PDA

View Full Version : என் தோழியே - என் பாதி



நம்பிகோபாலன்
24-03-2008, 08:53 AM
நீ
உன்னை பற்றி
எழுத கேட்டாய்
வியந்தேன்
நான் என்னைப்பற்றி
எழுதியதை
உன்னில் என்னை எழுத
நிறையவே இருக்கிறது
அவற்றில்
நட்பு
காதல்
சோகம்
சந்தோஷம்
கோபம்
கருத்துரிமை
என அனைத்தும்
என்னில் நீ
பார்த்திருக்கிறாய்
உன்னில் நான்
வாழ்ந்திருக்கிறேன்
முடியாத நட்புறவில்
தோழி
நீ என்றும்
என்னில் பாதி...

meera
25-03-2008, 10:36 AM
நம்பிகோபாலன்,

நன்றி தோழமை பற்றி பிரசவித்ததற்கு.

நட்பு மட்டுமே என்றும் நலமான ஒன்று.

kavitha
25-03-2008, 10:41 AM
நட்பு மட்டுமே என்றும் நலமான ஒன்று. சரி தான்.
நட்பில் பாதி, முழுமை என்றேது? அது எதையுமே எதிர்பார்க்காதது. சுயநலமற்றது.

நம்பிகோபாலன்
25-03-2008, 10:47 AM
நன்றி மீராவிற்க்கும், கவிக்கும்.
இந்த எழுத்துக்கள் அனைத்திற்க்கும் என் தோழியே காரணம்
அவளை பற்றி எழுத முயற்சித்த போது வந்த கவிதான் இது.
வாழ்த்துக்களும் அவளையே சேரும்..

ஷீ-நிசி
25-03-2008, 12:52 PM
தோழிக்காய் எழுதின கவிதை சிறப்பு நண்பரே!

நிறைய கவிதைகள் வாசியுங்கள்.. படைப்புகள் படிக்க படிக்க படைக்கும் திறன் கூடும்!

வாழ்த்துக்கள்!

மதி
25-03-2008, 12:53 PM
தோழமை பற்றி நல்ல கவி நம்பி.

நம்பிகோபாலன்
26-03-2008, 05:41 AM
தங்கள் விமர்சனத்திற்க்கு நன்றி ஷீ-நிசி அவர்களே. நிறைய படித்து மேலும் எழுத உங்கள் கருத்துக்கள் என்னை கண்டிப்பாக ஊக்கப்படுத்தும்.

செல்வா
26-03-2008, 08:14 AM
வாழ்த்துக்கள் நம்பி..... ஷீ அண்ணாவின் கருத்துக்களை வழிமொழிகிறேன்..

அனுராகவன்
26-03-2008, 08:18 AM
வாழ்த்துகள் நம்பி..
தொடர்ந்து படைங்கள்..
என் நன்றி