PDA

View Full Version : தினமலர் ஆசிரியருக்குச் சிறைத் தண்டனை..!!thamilan2007
27-03-2008, 07:54 PM
தினமலர் நாளிதழ் ஆசிரியர் மற்றும் பதிப்பு ஆசிரியருக்கு 3 மாதம் சிறை தண்டனை
தவறான செய்தி வெளியிட்டதற்காக

தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகின்றேன்

அறிஞர்
27-03-2008, 08:07 PM
எந்த செய்திக்காக என விரிவான தகவல் தர இயலுமா....

ஜெயாஸ்தா
28-03-2008, 04:53 AM
எந்த செய்திக்காக என விரிவான தகவல் தர இயலுமா....

பொய்ச் செய்தி வெளியிட்டதற்காக தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 மாதம் சிறை
வெளியீட்டாளர் லட்சுமபதிக்கும் ஜெயில்

சென்னை. மார்ச் 28.

பொய்ச் செய்தி வெளியிட்ட வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கும், வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2001ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பிட் அடிக்க தலைமை ஆசிரியர் சேதுராமன் உதவி செய்ததாகவும், அதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகையில் வெளியான செய்தி பொய்யானது என்று கூறி தலைமை ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் பாக்கியஜோதி முன்பு தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியதாவது:

தினமலர் வெளியிட்ட பொய்ச் செய்தி என்னை பெரிதும் பாதித்துவிட்டது. அது பொய்ச்செய்தி என்பதை சுட்டிக்காட்டி 2001 ஏப்ரலில் பதிவுத் தபால் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், தினமலர் ஆசிரியர் பதிலே சொல்லவில்லை.

செய்தி முழுவதும் பொய்யானது. என்னை யாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யவில்லை. பொதுமக்களிடம் எனக்கு இருந்த மரியாதையை குலைக்க உள்நோக்கத்துடன் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை முடிந்து செவ்வாயன்று தீரப்பு அறிவிக்கப்பட்டது. தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் ஆஜரானார்கள். இருவருக்கும் தலா 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.

'தினமலர் பத்திரிகை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளார் லட்சுமிபதி ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணமூர்த்தியும் லட்சுமிபதியுதியும் இப்போது கைது செய்யப்படவேண்டியதில்லை' என்று மனுதாரரின் வக்கீல்கள் சரவணன், ஏகாம்பரம் ஆகியோர் குறிப்பிட்டனர்.

செய்திக்கு நன்றி : தினகரன்
தட்டச்சுக்கோர்வை மற்றும் ஒருங்குறியாக்கம் : ஜெயாஸ்தா


தினமலருக்கு பொய்ச்செய்தி வெளியிடுவது புதுசா என்ன? தீவிரவாதிகளிடமிருந்து பிளேடு, செல்போன் போன்ற பல பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது என்ற பாணியில் செய்திகள் வெளியிடுவது அதற்கு கைவந்த கலை.

(இந்த திரியின் தலைப்பை 'தினமலர் ஆசிரியருக்கு சிறைத்தண்;டனை' என்று மாற்றிவிடுங்களேன்.)

ஓவியன்
28-03-2008, 05:19 AM
அன்பான ஜெயாஸ்தா, சரியான செய்தியைத் தேடி வந்து ஒருங்குறியாக்கி பதிவிட்டமைக்கு நன்றிகள் பல...!! :)

_______________________________________________________________________________________________________________________

தலைப்பினை மாற்றித் திரியினை செய்திச் சோலைக்கு மாற்றியுள்ளேன்...


தினமலருக்கு பொய்ச்செய்தி வெளியிடுவது புதுசா என்ன? தீவிரவாதிகளிடமிருந்து பிளேடு, செல்போன் போன்ற பல பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது என்ற பாணியில் செய்திகள் வெளியிடுவது அதற்கு கைவந்த கலை.

:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

lolluvathiyar
28-03-2008, 06:24 AM
தவறான செய்தி வெளியிட்டால் சிரை தன்டனை தந்தால் தான் இந்த பத்திரிக்கையாளர்கள் திருந்துவார்கள். இவர்கள் பாட்டுக்கு பரபரப்பை ஏற்படுத்த வெளியிட்டு விடுவார்கள். ஆனால் இதனால் பாதிக்கபட்டவர்களுக்கும் தான் தெரியும் அதன் வேதனை. நீதி மன்றம் சென்று வென்ற அந்த ஆசிரியரின் உழைப்பை பாராட்ட வேன்டும்

மன்மதன்
28-03-2008, 03:05 PM
முதலில் அந்துமணி.. இப்போ இது.. இனிமேலாவது திருந்தட்டும்..

அமரன்
28-03-2008, 03:33 PM
பட்டியலில் இன்னும் பல பத்திரிக்கைகள். திரிக்கும் இவைகளின் குரல்வளையை திருகட்டும் இந்தச்சம்பவம்.

பூமகள்
28-03-2008, 05:00 PM
பத்திரிக்கை தர்மமும்
சுதந்திரமும்
இப்போ சுதந்திரமாய்
எங்கோ உலவுகிறது போல..!!

இவர்களின் வேர்களில்
வியாபாரத் தந்திரம்
ஊறிவிட்டது..!!

வீழ்ந்து தானே ஆகனும்
ஊறல் அதிகமானால்..??!!

நல்லாசிரியருக்கு பாராட்டுகள்..!!
எப்படியும் வாய்தா வாங்கி தப்பித்தான் போவார்கள்..!!
பூனைக்கு ஒருவராவது மணி கட்டினாரே..
இனி நிறைய மணிகட்டுபவர்
உருவானால் தான்..
உருப்படும் சமூகம்..!!

மனோஜ்
28-03-2008, 05:03 PM
தன்டனை சரியே அனால் அது நடக்காது மேல்முறையிடு மேல்முறையிடு என்று பொய்கிட்டே இருக்குமே...

தகவலுக்கு நன்றி ஜெயாஸ்தா

prady
29-03-2008, 03:40 AM
இதேபோன்று செய்திகளை இருட்டடிப்பு செய்பவர்களுக்கும் தண்டனை வழங்கும் நிலை வரவேண்டும்.

சுகந்தப்ரீதன்
29-03-2008, 07:49 AM
இதுவே ரொம்ப தாமதம்தான்...!!

தினமலர் பத்திரிக்கை வெளியிடும் பெரும்பாலான செய்திகள் தவறாகத்தான் இருந்திருக்கிறது..!!

இந்த தண்டனைக்கு பிறகாவது திருந்தினால் சரி..!!

lolluvathiyar
29-03-2008, 08:36 AM
தினமலர் பத்திரிக்கை வெளியிடும் பெரும்பாலான செய்திகள் தவறாகத்தான் இருந்திருக்கிறது..!!

தினமலர் மட்டுமல்ல எந்த பத்திரிக்கையும் அதிகமான தவறான செய்தியை தருகிறது. 60 ஆன்டுகளுக்கு முன் சர்ச்சில் ஒரு கருத்து சொன்னார்.
உன்மையான உருப்பிடியான செய்தியை மட்டுமே வெளியிட வேன்டுமானால் செய்திதாள் அரை பக்கம் கூட வராது. (இன்று 20 பக்கம் வருகிறது)

அது செய்தி சானல் மிக கேவலமாக நடக்கிறது. குறிப்பாக வெளி நாட்டு செய்தி சானல்கள் கெடுத்தல் புத்தி கொன்டவர்கள்.

ஒரு ஜேம்ஸ்பான்ட் திரைபடத்தில் ஒரு செய்தி நிறுவனம் வியாபார போட்டியில் தங்களை முதல் இடத்தில் நிற்க வைக்க பரபரப்பை ஏற்படுத்த வேன்டும் என்று திட்டமிட்டு அவர்களே தீவரவாத செய*லை செய்து அதை அவர்களே முதல் செய்தியாக வெளியிடுவார்கள்.

வருங்காலத்தில் பத்திரிக்கைகள் இப்படி நடக்கும் வாய்புகள் அதிகம் என்று கருதுகிறேன்.

இதயம்
29-03-2008, 09:54 AM
தினமலரின் முட்டாள் தனங்களை, புரட்டு செய்திகளை நிறைய அடுக்கலாம். முன்பே ஒரு திரியில் தினமலரின் வண்டவாளங்களை பற்றி விவாதித்திருக்கிறோம். கைப்பேசி பயங்கர ஆயுதம் என்றால் அதை உபயோகப்படுத்த ஊக்கப்படுத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலம் அரசு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறதா..? இதெல்லாம் ஒரு பத்திரிக்கை என்று காசு கொடுத்து இதை வாங்குபவர்களைச்சொல்ல வேண்டும்.

பரபரப்பு செய்தி வெளியிட்டு மக்களை கவர முன்னுக்கு பின் முரணான, பொய்யான செய்திகளை வெளியிடுவதில் தினமலருக்குத்தான் முதலிடம்..! இது போன்ற பத்திரிக்கைகளை வாங்குவதை புறக்கணிப்பதன் மூலம் தான் சரியான பாடம் புகட்ட முடியும். இல்லையென்றால் இன்று தின மலர் என்றால் நாளை தின மொட்டு ஒன்று முளைக்கும்.!!

தகவலை தந்த நண்பருக்கு நன்றிகள்.!!!

ராஜா
29-03-2008, 04:08 PM
இன்று இரண்டு தினமலர் என்று மக்களுக்கு ஆசை காட்டும்.. இருவேறு விளம்பரதாரர்களிடம் முன்பக்க விளம்பரக்கட்டணம் வசூலித்து பணம் ஈட்டும்.

தனக்கு வேண்டியவர்கள் என்றால் ஒருமாதிரியும், வேண்டாதவர்கள் என்றால் வேறுமாதிரியும் செய்திகள் வெளியிடும்.

சன் குழுமம் 50 அலைவரிசைகளுக்கு 88 ரூபாய் கேட்டால், டி.டீ.எச். நடத்தி கொள்ளை அடிக்கிறார்கள் என்று குய்யோ முறையோ என்று ஓலமிடும்..

தங்கள் வேர்ல்டு ஸ்பேஸ் ரேடியோவுக்கு [ வெறும் 2 தமிழ் ஆடியோ அலைவரிசைகளுக்கு மட்டுமே] 150 ரூபாய் வசூலிக்கும். அதற்கு விளம்பரமும், நிகழ்ச்சி நிரலும் அசராமல் வெளியிடும்..!

தினமலரின் விஷமத் தனத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

எண்ணம்
26-04-2008, 02:55 AM
இது போன்ற செயலில் ஈடுபடுவோர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும்.