PDA

View Full Version : FTP server என்றால் என்ன?



சூரியன்
19-03-2008, 04:20 PM
நண்பர்களே Ftp server என்றால் என்ன ?
அதன் பயன் என்ன ?
எனபதை சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அன்புரசிகன்
19-03-2008, 05:52 PM
File Transfer Protocol இதைத்தான் FTP என்பர்.

சாதாரணமாக Server - Client என இரு தகவல் தளங்கள் உண்டு. உதாரணமாக yahoo or tamilmantram இணையம் நீங்கள் பாவிக்கும் போது அவர்களின் கணினி server - வழங்கி ஆகவும் உங்கள் கணினி Client ஆகவும் தொழிற்படும். தவிர கோப்புக்களை வழங்கி பெறும் முறையை FTP என்கிறார்கள்.

ASP PHP JSP போன்றன Server side language என்பர். அவை ஒரு சில இயங்குதளங்களில் (IIS , APACHE)தான் இயங்கும். காரணம் அவை உங்கள் கணினியிலிருந்து இயங்குபவை அல்ல. அதனால் இவை இயங்குவதற்கு இணையம் அவசியமாகிறது. மாறாக JAVASCRIPT ஆனது Client side language எனலாம். காரணம் அவை உங்கள் கணினியிலேயே இணையஇணைப்பு இல்லாமலேயே இயங்கும். நம் மன்றின் கீழ்பக்கங்களில் காணப்படும் Unicode Converter ஆனது இணையவசதி இன்றியே இயங்கக்கூடியது. காரணம் அதற்கான கட்டளைகள் javascript இனால் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆனால் நீங்கள் உங்கள் கணினியையும் Server ஆக மாற்றலாம். அதற்கு உங்கள் கணினியில் அந்த இயங்குதள மென்பொருட்க்களை நிறுவி செயற்படுத்தலாம்.

praveen
20-03-2008, 05:31 AM
அன்புரசிகன் தான் இதற்கு பொருத்தமான நபர். மிகவும் சிறப்பாக விளக்கி விட்டார். பொதுவாக இது தனிநபர் பயன்பாட்டிற்கு வராது, சிறந்த முறையில் இனையத்தில் கோப்புகளை கையாள மட்டுமே ஏற்ற முறை.

சூரியன்
21-03-2008, 04:11 PM
மேலும் பல தளங்களில் நான் பார்த்துள்ளேன்.Direct Link from ftp server ஏன்று உள்ளதே அதற்கு என்ன அர்த்தம்.

அன்புரசிகன்
21-03-2008, 04:24 PM
அந்த பெயரிலேயே அதற்கான விளக்கம் உள்ளதே சூரியன்....

உதாரணமாக நம் மின்னூல் பகுதியில் download என்பதை அழுத்தினால் பதிவிறக்கச்சொல்லி வரும் செய்தி direct link ஆல் வருவதல்ல. அவை redirection செய்யப்பட்டு அந்த கோப்பிற்கு நெறிப்படுத்தப்படும்.

நீங்கள் பார்க்கும் ஒரு கோப்பு நேரடியாக இருந்தால் அது இவ்வாறு தான் தோன்றும்....

ftp://www.tamilmantram.com/abc.xyz

அதாவது நேரடியாக அந்த கோப்பிற்கு நீங்கள் செல்லமுடியும். மாறாக அந்த server side language இனால் நெறிப்படுத்தப்பட்டு மேற்கூறிய கோப்பை நீங்கள் அடைந்தால் அவை direct link ஆக கருதப்படமாட்டாது.