PDA

View Full Version : தமிழ்மன்றம் இப்பொழுது சிம்பியன் அலைபேசியில்!



ஷீ-நிசி
27-03-2008, 02:06 PM
வெற்றி!! வெற்றி!! வெற்றி!!

நம் மன்றத்தை அலைபேசியில் காணவேண்டும் என்று பலநாட்கள் முயற்சித்த உழைப்புக்கு வெற்றி கிட்டியது.

கூகிளாரை அலசியதில் 50% பாதை கிடைத்தது. மீதி 50% சோதனைகள் மேற்கொண்டதில் என்னால் நம் மன்றத்தை என் அலைபேசியில் காணமுடிந்தது.

என்னென்ன தேவை?

1. சிம்பியன் மொபைல் S60 (V2 OR V3)

(நான் சோதனைக்காக எடுத்துக்கொண்டது E61i)

2. மெமரி கார்டு ரீடர் அல்லது டேட்டா கேபிள்.

3. உங்கள் மொபைலில் y-browser http://www.drjukka.com/files/Y_Browser_088_0_3rdEd.SIS
அப்ளிகேஷன் உதவியோடு Z:/Resource/Fonts உள்ளே நுழைந்து பார்த்தீர்களானால், இப்படி 8 வகையான Default Font-கள் இருக்கும்.

NOSNR60.ttf
NSSB60.ttf
NSTSB60.ttf
S60ZDIGI.ttf
SWABIU.ttf
SWABRU.ttf
SWARIU.ttf
SWARRU.ttf

இது மொபைலுக்கு மொபைல் வித்தியாசப்படலாம்..
சிலவற்றில் 6 Fonts மட்டுமே கூட இருக்கலாம்.

4. இப்பொழுது உங்கள் மொபைலை கம்ப்யூட்டரோடு இணையுங்கள். டேட்டா கேபிள் அல்லது மெமரி கார்டு ரீடர் வழியே.

5 நீங்கள் டேட்டா கேபிள் வழியே இணைத்தால் PC Suite அல்லது Data Transfer என்று கேட்கும்.
நீங்கள் Data Transfer செலக்ட் செய்யவும், உங்கள் மொபல் தற்காலிகமாக Offline-க்கு செல்லும்.

6 இப்பொழுது உங்கள் MY Computer-ல் புதியதாய் ஒரு டிஸ்க் காட்டும். அதுதான் உங்கள் மெமரிகார்டு ஃபைல்களின் தொகுப்பு

7 இப்பொழுது அதை கிளிக் செய்தீர்களானால் Resource Folder ஒன்றை காணலாம்.

அதாவது E:/Resources

8 இந்த Resource Folder உள்ளே சென்று Fonts என்று ஒரு புதிய Folder-ஐ உருவாக்கிக்கொள்ளுங்கள்.

9 இப்பொழுது இந்த http://www.4shared.com/file/42131507/eec004fe/aava1.html
தமிழ் யூனிகோட் Font-ஐ 8 முறையோ அல்லது மேலே சொன்னபடி மொபைலை பொறுத்து 6 முறையோ காப்பி பேஸ்ட் செய்து அந்த Fonts Folder-க்குள் போட்டுக்கொள்ளுங்கள்.

அதாவது E:/Resource/Fonts இதற்குள் நீங்கள் காப்பி பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்

10 மேலே நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா, அதாவது

NOSNR60.ttf
NSSB60.ttf
NSTSB60.ttf
S60ZDIGI.ttf
SWABIU.ttf
SWABRU.ttf
SWARIU.ttf
SWARRU.ttf

இதைப்போல நீங்கள் காப்பி பேஸ்ட் செய்த Font-களை Rename செய்திடவேண்டும். (Rename செய்யும்போது .ttf கூட சேர்க்கவேண்டாம்)

11 இப்பொழுது உங்கள் டேட்டா கேபிளின் இணைப்பை துண்டித்துவிட்டு உங்கள் மொபைலை ரீஸ்டார்ட் செய்திடவேண்டும்.

12. உங்கள் மொபைல் வழியே இணையதளம் சென்று www.tamilmandram.com சென்றால் நம் தளத்தை தமிழில் காணலாம்.

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Mobile/Screenshot0003.jpg

(சில எழுத்துக்கள் ஒன்றுமேல் ஒன்று ஏறியது போல் உள்ளது. அதை சரிசெய்ய ஏதாவது வழி உள்ளதா என்று ஆராய்ந்துக்கொண்டிருக்கிறேன்)

முயற்சித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
சந்தேகங்களையும் இங்கே கேளுங்கள்.

நன்றி நண்பர்களே!
வாழ்த்துக்கள்

அக்னி
27-03-2008, 02:22 PM
நமது மன்றம் அலைபேசிகளிலும் தோன்றுகின்றது என்பது மிகவும் பெருமையாக இருக்கின்றது. ,
உங்கள் முயற்சிகள் தொடரட்டும் ஷீ-நிசி...
மிகுந்த பாராட்டுக்கள்...

சிவா.ஜி
27-03-2008, 02:35 PM
தொடர்ந்த உங்கள் விக்கிரமாதித்ய முயற்சியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.மன்றத்தை கைக்குள் அடக்கமாய் காணப்போவதை நினைத்து பரவசமாய் இருக்கிறது. பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி ஷீ.

அக்னி
27-03-2008, 02:36 PM
தொடர்ந்த உங்கள் விக்கிரமாதித்ய முயற்சியை நினைத்தால்
இப்ப என்ன சொல்ல வாறீங்க... :smilie_abcfra:
தமிழ் மன்றத்தை வேதாளம் என்று சொல்லறீங்களா... :D :aetsch013:

மலர்
27-03-2008, 02:38 PM
இப்ப என்ன சொல்ல வாறீங்க... :smilie_abcfra:
தமிழ் மன்றத்தை வேதாளம் என்று சொல்லறீங்களா... :D :aetsch013:
நாராயண.........நாராயண.........:icon_rollout: :icon_rollout:
-----
நல்ல முயற்சி ஷீ....
பாராட்டுக்கல்....

சிவா.ஜி
27-03-2008, 02:38 PM
சேச்சே...நீங்க இருக்கும்போது....மத்த எதையும்...அப்படி சொல்ல முடியுமா..?

ஷீ-நிசி
27-03-2008, 02:41 PM
இப்ப என்ன சொல்ல வாறீங்க... :smilie_abcfra:
தமிழ் மன்றத்தை வேதாளம் என்று சொல்லறீங்களா... :D :aetsch013:

தமிழ்மன்றம் வேதாளம்னா.. அப்ப மலரு குட்டிபிசாசுன்னு நாங்க நினைச்சிக்கனுமா?! :icon_ush:

அறிஞர்
27-03-2008, 02:46 PM
புது முயற்சி...

இனி எங்கும் மன்றத்தை தொடர்பு கொள்ளலாம்.

தெளிவான விளக்கத்துக்கு நன்றி ஷீ.

ஷீ-நிசி
27-03-2008, 02:58 PM
புது முயற்சி...

இனி எங்கும் மன்றத்தை தொடர்பு கொள்ளலாம்.

தெளிவான விளக்கத்துக்கு நன்றி ஷீ.

நன்றி அறிஞரே!

அன்புரசிகன்
27-03-2008, 03:18 PM
N95 ற்கு பெட்டி பெட்டியாக தெரிகிறதுங்க.. என்ன பண்ண??? நீங்க சொல்றமாதிரி resource எதுவும் வரல......

ஷீ-நிசி
27-03-2008, 03:23 PM
N95 ற்கு பெட்டி பெட்டியாக தெரிகிறதுங்க.. என்ன பண்ண??? நீங்க சொல்றமாதிரி resource எதுவும் வரல......

மெமரி கார்டில் Resource folder இல்லையா??

இல்லைன்னா நீங்களே Resource னு ஒரு ஃபோல்டர் உருவாக்கி அதில் Fonts-னு ஒரு ஃபோல்டர் உருவாக்கவும்.

அன்புரசிகன்
27-03-2008, 03:30 PM
அது போட்டாச்சு... அப்புறம் நீங்க சொன்னமாதிரி 8 ம் போட்டாச்சு..... நான் நினைக்கிறேன் nokia ற்கு வேறுமாதிரியோ தெரியல...

பாரதி
27-03-2008, 04:50 PM
விடாமல் முயற்சி செய்து வெற்றி கண்ட ஷீ-க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

ஒரு சிறப்பான எதிர்காலத்திற்கு இப்பதிவு ஒரு முன்னோடியாக அமையும் என நம்புகிறேன்.

தொடரட்டும் உங்கள் பணி...

ஷீ-நிசி
27-03-2008, 04:55 PM
அது போட்டாச்சு... அப்புறம் நீங்க சொன்னமாதிரி 8 ம் போட்டாச்சு..... நான் நினைக்கிறேன் nokia ற்கு வேறுமாதிரியோ தெரியல...

என்னுடையதும் நோக்கியாதானே!
நீங்க filename .ttf சேர்த்து கொடுத்தீங்களா.. அப்படி கொடுத்திருந்தால் அதை நீக்கிடுங்க

என்னுடைய 8 font-ம் நான் தரேன். ஏற்கெனவே உள்ளதை எடுத்துவிட்டு இதை போடுங்க பார்க்கலாம்.
உங்க மெயிலுக்கு அனுப்புகிறேன்!

அன்புரசிகன்
27-03-2008, 05:02 PM
நன்றி. உங்க மின்னஞ்சல் கிடைத்தது. பார்த்து பதில் தாறேன்...

ஷீ-நிசி
27-03-2008, 05:03 PM
விடாமல் முயற்சி செய்து வெற்றி கண்ட ஷீ-க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

ஒரு சிறப்பான எதிர்காலத்திற்கு இப்பதிவு ஒரு முன்னோடியாக அமையும் என நம்புகிறேன்.

தொடரட்டும் உங்கள் பணி...

நன்றி பாரதி அவர்களே!

அன்புரசிகன்
27-03-2008, 05:10 PM
இல்லை நிஷி...... சரிவரவில்லை...

நான் நினைக்கிறேன் நொக்கியா வகையிற்கு வித்தியாசமாக இருக்கும் என்று. முயன்றுவிட்டு சொல்கிறேன்.

ஓவியன்
27-03-2008, 07:53 PM
நல்ல முயற்சிக்கும், அழகாக அதனைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றிகள் பல ஷீ.......!!

நானும் முயற்சித்துப் பார்த்து விட்டுக் கூறுகிறேன்.....!! :)

அனுராகவன்
28-03-2008, 12:06 AM
நன்றி ஷி.நிசி அவர்களே!!
ஆனால் எனக்கு அந்த மாடல் இல்லை.
மிகவும் நல்ல முயற்சி நண்பரே!!
என் வாழ்த்தும்,நன்றியும்...

ஷீ-நிசி
28-03-2008, 01:42 AM
நன்றி ஷி.நிசி அவர்களே!!
ஆனால் எனக்கு அந்த மாடல் இல்லை.
மிகவும் நல்ல முயற்சி நண்பரே!!
என் வாழ்த்தும்,நன்றியும்...

உங்க மாடல் என்னவென்று சொல்லுங்கள் அனு!

ஷீ-நிசி
28-03-2008, 01:43 AM
இல்லை நிஷி...... சரிவரவில்லை...

நான் நினைக்கிறேன் நொக்கியா வகையிற்கு வித்தியாசமாக இருக்கும் என்று. முயன்றுவிட்டு சொல்கிறேன்.

இது நோக்கியா வகைக்குதான் அன்பு..

ஷீ-நிசி
28-03-2008, 01:44 AM
நன்றி ஓவியன். முயற்சித்து பாருங்கள்..

என் நண்பர் N70-ல் முயற்சித்தார். அவரால் பார்க்க முடிந்தது தமிழை அவரது அலைபேசியில்.

தங்கவேல்
28-03-2008, 03:43 AM
வாவ் மிகவும் அருமையான முயற்சி... ஷீ- நிசியின் முயற்சி முழுமையடைய வேண்டும். வாழ்த்துக்கள்

அமரன்
28-03-2008, 08:26 AM
விடாமுயற்சியுடன் போராடி பெற்றதை, மக்களுடன் பகிர்ந்துகொண்ட ஷீக்கு வாழ்த்தும் நன்றியும். முன்போல உங்களை இனிக் காணலாம் என்று சொல்லுங்கள்.

நாராயண.........நாராயண.........:icon_rollout: :icon_rollout:
-----
நல்ல முயற்சி ஷீ....
பாராட்டுக்கல்....
அதென்ன பராட்டுக் 'கல்'. உள்குத்து ஏதும் இல்லையே!

தமிழ்மன்றம் வேதாளம்னா.. அப்ப மலரு குட்டிபிசாசுன்னு நாங்க நினைச்சிக்கனுமா?! :icon_ush:
சந்தேகமே இல்லை.
மலரின் பதிவில் பாதிக்கப்பட்டிருக்கிறார் ஷீ.

நம்பிகோபாலன்
28-03-2008, 09:04 AM
பாரட்டுக்கள் ஷீ . இது சோனி 750 'ல் சாத்தியமா.

க.கமலக்கண்ணன்
28-03-2008, 09:38 AM
நன்றி ஷீ-நிசி உங்களின் புதிய முயற்சிக்கு எங்களுடைய பாராட்டுக்கள்....

நடப்பது எல்லாம் நன்மைக்குதான் கைக்குள்ளே நமது உலகம் ஆம் உலகத்தில் உள்ள அனைத்து தமிழ்நெஞ்சங்களும் சேர்த்துத்தான்... சேர்த்துத்தான்...

மதி
28-03-2008, 11:23 AM
சூப்பர்.. ஷீ.நிசி..
பாராட்டுக்கள் உங்கள் முயற்சிக்கு.

ஆதவா
28-03-2008, 01:31 PM
இல்லை நிஷி...... சரிவரவில்லை...

நான் நினைக்கிறேன் நொக்கியா வகையிற்கு வித்தியாசமாக இருக்கும் என்று. முயன்றுவிட்டு சொல்கிறேன்.

ஷீ-யின் வெற்றிக்கு வாழ்த்துகள் :icon_b:. நீண்ட நாட்களுக்கு முன்னரே இதைப்பற்றி நீங்கள் என்னிடம் கேட்டதாக ஞாபகம். ஆனா தக்க சமயத்தில் உதவ முடியவில்லை...:mad:

மன்மதன்
28-03-2008, 02:30 PM
பாராட்டுகள் ஷீ...:icon_b:

praveen
28-03-2008, 02:32 PM
எல்லாம் சரி நண்பர்களே, அதில் லாகின் ஆக முடியுமா?, குறிப்பாக தமிழில் பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு வைத்திருப்பவரால் இயலுமா பார்த்து சொல்லுங்கள்.

leomohan
29-03-2008, 10:25 AM
வாழ்த்துகள் ஷீநிசி. என்னிசம் P900 உள்ளது. முயற்சித்து பார்க்கிறேன்.

மயூ
29-03-2008, 10:50 AM
ஆஹா.. ஷீ!!! நுட்பத்துறையிலும் இப்ப கால் பதிச்சாச்சா? வாழ்த்துக்கள்!!! கலக்குங்க!

சுகந்தப்ரீதன்
31-03-2008, 08:14 AM
ஆஹா கவிஞரே வாழ்த்துக்கள்..!!

கவித்தமிழும் அறிவியல் தமிழும் கலந்து கிடக்கிறது போலிருக்கு உங்களிடம்.. உங்கள் முயற்ச்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்..!!

ஷீ-நிசி
31-03-2008, 08:39 AM
எல்லாம் சரி நண்பர்களே, அதில் லாகின் ஆக முடியுமா?, குறிப்பாக தமிழில் பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு வைத்திருப்பவரால் இயலுமா பார்த்து சொல்லுங்கள்.

லாகின் செய்ய முடிந்தது ப்ரவீன். முதலில் நானும் ஒரு டம்மி ஆங்கில ஐடி கிரியேட் செய்து நுழையலாமா என்றுதான் யோசித்தேன்.. பின்னர் ஷீ-நிசி என்று டைப் செய்து அதை நோட்பேடில் சேவித்து (ஆவாரங்கள் எழுத்துருவில்) மொபைலுக்கு அனுப்பி அதை காப்பி பேஸ்ட் செய்து லாகின் செய்தேன்.

இன்னொரு வழியும் உள்ளது. நம் நண்பர்கள் தமிழில் எஸ்.எம்.எஸ் என்ற இலவச மென்பொருள் இங்கு இணைத்துள்ளார்கள் அல்லவா. அதின் வழியே டைப்செய்து அதை காப்பி செய்தும் லாகின் செய்ய இயலும்.

ஷீ-நிசி
31-03-2008, 08:41 AM
வாழ்த்துக்கள் கூறின அனைவருக்கும் என் நன்றிகள்.

poornima
31-03-2008, 04:48 PM
பாராட்டுக்கள்.. தமிழ் மன்றத்தை நடமாடிக் கொண்டே மேயலாம் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

நான் நோக்கியோ N73 வைத்திருக்கிறேன்.அதற்கும் இம்முறையை
பின் பற்றலாமா?

மனோஜ்
03-04-2008, 11:32 AM
வாழ்த்துக்கள் ஷீ முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதை நிறுபித்தமைக்கு

ஷீ-நிசி
03-04-2008, 02:08 PM
பாராட்டுக்கள்.. தமிழ் மன்றத்தை நடமாடிக் கொண்டே மேயலாம் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

நான் நோக்கியோ N73 வைத்திருக்கிறேன்.அதற்கும் இம்முறையை
பின் பற்றலாமா?

பின்பற்றலாம் நண்பரே!

உங்களுக்கு எதாவது உதவி தேவைப்பட்டால் இங்கே தெரிவியுங்கள்.

ஷீ-நிசி
03-04-2008, 02:08 PM
நன்றி மனோஜ்!