PDA

View Full Version : தீண்டாமை



நம்பிகோபாலன்
27-03-2008, 09:51 AM
இப்பொழுது மட்டுமல்ல
பல ஆண்டுகளாய்
ஆமையாய் இருந்து
தீயாக பரவி
ஒற்றுமையை குலைக்கும்
தீண்டாமையை ஒழிப்போமா...

ஆதி
27-03-2008, 09:57 AM
இப்பொழுது மட்டுமல்ல
பல ஆண்டுகளாய்
ஆமையாய் இருந்து
தீயாக பரவி
ஒற்றுமையை குலைக்கும்
தீண்டாமையை ஒழிப்போமா...

எட்டிப்போ எட்டிப்போ சாதிப் பேயே - *எம்தேசத்தை
விட்டுப்போ விட்டுப்போ சாதிப் பேயே

முன்பெங்கோப் படித்தது ஞாபகம்..
பின்பிங்கோர் இன்னொரு கவியும்..

நீ தொட்டுப் படைத்தவனை
தீண்ட மறுக்கும்
மனிதர்களின் மடமையை
என்ன சொல்ல..
- அப்துல் ரகுமான்

இந்த விதை எத்திசையும் விழுந்து ஒழிந்து போகட்டும் தீண்டாமை தூண்டப்படாமல் தீண்டப்படாமல்..

அன்புடன் ஆதி

நம்பிகோபாலன்
27-03-2008, 10:05 AM
ஆம் ஆதி, இந்த வார ஜூனியர் விகடனில் படித்த இரண்டு சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தது, அதனை பொருட்டு என் எழுத்துக்கள்....

அமரன்
28-03-2008, 10:10 AM
பெயரில்
ஆமை இருப்பதால்தான்
முட்டைகள் பல இட்டு
பெருக்குகிறதோ
தீண்டாமை வளரிகளை!

இவ்வகை கவிதைகளை
உருவாக்கும் கருக்களின் சிதைவை
உற்சாகமாக வரவேற்கின்றேன்!

நம்பிக்கு எனது கரகோசம்!