்தையும், அரச கட்டளையையும் பார்க்க ஆவல் விழைகிறது ஆதி.
அதைப்படித்து பார்த்தவர்களைவிடவும் உங்கள் தொடர்கவிதை சிறக்கும் என்றே தோன்றுகிறது.
நல்ல ரசிகர்களிடம் நல்ல கவிஞர்கள் குடியிருப்பது இயல்பு.

ஒரு கதாபாத்திரத்திற்காக கண்ணீர் விட்ட இந்த உயிரின் படைப்பில் உயிரோட்டமில்லாமல் போகாது.

தொடர்ந்து எழுதுங்கள். சேர்த்துவைத்துப்படித்தாலும் தாமதமாகவேனும் என் பதில் வரும். இப்பதிவிற்கு எனது ஆதரவும்...
ஒரு சிறு விண்ணப்பம்... இதே பதிவில் தொடராமல் புதுப்பதிவிற்கு புதுத்திரிகளிட்டால் காவியத்தின் சுவாரசியம் குறையாது இருக்கும்.

செல்வாவின் எண்ணப்படி விமர்சனத்திற்கு தனி திரி துவங்குதல் நலம்.

உங்கள் பின்னூட்டம் என்னை மேலும் உற்சாகப் படுத்துகிறது அக்கா..

அரச கட்டளைப் படத்தை வாய்ப்பிடுகிடைத்தால் தவறாமல் பாருங்கள்..

மாங்கனிப் புத்தகம் வானதி பதிப்பகத்தில் கிடைக்கும் வாங்கிப்படியுங்கள் அக்கா..

நிச்சயம் நீங்கள் சொன்னது போல் ஒவ்வொரு சம்பவத்தையும் தனித்திரிகளாய் பதிக்கிறேன்..

பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிகள் அக்கா..

அன்புடன் ஆதி

யவனிகா
26-03-2008, 02:43 PM
ஆதி, ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது.
சந்த நடையில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.
சிலருக்கு மட்டுமே...தமிழ் குழந்தை போல வயப்பட்டு
பின்னால் வரும்...உன் பின்னால் தளிர் நடையிட்டு வருவதைப் போல...
சாக்லேட் பார்த்த குழந்தையாய் ஆதியின் பதிவைப் பார்த்தவுடன்
கண் தன்னாலே தாவ..உள்ளே வர, மெய்யாகவே முக்கனி சுவைத்த திருப்தி
மாங்கனி முதல் பகுதி சுவைத்த உடனேயே...
ஆதி மந்திரக் கோலை எடுத்து கனியை காட்டி...எங்களை மறந்து,மறையச் செய்து விடுகிறாய் சில நேரம்...விழி விரியப் பார்க்கிறேன் நான்.
ஆதி, தொடரை முடிக்கும் வரை அரச கட்டளையோ, மாங்கனியோ பார்க்கவோ படிக்கவோ சந்தர்ப்பம் வாய்க்கக் கூடாது.
ஆதியின் வண்ணத்திலேயே மாங்கனியை படிக்க நினைக்கிறேன் செல்வாவைப் போல...
தொடர்ந்து பயணிப்போம் ஆதி....

Keelai Naadaan
26-03-2008, 05:10 PM
செங்கரும்பு கசக்கலாம்.
செந்தமிழ் கசப்பதில்லை.

தொடருங்கள் நன்பரே.

ஆதி
26-03-2008, 06:57 PM

அக்கா வழக்கம் போல சொக்கிப் போனேன் உங்கள் பின்னூட்டத்தில்..

வார்த்தைகளைக் கூட வற்புறுத்தால் கொணர்ந்திரலாம்..

வர்ணனைகளையும் கற்பனைகளில் வசமான இடத்தில் பொருத்தனுமே..

உங்கள் பின்னூட்டம் பார்க்கும் போது பதைப்பு அதிகமாகுது..

எண்ணூட்டம் கூடினாலும் எழுத்தோட்டத்தில் இன்னும் அதிகமாய் கவனம் செலுத்தனும் என்று தோணுது..

நெஞ்சில் சர்க்கரை தூவியப் பின்னூட்டத்திற்கு நன்றி அக்கா..

அன்புடன் ஆதி

செந்தமிழரசி
27-03-2008, 04:58 AM
ஆயுதம் புளங்கும்
அரசபையில்
அன்பைப் போதிக்கும் புத்தமலர்

வித்யாசமான துவக்கம் ஆதி, வழக்கம் போல் உங்களுக்கே உரிய தனி நடையில் தமிழ் அன்னை சந்த நடைப் போடுகிறாள், வாழ்த்துக்கள்.

தொடருங்கள் ஆதி................

நன்றி

ஆதி
27-03-2008, 07:38 AM
செங்கரும்பு கசக்கலாம்.
செந்தமிழ் கசப்பதில்லை.

தொடருங்கள் நன்பரே.

நன்றி நண்பரே

அன்புடன் ஆதி

ஆதி
27-03-2008, 08:58 AM
ஆயுதம் புளங்கும்
அரசபையில்
அன்பைப் போதிக்கும் புத்தமலர்

வித்யாசமான துவக்கம் ஆதி, வழக்கம் போல் உங்களுக்கே உரிய தனி நடையில் தமிழ் அன்னை சந்த நடைப் போடுகிறாள், வாழ்த்துக்கள்.

தொடருங்கள் ஆதி................

நன்றி

உங்கள் உற்சாகப் பின்னூட்டத்திற்கு மிக நன்றி செந்தமிழரசி..

அன்புடன் ஆதி

செல்வா
27-03-2008, 10:20 AM
தொடர்க ஆதி .... தனித்திரி தேவையில்லை என்பது அடியேனின் கருத்து அப்போது தான் தொடர்ச்சியாக கவியை ருசிக்கமுடியும் இப்போதும் எப்போதும். ஓவியனுக்கு மடலனுப்பியிருக்கிறேன். விமர்சனங்களைத் தனித் திரியாகவும். காவியத்தை ஒரு திரியாகவும் கொள்ளலாம். உன் அனுமதி தேவை....

ஆதி
27-03-2008, 10:24 AM

அப்படியே செய்துவிடலாம் செல்வா..

கவிதா அக்கா விரும்பினார்கள் என்பதால்தான் தனித்திரிப் போட்டேன் நீ சொல்வது சரிதான், ஒரு திரியிலேயே தொடர்தல் சிறப்பே.. விமர்சனங்களைத் தனிதிரிக்கு நகர்த்தி விடலாம்..

அன்புடன் ஆதி

kavitha
27-03-2008, 11:39 AM
அப்படியே செய்துவிடலாம் செல்வா..

கவிதா அக்கா விரும்பினார்கள் என்பதால்தான் தனித்திரிப் போட்டேன் நீ சொல்வது சரிதான், ஒரு திரியிலேயே தொடர்தல் சிறப்பே.. விமர்சனங்களைத் தனிதிரிக்கு நகர்த்தி விடலாம்..

அன்புடன் ஆதி

நன்று. உங்களுக்கு எது வசதி எனப்படுகிறதோ அவ்வாறே செய்யுங்கள். தொடர் கவிதைகள் பல பக்க விமர்சனங்களுக்குப்பிறகு தேட வேண்டியிருக்குமாயின் என் செய்வது? அதனால் தான் தனித்திரியிட சொன்னேன். செல்வாவின் யோசனை நன்றே.

ஆதி
27-03-2008, 11:43 AM

அக்கா, செல்வா என்ன சொல்கிறார் என்றால்.. வரும் விமர்சனங்களைத் தனித்திரிக்கு நகர்த்திவிட்டு, கவிதைகளை ஒருத்திரியிலேயேப் பதித்துவிடலாம் என்கிறார்..

அப்படி செய்யும் போது கவிதைகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாய் இருக்கும் விமர்சனங்களின் குறுக்கீடும் இருக்காது அல்லவா, தேடும் தேவையுமில்லை..

அன்புடன் ஆதி

சாலைஜெயராமன்
27-03-2008, 03:58 PM
அன்பு ஆதி,

முதலில் தாமதமாக இத்திரியைப் பார்த்ததற்கு என் மன்னிப்பைக் கோருகிறேன்.

எழில் மிகு கவியரசரின் இலக்கியச் சோலையில் எண்ணற்ற எத்தனையோ காய்களும், கனிகளும், நவரசங்களும் தரும் வியாபார தரத்திலான இலக்கியப்படைப்புககள் இருந்தாலும் அத்தனையும் கவிஞர் ரசித்ததில்லை. ஊரே கொண்டாடும் எத்தனையோ பாடல்கள் அவர் தந்திருந்தாலும் ஒன்றும் தனக்கு நிறைவைத் தந்ததில்லை என அடிக்கடி கூறுவார்.

"நல்ல நினைவில் எழுத எனக்கு வராது. போதையின் துணைதான் உங்களுக்கு போதையைத் தரும் பாடல்களைத் தரும்"

என்று பலமுறை தன் இயலாமையை உள்ளம் திறந்து கூறியிருக்கிறார் கவிஞர். திரைத் துறையினர் பலர் அவர் போதை தெளிந்து இயல்பான நிலைக்கு வராமல் இருக்க மேலும் மேலும் அவரை போதையின் பாதையில் தள்ளி தங்களுக்குத் தேவையான இரண்டாம் தர ரசனையுள்ள பாடல்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்ட வரலாறு அறிவோம்.

ஆனால் மஹா கவியான அவனுக்கு கண்ணனின் கிருபை இருந்ததால் மலிந்த ரசனை என்று மற்றவர்கள் னினைக்கும் பாடல்களிலும் கூட காலத்தால் மறக்க முடியாத பல கருத்துக்களைத் தாங்கி எழுதி அனைவரையும் வியக்கவைத்தது மாபெரும் சாதனை.

மஹா கவியான இம் மாமன்னன் தன் காலத்தில் தான் படைத்த "இயேசு காவியம்" உருவாக்கும்போது அதீத சுத்தத்திலும், போதையின் பாதையை நாடாமலும் பக்தி நெறியோடு படைத்துத் தந்து காலத்தால் அழியாத கவிஞனாக இன்றும் நம் இதய மாளிகையில் குடியிருக்கிறான்.

அவருடைய மனவாசம் இரண்டாம் பகுதியில் தன்னை முழுவதும் இறைக்கு அர்ப்பணித்த ஒரு தருணம் அர்த்தமுள்ள இந்துமதமும் எழுதியபோதுதான் எனவும் இன்னும் பல தருணங்களில் தான் அடைந்த இறை அனுபவங்களையும் எதார்த்த உள்ளத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

தங்களின் கவிதைத் தாக்கத்தை ஆரம்பித்திலிருந்து கவனித்து வந்ததில் கண்ணதாசனையும் மிஞ்சும் இயல்பான பதப் பிரயோகம் இப்படி ஒரு இலக்கியப் படைப்பைத் தரவேண்டும்/தருவீர்கள் என்ற எதிர்பார்ப்பில்தான் நான் அடிக்கடி உங்களைத் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் ஊக்கப்படுத்தி வந்தேன். அக்காலம் தற்போது கனிந்தது கண்டு மிகுந்த மகிழ்ச்சி.

வாழ்த்துப் பாவும் அறிமுகப் படலமும் சிறப்பான தொடக்கத்தைத் தந்திருக்கிறது. ஒரு முதுனிலைப் பட்டப் படிப்புக்குண்டான தகுதியோடு தங்கள் படைப்பு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

எனவே சந்தங்களுக்கும், பாடல்களின் சீர் அமைப்புக்கும் தனிக் கவனம் தந்து வார்த்தைகளின் அமைப்பை முறைப்படுத்தி வெளியிட வேண்டுகிறேன்.

உங்களுக்கு இயல்பாகவே நடையின் அமைப்பு அதீத அழகுடன் வெளிப்படுகிறது. எண்சீர் அமைப்பாக முழுப் பகுதியையும் தந்தால் மேலும் தரமான ஒரு இலக்கியப் படைப்பை மன்றம் பெறப் போகிறது என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

உங்கள் முழு முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இப்போதே திருப்பங்களின் திகைப்பு ஏற்படுத்தப் போகும் இன்ப உணர்வை உணர்கிறேன்.

செந்தமிழரசி
28-03-2008, 05:04 AM
நன்று ஆதி, காவியத்தைத் தனித்தனித் திரி எழுத வேண்டாம் என்பது என் கருத்தும் தொடர்ந்து ருசிக்க இயலாமை ஏற்படுகிறது, அதே திரியில் தொடர்ந்திடுங்கள் ஆதி.

அரி ஆசனம் - சிங்க கட்டில் என்று மொழிந்ததைக் கண்டு வியந்தேன், வாழ்த்துக்கள்.

தொடர்க.........

நன்றி

ஆதி
28-03-2008, 07:52 AM
வாழ்த்துக்கு நன்றி அரசி..
வார்த்தைப் படியே ஒரு திரியில் இனிப் பதிக்கிறேன்..

அன்புடன் ஆதி

நம்பிகோபாலன்
28-03-2008, 10:52 AM
அருமை .அதிலும் என்னை கவர்ந்தவை
" பேடாளும் ஆட்சி
பேராட்சி யாக
ஊடூழி வென்று
உயராட்சி யாக
நீடூடி வாழ
நிறையாசீர் தருவீர்! "

ஆதி
28-03-2008, 11:56 AM
தங்களின் கவிதைத் தாக்கத்தை ஆரம்பித்திலிருந்து கவனித்து வந்ததில் கண்ணதாசனையும் மிஞ்சும் இயல்பான பதப் பிரயோகம் இப்படி ஒரு இலக்கியப் படைப்பைத் தரவேண்டும்/தருவீர்கள் என்ற எதிர்பார்ப்பில்தான் நான் அடிக்கடி உங்களைத் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் ஊக்கப்படுத்தி வந்தேன். அக்காலம் தற்போது கனிந்தது கண்டு மிகுந்த மகிழ்ச்சி.

வாழ்த்துப் பாவும் அறிமுகப் படலமும் சிறப்பான தொடக்கத்தைத் தந்திருக்கிறது. ஒரு முதுனிலைப் பட்டப் படிப்புக்குண்டான தகுதியோடு தங்கள் படைப்பு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

எனவே சந்தங்களுக்கும், பாடல்களின் சீர் அமைப்புக்கும் தனிக் கவனம் தந்து வார்த்தைகளின் அமைப்பை முறைப்படுத்தி வெளியிட வேண்டுகிறேன்.

உங்களுக்கு இயல்பாகவே நடையின் அமைப்பு அதீத அழகுடன் வெளிப்படுகிறது. எண்சீர் அமைப்பாக முழுப் பகுதியையும் தந்தால் மேலும் தரமான ஒரு இலக்கியப் படைப்பை மன்றம் பெறப் போகிறது என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

உங்கள் முழு முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இப்போதே திருப்பங்களின் திகைப்பு ஏற்படுத்தப் போகும் இன்ப உணர்வை உணர்கிறேன்.

ஐயா, உங்களின் பின்னூட்டம் கண்டு விழி வியர்த்தேன் உள்ளம் சிலிர்த்தேன்..
என் கவிதைகள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக் கண்டு நாவசையவில்லை நன்றி சொல்ல வார்த்தையில்லை.. என்ன தவம் செய்தேன் தெரியவில்லை தமிழ் செடியில் ஒரு தளிராக தழைக்க யாது வரம் பெற்றேனோ புரியவில்லை..

நிச்சயம் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பற்றிக் கொள்ள* முயல்கிறேன்..

அன்புடன் ஆதி

ஆதி
28-03-2008, 01:41 PM
அருமை .அதிலும் என்னை கவர்ந்தவை
" பேடாளும் ஆட்சி
பேராட்சி யாக
ஊடூழி வென்று
உயராட்சி யாக
நீடூடி வாழ
நிறையாசீர் தருவீர்! "

கடைசி நிமிடத்தில் கோர்த்த வரிகள் இவை..

தொடர்ந்து வரும் தங்களின் ஊக்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நம்பி.. :)

அன்புடன் ஆதி

செல்வா
28-03-2008, 02:24 PM
மறுபடியும் பள்ளி சென்று தமிழ் படிக்க வேண்டிய நிலை எனக்கு... காலவோட்டத்தில் பலவும் மறந்து போய் விட்டதடா.... ஆகவே மாணவனாக பல சொற்களுக்கு பொருள் கேட்பேன் தவறாக எண்ணாமல்.. தருவாயா?
விஞ்சி விசும்பையும் தமிழால்
வெல்லும் பாவலரே நாவலரே!

பொன்னாடாய் விரிந்த
பொழிவு கொண்ட
நன்னாடாய் இருந்த
நம்நாட்டு மீது
யார் கண் பட்டதோ ?
சின்னப் பின்னமானது
சிதைக்குழி பல கண்டது!

கவிதைகள் அக்மார்க் ஆதி கவிதைகள்... குறையொன்றுமில்லை...

விசும்பை என்றால் என்ன ? உலகமா? அல்லது விண்ணகமா?

சின்னா பின்னமா? சின்ன பின்னமா?

சாலையண்ணா கூறியது போல்... நான்கு சீர் மற்றும் எண்சீர் பாடல்களையும் முயற்சி செய்....

தொடருக ஆதி.....

ஆதி
28-03-2008, 02:31 PM
மறுபடியும் பள்ளி சென்று தமிழ் படிக்க வேண்டிய நிலை எனக்கு... காலவோட்டத்தில் பலவும் மறந்து போய் விட்டதடா.... ஆகவே மாணவனாக பல சொற்களுக்கு பொருள் கேட்பேன் தவறாக எண்ணாமல்.. தருவாயா?கவிதைகள் அக்மார்க் ஆதி கவிதைகள்... குறையொன்றுமில்லை...

விசும்பை என்றால் என்ன ? உலகமா? அல்லது விண்ணகமா?

சின்னா பின்னமா? சின்ன பின்னமா?

சாலையண்ணா கூறியது போல்... நான்கு சீர் மற்றும் எண்சீர் பாடல்களையும் முயற்சி செய்....

தொடருக ஆதி.....

விசும்பு - விண்ணகம்

சின்னா பின்னமே சரி (சின்ன பின்னம் தட்டச்சுப் பிழை) மாற்றிவிட்டேன்

நன்றி செல்வா.. :)

அன்புடன் ஆதி

அமரன்
29-03-2008, 11:32 AM
ஆதி...
உங்கள் இந்த அற்புதப்படைப்பை படிக்கும் பாக்கியத்தை இழந்து இருக்கின்றேன். நெடிய படைப்புகளை வாசிக்கும் மனநிலையும், சமீபகாலமாகத் தூரமாகிப்போனது. வாசித்து சுவைக்கும் அந்தத் தருணம் மீள உயிர் பெறும். அப்போது எனது சிற்றறிவு வீச்சின் எல்லைக்கு உடபட்ட கருத்துடன் வருகின்றேன். அயராது தொடர்ந்து தர எனது அன்பான வேண்டுகோள்.

குருவே....
நீங்கள் கருத்துரைக்கச் சொல்லியும் இயலாமல் போய்விட்டது. அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன். ஏன்னா பங்காளின்னு சொல்லி என்னை கோபமூட்டி விட்டாய்..

யவனிகா
29-03-2008, 11:45 AM
மோகூரின் வளமும் ஆதியும் நடையும் ஒருசேர பிரம்மிக்க வைக்கிறது.
தானாகவே மனம் கூடவே தாளம் தட்ட துவங்கி விட்டது.
தமிழும் கூடவே மயங்கி ஆடுகிறது..
அருமையான நடையில் அழகாக...உள்ளம் கொள்ளை கொள்ளும் வண்ணம்...ஆதியின் கைவண்ணம் காப்பியமாகிறது...
அடுத்தது என்ன ஆதி? ஆவலுடன் காத்திருக்கிறோம்.

செல்வா
29-03-2008, 01:18 PM
மோகூரின் வளம்........ ஆதியின் கவிதை வளத்தில் மோகூரின் வளம் கண்டு ... பாராட்ட வார்த்தைகள் இல்லை....
வியப்பில் வாய்பிளந்து நிற்கிறேன்...

வெறுப்புற்று தேவதைகள் விண்விட்டு கணவருடன்
விரும்பி ஏகூர்
ஏகும் + ஊர்..... ஆஹா..

இலக்கியச்சோலையில் எடுத்துக் காட்ட..... எளிய அரிய பெரிய காவியம்.... வாழ்த்துக்கள் ஆதி....

செல்வா
29-03-2008, 01:26 PM
அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.
:eek::eek: ஐயகோ... என்ன இது அநியாயம்..... சீடனிடம் குரு மன்னிப்பு கேட்கலாமா?... வானகமே மண்ணகமே வளர்ந்து வரும் தமிழ்மன்றமே இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா?

செந்தமிழரசி
30-03-2008, 08:07 AM
ஆதி, கவிதை எழுதப் பழகுகிறேன் பத்தாம் வகுப்பு மாணவன் இப்படி எல்லாம் சொல்றீங்க, நீங்க எழுதும் கவிதைகள் வியப்பை பெருகிகசிய வைக்கிறது விழிகளில் சர்வ சாதாரணமாய் சந்தத்தை வார்ததைகளில் ஏற்றி வைத்திருக்குறீர்கள், வாழ்த்த வார்த்தையில்லை ஆதி.பருகற்ற முகத்தவரும் பால்வெள்ளை மனத்தவரும்
பயந்த பாகூர்
வெறுப்புற்று தேவதைகள் விண்விட்டு கணவருடன்
விரும்பி ஏகூர்

பயந்த - பூக்கும் என்று நினைக்கிறேன் புது சொல்லாளுமைவறுமையென்று வந்தவர்க்கு மறுக்காமல் மோகூரார்
உளதை ஈவார்
மறுக்காமல் தருவோர்கள் வளமாக இருந்தாள
திருடர் இல்லை
பெருவான குணமான பெரியோர்கள் ஊராள
பொய்யும் இல்லை
ஒருமாது உறவாக உயிரேற்ற விலைமாது
குலமே இல்லை

மிகைதான் என்றாலும் வளநலன் அழகுற விளக்கியது அழகுமந்தமுகில் எப்பொழுதும் மழைப்பெய்யக் காத்திருக்கும்
வானம் மூடி
பந்துஎன புல்வெளியில் பகல்பொழுதில் கூடவிழும்
பனிகள் தூரி

இந்த வர்ணிப்புகளின் வதனத்தில் வசீகரம் வழிகிறது ஆதிவிடிகின்ற வேளையதில் விரிந்திருந்த வெண்ணிலவும்
விளக வாடும்
படிந்திருந்த இரவிருளின் மடியிருந்த விண்மீன்கள்
பகலைச் சாடும்
முடிவின்றி இருக்கின்ற முதிராத இயற்கைக்கே
விளங்கா போது
பிடிநெருக்கம் நெகிழாமல் பிணைந்திருக்கும் இளசுகளை
சொலவா வேண்டும்!

அசத்தல் மீண்டும் மீண்டும் நான் வாசித்து வாசித்து யோசித்து யோசித்து சொக்கிப் போனேன்.

இதுப்போன்று அழகியல் சிந்தும் கவிதையை இந்த காவியத்தில் இன்னும் எதிர்ப்பார்க்கிறேன் ஆதி. மோகூர் அழகைப் படித்த உடன் இதுப்போல நாமும் எதாவது எழுதனும் ஆசை வருகிறது ஆதி.

சாம்பவி
30-03-2008, 08:46 AM
இந்த வர்ணிப்புகளில் வதனம் வழிகிறது ஆதிவதனம் வழிகிறது... ??????????????????????

சுகந்தப்ரீதன்
30-03-2008, 08:49 AM
நண்பா ஆதி.. முதலில் மன்னிக்கவும்...!!

சில இடர்பாடுகளால் என்னால் அடிக்கடி மன்றம் வரமுடியாமல் போகவே உன்னுடைய அற்புதமான முயற்சியை அறியாமல் இருந்துவிட்டேன்...இன்றுதான் கண்டேன் மாங்கனி திரியை..!!

உனக்கு இலக்கியம் படைக்கும் இயல்பு இயல்பாகவே இருப்பதை அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். உன்னுடைய இந்த முயற்சி நிச்சயம் வெற்றியடையும்..!! தொடர்ந்து மங்கனியை சுவைக்க தாரும் நண்பனே..!! எனது பின்னூட்டங்களையும் கருத்துக்களையும் நான் அவ்வப்போது வந்து கொடுத்துவிடுகிறேன்..!!

செந்தமிழரசி
30-03-2008, 09:02 AM
வதனம் வழிகிறது... ??????????????????????

மன்னிக்கவும் தோழி சொற்குற்றம்தான்

வார்ணிப்புகளின் வதனத்தில் வசீகரம் வழிகிறது என்று சொல்ல வந்தேன்.

நன்றி

சிவா.ஜி
30-03-2008, 12:06 PM
அறுசீர் விருத்தத்தில்
அழகூரான மோகூரின்
வர்ணிப்பு வரிகளில்
தமிழாழம் கண்டு
தமிழாளக் கண்டு
அமிழ்தினைப் பெற்ற
அண்ணக்காவடியாய்
ஆடுகிறேன்....பள்ளு பாடுகிறேன்...

மோகூரின் வனப்பின் வர்ணனை எம்மையும் அங்கு வாழ
மோகிக்க வைக்கிறது.....கவிச்சுவையை இன்னும் பருக
தாகிக்க வைக்கிறது...தீராதாகத்தை தக்கவைத்து
தேனள்ளிக் குடித்து சொக்க வைக்கிறது.....
தேனோடு தினைக்காக..ஆவலுடன் இங்கேயே நிக்க வைக்கிறது...

உன் தமிழுக்கு வந்தனம் தம்பி.வாழ்த்துகள்.

ஆதி
30-03-2008, 06:04 PM
ஆதி...
உங்கள் இந்த அற்புதப்படைப்பை படிக்கும் பாக்கியத்தை இழந்து இருக்கின்றேன். நெடிய படைப்புகளை வாசிக்கும் மனநிலையும், சமீபகாலமாகத் தூரமாகிப்போனது. வாசித்து சுவைக்கும் அந்தத் தருணம் மீள உயிர் பெறும். அப்போது எனது சிற்றறிவு வீச்சின் எல்லைக்கு உடபட்ட கருத்துடன் வருகின்றேன். அயராது தொடர்ந்து தர எனது அன்பான வேண்டுகோள்.நன்று அமரன், இயலும் போதுப் படியுங்கள் பின்னூட்டம் போடுங்கள்..

நிச்சய*ம் தொடர்கிறேன்..

அன்புடன் ஆதி

ஆதி
31-03-2008, 10:35 AM
மோகூரின் வளமும் ஆதியும் நடையும் ஒருசேர பிரம்மிக்க வைக்கிறது.
தானாகவே மனம் கூடவே தாளம் தட்ட துவங்கி விட்டது.
தமிழும் கூடவே மயங்கி ஆடுகிறது..
அருமையான நடையில் அழகாக...உள்ளம் கொள்ளை கொள்ளும் வண்ணம்...ஆதியின் கைவண்ணம் காப்பியமாகிறது...
அடுத்தது என்ன ஆதி? ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அக்கா பின்னூட்டம் எப்போதும் பெரிய மகிழ்ச்சியையும் பெருமையையும் எனக்குள் கொட்டிவிட்டுப் போகும் இந்த பின்னூட்டமும் அப்படிதான், இந்த மாதிரிப் அழகியப் பின்னூட்டங்களைத் தக்க வைக்க முயற்சிக்கிறேன் அக்கா..

அன்புடன் ஆதி

ஆதி
01-04-2008, 11:26 AM
ஏகும் + ஊர்..... ஆஹா..

இலக்கியச்சோலையில் எடுத்துக் காட்ட..... எளிய அரிய பெரிய காவியம்.... வாழ்த்துக்கள் ஆதி....

நன்றிடா, இலக்கியச்சோலைக்கு என் கவிதையும் பயன்படும் னு சொன்னதே எனக்கு அளவற்ற உவகையை தருதுடா..

வாழ்த்துக்கு நன்றிகள்..

அன்புடன் ஆதி

செல்வா
01-04-2008, 11:42 AM
நன்றிடா, இலக்கியச்சோலைக்கு என் கவிதையும் பயன்படும் னு சொன்னதே எனக்கு அளவற்ற உவகையை தருதுடா..

இலக்கியச் சோலையின் இன்னொரு செடி விரைவில் மரமாக வாழ்த்துகிறேன்... மூணு நாளைக்கு ஒண்ணுண்ணு பாடாம முடிந்தவரை விரைந்து முடி...

ஆதி
01-04-2008, 11:45 AM
இலக்கியச் சோலையின் இன்னொரு செடி விரைவில் மரமாக வாழ்த்துகிறேன்... மூணு நாளைக்கு ஒண்ணுண்ணு பாடாம முடிந்தவரை விரைந்து முடி...

நிச்சயமாடா, மாங்கனி கவிதைகளத்துள்ள வந்துட்டா ஒரே ரௌஸ்சும் லௌசுமாதான் இருக்கும்..

அதுக்கும் அடிப்போட்டாச்சு.. இன்னும் இரண்டு நாளல்ல என் காதலி சலங்கை கட்டி நடமாடவும் நடனமாடவும் போறா..

அன்புடன் ஆதி

செல்வா
09-04-2008, 10:42 AM
பொன்னரசி இன்னும் பதில்மொழி கொடுக்கவில்லையா புலவரே....
உன்னுடைய சீரிய முயற்சிக்காதரவாக ஆயிரம் பொற்(இ)-காசுகள்.

ஆதி
09-04-2008, 10:47 AM
பொன்னரசி இன்னும் பதில்மொழி கொடுக்கவில்லையா புலவரே....
உன்னுடைய சீரிய முயற்சிக்காதரவாக ஆயிரம் பொற்(இ)-காசுகள்.

முகூர்த்தம் பாக்குறாடா பார்த்த உடன் உரைப்பா :D

meera
12-04-2008, 08:10 AM
ஆதி அண்ணா,

வாழ்த்துகள் வாழ்த்துகள்.உங்கள் மாங்கனி காவியம் இன்றே படிக்கும் வாய்ப்பு பெற்றேன். அழகான தமிழில்,சீரான வேகத்தில் அருமையாய் எடுத்து செல்கிறீர்கள் அண்ணா. எனக்கு கண்ணதாசனின் படைப்புகள் பிடிக்கும். ஆனால் மாங்கனி காவியம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால் உங்கள் மாங்கனி காவியம் அருமை அண்ணா.

மீண்டும் என் வாழ்த்துகள்.

செல்வா
12-04-2008, 12:05 PM
முகூர்த்தம் பாக்குறாடா பார்த்த உடன் உரைப்பா :D
முகூர்த்த நேரம் முடிந்து விடபோகிறது சீக்கிரம் கட்டு :D:D

செல்வா
23-04-2008, 04:48 PM
கட்டிய கட்டு சிறிய கட்டு என்றாலும் செழுமையும் வளமையும் மிகுந்த நெற்கீற்றுகள்...
"குழலில் நீவும் நெய்யினை போல
குழுமும் இருளில் குழைந்தது நிலவு.."
கட்டிலிருந்து எட்டி எனைப்பார்த்து சிரித்தது இந்த கீற்று...
அறுத்துப் போட்ட கதிர்கள் களமெங்கும் நிறைந்திருக்கிறது...
மழை வருமுன் களம் சேர்க்க வேண்டாமா....
கட்டு பெரிய கட்டு

ஆதி
24-04-2008, 08:13 AM

எனக்கும் பிடிச்ச வரிகள் இவைதாம், இனிப் பெரியக் கட்டுக்களைக் கட்ட முயற்சிக்கிறேன்..

செல்வா
07-06-2008, 08:32 AM
ம்.... பரவால்ல கட்டிவிட்டாய் பெரிய கட்டு ....
நல் காவடிச்சிந்தும் சேர்த்து....
ஆதியின் புலமை அதிசயமாய் எனக்குத் தெரிகிறது.
உன் கவி முழுதும் புரிந்துகொள்ளுமளவுக்கு தமிழறிவில்லையடா எனக்கு.. எனவே சற்று விளக்கம் கேட்கிறேன்... தவறாகக் கொள்ளாதே...தேங்கனி பலமனங்களில் சீற்றம் செய்தாள்[/color][/B]

சீற்றம் என்றால் கோபம் தானே... இங்கு சீற்றம் கொள்ள காரணம் என்னவோ?

[color=Brown]மஞ்சல் அரைத்து பனியில் தோய்த்து
கொஞ்சம் பொன்னில் குழைத்து; பொங்கும்
வெஞ்சில் மதியில் விளாவி; மென்முகில்
பஞ்சும் அளாவி பகலில் படரும்
செஞ்சுடர் சாந்து சேர்த்து விரவி
எஞ்சி இருந்த எல்லா அழகையும்
வஞ்சம் இன்றி வார்த்து வனைந்தானோ
வஞ்சி வனப்பை வான சிலைஞன்
விஞ்சி பகையை வெருட்டிய வேந்தரும்
தஞ்சம் முறுவர் தப்பி தவறி
அஞ்சுக மேனியை கொஞ்சம் பார்த்தால்
மிச்சம் மீதி இல்லாமல் போவர்!

அருமையடா ஆதி....
மஞ்சள் - பிழைநீக்கி விடு..
சில கேள்விகள் ..
வெஞ்சில் என்றால்?
சிலைஞன் கலைஞன் என்பது வழக்கு சிலைஞன் புதுமையான சொல்லாடல்.... சிலைவடிப்பவன் சிலைஞனா... கலக்குறடா.
தஞ்சம் முறுவர் - தஞ்சமுறுவர் - தஞ்சம் + உறுவர் அல்லவா?

இளகும் நெஞ்சார் இழந்தார் தன்னை
உளத்தில் ஈரமற்றோர் உருகினர் வெண்ணையாய்

விரிந்தன விழிகள் வியப்பில்...தீங்கனி தேனழகில் சிந்தனை சிந்த
[B]பூங்கனி பொன்னழகை ஒருபுலவன் பாட

என் மனதிற்கு இங்கேயே வினை முடிந்து விட்டதாக தோன்றுகிறது.
பாட ஒருபுலவன் - என்றால் தொடர்ச்சி தடையின்றி இருக்குமோ...
என்மனதில் தோன்றியது டா... தவறெனின் விளக்குவாய்...

குழையாட காதில் குழலாட பூக்கள்
குரலோடு வந்து குயில்பாடும்

ஆகா....கட்டோடு குழலாட ஆட ஆட... தந்த சுகம் மீண்டும்....

வலைந்த - பிழைகளைவாய்விறைத்த வில்லில் கணையாய்
முறைத்துப் பார்க்கும் தனங்கள்
நிலவாலுன் தாய்க்கரு உற்றாளோ
நிலவையுன் தாய்க்கரு உற்றாளோ
நின்றான் நிலவை பார்த்த வாறு..

நானும் மயங்கினேன்..... உனது வர்ணணை உவமைகள் கண்டு... வார்த்தைகள் இல்லையடா உன்னை வாழ்த்த... தொடர்வாய் விரைவில்...

ஆதி
08-06-2008, 08:56 AM
கடற்சீற்றம், பேரலையடித்தல், மாங்கனியின் அழகால் மனசுக்குள் பேரலையடிக்கிறது, பலருக்கும் பல உணர்வுகளால்..

வெண்குளிர் மதி-- வெண் + சில் -- வெஞ்சில் என்று ஆக்கிவிட்டேன்..

முதலில் எழுதும் போது

பாடஒரு புலவன் - என்றுதான் எழுதினேன் டா..

பிறகு அதற்கு முந்தைய வரியில், இறுதிச் சீர் சிந்த(நேர் நேர்)ல முடிந்தது, இந்த வரியும் பாட(நேர் நேர்)ல இருந்த மறைமுக சந்தம் இருக்கும் அதான் மாற்றினேன்.. மீண்டும் நீ சொன்ன படியே மாற்றிவிடுகிறேன் டா..

பிழைகளையும் நீக்கிவிட்டேன் டா..

பின்னூட்டத்திற்கு நன்றிடா.. நிச்சயம் விரைவில் தொடர்கிறேன்..

யவனிகா
10-06-2008, 03:04 PM
அன்பு ஆதி...மாங்கனி இன்னும் முழுதாகப் படித்து முடியவில்லை...ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மலைக்கக் வைப்பதாகவே உள்ளது...கும்மி சிந்து அசத்துகிறது....முழுதாய் படித்து பின்னூட்டம் இடுகிறேன்

செந்தமிழரசி
11-06-2008, 05:48 AM
//காதல் துறவியானான்//

புதிய கற்பனை, இது போல் பல இந்த கவிதையில் விரவிக் கிடக்கின்றன

//மதப்புரவி களடக்கும் மறவன் காதல்
மதம்தழுவி னான்;மனப் புரவி கொண்ட
மதத்தை அடக்க முடியாமல் தோற்றான்
மதம்முற்ற மனதை மதத்தில் ஆர்த்தான் //

மதம் என்கிற சொல்லை, இரு பொருளாய் வைத்து கவிதையை பின்னியவிதத்தை ரசித்தேன்.

பாராட்டுக்கள். நன்றி.

ஆதி
12-06-2008, 07:09 PM
அன்பு ஆதி...மாங்கனி இன்னும் முழுதாகப் படித்து முடியவில்லை...ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மலைக்கக் வைப்பதாகவே உள்ளது...கும்மி சிந்து அசத்துகிறது....முழுதாய் படித்து பின்னூட்டம் இடுகிறேன்

பொறுமையா நேரம் கிடைக்கும் போது படிங்க அக்கா
மதம் என்கிற சொல்லை, இரு பொருளாய் வைத்து கவிதையை பின்னியவிதத்தை ரசித்தேன்.

பாராட்டுக்கள். நன்றி.

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி செந்தமிழரசி..

ஆதவா
24-06-2008, 10:22 AM
மாங்கனி உண்ண பொறுமை வேண்டும்

வேகமாகப் படித்துவிட்டாலும், தவறவிட்டுப் போனவைகள் பல. கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டிருக்கிறேன் ஆதி.

தமிழ் கொஞ்சிய பாவலர்களின் மிஞ்சிய சுவையெல்லாம் உங்களின் விஞ்சிய மாங்கனியில் ஒரேசேரக் கண்டேன். உடன் இலக்கணத்தையும் சேர்த்து "டபுள் கேம்" ஆடிய விதமும் நன்றாக இருந்தது.. எனக்கு விருத்த இலக்கணங்கள் தெரியாது. தெரிந்திருந்தால் களை நீக்க அரிவாள் தேவைப்பட்டிருக்கும். ஆனால் ஆங்காங்கே பிழை இருப்பது மட்டும் தெரிகிறது... தொடர்ந்த முயற்சிக்கு என் வாழ்த்துகள்..

தொடருங்கள்... உடன் வருகிறேன். மீண்டும் ஒருமுறை மாங்கனியை என் இதழ் சுவைக்கட்டும்.

ஆதி
24-06-2008, 11:04 AM

என் வேண்டுகோளுக்கிணங்கி மாங்கனியை படித்து பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி ஆதவா..

இலணக்க பிழை ஆங்காங்கே இருப்பது உண்மைதான் இனி அவையக்கு இடமில்லாமல் நிச்சயம் பார்த்துக்கொள்வேன்.. முடிந்த மட்டில் சொற்களை பிரிக்காமல் எழுதவும் முயற்சிக்கிறேன்..

செல்வா
28-06-2008, 09:12 PM
வணங்கும் அபினயம் ஒன்று வைத்தாள்
மனக்குடம் நிறைந்தவரும் தழும்பினர் திங்கள்
வலக்கரம்தான் நீட்டினாள் உளக்குளம் பாதி
கலங்கின; இடக்கரம் பிறகு மடக்கினாள்
இருந்தவரில் மீதி முடங்கினர்; தாம்தீம்
என்றவளாட தத்தைப்பின் விழிகள் ஓட
இன்றுநாம் தகர்ந்தோம் என்றுசிலர் வாட
தத்தோம் என்றுகால் தூக்க மீண்டும்
செத்தோம் எனபலர் வீழ;

கண்ணதாசனின் காவியத்தை நான் கண்டதில்லை இதுவரை
ஆதியின் மாங்கனி நவரசக்கனி...
சுவைக்க சுவைக்க.... பலசுவைகளும் பெருகிவருகிறதே...
உண்மையிலேயே... கொடுத்துவைத்தன் நான் ஒரு காவியம் உருவாகும்போதே அதைச் சுவைக்கும் பாக்கியம் பெற்றதற்கு...

செல்வா
28-06-2008, 09:25 PM
கிழியாது நெஞ்சை கிரங்காது

கிறங்காது?கொத்தி
...கிளியாக மாது நடைபோட
எலியான வீரன் எழில்மேனி போன
...இடம்பார்த்து நின்றான் மரம்போல
வெடியாக பாவை விறகாக நெஞ்சை
...இருவேறு துண்டாய் பிளந்துவிட்டாள்
கொடியாக கோதை கொம்பாக எண்ணி
...குலவீரன் தன்னை சுற்றிவிட்டாள்
அடியோடு யாரும் அறியாத வண்ணம்
...அடலேறு தன்னை பேர்த்துவிட்டாள்

இந்த வரிகள் என்னைக் கவர்ந்தவைவடியாத காதல் வழியாத நெஞ்சில்
...வலியாக ஏறு வழியானான்![/B]

இது சரியாகப் புரியவில்லை சற்று விளக்க முடியுமா?முகநிலவை கையில் ஏந்தி
...முன்னூறு முத்த மிட்டு
அகச்சூட்டு தகிப்பு கொஞ்சம்
...அடங்கிவிட அமுதை பார்த்துசகபெண்ணை பற்றி பேச்சு
...சரியில்லை கண்ணே என்றான்
புகையிடையை மீண்டும் அள்ளி
...புதைந்துபோனான் சேர்ந்தான் சொர்க்கம்

இணைகளுக்கு இடையில் சிக்கி
...இடம்பெயர இயலா காற்று
முனகியது "விடடா! என்னால்
...மூச்சிழுக்க முடிய வில்லை"மன்றத்து முத்தையாவா? இல்லை இளைய கவிப்பேரரசா?

செல்வா
28-06-2008, 09:30 PM
இதுவரையில் - என் இமைகரையில்
எந்த நிலவும் விரிந்து மலர்ந்ததில்லை
மலர்ந்ததில்லை - நான் கரைந்ததில்லை...
.....................
உனக்கென்று நீ எடுத்துக்கொண்டாய்காயாய் பறிக்கப்பட்டு கட்டாயத்தால் பழுத்தவையோ?

செல்வா
28-06-2008, 09:38 PM
புரப்ப டவேண்டும் - புறப்பட?
துனைசெய்ய - துணைசெய்ய
நவரசத்தில் இலார சித்தை - இலார சத்தை?

ம்...... காதலோடு விரத்திற்கு தாவிவிட்டது.....
கதையில் இப்போது தான் விறுவிறுப்பு ஏறியிருக்கிறது...

எங்கே போனாய்.... விரைவில் தொடர்வாய்?

ஆதி
03-07-2008, 05:23 PM
வழியாத நெஞ்சில்
...வலியாக ஏறு வழியானான்

காதல் வலியாக நெஞ்சல் ஏறு ஒரு வழியாகிறான்..

பிழைகளை திருத்திவிட்டேன் டா.. உன் நெஞ்சை நெகிழ வைக்கிறப் பின்னூட்டத்திற்கு நன்றி டா..

விரைவில் தொடர்கிறேன் டா..

தீபா
20-08-2008, 02:21 PM
மாங்கனி இனிக்கிறது.. தொடரட்டும் உங்கள் நடை.

ஆதி
20-08-2008, 07:21 PM
மாங்கனி இனிக்கிறது.. தொடரட்டும் உங்கள் நடை.

உங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி தென்றல் நிச்சயம் தொடர்கிறேன்..

ஆதி
19-03-2009, 09:39 AM
இதுவரை ஊக்குவித்தவர்களுக்கும், மாங்கனியை தொடர்ந்து வாசித்தவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.. கனியாளை தொடர முடியாமல் போய்விட்டது.. மீண்டும் காவியத்தை துவங்கலாம் என்றிருக்கிறேன்.. தொடர்ந்து தங்களின் ஆலோசனைகளும் திருத்தங்களும் கிடைக்கும் நன்று நம்புகிறேன்.. கிடைத்தால் நன்றொயோடு கற்றுக் கொள்வேன்..

அமரன்
19-03-2009, 09:42 AM
படிக்க வேண்டும் என நினைத்து நினைத்தே மறந்து போன ஒன்று.. மீண்டும் தொடர்வதால் மகிழ்ந்தேன்.
ஆதியிலிருந்து கனிருசித்து மிச்சம் மீதி..:)

கா.ரமேஷ்
23-09-2009, 01:05 PM
அட.. அட... எப்படி மதி ? இப்படி ஒரு திரியை படிக்காமல் விட்டு விட்டோமே என்று ஏங்க வைத்தது அருமை...

மாங்கனி காவியம் நல்ல ருசியாக இருக்கிறது தொடருங்கள் காத்திருக்கிறோம் தோழரே...

jpl
16-05-2013, 01:21 AM
//வெண்ணிலா தேகத்தில்
மின்னலைப் பாய்ச்சியா ?
பொன்னிலா ? வைரப்பொடியிலா ?
எதில் படைத்தான் என்றே!
எண்ணிலா ஐயமெழும்
எழிலுடன் வந்தாள்
பூமீது நடந்து
பூலோக நிலவாய் ஒருத்தி..//

அழகாக ஆரம்பித்து

//அனிச்ச காலெடுத்து
இனிக்க நடந்த
நனிமகளை அவையோர்
பனிக்க தலைசாய்த்தனர்..//

அலங்காரமாக சென்று,

//வண்ணமற்ற ஒருமடல் பூவா?
வண்ணத்து பூச்சியா இமைகள்
வளராத பிறைகளின் இரட்டையா ?
வளைந்த மின்னலா புருவம்
விறைத்த வில்லில் கணையாய்//

விறுவிறுப்பாக கொண்டு போயிருக்கின்றார்..ஆதி நன்று.