PDA

View Full Version : ஆனந்தத் தாண்டவம்..!



பூமகள்
23-03-2008, 05:41 PM
ஆனந்தத் தாண்டவம்..!!


பிறவா பிறை (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=278786#post278786)யில்
கதறிய கண்கள்
சிரிப்பதைப் பார்க்க..
சென்று வந்தேன்..!!

பூத்து தளிர்க்க
காத்திருக்கும் இளந்தளிர்
சுமந்த தாய்
காண விரைந்திருந்தேன்..!

தங்க முகம் கண்டு - நீ
தங்கும் வரவு அறிந்தேன்..!

கண்ணில் வீற்றிருக்கும்
ஓராயிரம் விடிவெள்ளியில் - மனக்கண்ணில்
புது வெளிச்சம் கண்டேன்..!

மூன்று மாத கருக்கொழுந்தே..!
உமக்கு என் வரவு தெரிந்ததோ??
தாய் வயிறு தாண்டி நீ பார்த்ததை
நான் பார்க்க தவறினேனோ??

கை பிடித்து
உணர்ச்சி பொங்க..
கண்கள் பனிக்க
பேச்சிழந்தேன்..!

என் கவிதையினைப்
பிறவிப்பயன் ஆக்கிய
எம் குலக்கொழுந்து
நீ தான் கண்ணே..!!

பத்தாண்டு தவத்தில்
பிறவா பிறையே (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=278786#post278786) - உன்
பிறப்புக்காக பூக்களுடன்
புன்னகை கொண்டு
பிராத்தனையோடு காத்திருக்கிறேன்..!!

யவனிகா
24-03-2008, 11:56 AM
நல்ல சேதி தாங்கிய கவிதை பூமகள்...
தாயும் சேயும் நலமாய் இருக்க பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்...
பிறவாப் பிறை...பிறக்கப்போகிறது...முழுநிலவாய்...!!!

பூமகள்
24-03-2008, 02:02 PM
பிறவாப் பிறை...பிறக்கப்போகிறது...முழுநிலவாய்...!!!
சூப்பர் அக்கா...!!
ஒற்றை வரியில் ஓராயிரம் மகிழம் பூக்களைத் தூவி வாழ்த்திட்டீங்க..!!

எனக்கு மட்டற்ற ஆனந்தம்.. அதான் இக்கவிதை..!!
உங்க ஆசிகளோடு நலமுடன் முழு நிலவு பூமிக்கு வர மன்றத்தாரோடு பிராத்திக்கிறேன். :)

உங்க அன்பான பின்னூட்டத்துக்கு நன்றிகள் யவனி அக்கா. :)

kavitha
04-04-2008, 11:16 AM
பிறைநிலா முழுநிலா ஆனதா பூமா?

பூமகள்
04-04-2008, 02:26 PM
பிறை வளர்ந்து வருகின்றது கவி அக்கா...!!
பௌர்ணமிக்காக காத்திருக்கிறேன்..!! :)