PDA

View Full Version : தோற்பதற்கான போர்



pathman
19-03-2008, 07:02 AM
என் இதய தேசத்தை ஆக்கிரமிக்க வந்தவளே
நான் வல்லரசாய் இருந்தால் படை நடத்தலாம்
உன்னிடம் என் வளமெல்லாம் இழந்ததால்
சிற்றரசனாகி விட்டேன்.

உன் கண்கள் சுடும் தூரத்தில் நான் இருப்பதால்
தாக்குதல் நடத்த முடியவில்லை தற்காப்பு தேடுகிறேன்

உன் புன்னகை பனி மழையில் நனைந்ததால்
என் இமை குழந்தைகள் தூங்க மறுக்கின்றன

உன் தாக்குதலின் வேகத்தில் காயப்பட்ட இதயம்
இன்பத்தில் வலிக்கின்றது

அதற்காக போர் நிறுத்தம் கேட்கவில்லை நான்

போர் நடக்கட்டும் முடிவில் நான் தோற்கட்டும்

பென்ஸ்
19-03-2008, 07:52 AM
தோல்வியின் ஒப்பந்தம் - திருமணமா பாத்மன்..??

நல்ல கவிதை ...

வாழ்த்துகள்....

அல்லிராணி
19-03-2008, 08:58 AM
என் இதய தேசத்தை ஆக்கிரமிக்க வந்தவளே
நான் வல்லரசாய் இருந்தால் படை நடத்தலாம்
உன்னிடம் என் வளமெல்லாம் இழந்ததால்
சிற்றரசனாகி விட்டேன்.

பீச்சில் சுண்டல் வாங்கிக் கொடுத்ததை எல்லாம் ஞாபகம் வச்சுகிட்டு கணக்கு சொல்றீங்களே! சுண்டல் சுரண்டல்வாதியா நான்???:D:D:D

உன் கண்கள் சுடும் தூரத்தில் நான் இருப்பதால்
தாக்குதல் நடத்த முடியவில்லை தற்காப்பு தேடுகிறேன்

சுடும் கண்களையே சுட நினைக்கிறீங்களே:rolleyes::rolleyes::rolleyes:


உன் புன்னகை பனி மழையில் நனைந்ததால்
என் இமை குழந்தைகள் தூங்க மறுக்கின்றன

பேசும் பொழுது பன்னீர் தெளிச்சிடுச்சி. உண்மைதான் அதுக்கு இப்படியா பப்ளிக்ல போட்டுக் கொடுத்த்து மானத்தை வாங்கறது???:eek::eek::eek:

உன் தாக்குதலின் வேகத்தில் காயப்பட்ட இதயம்
இன்பத்தில் வலிக்கின்றது

உடனே ஈஸிஜி எடுத்திருங்க.. கூடவே ஒரு எல்,ஐ.சி. பாலிஸியும். :rolleyes:

அதற்காக போர் நிறுத்தம் கேட்கவில்லை நான்
போர் நடக்கட்டும் முடிவில் நான் தோற்கட்டும்

முடிவில நீங்க தோற்பதற்காக ஆரம்பத்திலியே நான் தோற்று விடணுமா??? :icon_p::icon_p:

மனோஜ்
19-03-2008, 12:39 PM
கவிதை அருமை
அவரு கஸ்டபட்டு கவிதை எழுதினான
அல்லி நீங்க என்னங்க இப்படி ஜெக் கடி கிறீங்க

மன்மதன்
19-03-2008, 12:49 PM
வேணாம்.... ஆனா..,வேணும்..

காதலில்தான் தோற்று வெற்றியடைய முடியும்..

வார்த்தைகளை கொண்டு ஒரு காதல் போரே நடத்தியிருக்கீங்க..

பாராட்டுகள்..!!

pathman
22-03-2008, 06:22 AM
பீச்சில் சுண்டல் வாங்கிக் கொடுத்ததை எல்லாம் ஞாபகம் வச்சுகிட்டு கணக்கு சொல்றீங்களே! சுண்டல் சுரண்டல்வாதியா நான்???:D:D:D

அது எனக்கு தெரியாது நீங்கதான் முடிவு பண்ணனும்


[பேசும் பொழுது பன்னீர் தெளிச்சிடுச்சி. உண்மைதான் அதுக்கு இப்படியா பப்ளிக்ல போட்டுக் கொடுத்த்து மானத்தை வாங்கறது???:eek::eek::eek:

நீங்க ஜொல்லு வடிச்சதுக்கு நான் பொறுப்பு அல்ல


முடிவில நீங்க தோற்பதற்காக ஆரம்பத்திலியே நான் தோற்று விடணுமா??? :icon_p::icon_p:[/QUOTE]

ஆரம்பத்தில் நீங்கள் தோற்றலும் கடைசியில் தோற்பது யார் ?

சிவா.ஜி
22-03-2008, 01:33 PM
உன் புன்னகை பனி மழையில் நனைந்ததால்
என் இமை குழந்தைகள் தூங்க மறுக்கின்றன

அழகான வரிகள்.அருமையான கற்பனை.கவிதை முழுவதுமே சொல்லாடல் சிறப்பாக இருந்தாலும்...இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.
உன் புன்னகை பனிமழையில் நனைந்ததால்
என் இமைக்குழந்தைகளுக்கு கொண்டாட்டம்
அடைத்து வைத்தாலும் திறந்து கொண்டு ஆடுகின்றன....

நல்ல கவிதை பத்மன்...பாராட்டுக்கள்.

அமரன்
28-03-2008, 11:04 AM
தென்காசிப்பட்டணம் திரைப்படத்தில் வினுச்'சக்கரவர்த்தி' அடிக்கடி பேசும் வசனம். "ஜெயிக்கிறவன் சொல்லனும். தோற்பவன் கேட்கனும்". தஞ்சாவூரு பொம்மை போல தலையாட்டுவீர்களானால் அடைவதில் உங்களுக்கு நிச்சயவெற்றிதான்..

இருவருமே வென்ற தோரணை தோன்றுகிறதே!! இப்போ யார் சொல்வதை யார் கேட்பது என்ற சிக்கல் தோன்றுமே.. சரியாக அவிழ்க்கத் தெரிந்தால் இல்லறத்துக்கு வெற்றியோ...

ஒப்பந்த வடிவம் பெறும்போது, காதல் தோற்று போகிறது போலும். (பிரியமானவளே!)

வாழ்த்துகள் பத்மன்!

ஓவியன்
28-03-2008, 11:33 AM
காதற் போரில் மட்டும் தான் காதலன், காதலி இருவருமே தோற்கின்றார்கள், இருவருமே வெற்றி பெறுகின்றார்கள் - பாராட்டுகள் பத்மன்..!!

pathman
02-05-2008, 05:45 AM
எனனை பாராட்டி ஊக்கமளித்த பென்ஸ், அல்லிராணி, மனேஜ், மன்மதன், சிவாஜி, அமரன், ஓவியன் அவர்களுக்கு என் நன்றிகள்

Keelai Naadaan
02-05-2008, 06:46 AM
தோற்பதற்கான போர் என சொல்லிவிட்டு எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள். கவிதை அருமை.

பாலகன்
02-05-2008, 10:50 PM
அருமையான போர் களத்தை படைத்த நண்பருக்கு பாராட்டுக்கள்...........வீழ்வது நாமாகட்டும் வாழ்வது காதலாகட்டும்......

அருமையான படைப்பு

அன்புடன்
பில்லா

அனுராகவன்
02-05-2008, 10:52 PM
நன்றி நண்பரே!!
காதலின் தோல்விகள் கூட மீண்டும் காதலிக்க தோண்டும்..
அதே காதலர்கள்தான் சிறந்த காதல்..
தோல்வி ஒரு தோலூடு வரும் வெற்றிதான் பொருள்,,...
மனம் துவண்டால் வெற்றி தூர ஓடும்..
அருமையான கவி நண்பரே!!
இன்னும் பல கவிகள் வர வாழ்த்துக்கள்!!!