PDA

View Full Version : உதிரத்தால் எழுதிய உணர்வுகள்

ஆதி
23-03-2008, 06:11 PM
பத்தாம் வகுப்பில் எழுதியக் கவிதைகள்

என் உதிர மையெடுத்து உயிர்
ஏட்டில் தீட்டிவைத்தேன் ஒருச்சின்னம் - அது
என்நெஞ்ச அழகுமலர் அன்னம்

பஞ்சு மனப்பந்தலிலே அந்த எழில்
பாவைக்கு கொடுத்தேன் மணக்கோலம் - அந்த
பார்வையிலே கவிந்துவிடும் என்காலம்

காலைமலர் கோபுரத்தைக் கண்டபடி என்கண்கள்
கட்டியது காதல் பனிக்கூடு - அது
காய்ந்துவிட்டால் கல்லறையிலென் மண்டையோடு

என்நேச மந்திரத்தை தங்க நிலா
ஏற்றிடதான் என்றென்றும் மறுக்கின்றாள் - ஆனால்
என்கவிதை களைஏனோ ரசிக்கின்றாள்

சதைவீட்டு உள்ளத்திலே சரித்திர காதல்களை
சின்னமகள் உணர்வாலே இசைக்கின்றாள் - அவள்
சிரிப்பாலே இதயத்தை அசைக்கின்றாள்

சித்திரத்தேர் மேடையிலே என்னுள்ள
சின்னமயில் பத்திரமாய் வசிக்கின்றாள் - ஏனோ
சிந்தையிலே என்னுயிரைப் புசிக்கின்றாள்

செல்லப்புறா நிழலை எண்ணி என்னில்
மெல்ல எழுந்தது ஒருக்கனவு - அந்த
மேகத்தின் அழகினிலே என்நினைவு

வந்துவிழும் வார்த்தைகளை வஞ்சியவள் அடிவைத்து
வாழ்கவென என்றென்றும் படிக்கின்றேன் - ஆவியினை
வழங்கவிட தினமும் துடிக்கின்றேன்!

அன்புடன் ஆதி

சிவா.ஜி
23-03-2008, 06:44 PM
ஆதி..தலைப்பு தவறைத் திருத்தி விடுங்கள்(உதிரத்தால்,,,என்று வர வேண்டியது உர்திரத்தால் என்று இருக்கிறது...)விரிவான பின்னூட்டம் பிறகு...

ஆதி
23-03-2008, 06:47 PM
ஆதி..தலைப்பு தவறைத் திருத்தி விடுங்கள்(உதிரத்தால்,,,என்று வர வேண்டியது உர்திரத்தால் என்று இருக்கிறது...)விரிவான பின்னூட்டம் பிறகு...

தட்டச்சுப் பிழையைத் திருத்திட்டேன் அண்ணா..

அன்புடன் ஆதி

ஜெயாஸ்தா
24-03-2008, 03:23 AM
கவிதைகளை ரசிக்கும் கருப்பொருள்....கவிஞனின் நேசத்தை உணர்ந்தும் வெளிக்காட்டாமல்.... :icon_b:

பத்தாம் வகுப்பு படிக்கும் போது எழுதிய பருவக்கவிதை. ஆதி என்ற கவிஞர் உருவாக்கப்பட்ட ரகசியம் இப்போது வெளியாகிவிட்டது. மோனையோடு கூடிய நற்கவி. (ஆமா ஆதி இப்போது பதினொன்றாவது வகுப்புதானே படிக்கிறீர்கள்....? :lachen001: )

meera
24-03-2008, 04:54 AM
ஆ பத்தாவது வகுப்பிலேயே காதல் கவியா சகோதரா. வாழ்க வளமுடன்.

கவிதை நன்று. ஆனால் கவிதை எழுதியதில் ஒரு பக்குவம் தெரிகிறது

நம்பிகோபாலன்
24-03-2008, 06:10 AM
வார்த்தைகளில் விளையாடிருக்கீங்க...
உங்களிடம் நிறைய கற்கவேண்டிருக்கிறது...
மிக அருமை...

ஆதி
24-03-2008, 05:02 PM
பத்தாம் வகுப்பு படிக்கும் போது எழுதிய பருவக்கவிதை. ஆதி என்ற கவிஞர் உருவாக்கப்பட்ட ரகசியம் இப்போது வெளியாகிவிட்டது. மோனையோடு கூடிய நற்கவி. (ஆமா ஆதி இப்போது பதினொன்றாவது வகுப்புதானே படிக்கிறீர்கள்....? :lachen001: )
இந்த கவிதை எழுதிய தருணத்தில் நான் விடுதியில் தங்கிப் படித்து கொண்டிருந்தேன் ஒரு காட்டுக்குள் அங்கு பக்கத்தில் வீடுகளே இருக்காது, நான் படித்த பள்ளியும் ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி, இதை எல்லாம் ஏன் சொல்றேன்னா அப்போ காதல்னா படத்தில் பார்த்ததுதான் சொந்த அனுபவமில்லை, காதல் என்னை கவிஞனாக்கவில்லைங்க.
கவிதைகளைப் பொருத்தமட்டில் இன்னும் பத்தாம் வகுப்பில்தான் இருக்கேன் பதினொன்றாம் வகுப்புக்கு வரவேல்லை :). பின்னூட்டத்திற்கு நன்றி ஜெயாஸ்தா

ஆ பத்தாவது வகுப்பிலேயே காதல் கவியா சகோதரா. வாழ்க வளமுடன்.

கவிதை நன்று. ஆனால் கவிதை எழுதியதில் ஒரு பக்குவம் தெரிகிறது

பத்தாம் வகுப்பிலேயே காதல் கவிதை எழுதினேன் அம்புட்டுதான் காதலிக்கல காதல் அளிக்கல.. ஒரு சிலக் கவிதைகளில் வார்த்தைகளில் வீச்சிருப்பதாக எங்க தமிழைய்யா சொல்லுவார், அந்த வயதில் நான் எழுதிய இன்னும் சில கவிதைகளையும் பதிக்கிறேன். பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி..

அன்புடன் ஆதி

அமரன்
24-03-2008, 05:19 PM
உண்டியல் பிறந்தது சேமிக்க..
சேமிப்பின் உதயமோ
எதிர்கால செலவின் நிமித்தம்..

வீண் விரயம் செய்யா திருப்பதில் உள்ளது
சேமிப்பின் இலக்கு சிதைவடையாதிருப்பது!

காதல் கூட ஒரு விதத்தில்
ஞாபக உண்டியலில் விழுந்த
தங்க நாணயம் தான்..

காதல்க்கவிதைகளும் விதிவிலக்கல்ல.

ஆதி!
உங்கள் தமிழய்யா சொன்னதில் எள்ளவும் கலப்பில்லை.
வார்த்தைகளை பயன்படுத்தும் திறமை பளிச்சிடுகிறது..:icon_b:

சிவா.ஜி
24-03-2008, 06:23 PM
பத்தாம் வகுப்பில் எழுதிய கவிதை என்று சொல்ல முடியாத வகையில்...கவிச்சுவை மிகுந்த கவிதை ஆதி. விளையும் பயிர் முளையிலேயே தெரியுமென்று சொல்வார்கள் அது உங்கள் விஷயத்தில் பொருத்தமாகி விட்டது.

செல்வா
24-03-2008, 10:36 PM
பத்தாம் வகுப்பு தமிழ்வழிக்கல்வி படிப்பவர்களுக்கு... கவிதை எழுத ஆரம்பிக்கும் பருவம் எனக் கூறலாம். ஏனென்றால் யாப்பிலக்கணப் பாடம் விரிவாக அந்த வகுப்பில்தான் இருக்கும். (இப்போது எப்படி என்று தெரியவில்லை). அந்த பாதிப்பில் பெரும்பாலோர் கவிஞர்களாகியிருப்போம். யாப்பிலக்கணத்தின்... பாதிப்பு அப்படி. ஆதியின் இந்த கவிதையிலும் அதன் பாதிப்பை தீவிரமாக உணர்ந்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு ஆதியின் கவிதைகளுக்கும் இப்போதைய ஆதியின் கவிதைக்கும் நிறைய மாற்றங்களை காண முடிகிறது. நிறைந்த பக்குவம் தெரிகிறது. மிகுந்த வளர்ச்சி.. தெரிகிறது. சிவா அண்ணா சொன்ன மாதிரி... விளையும் பயிர்..... :)
வாழ்த்துக்கள் கவிஞரே.....

ஆதி
25-03-2008, 03:54 AM
வார்த்தைகளில் விளையாடிருக்கீங்க...
உங்களிடம் நிறைய கற்கவேண்டிருக்கிறது...
மிக அருமை...

வார்த்தைகள் இன்னும் முழுதுமாய் எனக்கு வசப்படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

மன்றத்தில் ஒவ்வொருத்தரிடமும் கற்க நிறைய இருக்கு நம்பி, உங்களின் காதல் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப அருமையா எழுதுறீங்க.

பின்னூட்டத்திற்கு நன்றி நம்பி..

அன்புடன் ஆதி

நம்பிகோபாலன்
25-03-2008, 06:23 AM
உங்களின் தன்னடக்கமே
உங்களின் வெற்றி என நான் நினைக்கிறேன்.

ஆதி
25-03-2008, 09:54 AM
காதல் கூட ஒரு விதத்தில்
ஞாபக உண்டியலில் விழுந்த
தங்க நாணயம் தான்..

காதல்க்கவிதைகளும் விதிவிலக்கல்ல.

உண்மைதான் அமரன் கவிதைகள் எழுத வயது தேவையில்லை..

அதுபோல் காதலுக்கு வயது தேவை காதல் கவிதைகளுக்கு இல்லை..

ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே - கரை
ஓரத்தில் மேயாதேக் கெண்டைக் குஞ்சே
தூண்டில் காரன் வரும் நேரமாச்சு - நீ
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இந்த கவிதையை பொது உடமைக் கவிஞன் பட்டுக்கோட்டை எழுதிய போது அவனுக்கு வயது 16.. சின்ன வயதிலேயே கருணை கெண்டைக் குஞ்சின் மீது.. ஆனால் இந்தக் கவிஞன் 30 வயதில் இறந்துவிட்டான்.. நாடே அழுதது நாடும் இழந்தது..

பட்டுக்கோட்டையும் என் கவிதைக் குருக்களில் ஒருவர் பெரும்பாலும் திரைப்பாடல்கள்தான் அதிகம் எழுதி இருக்கிறார்..

உறுப்பறுந்து போனாலும்
உள்ளங்க கலங்கேன்
செருப்பறுந்து போனதற்கோ
சிந்தைக் கலங்குவேன்
எனும் லட்சிய வார்த்தைகளை என்றைக்கும் என்னால் மறக்க இயலாது..

அதுப் போலேயே அந்த வயதில் எனக்கு தெரிந்தவைகளை வைத்து நான் எழுத முயன்றேன் இந்த கவிதையை..

பாராட்டுக்கு நன்றி அமரன்..

அன்புடன் ஆதி

ஆதி
25-03-2008, 01:03 PM
பத்தாம் வகுப்பில் எழுதிய கவிதை என்று சொல்ல முடியாத வகையில்...கவிச்சுவை மிகுந்த கவிதை ஆதி. விளையும் பயிர் முளையிலேயே தெரியுமென்று சொல்வார்கள் அது உங்கள் விஷயத்தில் பொருத்தமாகி விட்டது.

ஆமாங்கணா, இந்தக் கவிதையைப் படிக்கிற போதெல்லாம் நானே அட! நீயாடா இது என்று சொல்லிப்பேன்..

பத்தாம் வகுப்பி விடுமுறையில்.. நிலாவை வைத்து ஒரு பாடல் எழுதினேன் நாட்டுப்புறப் பாடல் போக்கில்..

ஒரு காதலன் காதலியை நினைத்துப் பாடுவது போல் அதன் போக்கு இருக்கும் முடிவில்தான் அவன் நிலாவை எண்ணிப்பாடினான் என்று தெரியும்..

ஒரு சில வரிகள் அதிலிருந்து..

அவன் : ராத்திரி வேளையில
ராசாத்தி நீவந்த
காலையிலக் கண்ணதிறந்தா
காணாம போயிட்டியே

இப்படி சில வரிகள்..

முடிவில் நிலா பதில் சொல்வது போல்..

நிலா : அம்மி தேஞ்சாலும்
அழுது புறண்டாலும்
அத்தானே வரமாட்டேன்
அம்மாவாசை நாலையில

பதினொன்றாம் வகுப்பில் என் தமிழ் நோட்டின் பின்புறத்தில் நான் படித்தப் பள்ளியைப் பற்றி ஒரு கவிதை எழுதி இருந்தேன்..

விஜயந்தா என்றொரு பள்ளி - அதில்
விளையாடுவர் மாணவர்கள் துள்ளி

என்று, என் தமிழம்மா இந்த கவிதைப் படித்துவிட்டு ஆசிரியர் அறைக்கு என்னை அழைத்தார், எல்லா ஆசிரியர்கள் முன்னிலையிலும் என்னை படிக்க சொன்னார் படித்து காண்பித்தேன், மறுநாள் பள்ளி ப்ரேயரில் எல்லா மாணவர்கள் முன்னிலையிலும் என் கவிதை அரங்கேறியது.. பிறகு கவிதை நோட்டு போட்டிருக்கியா இருந்தா கூடு படிக்க வேண்டும் என்றார்.. கொடுத்தேன் அவரை அதிகமாய் கவர்ந்த கவிதை இந்த நிலா பாட்டுதான் வெகுவாய் பாராட்டினார்.. வகுப்பில் எல்லா மாணவர்கள் முன்னிலையிலும் வாசித்து காண்பித்தார்..

இப்படி பலபேரின் ஊக்கம் தான் அண்ணா என்னை கவிதை எழுத அதிகமாய் தூண்டியது..

வாழ்த்துக்கு நன்றிங்கண்ணா..

அன்புடன் ஆதி

ஷீ-நிசி
26-03-2008, 05:00 PM
கவிதைகளை படிக்க படிக்க அப்படியே மனம் லயித்து செல்கிறது.

சதைவீட்டு உள்ளத்திலே சரித்திர காதல்களை
சின்னமகள் உணர்வாலே இசைக்கின்றாள் - அவள்
சிரிப்பாலே இதயத்தை அசைக்கின்றாள்

சின்னமகள், முதன்முறையாக வாசிக்கிறேன் நான் இந்த வார்த்தையை...

ஆதி உங்கள் கவிதைகளில் ஒரு அழகிய மென்மை இழைந்தோடுவதை பலமுறை கண்டிருக்கிறேன்...

வாழ்த்துக்கள்!

ஆதி
27-03-2008, 12:32 PM
பத்தாம் வகுப்பு தமிழ்வழிக்கல்வி படிப்பவர்களுக்கு... கவிதை எழுத ஆரம்பிக்கும் பருவம் எனக் கூறலாம். ஏனென்றால் யாப்பிலக்கணப் பாடம் விரிவாக அந்த வகுப்பில்தான் இருக்கும். (இப்போது எப்படி என்று தெரியவில்லை). அந்த பாதிப்பில் பெரும்பாலோர் கவிஞர்களாகியிருப்போம். யாப்பிலக்கணத்தின்... பாதிப்பு அப்படி. ஆதியின் இந்த கவிதையிலும் அதன் பாதிப்பை தீவிரமாக உணர்ந்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு ஆதியின் கவிதைகளுக்கும் இப்போதைய ஆதியின் கவிதைக்கும் நிறைய மாற்றங்களை காண முடிகிறது. நிறைந்த பக்குவம் தெரிகிறது. மிகுந்த வளர்ச்சி.. தெரிகிறது. சிவா அண்ணா சொன்ன மாதிரி... விளையும் பயிர்..... :)
வாழ்த்துக்கள் கவிஞரே.....

உண்மைதான் செல்வா, யாப்பு அறிமுகமாகிய நேரம்..

சங்கம் வளர்த்த தமிழ்
தாய் புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்க தமிழ்
வெல்லு வெல்லும் - ஒரு
காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்

தென்றலுக்கு சீதனமாய்
தேவனவன் தந்த தமிழ்
கன்று குரல் கொண்ட தமிழ்
வெல்லும் வெல்லும் - ஒரு
காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்

சந்தம் நிறைந்த தமிழ்.............
செவ்வரி ஓடிய விழிகள் இரண்டினில் சேலொடு வேலாட - இரு
கொவ்வை இதழ்களும் தொத்து மலர்களும் கொஞ்சி மகழிந்தாட
தெய்வரதத்தினில் சேலை மறைத்திட சிற்றிடை தள்ளாட - நகை
சிந்துப் படித்தவள் பந்துப் பிடித்தனள் முந்தி எழுந்தாட

தோட்டத்திலே தென்னை இரண்டு
முற்றித்திரண்டு - பக்கம் உருண்டு
கண்ணில் தூக்கி நிறுத்திய விருந்து
அதை தொட ஓடிய விழியோடொரு
விழி மோதிய கணமே
என்னைத் தாக்கி தகர்த்தன இரண்டு
பக்கம் உருண்டு - முற்றி திரண்டு
என்னைக் காண அழைத்திட்ட விருந்து..

- கவியரசர் கண்ணதாசன்

இப்படி பாடல்களைக் கேட்டப்பிறகு எழுதாமல் இருக்க இயலுமா செல்வா..

ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்

கண்ணன் மனமென்ன கல் மனமா ?

அண்ணன் செய்த முடிவை கண்ணன் மாற்ற முடியுமா ?

டாக்டர் கலைஞர் - அபிமன்யூ

இப்படி வசனங்களைக் கேட்டப் பிறகும் மனம் எழுத துடிக்காமல் இருக்குமா?

எழுதுகோல்தான் மௌனத்தை மட்டும் வடிக்குமா ?

அன்புடன் ஆதி

ஆதி
02-04-2008, 04:50 PM
கவிதைகளை படிக்க படிக்க அப்படியே மனம் லயித்து செல்கிறது.

சின்னமகள், முதன்முறையாக வாசிக்கிறேன் நான் இந்த வார்த்தையை...

ஆதி உங்கள் கவிதைகளில் ஒரு அழகிய மென்மை இழைந்தோடுவதை பலமுறை கண்டிருக்கிறேன்...

வாழ்த்துக்கள்!

சந்தம் உங்களை தலையசைய வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி ஷீ, புதிது என்று தோன்ற ஒரு வார்த்தைப் பயன்படுதியதும் என்னை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது ஷீ. வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல ஷீ..

அன்புடன் ஆதி

kavitha
04-04-2008, 10:53 AM
அவன் : ராத்திரி வேளையில
ராசாத்தி நீவந்த
காலையிலக் கண்ணதிறந்தா
காணாம போயிட்டியே

இப்படி சில வரிகள்..

முடிவில் நிலா பதில் சொல்வது போல்..

நிலா : அம்மி தேஞ்சாலும்
அழுது புறண்டாலும்
அத்தானே வரமாட்டேன்
அம்மாவாசை நாலையில

பதினொன்றாம் வகுப்பில் என் தமிழ் நோட்டின் பின்புறத்தில் நான் படித்தப் பள்ளியைப் பற்றி ஒரு கவிதை எழுதி இருந்தேன்..

விஜயந்தா என்றொரு பள்ளி - அதில்
விளையாடுவர் மாணவர்கள் துள்ளி

என்று, என் தமிழம்மா இந்த கவிதைப் படித்துவிட்டு ஆசிரியர் அறைக்கு என்னை அழைத்தார், எல்லா ஆசிரியர்கள் முன்னிலையிலும் என்னை படிக்க சொன்னார் படித்து காண்பித்தேன், மறுநாள் பள்ளி ப்ரேயரில் எல்லா மாணவர்கள் முன்னிலையிலும் என் கவிதை அரங்கேறியது.. பிறகு கவிதை நோட்டு போட்டிருக்கியா இருந்தா கூடு படிக்க வேண்டும் என்றார்.. கொடுத்தேன் அவரை அதிகமாய் கவர்ந்த கவிதை இந்த நிலா பாட்டுதான் வெகுவாய் பாராட்டினார்.. வகுப்பில் எல்லா மாணவர்கள் முன்னிலையிலும் வாசித்து காண்பித்தார்..

இப்படி பலபேரின் ஊக்கம் தான் அண்ணா என்னை கவிதை எழுத அதிகமாய் தூண்டியது..
கொடுத்துவைத்தவர் ஆதி நீங்கள். இத்தனை அழகாய் கவிபுனையும் உங்களைச்சுற்றி ஒரு மாணவர் கூட்டம் எப்போதும் இருந்திருக்கவேண்டுமே?

யாரந்த சின்னமகள்?;)