PDA

View Full Version : தங்கவேலின் முதல் சிறுகதை - திண்ணையில்தங்கவேல்
26-03-2008, 12:19 PM
நண்பர்களே, திண்ணயில் எனது முதல் சிறுகதை வெளியாகி இருக்கிறது. படித்து பதிலிடுங்கள்...பிளீஸ்


வளர்ப்பு
தங்கவேல் மாணிக்கதேவர்
===================================

" கண்ணு ஒழுங்கா தெரிய மாட்டேங்குது ?
அது என்ன காரா ? ஏன் இப்படி பேய்த்தனமா வருகிறான்.
மெதுவாடா ? மெதுவா ..
மேலே இடிக்கப்போறானோ.
புகை மாதிரி தெரியுது. இந்தப் பக்கம் போவோமா ?
அட அதற்குள் , என்ன அது ?
மோட்டார் பைக்கா இது ?
இந்தக் கண்ணு வேற !
ஒன்னும் சரியா தெரிய மாட்டேங்குது.
கால் வேற நடுங்குது.
வேகமா போறதுக்குள்ள இடிச்சிட்டானா என்ன செய்றது?
ஆட்டோவா அது ?
நிப்பாட்டி பார்க்கலாமா ?
அட ஏன் நிக்காம போறான்...?
என் கையில தான் காசு இருக்கே... !
சரி, இந்தப் பக்கமா மெதுவா போயிடலாம்.
என்ன அது ?
பெருசா?
லாரியா அது ?
என்னமோ சத்தமா பேச்சு குரல் கேக்குதே ?
என்ன சொல்லுறாங்க ?

* * *" ஏம்மா, அந்த தாத்தா நடு ரோட்டுல நிக்கிறாரு ? "
" தெரியலைப்பா... "
" ஏம்மா, அவருக்கு உன்னை மாதிரி அம்மா எல்லாம் கிடையாதா? "
" இருப்பாங்க கன்னு ? "
" அப்புறம் ஏம்மா குளிக்காம அழுக்கா சட்டை போட்டுட்டு இருக்காரு ?
அவரு அம்மா மோசம் இல்லைம்மா ? "
" அப்படி இல்லைப்பா "
" பாவம்மா அந்த தாத்தா, ரோட்டை கடக்க முடியாமல் கஷ்டப்படுறாரு. நான் வேனா கையை பிடித்து இந்தப் பக்கம் அழைச்சுட்டு வரட்டுமாம்மா ? "
" வேணாம் கன்னு.. உன் மேலே யாராவது காரை ஏத்திருவாங்க. ...."


* * *

அமரன்
26-03-2008, 12:55 PM
தங்கவேல்..
அந்தக்கதையை இங்கே தந்தால் கருத்துரைக்க இன்னும் வசதியாக இருக்கும்.

aren
26-03-2008, 09:15 PM
பாராட்டுக்கள் தங்கவேல். நீங்கள் இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

ஆனால் அதை இங்கேயே கொடுத்திருக்கலாமே என்பது என் ஆதங்கம்.

ஓவியா
26-03-2008, 10:47 PM
தங்கமண்ணா,
பின்னூட்டம் வேண்டுமென்றால் கதையை அங்கே 'காப்பியடித்து' இங்கே பதிக்கவும். ;)

(உங்க கதைதான் அதனால் தாராளமா திண்ணையில் காப்பியடிக்கலாம், காப்பி ரைட் பிர்ச்சனை வராதுலே) :D:D:D

aren
27-03-2008, 03:04 AM
அருமையான கதை தங்கவேல். மறுபடியும் பாராட்டுக்கள்.

நமக்கு நம் சொந்தங்களே முக்கியம், மற்றவர்களைப் பற்றிய கவலையில்லை என்பதை இந்த சிறிய கதையின் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

அனுராகவன்
27-03-2008, 03:14 AM
நன்றி தங்கவேல் அவர்களே!!
நானும் படிக்க போகிறேன்..
மிக்க நன்றி..
உங்களுக்கு என் பாராட்டுக்கள்..
தொடர்ந்து வளருங்கள்..

தங்கவேல்
27-03-2008, 06:11 AM
அருமையான கதை தங்கவேல். மறுபடியும் பாராட்டுக்கள்.

நமக்கு நம் சொந்தங்களே முக்கியம், மற்றவர்களைப் பற்றிய கவலையில்லை என்பதை இந்த சிறிய கதையின் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

ஆரென், பாராட்டுக்கு நன்றி. உண்மை நிகழ்ச்சி இது. குழந்தைகளை எப்படி வளர்க்கின்றார்கள் என்று சொல்லாமல் சொல்லும் கதை. வயதான பிறகு இவர்களுக்கு அந்த நிலைமை வரும் என்று தெரியாமல் நடக்கும் பித்துக்குளித்தனத்தின் வெளிப்பாடு தான் இந்த சிறு கதை.

சுகந்தப்ரீதன்
27-03-2008, 11:30 AM
வாழ்த்துக்கள் தங்கவேல் அண்ணா..!!

நல்ல செறிவுடன் கூடிய கருவை கொண்டு அமைத்த சிறுகதை...!!

ஒருவனது செயல்களுக்கு அவன்வாழும் சூழ்நிலைகளே காரணமாகின்றன. இன்று இரக்கம் காட்ட வேண்டாம் சுயநலம்தான் முக்கியம் என்று தன்குழந்தைக்கு சொல்லாமல் சொல்லும் தாய் நாளை அவன் அவள்மீது இரக்கம் காட்டவில்லை என்று கண்டிப்பாக சொல்லத்தான் போகிறாள். அவன் இரக்கமில்லாமல் போனதற்க்கு காரணமே தாந்தான் என்ற உண்மையை அறியாமல்...!!

எல்லோரும் எவனோ ஒருவந்தானே என்றுதான் தினம்தினம் கடந்து செல்கிறோம் எல்லாவற்றையும் மறந்து..!!

மதி
27-03-2008, 12:44 PM
வசனத்திலேயே கதையை நகர்த்திய விதம் அருமை. அழகான கருத்துடன் உள்ள கதை.

வாழ்த்துகளும் பாராட்டுகளும் தங்கவேல்.

அமரன்
29-03-2008, 11:21 AM
முதியவர் மீதான பிஞ்சுமனத்தின் அக்கறை வளரும் பயிர். அக்கறைக்கு அணைபோட்ட தாய், தன்நிலை உணர்ந்து உதவி செய்யச் சொல்லும் திறம்பட செயல்படாத ஆசான். தானே முதியவரை கரை சேர்த்திருந்தால் நல்லதொரு பாடம் சிறுவனுக்கும் நமக்கும்.. வளர்ப்பின் யதார்த்தத்தை எழுத்தாக்கிய திறமைக்கு பாராட்டுகள் தங்கவேல். மென்மேலும் படைத்து மிளிர வாழ்த்துகள்.

உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்க கதையை இங்கே தந்தமைக்கு மனமார்ந்த நன்றி.

செல்வா
29-03-2008, 01:33 PM
கதையை இங்கே கொடுத்தமைக்கு நன்றி அண்ணா.....
நறுக்கென்று புத்தியில் உறைக்கும் கதை.....
இன்னும் இன்னும் இதுபோன்ற பல கதைகளைக் கொண்டு உரமிட்டு வளர்க்க வேண்டும்..... மன்றத்தையும் மனங்களையும்.

Keelai Naadaan
29-03-2008, 06:23 PM
நன்பருக்கு,
முதலில் என் அன்பான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
சொல்ல நினைப்பதை சொல்லாமல் புரியவைக்கும் அழகான எழுத்து.
மிக சிறிய கதைக்குள்ளும் சொல்ல நினைப்பதை சொல்ல முடியும் என நிரூபித்திருக்கிறீர்கள்.
மிக்க நன்றி.

மனோஜ்
29-03-2008, 07:56 PM
மிக மிக அருமை தங்கவேல் அண்ணா
பாசம் அவர்களுக்கும் கண்ணை மறைத்து விட்டது
நல்ல கதை தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

lolluvathiyar
30-03-2008, 08:18 AM
ஒரே ஒரு வார்த்தை
" வேணாம் கன்னு.. உன் மேலே யாராவது காரை ஏத்திருவாங்க"

இந்த கதையில் எத்தனை அர்த்தங்களை தருகிறது. ஆனால் இது போன்ற மனித நேயம் இல்லாமல் இருப்பது சூப்பர் சிட்டிஸ்ல மட்டும்தான், பெரிய நகரமான கோவையில் கூட கன்டிப்பா யாராவது கடக்க உதவுவாங்க*. முதல் சிறுகதை நன்றாக இருந்தது. 100 இபணம் வழங்கி பாராட்டுகிறேன்

தங்கவேல்
30-03-2008, 02:22 PM
நன்றி வாத்தியார்..