PDA

View Full Version : தொலைதூர அழுகுரல்



shibly591
26-03-2008, 05:00 AM
பூச்சாண்டி வருவதாக
அன்னை ஊட்டிய
ஒரு பிடிச் சோற்றின்
உயிர்ச்சத்தில்
உதயமானது என் கிராம வாழ்வு

புழுதிக்காற்றின்
மண்வாசனையில்
எத்தனை முறை
நுகர்ந்திருக்கிறேன்
தாய் மண்ணின் சுகந்தத்தை....

மழை நாள் பொழுதுகளில்
தெருவெல்லாம் திரண்டோடும்
அழுக்கு நீரில் கால்
நனைத்து
கழுவியிருக்கிறேன் நினைவுகளை....

நிலாச்சோறு
திருட்டு மாங்காய்
சைக்கிள் விபத்து
முதல் காதல்
இன்னும் எத்தனை நினைவுகள்
என் உயிரோடு ஒட்டியபடி....

அத்தனையும் துறந்து
உலக வரைபடத்தில் மட்டுமே
தாய்நாட்டை காண முடியுமான
ஒரு தேசத்தில் நான்....

பணம் சம்பாதித்துக் கொண்டே
இருக்கிறது
என் உடல்...
உயிர் மட்டும்
இன்னும் என் தெருமுனையின்
பனைமரத்தடியில்.....!

நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com

செல்வா
26-03-2008, 08:02 AM
உந்தன் தேசத்தின் குரல்..... தொலைதூரத்தில் அதோ......
வாழவேண்டிய ஓட்டங்களும் வாழ்வைத்தேடிய ஓட்டங்களும்
மனிதன் பிறந்த காலம் தொட்டு இன்றளவும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பிறந்த மண்ணை ... மறக்க இயலா.... மனதின் வலி கவிதையாய்.....
வலிசுமந்த கவிதை வாசித்ததும் நம் மனதில் வலியேற்றுகிறது....
வாழ்த்துக்கள்... ஷிப்லி

அனுராகவன்
26-03-2008, 09:12 AM
வாழ்த்துக்கள் ஷிப்லி அவர்களே!!
நல்லதொரு கவி..
கவிஞருக்கு என் நன்றி!!

பழைய நினைவுகள்
வழிந்தோடும் விழிகளில்
ஆங்கே ஒரு கை
என்றும் அரும்பட்டுமே!!

சிவா.ஜி
26-03-2008, 12:08 PM
எத்தனை உயிர்கள் இப்படி வேர் தொடமுடியா வேறிடம் வாழ்ந்துகொண்டு.....
கண்மூடினால் மட்டுமே....நெஞ்சமினிக்கும் நினைவுகளை சுமந்து கொண்டு.....
உடலை பணத்துக்குப் பின்னால் ஓடவிட்டு..
உயிரை....வாழ்ந்த காலங்களின் வலியில் வாடவிட்டு....

நல்லதொரு காலை விடியும்....கனாக்காணும் காலங்கள்...கண்முன்னே தோன்றும்.

வாழ்த்துகள் ஷிப்லி.

ஷீ-நிசி
26-03-2008, 04:57 PM
பணம் சம்பாதித்துக் கொண்டே
இருக்கிறது
என் உடல்...
உயிர் மட்டும்
இன்னும் என் தெருமுனையின்
பனைமரத்தடியில்.....!

கடைசி வரிகள் முழுக்கவிதையையும் தாங்கி செல்கிறது.

உண்மைதான், உழைத்துக்கொண்டிருப்பது என்னவோ வெளிநாட்டில்தான்... ஆனால் நினைத்துக்கொண்டிருப்பது முழுக்க உள்நாட்டைதானே!

வாழ்த்துக்கள் நண்பரே!

பிச்சி
17-07-2008, 11:07 AM
பிரிந்து போனவர்கள் வாழ்வு இப்படித்தான் இருக்கும்.... மனம் கனத்த கவிதை.

உங்களது இதே கவிதை Similar Threads ல் காண்பிக்கிறதே! இரண்டுக்கும் ஏதாச்சும் வித்தியாசம் இருக்காண்ணா?

அன்புடன்
பிச்சி

shibly591
17-07-2008, 11:34 AM
தவறுதலாக இரண்டு முறை பகிர்ந்துவிட்டேன்..இனியும் இதுபோன்று நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்..மன்னிக்கவும்...

இளசு
22-07-2008, 12:34 PM
புலம்பெயரும் சூழல் வன்முறைகளால் திணிக்கப்பட்டால்
நிகழும் சோகம் பன்மடங்கு..

பங்கெடுக்கிறோம் ஷிப்லி!

shibly591
23-07-2008, 12:50 PM
நன்றி இளசு..

அமரன்
23-07-2008, 01:23 PM
தவறுதலாக இரண்டு முறை பகிர்ந்துவிட்டேன்..இனியும் இதுபோன்று நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்..மன்னிக்கவும்...

ஒன்று அகற்றப்பட்டது ஷில்பி. உங்கள் நெடுங்கவிதைகளையும் குறுங்கவிதைகள் பகுதியில் பதிகிறீர்கள். எதிர்காலத்தில் இதிலும் கவனம் செலுத்துங்கள்.

நன்றி.

சுஜா
23-07-2008, 01:57 PM
நன்றாய் இருந்தது கவிதை .
புலம் பெயர்தலின் வலி ,வலிக்கிறது .

shibly591
23-07-2008, 02:00 PM
நன்றி சுஜா..

உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு ஊட்டச்சத்தாக அமைகின்றன...

நன்றிகள்

ஷீ-நிசி
23-07-2008, 02:16 PM
மனத்தின் ஆழத்திலிருந்து எழுதப்பட்ட வரிகள்...
மனதின் ஆழத்திற்கு செல்கின்றன...

வாழ்த்துக்கள் நண்பரே!

shibly591
23-07-2008, 02:18 PM
நன்றி நண்பரே...

உங்கள் கவனம் எனது கவிதைகள் மீதும் படிந்தமைக்கு