PDA

View Full Version : எங்கே என்னை தொலைத்தேன்



நம்பிகோபாலன்
26-03-2008, 06:29 AM
குறுந்தகவல்
அனுப்பினேன் பதிலில்லை
செல்பெசியில் அழைத்தேன்
"வாடிக்கையாளர் தொடர்பில்லை"
கேட்டதும் கோபத்தில் அவளை திட்டினேன்.
உன்னிடமிருந்து தகவல் இல்லாதலால்
இந்த எட்டு மணி நேரமாக
நான் நானாக இல்லை
எங்கே என்னை தொலைத்தேன்
என்று தெரியவில்லை....
செல்பேசி மீண்டும் அழைக்க
உன்குரல்...
மீண்டும் பிறந்தேன் நான்.
இனி என்னிடம் பேசாதே
நீ என்மேல் காட்டிய
தோழமையின் உரிமை
உன்மேல் அன்பைமீறிய
காதலாய் மாறுகிறது...
குற்றணர்ச்சியால்
என்னை நீ கொல்லாதே.....

செல்வா
26-03-2008, 08:07 AM
பேசவில்லை என்றால் விட்டு விடுவீர்களோ...? எட்டு மணிநேர போராட்டம் நாட்கணக்கில் தொடருமே......
வாழ்த்துக்கள் நம்பி இன்னும் நிறைய எழுதுங்கள்...
எழுத்துப் பிழைகளைதலும் நம்மைச் செப்பனிடும் பணியாகும்... சற்று கவனம் கொள்வீர்...

shanthija
27-03-2008, 01:03 AM
கவி அருமை நன்பரே பாராட்டுக்கள்...தொடர்ந்தும் எலுதுங்கள்...

அன்புடன்
தீபா

அனுராகவன்
27-03-2008, 01:14 AM
அருமை நம்பி அவர்களே!!
செல்பேசி அழைத்தும்,
குறுந்தகவல் கொடுத்தும்,
திட்டக்கூடாது..
திட்டினால் திட்டம் பலிக்காது..
நண்பருக்கு நாம் உண்மையில்
நண்பராக இருக்க வேண்டும்..
காதல் கனிந்து
திருமணம் ஆவாது எத்தனை காதலளர்கள்..
என் நன்றியும் ,வாழ்த்தும் உங்களுக்கு அஃது அரும்பட்டும்..

நம்பிகோபாலன்
27-03-2008, 06:12 AM
நன்றி செல்வா,சாந்திஜா மற்றும் அனு.
அனு நான் திட்டியதாக குறிப்பிட்டது
"வாடிக்கையாளர் தொடர்பில்லை " என்று கூறும் பெண்ணை, காதலியை அல்ல.

அனுராகவன்
27-03-2008, 07:01 AM
அனு நான் திட்டியதாக குறிப்பிட்டது
"வாடிக்கையாளர் தொடர்பில்லை " என்று கூறும் பெண்ணை, காதலியை அல்ல.

ஓ அப்படியா..!!
நீங்கள் சொன்னது கடிகாரர்தானே!!
பாவம் அந்த கடைகாரர்..!!
எல்லாம் காதல் செய்யும் கோலம்..!
கண்டது என் நம்பியின் சோகம்..
நிலைத்திட என்றும் சுகம்..!

ஆதி
27-03-2008, 07:06 AM
ஓ அப்படியா..!!
நீங்கள் சொன்னது கடிகாரர்தானே!!
பாவம் அந்த கடைகாரர்..!!
எல்லாம் காதல் செய்யும் கோலம்..!
கண்டது என் நம்பியின் சோகம்..
நிலைத்திட என்றும் சுகம்..!

அக்கா, அவர் திட்டியதுக் கடைக்காரரை அல்ல..

தொடர்பை அழைக்கும் போது "Subscriber cannot be reached at this moment please try again later " என்று ஒரு குரல் ஒலிக்குமே அந்த பெண்ணை திட்டினாராம்..

அன்புடன் ஆதி

நம்பிகோபாலன்
27-03-2008, 07:07 AM
நான் சொன்னது " நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்போது தொடர்பில்லில்லை " - என கூறும் பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல்....

சுகந்தப்ரீதன்
30-03-2008, 08:08 AM
நீ என்மேல் காட்டிய
தோழமையின் உரிமை
உன்மேல் அன்பைமீறிய
காதலாய் மாறுகிறது.......

ம்ம்ம்... அழகாய் கூறிவிட்டீர்கள் நம்பியாரே...!!

அன்பை மீறிய காதல் என்பதன் பொருள் என்ன நண்பரே..?!



குற்றுணர்ச்சியால்
என்னை நீ கொல்லாதே.


குற்றுணர்ச்சியல்ல குற்ற உணர்ச்சி நண்பரே..!!

இது இயற்கையான ஒரு விடயம் என்பதால் குற்ற உணர்வுக்கொள்ள தேவையில்லை என்றே எண்ணுகிறேன் நம்பியாரே..!!