PDA

View Full Version : தம்பிக்கு அறிவுரைஆதி
24-03-2008, 06:45 PM
இதுவே நான் கவிதை என்று கிறுகிய முதல் கவிதை, எட்டாம் வகுப்பு படிக்கையில் எழுதியக் கவிதை, என் நண்பன் நாராயணன் மழையை வைத்து ஒரு கவிதையை எழுதி என்னிடம் காண்பித்தான் அந்த கவிதை என்னை எதோ செய்தது அன்று எனக்கும் கவிதை எழுத ஆசைவந்தது அந்த ஆசையில் பிறந்தது இந்தக் கவிதை

தம்பி பாடங்களை பயின்றிடு
உன்னை நம்பி
தமிழ் என்றும் தாய்மொழி என்றும்
தள்ளி விடாதே
தனி கவனம் கொடுத்து விட
மறந்து விடாதே
ஆங்கிலத்தை அயல் மொழி என்று
ஒதுக்கி விடாதே
அதுவும் ஓர் பாடம் என்று
மறந்து விடாதே
கணிதத்தைக் கருமம் என்று
கருதி விடாதே
அது ஒரு கண் என்பதை
மறந்து விடாதே
அறிவியலை அறுவை என்று
நினைத்து விடாதே
நாலும் அறிவதற்கு அதுவோர்
பாலமென மறந்துவிடாதே
வரலாறு புவியலை
வெறுத்து விடாதே
வரலாறு உனைப்புகழ அதைநீ
பயில மறந்துவிடாதே
பாடம் எல்லாம் பயின்றுவிட்டால்
நீஓர் பல்கலைக்கழகம்
பாடத்தை வெறுத்து விட்டாலது
உனக்கொருப் பள்ளம்

அன்புடன் ஆதி

அமரன்
24-03-2008, 06:53 PM
கண்டது கற்றால் பண்டிதன் ஆகலாம்.
கண்டது தின்றால் வண்டியன் ஆகலாம்..

எனது வட்டாரத்தில் சொல்லும் பழமொழி.
உங்கள் கவிதை சாற்றுவது இதன் முதல்வரி.

எட்டாம் வகுப்பிலே வார்த்தைகளை வசியம் செய்து
எண்ணப் பிம்பங்களை சிறைப்பிடிக்க துவங்கி விட்டீர்கள்.
பாராட்டுகள் ஆதி!

வண்டியன்=தொப்பை உடையவன்

kavitha
29-03-2008, 08:12 AM
எட்டாம் வகுப்பிலேயே கவிதையை எட்டிப்பிடிக்க முயற்சித்திருக்கிறீர்கள். பால்ய கவிதை - பாலர் கவிதை.
வார்த்தைகளை நன்றாக பொருத்தியிருக்கிறீர்கள். தொடரும் உங்கள் வெற்றிக்கு, பிள்ளையார் சுழியாம் இக்கவிதையை மறக்க முடியாது அல்லவா?

நான் எழுதிய முதல் கவிதை பத்தாம் வகுப்பு படிக்கையில் தமிழ் பற்றி கரும்பலகையில் எழுதியது; மறுநாள் காலையில் வகுப்பாசிரியர் (ஆங்கில ஆசிரியர்) பார்த்துவிட்டு திட்டிக்கொண்டே அழித்தது; அப்போது பயந்து பெஞ்சுக்கிடையே ஒளிந்தது.... நினைத்தால் சிரிப்பாக வருகிறது.

மனோஜ்
29-03-2008, 10:01 AM
அருமை ஆதி அந்த வயதுக்கு ஏற்ற மனதுடன் எழுதிய கவிதை வாழ்த்துக்கள் அரம்பமே அசத்தல் தான் நன்றி

சுகந்தப்ரீதன்
30-03-2008, 09:22 AM
ஆறாம் வகுப்புல தமிழ் படிக்க ஆரம்பிச்சு எட்டாம் வகுப்புலியே நீ கவிதை எழுத ஆரம்பிச்சுட்டியா..? ஆனாலும் உனக்கு தமிழன்னை ரொம்பவே வாரி வழங்குகிறாள் ஆதி...!!

கவிதையில் அறிவுரையும் கலந்து அசத்தியிருக்கிறாய்...!! ம்ம்ம் தொடரட்டும் உன் சேவை நம் தமிழன்னைக்கு..!!

செந்தமிழரசி
30-03-2008, 10:24 AM
ஆறாம் வகுப்புல தமிழ் படிக்க ஆரம்பிச்சு எட்டாம் வகுப்புலியே நீ கவிதை எழுத ஆரம்பிச்சுட்டியா..? ஆனாலும் உனக்கு தமிழன்னை ரொம்பவே வாரி வழங்குகிறாள் ஆதி...!!ஆதி ஆறாம் வகுப்பில்தான் தமிழ்ப் படிக்க ஆரம்பித்தீர்களா ? மெய்யாகவே நம்ப முடியவில்லை ஆதி, ஆட்சர்யம் இன்னும் அதிகமாய் கண்ணில் பெருகிகசிகிறது. எனக்கு தமிழ் கொஞ்சம் தெரியும் என்ற செருக்கையும் சில்லு சில்லாய் உடைத்துப் போட்டுவிட்டு செல்கிறது உங்கள் கவித்தமிழ்.


நன்றி

யவனிகா
30-03-2008, 10:49 AM
ஆதி ஆறாம் வகுப்பில்தான் தமிழ்ப் படிக்க ஆரம்பித்தீர்களா ? மெய்யாகவே நம்ப முடியவில்லை ஆதி, ஆட்சர்யம் இன்னும் அதிகமாய் கண்ணில் பெருகிகசிகிறது. எனக்கு தமிழ் கொஞ்சம் தெரியும் என்ற செருக்கையும் சில்லு சில்லாய் உடைத்துப் போட்டுவிட்டு செல்கிறது உங்கள் கவித்தமிழ்.


நன்றி

தோழி தமிழரசி...இதுக்கெல்லாம் உடைந்து போனால் எப்படி?
அவரவர் தமிழ் அவரவர்க்கு...
குழந்தைக்கு மழலைத் தமிழ்தான்...அழகில்லை என்று ஆகி விடுமா?

ஆதியைப் போலவே நீங்களும் சட்டென்று உணர்ச்சி வசப்படுகிறீர்கள்...ஆதியின் கவிதைகளில் காணும் அதே ஆழம் உங்கள் கவிதைகளிலும் நான் காண்கிறேன். உடைந்த சில்களையும் தமிழ் கோந்து கொண்டே ஒட்டிவிடுங்கள்(யார் காலிலும் குத்தாமல்)

ஆதிக்கு நல்ல ஞாபக சக்தி...அப்படி இல்லை என்றால் கவிதைகளை தொலைக்காமல் பார்த்துக் கொள்ளும் திறன் இருக்கிறது...எனக்கும் இரண்டுமே இல்லாதது வருத்தப்படக்கூடியதே...

எனது 10 ஆம் வகுப்பில்,எதேச்சையாக தமிழாசிரியர் அனைவரையும் கவிதை எழுதச் சொல்ல...பசங்கெல்லாம் 10 நிமிடத்தில் என்னென்னவோ எழுதி முடித்து பேப்பரை மடித்துக் கொடுத்து விட...நான் பேந்தப் பேந்த முழித்து விட்டு...ஒண்ணுமே எழுதாமல் கொடுத்தேன்...

இதில் சேம் சேம் பப்பி சேம் என்னன்னா...அப்ப நடந்து முடிந்த கவிதைப் போட்டியில் நான் தான் முதல் பரிசு வாங்கிருந்தேன்.ஏனோ அப்ப ஒண்ணுமே எழுதத் தோணல...அந்த நிகழ்வோட...கவிதை எழுதறத நிறுத்தி வைச்சேன்...

ஆதியின் கவிதையில் அந்த வயத்திற்கே உரிய எளிமை பொதிந்திருக்கிறது...சில நேரம் எளிமை அழகைத் அதிகப்படுத்தும்...இன்னும் சேகரித்து வைத்திருந்தீர்கள் என்றால்...பதிவிடுங்கள் ஆதி...வாழ்த்துக்கள்.

செந்தமிழரசி
31-03-2008, 05:46 AM
ஆதியைப் போலவே நீங்களும் சட்டென்று உணர்ச்சி வசப்படுகிறீர்கள்...ஆதியின் கவிதைகளில் காணும் அதே ஆழம் உங்கள் கவிதைகளிலும் நான் காண்கிறேன். உடைந்த சில்களையும் தமிழ் கோந்து கொண்டே ஒட்டிவிடுங்கள்சட்டென்று என்றும் உணர்ச்சி வசப்பட்டத்தில்லைத் தோழி,
நானிட்டப் பின்னூட்டம் ஆதியின் தம்பிக்கு அறிவுறைக் கவிதைக்கு இல்லை. பிள்ளை வயதில் எழுதிய கிள்ளை மொழிக் கவிதை என்று என்னால் புரிந்துணர முடிந்தது.

மாங்கனியில் மோகூர் அழகு அறுசீர் விருத்தம் படித்தப் பிறகு சுகந்தப்ரீதன் அவர்களின் பின்னூட்டம் பார்த்தே அறிந்தேன் ஆறாம் வகுப்பில்தான் தமிழ் கற்க துவங்கியவர் ஆதி என்று, பத்தம் வகுப்பு கவிதை ஒன்று வேறு அவர் பதிந்திருந்தார், அந்தக் கவிதையும் அழகுற இருந்தது ரசிக்க வைத்தது.

தோழர் செல்வா சொன்னதுப் போல் அப்போதைய ஆதிக்கும் இப்போதைய ஆதிக்கும் நிறைய வித்யாசம் நிறைவான மாற்றம் பக்குவம்.
மூத்த கவிஞர்களின் படைப்புகளை நிறைய படித்து சுவைத்திருந்க்கிறேன்.
சிலக் கவிஞர்கள் ஒருப் பத்திக்கு ஒரு உவமை என்று எழுதுவர், சிலர் ஒரு பத்திக்கு இரண்டு உவமை, சிலர் வரிக்கு வரி உவமை.

வரிக்கு வரி உவமையைத்தான் ஆதியும் பத்தாம் வகுப்பு கவிதையில் முயன்றிருக்கிறார், ஆனால் அவர் கையாண்ட உவமைக்களின் கனதைத் தாங்கும் வலிமை வார்த்தைகளுக்கு இல்லை. இதை என்னால் கவனிக்க முடிந்தது, ஆனால் எல்லாவற்றையும் தாண்டி ஈர்ப்பு வசீகரமும் இழைப்பின்னியது.

வார்த்தைகளுக்கு மெனக்கெடாமல் வருகிற வார்த்தைகளை அலங்காரப் படுத்தி அழகு வழியச் செய்கிறவனே கவிஞன், இதை இயற்கையாகவே ஆதியிடம் நான் கண்டிருக்கிறேன். என் தாயும் தந்தையும் இலக்கியத்தில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் சிறுவயது முதல் எனக்கு அதனால் இலக்கியம் பயிலும் வாய்பு அதிகமாய் இருந்தது. கொஞ்சம் வளர்ந்த வயதில் தமிழ் படிக்க ஆரம்பித்து இன்று தமிழைத் தன் பொக்கிஷமாக வைத்திருக்கும் ஆதி இப்போதும் சொல்கிறார் துவக்க நிலையில்தான் இருக்கிறேன் என்று, அந்த தன்னடக்கத்தும் என்னைக் கவர்ந்ததால் என் கர்வம் தகர்ந்தது அதனால்தான் அப்படி பின்னூட்டமிட்டேன்.

நன்றி