PDA

View Full Version : ஆதர் சி கிளார்க் மறைவு...!!



ஓவியன்
19-03-2008, 06:31 AM
ஆதர் சி கிளார்க் மறைவு...!!

பிரபல விஞ்ஞான புனைக் கதை எழுத்தாளரும் விஞ்ஞானியுமான ஆதர் சி கிளார்க் இன்று இலங்கையில் மரணமானார். இவர் முன்னர் இலங்கையின் மொறட்டுவைப் பல்கலைக் கழக வேந்தராகவும் கடமையாற்றியிருந்தார்.

மேலதிக விபரங்களுக்கு... (http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/lanka-science-fiction-author-clarke-dead-at-90.html)

சுகந்தப்ரீதன்
19-03-2008, 06:57 AM
ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணாரின் இழப்பிற்க்கு...!!

நிலவில் மனிதன் அடியெடுத்து வைப்பதற்க்கு முன்பே அதை கணித்து சொன்ன மேதையவர்.. அண்ணாரின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்..!! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்..!!

இளசு
19-03-2008, 07:00 AM
தகவலுக்கு நன்றி ஓவியன்..
எத்தனை எழுதியிருக்கிறார்... அத்தனையும் அறிவியல் சார்ந்து!

(இவரின் படைப்புகள் ஒன்றைக்கூட படித்திருக்கவில்லை நான்...
http://en.wikipedia.org/wiki/Arthur_C._Clarke )

அமரன்
19-03-2008, 07:04 AM
அன்னாருக்கு அஞ்சலிகளும் ஆத்ம திருப்திக்கு பிரார்த்தனைகளும்.
இவ்வருடத்தில் எத்தனை திறமைசாலிகளையும் சிந்தனையாளர்களையும் இழந்துள்ளோம் என நினைக்கையில் நெஞ்சம் விம்முகிறது.

ஓவியன்
19-03-2008, 07:11 AM
அன்னாருக்கு என் கண்ணீர் அஞ்சலிகளும்.....

மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் அவர் வேந்தராக இருந்த காலத்தில் நானும் அங்கே ஒரு சாதாரண மாணவனாகவேனும் படித்தேன் என்பதில் கொஞ்சம் கர்வம் எனக்கு....

அக்னி
19-03-2008, 07:13 AM
எனது இரங்கள்களும் பிரார்த்தனைகளும்...

மன்மதன்
19-03-2008, 08:55 AM
அன்னராது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்..

மனோஜ்
19-03-2008, 12:33 PM
ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணாரின் குடும்பத்திற்கு