PDA

View Full Version : விவாகரத்து



நம்பிகோபாலன்
28-03-2008, 06:38 AM
என்னையும் உன்னையும்
நீதி மன்றம் பிரிக்கலாம்
நம் நினைவுகள் பிரிக்குமா...

நீ கேட்டு நானில்லை
என்பதற்காகவே
கையெழுத்திட்டேன்
கடைசியாய் நீ கேட்ட
விடுதலை பத்திரத்திலும்.....

புரிதல்
நம் காதலின் வெற்றி
பிரிதல்
உன் எண்ணங்களின் வெற்றி


சிறிதுநேரம் பார்க்காவிடில்
துடித்துப்போவோம்
இனி வாழ்க்கை முழுவதுமாய்...

என்னவளே
நினைத்து பார்க்க முடியவில்லை
நீயின்றி என் வாழ்க்கை..
என்னுயிரே
என்னில் உன்னுயிர் பிரியும்
நேரமாவது என்னருகில்
நீ வேண்டும் இருப்பாயா....

ஓவியன்
28-03-2008, 07:19 AM
மனங்களால் இணைந்த அழகான காதலை, வெறும் பத்திரங்களின் கையெழுத்துக்களுடன் தூக்கி எறிந்திடத் தான் முடியுமா....???


நீ கேட்டு நானில்லை
என்பதற்காகவே
கையெழுத்திட்டேன்

நச்சென கவிதையின் முழுக் கருவினையும் சொல்லிவிட்ட வரிகள் நம்பி,
நிரம்பவும் இரசித்தேன், இன்னும் இன்னும் நிறைய கவிதைகளைப் படைக்க என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.....

நம்பிகோபாலன்
28-03-2008, 07:41 AM
நன்றி ஒவியா.....என் நண்பனின் விவாகரத்தும் அவனது கண்ணீருக்காக எழுதியவை

க.கமலக்கண்ணன்
28-03-2008, 10:18 AM
நீ கேட்டு நானில்லை
என்பதற்காகவே
கையெழுத்திட்டேன்
கடைசியாய் நீ கேட்ட
விடுதலை பத்திரத்திலும்.....


நச்சென்று மிக அழகாக

நறுக்கு தெரித்தார் போல

நமக்கு அள்ளித் தெளித்திருக்கும் அருமையான கவிதை...

அமரன்
28-03-2008, 10:34 AM
கவிதைகள் உணர்வுகளை சுமந்து வந்தால் வாசகன் அதன் வசமாகிவிடுவான். இந்தக்கவிதையிலும் உணர்வு உள்ளது.. குறைந்த உயிருடன்.. கடந்து வந்த நிகழ்வுடன் பொருத்திப் பார்த்தால் நிறைவடைகிறது..

ஓவியனும் கமலும் சிலாகித்த வரிகளில் தெளிவின்மை எனக்குப் புலப்படுகிறது.

மணிரத்தின மௌனராகப் பாத்திரப்படைப்புகள் கண்முன் வந்தாடுகின்றன.

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுவதாம்..
சொர்க்கத்தின் காரியதரிசிகளா பதிவகங்களும் நீதி மன்றுகளும்.
பத்திரமாக இருக்கட்டும் என்றுதானே பத்திரங்களில் இதய இணைவுகளை சாட்சிப்படுத்துகின்றனர்.
சாட்சிகளை இல்லாமல் செய்துவிட்டால் வழக்கு தள்ளுபடியாகும் நிலைமை இல்லறத்திலும்.. வேதனை..

சரி.. காகிதங்களில் பொறித்த சாட்சி அடையாளங்களை தள்ளி வைக்கலாம். வாழ்ந்த காலங்கள் உலகில் உயிருடன் உலவிக்கொண்டு இருக்குமே.. அவற்றை தள்ளி வைக்கத்தான் முடியுமா? தொடர்ந்து தவிர்க்கத்தான் முடியுமா? முடியும் என்று நிரூபித்தவர்கள் உள்ளுக்குள் வேகமால் உள்ளார்களா.. தெரிந்தவர்கள் யாராவது கூறுங்கள்..

திருமணப்பதிவின் போதே நம்பிக்கையீனம் தலையெடுக்கிறதோ என்று எண்ணம் என்னுள்..

எனது சிந்தனையை(யும்) மீளக் கிளறிய கவிதை. பாராட்டுகள் நம்பி.