PDA

View Full Version : மிச்சமிருக்கும் வாழ்க்கை....



shibly591
24-03-2008, 08:21 AM
பால்யம் கடந்து விடுகிறோம்
வாலிபம் தாண்டி விடுகிறோம்
வயோதிபமும் அடைந்து விடுகிறோம்
ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் மிச்சமிருக்கிறது இன்னும் வாழப்படாத
வாழ்க்கை.....

அமரன்
28-03-2008, 10:23 AM
நிஜம்தான்....
வாழ்க்கையை முழுமையாக (வாழத்) தெரிவதுக்குள் கூடு விட்டுச் செல்கிறது உயிர்ப் பறவை.

மிச்சங்களும் சில சமயங்களில் வளமான எச்சங்களுக்கு உதவியாக இருக்கும்.

பாராட்டுகள் ஷில்பி.

kavitha
11-04-2008, 11:03 AM
உயிர்ப் பறவை அழகிய எங்கோ படித்த சொல்லாடல்.


ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் மிச்சமிருக்கிறது இன்னும் வாழப்படாத
வாழ்க்கை..... இதை உணர்வது தான் பாரம்.

சுகந்தப்ரீதன்
15-04-2008, 07:42 AM
ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் மிச்சமிருக்கிறது இன்னும் வாழப்படாத
வாழ்க்கை.....

இதை எண்ணும் பொழுதில் இழந்துவிடுகிறோம்..
இக்கட்டத்திலும் வாழாமல் சிலப்பொழுதுகளை..!!

அடிக்கடி இதைபற்றி எண்ணியதுண்டு..
அதை கவிதையாக இன்று கண்டுக்கொண்டேன்..

வாழ்த்துக்கள் ஷிப்லி..!!

நாகரா
15-04-2008, 07:53 AM
வாழுகின்ற வாழ்க்கை பிறப்பு, இறப்பு என்ற மாயச் சுழலில் சிக்கியதால்
இன்னும் வாழப்படாத வாழ்க்கையாக நித்தியப் பெருவாழ்வு காத்திருக்கிறது
அருமையான கவி வரிகள், வாழ்த்துக்கள் ஷிப்லி.

ஓவியன்
17-04-2008, 06:38 AM
வாழப்படாததை நினைத்து ஏங்குவதிலும், வாழ்ந்த, வாழும் வாழ்க்கையை நினைத்து பெருமை கொள்வது மேல் அல்லவா...???

Keelai Naadaan
23-04-2008, 04:53 PM
கூட்டி கழித்து பார்த்தால், கடமைகளை செய்து முடித்தாலே போதும் என தோன்றுகிறது.
எதை செய்தாலும் இன்னும் சிறப்பாய் செய்திருக்கலாம் எனத் தோன்றும், வாழும் வாழ்க்கையும் விதிவிலக்கல்ல.

அனுராகவன்
27-04-2008, 02:03 AM
அருமை கவிஞரே!!
வாழ்க்கை நம் கையில் என்பதை எடுத்துகாட்டுகிறது கவிவரிகள்..
விதியே நினைத்து வாழ்வதை விட்டு மதியே எடுத்து வெல்வோம்..
ம்ம் என் நன்றி!!