PDA

View Full Version : ம்



நம்பிகோபாலன்
25-03-2008, 11:42 AM
உன் உதட்டிலிருந்து
உதிராத முத்துக்களைவிட
உதிர்ந்த முத்தாய்
'ம்' என்ற வார்த்தையே
என் வாழ்க்கையாகிபோனதோ...

ஆதி
25-03-2008, 12:04 PM
நீங்களுமா ? :)
அழகிய கவிதை வாழ்த்துக்கள் நம்பி..

அன்புடன் ஆதி

நம்பிகோபாலன்
26-03-2008, 05:36 AM
நன்றி ஆதி.
ம் என்ற உங்கள் கவிதைகளின் தொடர்பாக என்னுள்
தோன்றிய வரிகள் பல.
அவற்றில் எனக்கு பிடித்தமையே பதிக்கிறேன்.

அனுராகவன்
26-03-2008, 08:14 AM
நன்றி நண்பி அவர்களே!!
நல்லதொரு கவி..
தொடர்ந்து படையுங்கள்

அமரன்
26-03-2008, 12:14 PM
உன் உதட்டிலிருந்து
உதிராத முத்துக்களைவிட
உதிர்ந்த முத்தாய்
'ம்' என்ற வார்த்தையே
என் வாழ்க்கையாகிபோனதோ...
'ம்' மென்ற போது
இணைந்த என் உதடுகள்
நானும் நீயும்
நாமானதை சொன்னதே!

நம்பிகோபாலன்
26-03-2008, 12:21 PM
அருமை அமரா....என்னை மேலும் யோசிக்கவைக்கறீங்க..
நன்றி....

ஆதி
26-03-2008, 12:24 PM
'ம்' மென்ற போது
இணைந்த என் உதடுகள்
நானும் நீயும்
நாமானதை சொன்னதே!

இதை படித்ததும் இரண்டு கவிதை ஞாபகம் வருது அமரன் ஒன்று டாக்டர் கலைஞருடையது..

நான் என்று சொல்லிப்பார்
உதடுகள் ஒட்டாது
நாம் என்று சொல்லிப்பார்
உதடுகள் ஒட்டும்..

இந்த கவிதையை ஒருவர் காதல் கவிதையாய் மாற்றி இப்படி எழுதினார்..

நான் என்று சொன்னால்
உதடுகள் ஒட்டாது பெண்ணே!
வா..
நாம் என்று ஆவோம்
நம் உதடுகள் ஒட்டட்டும்..

அன்புடன் ஆதி

நம்பிகோபாலன்
26-03-2008, 12:29 PM
ஆதி என்னால முடியல
வலிக்குது
அழுதுடுவேன்....
உட்கார்ந்து யோசிப்பாங்களோ...

மலர்
26-03-2008, 03:34 PM
ஒரு எழுத்தை வைத்தே கவிதை...... :cool: :cool:
நல்லாயிருக்கு சகோதரரே......

தொடந்து படைக்க பாராட்டுக்கள்...:icon_b: :icon_b: