PDA

View Full Version : சிதையில் எரிகிறது மரணம்



நாகரா
21-03-2008, 08:18 AM
சிதையில் எரிகிறது மரணம்
என்னை ஈன்றெடுத்த என் ஐயன்
என்றும் இறவாது வாழும் உண்மை
பெருந்தீயாய் மூண்டு
மரணத்தைப் பொசுக்குகிறது.
மரணத்தின் சாம்பலைப் பூசி
வெளுத்த தன் மெய்யுடம்பில்
மயான பூமியில்
பேரின்பப் பெருவாழ்வின் மெய்யுணர்த்தும்
ஆனந்தத் திருநடம் புரிகின்றான்
என் ஐயன் நடராஜன்.
மயான பூமியில்
மாறி மாறிப் பதியும்
நடராஜனின் தாள்கள் எழுப்பும்
மகுடி நாதத்தில் எழுந்து
படமெடுத்தாடுகின்றேன்
நாகராஜன் நான்.
மகனென் ஆட்டங்கண்டு மகிழ்ந்துத்
தன் முடி மேல் என்னைச் சூடுகின்றான்
என் ஐயன் நடராஜன்.
அவனாட
அவனோடு அவன் முடியில் நானாட
மாயையின் பொய்யாட்டம் முடிகிறது
மயான பூமியில்.
மயான பூமியின் மார்பைப் பிளந்து
அருட்பெருங்கடவுளின் சுந்தர இருதயம்
மலர்கிறது.
மனிதம் அமர தேவமாய் எழுகிறது
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்.

பி.கு: என் தகப்பனார் 16/03/2008 அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

ஜெயாஸ்தா
21-03-2008, 08:38 AM
அவனிடமிருந்து வந்தோம். அவனிடமே செல்கிறோம். உங்கள் துக்கத்தில் நாங்களும் பங்கெடுத்து கொள்கிறோம்.

சிவா.ஜி
21-03-2008, 08:42 AM
ஐயன் பூசும் சாம்பலில் அவரும் ஒரு துளியாய் கலந்துவிட்டார்.
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
உங்களோடு துணையாய் என்றுமிருக்கும் இந்த மன்ற உறவு.

இளசு
21-03-2008, 08:57 AM
உங்கள் துயரத்தில் பங்குகொள்கிறேன் நாகரா அவர்களே!

ஆர்.ஈஸ்வரன்
21-03-2008, 10:02 AM
தங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

நம்பிகோபாலன்
21-03-2008, 11:05 AM
வாழ்க்கையை கற்றுகொடுத்தவர்கள் நம்மை விட்டு பிரியும் துன்பம் சொல்லிமாளாது.தங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

சாலைஜெயராமன்
21-03-2008, 11:35 AM
கனத்த இதயத்தோடு கவிதையைப் படித்து முடித்தேன் திருமிகு நாகரா அவர்களே. தங்களை மன்றத்துப் பக்கம் பார்க்காதபோதே நினைத்தேன். ஏதோ ஒரு அவசர நிமித்தம் தங்கள் வருகைக்கு தடைபோட்டுள்ளது என்று மட்டும் உணர்ந்திருந்தேன்.

முதலில் கவிதையைப் படிக்கும் போது நிலையாமையைப் பற்றி கூற வரும் ஒரு மெய்யுணர்வு பட்டது. பின் குறிப்பில் தான் தங்கள் தந்தைதையின் மரணத்தைச் சுமந்த செய்தியின் தொகுப்பென்று உணர்ந்து கொண்டேன். ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு என் அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரதி
21-03-2008, 01:03 PM
கடைசி வரி படித்து மிகுந்த வருத்தமடைந்தேன் நாகரா.
ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்கல்களும்.
தந்தையாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

அமரன்
21-03-2008, 03:42 PM
உங்கள் துயர் பகிர்கின்றேன் நாகரா.
தந்தையாரின் ஆத்மசாந்திக்கு எனது பிரார்தனைகள்.

meera
21-03-2008, 10:27 PM
தந்தையின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

ஓவியா
22-03-2008, 12:58 AM
நாகரா அண்ணா,
இன்றுதான் கண்டேன். என் ஆழ்ந்த வருத்தங்கள்
அப்பாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

அனுராகவன்
22-03-2008, 07:25 AM
ஐயகோ..அந்தோ செய்தி!!
நானும் இன்றுதான் பார்த்தேன்..
நாகரா மனம் தளரவேண்டாம்..
நாங்கள் இருக்கிறோம்..
என் ஆழ்ந்த அனுதாபங்கள்..
தந்தையாரின் ஆத்துமா சாந்தியடைய என் பிராத்தனைகள்..
எல்லாம் வேலையும் செய்து மன்றம் திரும்பவும்!!!

சுகந்தப்ரீதன்
22-03-2008, 07:35 AM
நாகரா அண்ணா...!!

தங்கள் தந்தையாரின் ஆத்மா பூரணமாய் சாந்தியடைய அந்த ஆண்டவனை வேண்டி தங்கள் துக்கத்தில் பங்கு கொள்கிறேன்..!!

நாகரா
29-03-2008, 07:26 AM
என்னை ஈன்றெடுத்த ஐயனின் ஆன்மா சாந்தியடைய நம் ஐயனாம் ஆண்டவனை வேண்டும் தமிழ் மன்ற உறவுகளுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள்.

உங்கள் அன்பன்