PDA

View Full Version : கவிதையே தெரியுமா



shanthija
27-03-2008, 12:37 AM
எந்தக் கவிதையும் என்னவள் போல்
எழுத வைத்தது இல்லை....
என்னவள் போல் எந்தக்கவிதையும்
என்னை கவிஞன் ஆக்கியதில்லை...
அவள் தேடிய வாசகன் நான் என்பதை
விட எனக்கான கவிதை அவள்
என்பதே மிகச் சிறந்தது...
என்னை எழுத முடியாத கவிதை அவள்
என்றாலும் அவளால் வாசிக்க படும்
கவிஞன் நான்....
எந்தக் கவிதைக்கும் சொந்தக்காரன்
நானல்ல எனக்கான கவிதையை
சொந்தமாக்கிய கவிஞன் நான்...!

கவிதையே தெரியுமா உனக்காகவே நானடி...

அன்புடன்
தீபா

அனுராகவன்
27-03-2008, 12:57 AM
நன்றியும்,வாழ்த்தும் தீபா அவர்களே!!
உங்கள் முதல் கவிக்கு என் நன்றி...
தொடந்து எழுத நன்றாக வரும்..
உங்கள் கவியில் நிறைய எழுத்து பிழைகள் உள்ளன..

shanthija
27-03-2008, 09:17 PM
இது எனது முதற்கவி இல்லை நன்பரே எனது படைப்புக்கல் அனைத்தும் தீபா என்ற பெயரில் பொரிக்கப்பட்டிருக்கும் ஷந்திஜா என்பது எனது புதிய பெயர் நான் கன நாட்கலால் ரமிழ்மன்ரம் வராததால் எனது பெயர் மார்ரவேண்டிய சிக்கல் ஆதலால் நான் புதிய நேயராய் தோண்ருகிறது உங்கலுக்கு

அன்புடன்
லதுஜா

ஓவியன்
28-03-2008, 03:47 AM
கவிதைக்கே ஒரு கவிதையா - பாராட்டுக்கள் லதுஜா..!!

சுகந்தப்ரீதன்
30-03-2008, 08:12 AM
கவிதைக்கு வாழ்த்துக்கள் தீபா...!!

ஆமாம் அதென்ன அங்கங்கே சிகப்பு வண்ணமிட்ட சில எழுத்துக்கள்..??!