PDA

View Full Version : காதல் தமிழ்



ஆதி
23-03-2008, 05:32 PM
பத்தாம் வகுப்பு படிக்கையில் எழுதிய கவிதை

எத்தனைப்பேர் காதலித் திருப்பார்
எனக்கும் காதலென் தமிழ்மீது
சுத்தம் உடைய சுயநலமில்லா
சுவை மிகுந்த சுகக்காதல்
சத்தமின்றி தத்துவம் போல
சஞ்சரித்த காதல்; உள்ள உணர்வின்
வித்துமிதுவே; இந்த காதல்
வீணா குமோ?உயிர் போகுமே!

கட்டு மலரின் கவின்சிரிப்பில்
கற்பனைவந்த தடமே கவிதை
பட்டுமேகம் பறந்து அலைந்து
படித்த சுவைப்பாடல்! எந்தமிழ்
மொட்டு என்னில் பூத்துஎன்
மனஏட்டில் நின்று ஆடி
வட்டச்சுவடாய் எனக்குள் வளர்ந்து
தேயா நிலாவாய் ஒளிரும்! மளிரும்!

'அ'கரத்தில் கருவாகி அகிலத்தில் விழுந்த
அழகுஏடு! உயிரெழுத்தில் உயிராகி
முகம்பூத்து! முப்பாலில் சத்தாகி
முழுப்பிறையாய் மலர்ந்து! உயிர்மெயென்றாகி
சுகமாய் வளர்ந்து சுவைமிகுத்து
சிறந்து சான்றோரின் அறிவினில்
சிகரம் எனஎழுந்து நிற்கும்
சின்னமகள் எண்ணமகள் தமிழாள்! எழிலாள்!

வல்லினத்தில் வீரம்தந்தாள்; என்னுயிர்க்கு
வண்ணம் தந்தாள் வளர்ச்சி தந்தாள்
மெல்லினத்தில் அன்புதந்தாள் அமைதியென்று
மனதில் நின்றாள்; ஆசைக்குழவி
சொல்லினத்தில் வாய்தவழ்ந்து; எனக்குள்
சங்கமமாகி; இடையினமாய் நின்றுநீதி
சொல்லும்நிலைக் கொண்டாள்; எனக்கு
எல்லையில்லா எழுத்து தந்தாள்

வாழ்ந்தவரை அவளை நினைத்து வாழ்ந்து
வந்த நிலையில் அவளை வடித்து
பால்மதியாய் பதப்படுத்திய பா-வாணி
பனித்திரையை; பண்பாடி வாழ்வேன்
வீழ்ந்தாலும் தமிழால் வீழ்வேன்
விட்டு விலகாமல் அவளுக்குள்ளே
ஆழ்ந்து அவள்நினைவை அணிந்து
அகிலத்தில் நடப்பேன்! ஆயுள் கடப்பேன்!

அன்புடன் ஆதி

ஷீ-நிசி
24-03-2008, 06:06 AM
ரொம்ப நல்லாருக்குங்க. செய்யுள் வடிவ கவிதை போல... வாழ்த்துக்கள்!

ஆதி
24-03-2008, 05:07 PM
ரொம்ப நல்லாருக்குங்க. செய்யுள் வடிவ கவிதை போல... வாழ்த்துக்கள்!

வடிவம் செய்யுள் போல இருந்தாலும் அதிற்குடைய இலக்கணம் எதுவும் இருக்காது நிசி..
தமிழைப்பாடனும் என்கிற தணியாத ஆசையால் எழுதியது.. வாழ்த்துக்கு நன்றி நிசி..

அன்புடன் ஆதி