PDA

View Full Version : வயசுக் கோளாறு



மதி
24-03-2008, 02:31 PM
மனசே சரியில்ல. பின்ன வீட்டுல ஜாலியா மூணு நாள் கொட்டமடிச்சுட்டு இப்போ மறுபடி ஊருக்குப் போகணும்னா? ஸ்கூலோ காலேஜோன்னா கட்டடிக்கலாம். ஆபிஸுக்கு சொல்லாம கொள்ளாம கட்டடிக்க முடியாதே. அதுவும் இந்த நேரத்துல. ரிலீஸ் டைம் வேற. அரை மனசோட பெங்களூருக்கு கிளம்பி விட்டேன்.

வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு பயணம். பஸ் ஸ்டாப் வரை அப்பா வந்து வழியனுப்பினார். வரும் வழியில் வீட்டுக் கதை. பத்து மணிக்கு பஸ். திருச்சி பேருந்து நிலையத்திற்கு வந்து சேரும் போது ஒன்பது ஐம்பது. எங்க பாத்தாலும் ஒரே கூட்டம். சென்னைக்கும் பெங்களூருக்கு மாத்தி மாத்தி வண்டி போய்கிட்டு இருந்தது. ஹ்ம். இந்த ஏரியாலேர்ந்து எல்லோரும் படையா கிளம்பி ஐ.டி.க்கு வந்துட்டாங்க.

நான் பதிவு பண்ணியிருந்தது கர்நாடக அரசு பேருந்தில் கும்பகோணத்திலிருந்து வர வேண்டும். வருவதற்கு எப்படியும் பத்தேகால் பத்தரை ஆகுமென்று முதுகில் மடிக்கணினியை சுமந்தவாறே சுற்றலானேன். அங்கிருந்த மற்ற பெங்களூர் வண்டிகளிலெல்லாம் ஆட்கள் ஏறி விட்டனர். அப்புறம் மூன்று நண்பர் குழாமொன்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் தள்ளி டீக்காய் டிரஸ் பண்ணியவாறு என் வயதையொத்த வாலிபன் ஹாண்ட்ஸ் ஃப்ரீயில் பேசிக் கொண்டிருந்தான்.

நேரம் ஆக ஆக ஒவ்வொரு வண்டியாய் கிளம்ப ஆரம்பித்தது. என் வண்டி வருவதாய் காணோம். ஆட்கள் கூட்டமும் குறைய தொடங்கியது. இப்போ இருந்தது சொச்சம் பேர் தான். அந்த மூன்று நண்பர்கள் கூட்டம், புதுசாய் வந்த நண்பர் கூட்டம், அந்த வாலிபன், மற்றும் நாலு பெண்களும் இரண்டு ஆண்களுமாய் இன்னொரு கூட்டம். தனித்தனியா ரெண்டு மூணு பேர் என்னை மாதிரி. எல்லோரும் அந்த பேருந்துக்காக தான் காத்திருக்கிறார்கள் போல. ஒவ்வொரு நொடியும் வாசலில் நுழையும் பேருந்தை பார்ப்பதிலேயே போனது. காத்திருத்தல் கூட சுகம் தான். முதுகில் மட்டும் சுமையில்லாமல் இருந்தால். எதுல தான் செஞ்சாங்கலோ? நல்ல கனம் கனக்குது. அரை மணி நேரம் அப்படியே திரிந்துவிட்டு கிடைத்த இடத்தில் உட்கார்ந்தேன். அப்போது தான் துப்புரவு தொழிலாளர் வர வேண்டும். அவர் பணியை செய்ய எழுந்தேன்.

இப்படியே பராக்கு பார்த்து நடக்கையில் ஒருவன் என்னருகில் வந்து,
"எக்ஸ்கியூஸ் மீ?"

திடுக்கிட்டு திரும்பினேன். ஆள் கொரிய நாட்டு இளைஞன் மாதிரி இருந்தான். சற்றுத் தள்ளி சீன முகத்துடன் ஒரு பெண். அவன் மனைவியோ தோழியோ. அதெல்லாம் நமக்கெதற்கு.

"எஸ்"

"ஆர் யூ வெயிட்டிங் ஃபார் பேங்களூர் பஸ்?" (பெங்களூர் பேரூந்திற்கா காத்திருக்கிறீர்கள்)

"எஸ்."

"ஓ. ஹாய் யூ ரிசர்வ்ட் டிக்கெட்ஸ்? வில் பஸ் ஸ்டாப் ஹியர்" (நீங்க முன்பதிவு செஞ்சிருக்கீங்களா? பேருந்து இங்கேயா நிற்கும்)

"எஸ். பஸ் வில் கம் ஹியர். பட் ஆல் ஆர் ரிசர்வ்ட். அச் இட்ஸ் சண்டே இட்ஸ் டிஃப்பிகல்ட் டு கெட் டிரைக்ட் பஸ் டு பேங்களூர்" (பஸ் இங்க தான் வரும். ஆனா எல்லா டிக்கெட்டும் ரிசர்வ்ட். இன்னிக்கு ஞாயித்துக்கிழமைங்கறதால உங்களுக்கு பெங்களூருக்குப் போக நேரடிப் பேருந்து கிடைப்பது கடினம்)

"தட் கவுண்டர் கை ஆல்ஸோ டோல்ட் த சேம் திங். ஓக்கே வீவில் செக்" (அந்த கவுண்டரில் இருந்தவனும் அத தான் சொன்னான். சரி. நாங்க பாத்துக்கறோம்)

"ஓக்கே"

அந்த பெண்ணை அவன் கூட்டிக் கொண்டு வேறொரு பக்கம் போனான். பத்தரை மணிக்கு மேல அந்த பெண் கூட மொழி தெரியாத ஊரில என்ன கஷ்டப் படப் போறானோ? ஒரு வேளை அவன் மட்டும் தனியே வந்திருந்தால் என் டிக்கெட்டை குடுத்து போக சொல்லியிருக்கலாம். பஸ் மாற்றிப் போவது எனக்கு புதுசா என்ன? போகிறவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ம்ஹும். பஸ் வருவதாய் தெரியவில்லை. என்னாச்சு பஸ்ஸுக்கு? மணி பதினொன்றாகப் போகுது. சரி. வரும் போது வரட்டும். தூக்கம் கண்ணை கட்டியது. சரி. இத்தனை பேர் இங்கிருக்கையில என்னை மட்டும் ஏன் வந்து கேட்டான்? ஒருவேளை நான் மட்டும் நல்லவனா தெரியறேனோ?

கண்டதையும் அசை போட்டபடி வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன். ஆச்சு. மணி பதினொன்னேகால். அதோ வந்துவிட்டது பேருந்து. எங்கிருந்தோ மக்கள் கூட்டம் ஓடி வந்தது. பேருந்து நான் நிற்கும் அருகில் வந்தது. இரண்டாம் ஆளாய் டிக்கெட்டை காட்டினேன். ஆனால் ஏற்விடாமல் ரெண்டு பேர் நடுவில் நின்று அவர்கள் டிக்கெட்டை சரி பார்த்த பின் எல்லோரையும் ஏறவிட்டனர். ரிசர்வ் பண்ணினாலும் இது தான்.

வண்டியில் ஏறி இடம் பாத்து உட்கார்ந்தாச்சு. அப்போ தான் கவனித்தேன். அந்த நான்கு பெண்களும் எனக்கு பின் வரிசையில். அதற்கு அடுத்த வரிசையில் இரு ஆண்கள். ஒரே அரட்டையாய் இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்படித் தான். எப்போதும் நான் டிக்கெட் எடுத்ததில்லை. சூரியாவோ புவனாவோ ப்ரீத்தாவோ யாரோ ஒருவர் எடுப்பாங்க. முன்கூட்டியே பிளான் போட்டு ரயிலில் முன்பதிவு செஞ்சிடுவாங்க. எனக்கும் சதீஷுக்கும் வேலை ஓடிப் போய் ரயிலில் ஏறுவது மட்டும் தான். ஒரே கம்பெனினாலும் வெவ்வேறு டீமில் இருப்பதால் கதையோ கதையா இருக்கும். அடுத்தவங்ககிட்ட திட்டு வாங்கிட்டு தான் தூங்கப் போறதே. இப்போ எல்லோருக்கும் கல்யாணம் ஆயாச்சு. அதான் கடைசி நேரத்துல் பஸ்ல புக் பண்ணி தனி ஆளா கிளம்பறேன். சதீஷ் வேற ஆன்சைட் போயிட்டான். அதெல்லாம் ஒரு காலம்.

எம்பி3 ப்ளேயரை எடுத்து ஒரு காதில் மாட்டிவிட்டு அவர்கள் பேச்சை கவனிக்கலானேன். பையன் பேச ஆரம்பித்தான்.

"ஏய் ராதிகா. இந்தா உன்னோட குடை. இது தான் அன்னிக்கு காப்பாத்துச்சு. ஒசூர்ல செம மழை.."

"ஆமா எத்தன மணிக்கு கிளம்பின?"

"எலக்ட்ரானிக் சிட்டி பஸ் ஸ்டாப்பில ஏறும் போது மணி ஏழேகால். காலையில திருச்சி வரும் போது அடை மழை. வீட்டுக்கு போறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. அம்மா நான் வர்றேன்னா இல்லியான்னு தவிச்சு போயிருந்தாங்க. குடைய பாத்ததும் அவங்களுக்கு ஒன்னும் புரியல.."

"என்னடா என்னிக்கும் இல்லாத வழக்கமா பையன் குடையோட வர்றானேன்னா.."

"ம்ம் அதான் பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்."

"சரி. போதும்..ஆமா நீ ஏன் போன் பண்ணல.."

"போன் பண்ணனும்னு தான் நினைச்சேன். போனதும் நல்லா தூங்கிட்டேன். எந்திருச்சதுக்கு அப்புறம் ஞாபகம் வரல"

பேச்சு ரகளையாயிருந்தது. இது தான் ஆண் பெண் நட்பு. நம் மேல் அக்கறை காட்ட ஒரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணமும் நம் அக்கறையை எதிர்பார்க்கும் ஆணொருவனிருக்கிறான் என்ற எண்ணமும் தான் இந்த உறவின் பாலம்.

அந்த ராதிகா அந்த கூட்டத்திலேயே பிரபலமான பெண் போலும். நிமிஷத்துக்கு ஒரு தரம் 'ராதிகா…ராதிகா..'னு சத்தம். எல்லாம் அடங்க அரை மணி நேரமாயிற்று. அதுவரை ஒரு காதில் பாட்டு கேட்டுக் கொண்டே அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தேன். எங்கியோ தொலைந்து போயிருந்த தூக்கம் மறுபடி கண்ணை சுழற்ற எம்பி3 பிளேயரை அணைத்து விட்டு தூங்க ஆரம்பித்தேன்.

என்னடா இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கறீங்களா? இருக்குங்க. நிச்சயம் இருக்கு. பேருந்து நிலையத்தில் ஆண்கள் கூட்டமா நின்னு பேசிட்டு இருந்தாங்க. அவங்க என்ன பேசறாங்கன்னு கவனிக்கல. ஆனா ஆணும் பெண்ணும் கூட்டமா பஸ்ல ஏறி ஜாலியா பேசிட்டு இருந்ததை பாட்டு கூட சரியா கேக்காம கவனிக்க தோணியது. இது என் வயசுக் கோளாறில்லாம வேற என்னங்க.!

தாமரை
24-03-2008, 02:42 PM
இந்த பிட்டை வீட்ல சொல்லிப்பாருங்க மதி.. அப்பவாவது சீக்கிரம் பொண்ணு பாக்கிறாங்களா பார்ப்பம்..

இல்லையே! சரியா வராதே!... அப்ப அந்த ராதிகாவை பிடிச்சிருக்கா? எந்த ஸ்டாப்ல இறங்கினாங்க எந்த கம்பெனின்னு உங்க அப்பா கேப்பாரே..

பாவம் மதி நீங்க!!!

நீங்களும் எத்தனை கதைதான் யோசிச்சுப் பார்ப்பீங்க! கம்முன்னு உங்க அக்கா யவனிகாவை ஒரு பொண்ணு பார்த்து தரச் சொல்லுங்க..

மதி
24-03-2008, 02:50 PM
இந்த பிட்டை வீட்ல சொல்லிப்பாருங்க மதி.. அப்பவாவது சீக்கிரம் பொண்ணு பாக்கிறாங்களா பார்ப்பம்..

இல்லையே! சரியா வராதே!... அப்ப அந்த ராதிகாவை பிடிச்சிருக்கா? எந்த ஸ்டாப்ல இறங்கினாங்க எந்த கம்பெனின்னு உங்க அப்பா கேப்பாரே..

பாவம் மதி நீங்க!!!

நீங்களும் எத்தனை கதைதான் யோசிச்சுப் பார்ப்பீங்க! கம்முன்னு உங்க அக்கா யவனிகாவை ஒரு பொண்ணு பார்த்து தரச் சொல்லுங்க..

அந்தக் கதையையே ஏன் திரும்ப திரும்ப பேசிக்கிட்டு.. பாக்குற போது பாக்கறாங்க.

இனியும் யாராவது பொண்ணு பாக்கறத பத்தி என்கிட்ட பேசினீங்கன்னா....

ஓன்னு அழுதுடுவேன்.:traurig001::traurig001::traurig001:

இவ்ளோ நாளா பாக்கறாங்க. ஒரு பொண்ண கூட கண்ணுல காட்ட மாட்டேங்கறாங்க...:traurig001::traurig001:

சிவா.ஜி
24-03-2008, 03:47 PM
அதே பேருந்து நிலையத்துல நானும் என் குடும்பமும் ஒருநாள் நின்னிருக்கோம். அன்னிக்கு இரண்டு அமைச்சர்களோட வீட்டுக் கல்யாணம்.அதான் அன்னிக்கு பயங்கரக்கூட்டம்.அதுவுமில்லாம...இந்த பெங்களூரு பசங்க ரொம்ப அதிகமா இருந்தாங்க....ஒரு வழியா பஸ் வந்து....ஆனா ...சேலம் வரைக்கும் நின்னுக்கிட்டுதான் வர முடிஞ்சது.உங்க இந்த பதிவு....பழசை அசைபோட வெச்சிடிச்சி.இன்னும் எழுதுங்க மதி.

அன்புரசிகன்
24-03-2008, 04:26 PM
வேற ஒன்றுமாக இருக்காது. நித்திரையாகி கனவுல அந்த ராதிகா வந்திருப்பா... உங்களை அறிந்தும் அறியாமலேயே கனவு தீப்பிடிக்க தீப்பிடிக்க ராதிகா ராதிகா I LOVE YOU என்று சத்தம் போட்டிருப்பீங்க... :D :D :D

(எப்படி சரியா சொல்ட்டேனா????????????????)

மதி
25-03-2008, 02:52 AM
அதே பேருந்து நிலையத்துல நானும் என் குடும்பமும் ஒருநாள் நின்னிருக்கோம். அன்னிக்கு இரண்டு அமைச்சர்களோட வீட்டுக் கல்யாணம்.அதான் அன்னிக்கு பயங்கரக்கூட்டம்.அதுவுமில்லாம...இந்த பெங்களூரு பசங்க ரொம்ப அதிகமா இருந்தாங்க....ஒரு வழியா பஸ் வந்து....ஆனா ...சேலம் வரைக்கும் நின்னுக்கிட்டுதான் வர முடிஞ்சது.உங்க இந்த பதிவு....பழசை அசைபோட வெச்சிடிச்சி.இன்னும் எழுதுங்க மதி.

மொக்கையா எழுதலாம்னு தான் எழுதினேன். எது மாதிரி எழுதினாலும் படிச்சு நிறை குறை சொல்ற நல்ல உள்ளங்கள் இருக்காங்க. மிக்க நன்றி சிவாண்ணா. இப்போ பேருந்து நிலையத்த விரிவு படுத்தியிருக்காங்க.

மதி
25-03-2008, 02:54 AM
வேற ஒன்றுமாக இருக்காது. நித்திரையாகி கனவுல அந்த ராதிகா வந்திருப்பா... உங்களை அறிந்தும் அறியாமலேயே கனவு தீப்பிடிக்க தீப்பிடிக்க ராதிகா ராதிகா I LOVE YOU என்று சத்தம் போட்டிருப்பீங்க... :D :D :D

(எப்படி சரியா சொல்ட்டேனா????????????????)

ஒரு பையன்.. பொண்ண பத்தி பேசுனா உடனே காதலா..? இன்னும் தமிழ் சினிமா பாத்தே கெட்டு போறீங்க. ராதிகாங்கற பேர் தான் காதில் விழுந்ததே தவிர அந்த நாலு பேரில் யார் ராதிகான்னே தெரியாது. :D:D:D

அன்னிக்கு கனவில்லாம சூப்பர் தூக்கம். குறட்டை விட்டேனான்னு பக்கத்தில் உட்கார்ந்தவரை தான் கேக்கணும்.:icon_b:

யவனிகா
25-03-2008, 10:53 AM
அடேடே...நல்ல வேளை மதி...எனக்கு ஜூனியராகிப் போனீங்க.

இதே போல பஸ்ஸில் நாங்க ரவுசு பண்ணின காலங்கள் எல்லாம் உண்டு.
ஆனா இந்தப் பொண்ணுங்க மாதிரி இல்ல மதி....
பின்னால அப்பாவியா ஒரு பையன் ஆன்னு வாயத் திறந்திட்டு நம்மையே பாத்திட்டு கேட்டிட்டு வர்றான்னா...அவன ஏறெடுத்தும் பாக்காமா...பையன போரடிக்க வெச்சிருக்காங்க...

கடேசிக்கி பின்னால திரும்பி,

சார், மணி என்னன்னு கேட்டிருக்கலாம்.

" எனக்கு மணி பாக்கத் தெரியாதுங்க...பந்தாக்குத் தான் வாட்ச் கட்டிருக்கேன்" மதி.

"பரவா இல்லைங்க...சின்ன முள்ளு பெரிய முள்ளு எங்க இருக்குன்னு பாத்தி சொல்லுங்க" ராதிகா.

"ரெண்டுமே வாட்சில தான் இருக்குங்க...ஹி..ஹி..." மதி.

இப்படி எதாவது பேசினா...பெங்களூரு வர்றாதுக்குள்ள...அம்மா அப்பாக்கு அக்காக்கு சிரமம் இல்லாம மதியே பொண்ணு பாக்கிற வேலைய முடிச்சிருப்பாப்ப்ல....

ச்சேசே...இந்தக் காலப் பொண்ணுக ரொம்ப மோசம்...பக்கத்தில பசங்க இருந்தா பக்கத்து சீட்டு, பின் சீட்டு பசங்கள பாக்க மாட்டேன்கிதுக...

சரியா...மதி...நீ சொல்ல வந்தத நான் சரியா சொல்லிட்டேன்....

மதி
25-03-2008, 12:44 PM
அக்கா...
சூப்பருங்கோ...!
ஒரு திருத்தம்... நான் அவங்க முன்னால உட்கார்ந்து தலையை திருப்பாம கேட்டேன். அதனால் நான் கேட்டுட்டு இருந்தேன்னே அவங்களுக்குத் தெரியாது. :)

அப்புறம் நீங்க சொன்ன மாதிரி நடந்திருக்க வாய்ப்பே இல்ல. ஏன்னா என் வாட்ச்சில முள்ளே கிடையாது. 200 ரூபாய்க்கு வாங்கியது. வாங்க என் வாட்சை காண்பிக்கிறேன். மணி பாக்கவே கஷ்டப்படணும்.

SathishVijayaraghavan
10-04-2008, 07:57 PM
ராஜேஷ் இந்த பதிவு....பழசை அசைபோட வைத்தது... ம் ம் இப்போது படிக்கையில் சின்ன ஆசை... அடுத்த விடுப்புக்கு கே பி என் ல சேர்ந்து பதிவு பன்னிடலாம்.

-சதிஷ்

மதி
10-04-2008, 08:32 PM
ராஜேஷ் இந்த பதிவு....பழசை அசைபோட வைத்தது... ம் ம் இப்போது படிக்கையில் சின்ன ஆசை... அடுத்த விடுப்புக்கு கே பி என் ல சேர்ந்து பதிவு பன்னிடலாம்.

-சதிஷ்

பண்ணிடலாமே..:D:D

அனுராகவன்
11-04-2008, 01:41 AM
அடடே மதி!!
நல்ல கதை கதையா விடுவது உனக்குரியது போல..

மதி
11-04-2008, 01:56 AM
அடடே மதி!!
நல்ல கதை கதையா விடுவது உனக்குரியது போல..

ஏன்க்கா கதை சொல்வது புடிக்கலியா?

சாலைஜெயராமன்
11-04-2008, 03:37 AM
நிஜமாவே வயசுக் கோளாறுதான். அதாவது வயசுக் கோளாறு உங்களுக்கில்ல. உங்க வீட்டுப் பெரியவங்களுக்குத்தான். வயசாச்சுல்லே. பையனோட உள்ளம் இன்னும் புரிபடமாட்டேங்குது.

என்ன பெரியவங்க. ஒரு பொண்ணை புடிச்சு சீக்கிரம் மாட்டுங்க மதிக்கு. பாவம் புள்ளை எத்தனை நாள் இப்படி மன்றத்திலே புலம்பறது.

மதி, உங்க அப்பா அட்ரஸ் குடுங்க. நான் இங்க புதுக்கோட்டை பக்கம்தான், ஒரு நடை போயிட்டு அப்பாவை ஒரு டோஸ் விட்டுட்டு வர்றேன் என்ன,

இனிமே குறட்டைவிட்டே தூங்குங்க

அனுராகவன்
11-04-2008, 03:38 AM
ஏன்க்கா கதை சொல்வது புடிக்கலியா?

எத்தனை நாளையிக்கு கதை சொல்லுரது..
சட்டுபுட்டுன்னு பெண் பார்க்க போகவேண்டியதுதானே
உடனே எஸ் ஒரு வார்த்தை போதும்
அப்பரம் ..டும்..டும்டும் தான்..

மதி
11-04-2008, 10:18 AM
நிஜமாவே வயசுக் கோளாறுதான். அதாவது வயசுக் கோளாறு உங்களுக்கில்ல. உங்க வீட்டுப் பெரியவங்களுக்குத்தான். வயசாச்சுல்லே. பையனோட உள்ளம் இன்னும் புரிபடமாட்டேங்குது.

என்ன பெரியவங்க. ஒரு பொண்ணை புடிச்சு சீக்கிரம் மாட்டுங்க மதிக்கு. பாவம் புள்ளை எத்தனை நாள் இப்படி மன்றத்திலே புலம்பறது.

மதி, உங்க அப்பா அட்ரஸ் குடுங்க. நான் இங்க புதுக்கோட்டை பக்கம்தான், ஒரு நடை போயிட்டு அப்பாவை ஒரு டோஸ் விட்டுட்டு வர்றேன் என்ன,

இனிமே குறட்டைவிட்டே தூங்குங்க

ஆஹா எல்லோருமே சேர்ந்து கிளம்பிட்டீங்களா...? பொறுமையாவே பார்க்கட்டும் விடுங்க. கொஞ்சம் சந்தோஷமா ஊர் சுத்துவோம்.:D:D:D

அக்னி
11-04-2008, 03:44 PM
ஏனுங்க மதி... இது உங்களுக்கே நன்னாருக்கா...
ஒரு காலத்தில, நம்ம தமிழ்ப்படங்கள்ல படத்தின் பெயரை, க்ளைமாக்சில ஒரு தடவையேனும் உபயோகிச்சுப்பாங்க... அந்த டெக்னிக்கை இங்க பயன்படுத்திக்கிட்டீங்களே...

சரி சரி...
நீங்க கேட்ட பாட்டில ஒரு பாட்டையேனும் சொல்லுங்க பாப்பம்.
சொல்ல மாட்டீங்க. கேட்டாத்தானே சொல்லுறதுக்கு.
கேட்டீங்க ஆனா கேட்கலை... அப்பிடித்தானே மதி... (இரண்டையும் கேட்டிருந்தீங்கன்னா, திறமைசாலி இல்லேன்னா காதில குறைபாடு. ஏன்னா, ஒரு சப்தத்தைத்தான் ஒரு தடவையில் முழுமையாக அவதானிக்க முடியும் என்று எங்கோ படிச்ச நினைவு.)

உண்மையிலேயே வயசுக் கோளாறுதான்...
சீக்கிரமா பொண்ணப் பாத்திடுங்கோ... இல்லேன்னா அப்புறம் வயசே கோளாறாகிடும்...

மதி
12-04-2008, 05:36 AM
ஏனுங்க மதி... இது உங்களுக்கே நன்னாருக்கா...
ஒரு காலத்தில, நம்ம தமிழ்ப்படங்கள்ல படத்தின் பெயரை, க்ளைமாக்சில ஒரு தடவையேனும் உபயோகிச்சுப்பாங்க... அந்த டெக்னிக்கை இங்க பயன்படுத்திக்கிட்டீங்களே...

சரி சரி...
நீங்க கேட்ட பாட்டில ஒரு பாட்டையேனும் சொல்லுங்க பாப்பம்.
சொல்ல மாட்டீங்க. கேட்டாத்தானே சொல்லுறதுக்கு.
கேட்டீங்க ஆனா கேட்கலை... அப்பிடித்தானே மதி... (இரண்டையும் கேட்டிருந்தீங்கன்னா, திறமைசாலி இல்லேன்னா காதில குறைபாடு. ஏன்னா, ஒரு சப்தத்தைத்தான் ஒரு தடவையில் முழுமையாக அவதானிக்க முடியும் என்று எங்கோ படிச்ச நினைவு.)

உண்மையிலேயே வயசுக் கோளாறுதான்...
சீக்கிரமா பொண்ணப் பாத்திடுங்கோ... இல்லேன்னா அப்புறம் வயசே கோளாறாகிடும்...
ஹிஹி...
மொக்கை போடப்போனது எனக்கே மொக்கையாயிடுச்சு... நானும் வீட்டில சொல்லிப் பாத்துட்டேன்... உங்க பையனுக்கு வயசாவுதுமான்னு.. பாக்கறாங்க பாக்கறாங்க பாத்துக்கிட்டே இருக்காங்க...:traurig001::traurig001::traurig001:

பூமகள்
12-04-2008, 05:46 AM
ஒரே நேரத்தில் பாட்டு கேட்பதும் நடந்துருக்கு.... குயில்களின் பேச்சும் கேட்டிருக்கு..!!

அசத்தறீங்க மதி..!!
காதுல தேன் வந்து பாஞ்சிருக்கு..!! :rolleyes::rolleyes:

இதைப் போயி எல்லாரும் வயசு கோளாறுன்னு சொல்லிட்டு...!! ;) :D:D

சீக்கிரமே... திருமண ப்ராத்திரஸ்து...!!! :)

அக்னி
12-04-2008, 06:19 AM
பாக்கறாங்க பாக்கறாங்க பாத்துக்கிட்டே இருக்காங்க...:traurig001::traurig001::traurig001:
நீங்களும் கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டேயிருங்க...:linie009: