PDA

View Full Version : ஒரு பிடி சிரிப்பு!!!lenram80
25-03-2008, 05:38 PM
தொடாத நிலவும், காணாத கடவுளும்
பூக்களின் வாசமும், அம்மாவின் பாசமும்
சொல்லாத காதலும், சொல்லிய பொல்லாத காதலும்
கவிதை எழுதுவதற்கு இப்படித் தேவைகள் பல!

இவை எல்லாம் இருந்தும்
எழுதுகோலும் தாளும் இல்லாமல் போனதால்
சொல்லாமல் போன கவிதைகள் பலப்பல!

போகிற போக்கில் பொழிகிற மேகம் போல்
மழலை இனம் மட்டும் தானே
நினைத்தவுடன் சிரிப்புக் கவிகளை உதிர்த்து
நிலமெல்லாம் கொட்டமுடியும்!

மரங்களால் காற்று சுத்தமாகிறது - அறிவியலுக்கு!
மழலைச் சிரிப்பால், காற்று சுத்தமாகிறது - கவிஞனுக்கு!

சுற்றும் பூமி சுலபமாய் சுற்ற
மசை* போடுவதே மழலையின் சிரிப்பு தானே!

இத்தனை பாவம் செய்தும் - இயற்கை
மனிதனை விட்டு வைத்திருப்பது
அவன் கொஞ்ச காலம் மழலையாய் இருந்ததனால் தானோ?

பூமியைச் சிலிர்க்கச் செய்பவை இரண்டு!
தரையைத் தொட்டு தெறிக்கும் மழை!
தரையில் குதித்து சிரிக்கும் மழலை!

சூரியன் குளிறும்!
:icon_rollout:யின் சிரிப்பில் மயங்கி நின்றால்!
மிளகாய் இனிக்கும்!
குழந்தையின் சிரிப்புடன் குழைத்துத் தின்றால்!

:icon_rollout:ப் பேச்சு - கவிதைகளின் தொகுப்பு!
:icon_rollout:ச் சிரிப்பு - அந்த கவிதை தொகுப்பின் தலைப்பு!

அது வரை மழலிய* கவிதைகளை எல்லாம்
ஒரு தலை(சிரி)ப்புடன் தொகுப்பாய் வெளியிட்டு விட்டு
அடுத்த கவிதையை எழுதிக்கொண்டிருக்கிறது
சிரித்து விட்டு பேசும் குழந்தை!

இரண்டு வயதுக்குள் இருநூறு இதிகாசங்களை
இப்படித் தான் குழந்தைகளால் எழுத முடிகிறது!

பொக்கை வாய் வழியே ஒரு பிடி சிரிப்பு!
மரண பூமி மறுபடி உயிர்ப்பு!

எப்போதெல்லாம் கவிதை படிக்க தோன்றுகிறதோ
அப்போதெல்லாம் நூலகத்திற்குச் செல்லாதீர்கள்!
பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்குச் செல்லுங்கள்!
அங்கே,
விளம்பரமே இல்லாத கவியரங்கங்கள்
விளையாட்டாய் நடந்துகொண்டிருக்கும்!


-------------
குறிப்பு:
:icon_rollout: - வரும் இடத்தில் 'மழலை' என்று படிக்கவும்
*மசை - மாட்டு வண்டியில் சக்கரம் சுலபமாய் சுழல போடப்படும் பசை.
*மழலிய - மழலை பேசிய (நானாக சொன்னது :) )

ஷீ-நிசி
26-03-2008, 05:53 PM
அற்புதமான கவிதை லெனின்..


இத்தனை பாவம் செய்தும் - இயற்கை
மனிதனை விட்டு வைத்திருப்பது
அவன் கொஞ்ச காலம் மழலையாய் இருந்ததனால் தானோ?

என்ன வளமான கற்பனை. இங்கே சில இடங்களில் உங்கள் வரிகள் என்னை மிகவும் ஆச்சரியமூட்டுகின்றன... வாழ்த்துக்கள்!

(ஒரு விண்ணப்பம்: வெறும் உங்கள் கவிதைகளை இங்கு பதிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் மற்றவர்களின் கவிதைகளுக்கும் உங்கள் விமர்சனங்களை தெரிவியுங்கள்)

kavitha
27-03-2008, 12:07 PM
எப்போதெல்லாம் கவிதை படிக்க தோன்றுகிறதோ
அப்போதெல்லாம் நூலகத்திற்குச் செல்லாதீர்கள்!
பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்குச் செல்லுங்கள்!

அருமையான வரிகள் மோகன்.
பள்ளிக்கூடம் போக இயலாதவர்கள் வீட்டிலிருக்கும் பிள்ளையைத்தூக்கி விளையாடினாலே போதும்.

இத்தனை பணியிடத்திலும் செல்லமாய் தூவும் மழைபோல உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது இத்தனை நயமாய் கவிதை வரைய!


இன்னும் பல கவிதைகள் எழுத வாழ்த்துகள்

lenram80
27-03-2008, 01:09 PM
நன்றி ஷீ-நிசி & கவிதா. கண்டிப்பாக மற்றவர்களின் கவிதைகளுக்கும் விமர்சனங்களை கூறுகிறேன் ஷீ-நிசி

யவனிகா
27-03-2008, 01:11 PM
தலைப்பே அழகு.

மூடிய கையில்
சிறைப்படுத்தி வைத்திருக்கிறேன்...
என் மகனின்
ஒருபிடிச் சிரிப்பு...

அவ்வப்போது திறந்து பார்த்து,
அது தப்பித்து போகுமுன்
படக்கென்று மூடிவிடுவேன்...
அவனைப் போல குறும்பு,
அவன் சிரிப்பும்...
ஒரு இடத்தில்
அடைத்து வைத்தல் கடினம்...

இன்று வேலை முடியும் வரை..,
கைக்குள் சிரி மகனே...
வீடு வந்ததும்...
கை கொள்ளாச் சிரிப்பை
அள்ளிப் பூசிக் கொள்கிறேன்....

அழகான மழழைச் சிரிப்பாய்க் கவிதை...
தொடருங்கள்!!!

lenram80
01-04-2008, 03:50 PM
வாவ். என்னால் மழலைச் சிரிப்பை வெறும் அழகான சிரிப்பாக மட்டுமே ரசிக்க முடிந்தது. தாய்மையை அந்த சிரிப்போடு கலந்தால் எவ்வளவு புனிதமாகிறது... என்னால் ஒரு பிடி அள்ள மட்டுமே முடிந்தது. உங்களால் அதை அள்ளி பூசி கொள்ளவும் முடிந்தது...நன்றி யவனிகா.

மனோஜ்
01-04-2008, 04:50 PM
சிறப்பான கவிவரிகள் யவனிஅக்காவின் வரிகளும் மிக அருமை

lenram80
02-04-2008, 03:13 AM
நன்றி மனோஜ்

kavitha
04-04-2008, 11:47 AM
அவ்வப்போது திறந்து பார்த்து,
அது தப்பித்து போகுமுன்

படக்கென்று மூடிவிடுவேன்...
அவனைப் போல குறும்பு,
அவன் சிரிப்பும்...
ஒரு இடத்தில்
அடைத்து வைத்தல் கடினம்... துறு துறு பிள்ளைகளை மிகப் பிடிக்கும். வீட்டில் மழலை இன்னொரு உலகம். அனுபவியுங்கள் யவனி. :)

lenram80
09-04-2008, 01:34 AM
நன்றி கவிதா (என் கவிதையை வாசித்ததற்கு)
நன்றி கவிதா ( யவனிகா-விற்கு பதிலாக நான் கூறுகிறேன் இன்னொரு நன்றி :))