PDA

View Full Version : விடுமுறை மதியம்...!



சிவா.ஜி
20-03-2008, 12:44 PM
விடுமுறை தினத்தின்
வெறுமையான மதியப்பொழுது
விரவிக் கிடந்த மௌனம்
விபரீத எண்ணங்களை விதைத்தது..
கனத்த தனிமை கழுத்தைப் பிடித்தது...
லகானில்லாத குதிரையாய்
கனைத்துக்கொண்டு கிளம்பியது கற்பனை
சாத்தானுக்கு அன்று நல்ல விற்பனை!

அழிந்துவிட்டதாய் நினைத்த
கடந்தகால கசப்பு நினைவுகள்
மரணித்த உடலாய்
மனக்குளத்தின் மேலெழும்பி மிதந்தது...
வீச்சம் விஷமாய் மெள்ள
மூளையைத் திண்ணத்தொடங்கியது...
இதுவரை எண்ணிப் பார்க்கா கோணங்களை
எனக்குக்காட்டி இளித்தது......

முற்றாய் என்னை இழந்து
மூச்சுமுட்டுமுன்
இரட்சகனாய் அலறியது அலைபேசி
அடுத்தடுத்துக் கேட்ட அன்பு தோய்ந்த
ஆறுதல் வார்த்தைகள்
விஷமுறிவு வேலையை செய்ய
மிதந்த பிணம் மூழ்கியது...
சாத்தான் கடையடைத்து கிளம்பியது
அடுத்தமுறை ஒன்றுவாங்கினால் ஒன்று இலவசம்
என்ற அறிவிப்போடு...!!

யவனிகா
20-03-2008, 01:26 PM
தனிமையில் இருக்கையில் தெய்வத்துடனோ அல்லது சாத்தானுடனோ பேசிக்கொண்டிருப்பது நல்லது தான். தெய்வம் வந்தால் அதைப் பேசச் சொல்லி நாம் கேட்கலாம். சாத்தான் வந்தால் நாம் பேசி அதைக் கேட்கப் பணிக்கலாம்.

அண்ணா...உங்க கவிதை ரெண்ட எடுத்து சாத்தானுக்கு காட்டி இருக்க வேண்டியது தான...யாருன்னு நினைச்சே..கவிஞனாக்கும் அப்படின்னு.

அதிர்ச்டசாலி அண்ணா...விடுமுறை மதியத்த எப்படி எல்லாம் கழிக்கறீங்க...மறுபடியும் சாத்தான் வந்துச்சுன்னு வெச்சுக்கோங்க...தங்கச்சிக்கு மிஸ் கால் குடுங்க...விடுமுறை மதியத்திற்கு சாத்தான சில்லி சிக்டிபைவ் செய்திரலாம்.

அழகான கவிதை...வாழ்த்துக்கள் அண்ணா...

வெள்ளிக்கிழமையே
விடுமுறைநாளே
நீயே
கவிதைதான் எனக்கு
நிதானித்துப் படிக்கும் முன்
முடிந்து விட்டாலும்
வேறெந்த கவிதைகளை விடவும்
ஆசுவாசம் அளிக்கிறாய்...

சிவா.ஜி
20-03-2008, 03:22 PM
மறுபடியும் சாத்தான் வந்துச்சுன்னு வெச்சுக்கோங்க...தங்கச்சிக்கு மிஸ் கால் குடுங்க...விடுமுறை மதியத்திற்கு சாத்தான சில்லி சிக்டிபைவ் செய்திரலாம்.

வெள்ளிக்கிழமையே
விடுமுறைநாளே
நீயே
கவிதைதான் எனக்கு
நிதானித்துப் படிக்கும் முன்
முடிந்து விட்டாலும்
வேறெந்த கவிதைகளை விடவும்
ஆசுவாசம் அளிக்கிறாய்...
மசாலாவெல்லாம் நிறைய எடுத்துட்டு வந்துடுங்க...

உங்க பின்னூட்டக் கவிதை...ஆஹா...அசத்தல் ரகம்.கண்டிப்பா நீங்க சொன்னது ரொம்ப ரொம்ப உண்மை...வாசித்து முடிக்கறதுக்குள்ள முடிஞ்சிடுற கவிதை மாதிரிதான் வெள்ளிக்கிழமை ஓடிடுது...இருந்தாலும்..திரும்பத் திரும்ப வாசிக்கனுன்னு நினைக்க வைக்குது(அடிக்கடி லீவ் வேணுமான்னு கேக்கறது புரியுது..)

நன்றிம்மா.

இளசு
20-03-2008, 07:10 PM
An idle mind is Devil's workshop!

- என் அப்பா சொல்லி எனக்குள் புதைந்த வாசகம்!

மன்றம் வந்தபின் மனம் ''சும்மா'' இருந்த காலங்கள் குறைவு!

புலியுடன் படுக்கலாம்
நெருப்பிலே குளிக்கலாம்
மனத்தை நிச்சலனமாக்கி
கணமேனும் நிறுத்தல் அரிது!

Relaxation = Change of Work!
இதுவும் அப்பா சொன்னதே!

வாசிப்பதும் பயணிப்பதும்
பேசுவதும் எழுதுவதும்
ஓய்வுகளாய் மாறிப்போனால்
சாத்தான் வரும் வாசல்
சர்வகாலம் மூடியே இருக்கும்!

சிவாவின் உள்ளூர்ந்த கவிதையும்
யவனிகாவின் உள்ளம் சொன்ன கவிதையும்
நன்று.. நன்று... பாராட்டுகள்!

செல்வா
20-03-2008, 10:47 PM
பொதுவாக மனதில் ஏதேனும் தோன்றினால் அதை அடக்க கூடாது அதைப்பற்றி நினைப்பதை தவிர்க்க மனத்தை வேறு விசயங்களுக்குத் திருப்பவேண்டும் என சொல்வார்கள். நுண்கலைகள் அனைத்துமே நமது மனத்தைக் கட்டிப்போட்டு வேறு எதிலும் சிந்தை செல்லாமல் பாதுகாக்கும். அது இசையாக இருக்கலாம். இலக்கியமாக இருக்கலாம். விளையாட்டுக்களாக இருக்கலாம். வாழ்த்துக்கள் அண்ணா நினைப்பதை எல்லாம் கவிதையாக மாற்ற எப்படி இயலுகிறது... கற்றுக் கொடுங்களேன்.

சிவா.ஜி
21-03-2008, 05:48 AM
An idle mind is Devil\'s workshop!

வாசிப்பதும் பயணிப்பதும்
பேசுவதும் எழுதுவதும்
ஓய்வுகளாய் மாறிப்போனால்
சாத்தான் வரும் வாசல்
சர்வகாலம் மூடியே இருக்கும்!

எனக்குள்ளும் மிக ஆழமாக இணைந்துவிட்ட வாசகம் இது.இளசுவின் வழிகாட்டலி நிச்சயமாக அந்த சாத்தான் வரும் வாசல் அடைபட்டுவிடுமென்பது உண்மை.

சும்மா இருப்பதை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது.

மிக்க நன்றி இளசு.

சிவா.ஜி
21-03-2008, 05:52 AM
பொதுவாக மனதில் ஏதேனும் தோன்றினால் அதை அடக்க கூடாது அதைப்பற்றி நினைப்பதை தவிர்க்க மனத்தை வேறு விசயங்களுக்குத் திருப்பவேண்டும் என சொல்வார்கள். அண்ணா நினைப்பதை எல்லாம் கவிதையாக மாற்ற எப்படி இயலுகிறது... கற்றுக் கொடுங்களேன்.
மிகச் சரி செல்வா.ஆனால் சில நேரங்கள் அப்படி வாய்த்துவிடுகிறது...ஆதற்காகவே காத்துக்கொண்டிருப்பதைப்போல சாத்தானின் குத்தாட்டம்...தொடங்கிவிடுகிறது..அப்படி போடு..போடு என்று ஆட ஆரம்பித்துவிட்டால்...நாமே ஆடி விடுகிறோம்.அதைத் தவிக்க நிஜமாவே ஆடலாம்,பாடலாம்,இசையில் மூழ்கலாம்...

உங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டுமா....விளையாட்டு போதும்...புகுந்து வீடு கட்டுங்கள்....உங்கள் எண்ணங்களையும் கவிதையாய் மாற்றுங்கள்.தயக்கம் உடைத்து...வெளுத்துக்கட்டுங்கள்.

பூமகள்
21-03-2008, 10:57 AM
சாத்தானின் வருகை
சத்தமின்றியும் நிகழும்..

பயந்து வியர்த்து
எழுந்த பாதி இரவுகளிலும்..
யாருமற்ற ஒற்றையடிப் பாதை
பயணத்திலும்..
அடி மனதின் அழுகைக் குரலில்
அரக்க சிந்தனை விழிக்கையிலும்..

அந்த கணத்தின்
மாசு போக்க...
மனம் தேடும்
நல்ல நட்பு..!!

நற்பண்புடையாரோடு
உறைந்தால் - சாத்தான்
வந்த வழியே..
ஊர் திரும்பும்..!!

-------------------
நான் எழுத நினைத்ததை இளசு அண்ணாவே எழுதிட்டார்... அழகிய கருத்து அண்ணலே...!! :)

An idle brain is devil's Workshop.

என்பது எத்தனை உண்மை.... மனம் ஒரு குரங்கு என்று சொன்னதும் உண்மையோ உண்மை..!!

சும்மா இருந்து நினைவுகளை தள்ளி நின்று கண்காணித்தால்... மலைத்துப் போவோம்.. மனம் ஓடும் வேகத்தில் தடுமாறித்தான் போவோம் பல சமயம்..!!

சிவா அண்ணா.. கிட்டத்தட்ட எனது உணர்வலைகளும் இதில் கண்டேன்.. கவிதைக் கரு மிக நன்று..!!

இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க சிவா அண்ணா.. ஏன்னா.. என் போலவே யோசிக்கிறீங்க.. ஆனா பூவு சொல்வதை விட நீங்க சொல்வது தான் சூப்பரா இருக்கு எல்லா கருத்தும்..!!

மதி
21-03-2008, 04:54 PM
தனிமை பயம் இப்பவும் எனக்குண்டு. தனித்திருத்தல் தேவை. அதே சமயம் தேவையில்லாத ஆழ்மனத்தினில் புதைந்த சில நினைவுகள் சாத்தானாய் மேலெழும்.

அருமையாக வடிக்கப்பட்ட கவிதை. அதற்கு யவனி அக்காவின் பின்னூட்டக் கவிதையும் அருமை.

சிவா.ஜி
22-03-2008, 04:34 AM
[quote=பூமகள்;சும்மா இருந்து நினைவுகளை தள்ளி நின்று கண்காணித்தால்... மலைத்துப் போவோம்.. மனம் ஓடும் வேகத்தில் தடுமாறித்தான் போவோம் பல சமயம்..!!
/quote]
நல்லதொரு கவிதையுடன் அழகான பின்னூட்டம் இட்ட தங்கைக்கு மிக்க நன்றி.வெறுமையான தனிமை சில நேரங்களில் விபரீத எண்ணங்களை உருவாக்கும்...அப்போது மனதின் கட்டுப்பாட்டுக்குள் மூளை வந்துவிட்டால் கஷ்டம்தான்.அதனால்...முடிந்தவரை அப்படிப்பட்ட சிந்தனைகள் தோண்றத்தொடங்கியதுமே மனதை வேறு ஆரோக்கியமான செயலுக்கு திசைதிருப்பிவிடவேண்டும்.

சிவா.ஜி
22-03-2008, 04:35 AM
தனிமை பயம் இப்பவும் எனக்குண்டு. தனித்திருத்தல் தேவை. அதே சமயம் தேவையில்லாத ஆழ்மனத்தினில் புதைந்த சில நினைவுகள் சாத்தானாய் மேலெழும்.

அதேதான் மதி.தேவையற்ற சிந்தனைகள் மனதை ஆட்கொண்டால் அவஸ்தைதான்.
யவனிகா மற்றும் பூவின் கவிதை இரண்டுமே அருமை.

மிக்க நன்றி மதி.

சுகந்தப்ரீதன்
22-03-2008, 05:03 AM
வாழ்த்துக்கள்...அண்ணா...!!

எல்லோருக்கும் நிகழ்வதுதான் இது என்றாலும் அதை கவிதையில் கருவாக்கி உருவாக்க உங்களால் முடிந்திருக்கிறது..!!

இனிவரும் காலங்களில் சாத்தானோடு சமாதானம் செய்து கொள்வோம்..சரியா அண்ணா..?!!

சிவா.ஜி
22-03-2008, 06:10 AM
இனனிவரும் காலங்களில் சாத்தானோடு சமாதானம் செய்து கொள்வோம்..சரியா அண்ணா..?!!

வேற வழி...சமாதானமாப் போகவேண்டியதுதான்...நைஸா பேசி வெளியே தள்ளி வாசலை அடைச்சுடவேண்டியதுதான்....

பின்னூட்டத்திற்கு நன்றி சுகந்த்.

அமரன்
24-03-2008, 08:30 AM
தனிமை...
சாத்தானின் கொலைக்கூடம் மட்டுமா-நற்
சிந்தனைகளின் கலைக்கூடம் இல்லையா?

ஏனில்லை..

ஒவ்வொரு தனிமையும்
என்னை தைத்து செல்லும்போது
அழகிய ஆடை
இறுதியில் கிடைக்கிறது..

சல்லடை அதிகமானால்
எண்ணம் அதன் வழி ஒழுகிறது..
அமோக நல்லறுவடை தருகிறது.


பலருக்கு ஏற்படுவது. எனக்கும் ஏற்பட்டு அவதிகளை தந்தது. வெறுமை என்பதே நாம் ஏற்படுத்திக்கொள்வது என்னும் மனோநிலைக்கு நான் வந்தபோது மஞ்சள் வெயில் என்மீது படத்துவங்கியது. அந்த தருணங்களுடன் தென்றலில் தவழ்ந்து வரும் பனிவார்த்தைகளும் சேர்ந்தால் சொல்லத்தேவை இல்லை. மிதமான குளிர். இதமான சூடு. ரம்மியமாகும் சூழலும் அகமும்.

அந்தப் பனிவார்த்தைகளில்தான் சூட்சுமமே இருக்கு. கர்ண கொடூரக் குரலெடுத்து கத்தும் பிராணி. மரங்களிலிருந்து காற்றில் சுரம்பிடித்து இன்னிசை விருந்து செய்யும் இலைகள். அவ்வின்னிசைக்கு தலை சாய்க்கும் கிளைகள். நர்த்தனமாடுமாடும், தாண்டவமாடும் விருட்சங்கள்.. முகில் போடும் கலையும் கோலங்கள். இப்படி எத்தனையோ பனிவார்த்தைகளை இயற்கை தரும். அதையும் தாண்டி அறிவியலின் சிறிய ரக அனுகுண்டான அலைபேசி தரும் மனிதம் குழைத்த வார்த்தைகள்.

பாரட்டுகள் சிவா!

சிவா.ஜி
24-03-2008, 08:38 AM
தனிமை...
சாத்தானின் கொலைக்கூடம் மட்டுமா-நற்
சிந்தனைகளின் கலைக்கூடம் இல்லையா?

ஏனில்லை..


மிக அருமையான பாசிட்டிவ் சிந்தனை அமரன். மிகச்சில நேரங்களில் இப்படி நல்ல சிந்தனை வரும்...ஆனால் மனித மனம் என்பது நிலையற்றது....வெகு பல நேரங்களில்....சுய கழிவிரக்கத்தையே அதிகம் விரும்பும்...வக்கிரத்தையே....நாடும்.....வக்கிரம் என்பது அசிங்கத்தை பற்றி மட்டுமல்ல.....சில விகார சிந்தனைகளைத்தான் அப்படி சொல்கிறேன்.
நன்றி அமரன்.