PDA

View Full Version : காதலில் மலர்ந்த சில கவிதைகள்



shibly591
19-03-2008, 06:23 AM
01)
யாருக்குமே தெரியாது
உன் மீதான என் காதல்...
உனக்கும் கூட.....

02)
பெண்ணே என்னை நீ
அடிக்கடி எரிக்காதே...
ஏற்கனவே நான் சாம்பல்....

03)
நான் உனக்களித்த பரிசு
காதல்...
நீ எனக்களித்த பரிசு
காயம்

04)
நீ பேசும் வரை
தெரியவில்லை
குழலிசைக்க மூங்கில்
தேவையில்லை என்பது..........

05)
என்னைப்பார்க்கும்போதெல்லாம
பொய்க்கோபம் கொள்கிறாய்...
எனக்குத்தெரியும்
அது கோபமில்லை வெட்கம் என்று..........

06)
காதலியே நிலவில் தண்ணீர் உண்டு
உன் முகத்தில்
வியர்வைத்துளிகள்...

07)
நீ அனுப்பிய காதல்
கடிதங்களை எரித்து விடலாம்
மனப்பாடம் செய்த மனசை எங்கே
போய்த்தொலைப்பது.......

நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com

நம்பிகோபாலன்
19-03-2008, 07:12 AM
மிக அருமையாக உள்ளது நண்பரே.

சுகந்தப்ரீதன்
30-03-2008, 08:15 AM
01)
யாருக்குமே தெரியாது
உன் மீதான என் காதல்...
உனக்கும் கூட.....

ம்ம்ம்ம்... ஷிப்லி எல்லா கவிதையும் நன்றாயிருக்கிறது வாழ்த்துக்கள்..!!

ஆனாலும் ஏனோ இந்த முதல் கவிதைத்தான் என்னை முழுதாய் கவ்ர்ந்தது... நண்பரே..!! சொல்லாத காதலை சொல்வதில்கூட இத்தனை சிக்கனமா..? நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இதை.. பாராட்டுக்கள் நண்பரே..!!

ஓவியன்
25-04-2008, 12:57 PM
ஷிபிலி காதல் கவிஞர் தபுசங்கரை எனக்கு நிரம்பவே பிடிக்கும் அவரது காதல் துளிகள் படிக்க படிக்க திகட்டாதவை. எளிமையான சில வரிகளிலே அழகான கற்பனைகளைக் கோர்த்துச் செல்வது அவருக்கு கைவந்த கலை...

அத்தகைய திறமையை உங்கள் கவிதைகளிலும் பார்கிறேன், பாராட்டுக்கள் - என்ன ஒரு சிறிய வித்தியாசம் தபுவின் கவிதைகள் காதல் வெற்றியால் மகிழ்ந்தவனின் கோணத்தில் இருக்கும் ஆனால் உங்களது கவிதைகள் அதற்கு எதிர்கோணம், அவ்வளவே...

அறிஞர்
25-04-2008, 01:50 PM
4 வரிகளில் நிறைவான காதல் வரிகள்..

அருமை அன்பரே.....

shanthija
06-05-2008, 01:00 AM
நன்பரே உங்கல் குட்டி குட்டி கவிதைகல் அருமையாக உள்ளது ..மீண்டும் தொடர்ந்து எலுத என் வாழ்த்துக்க

அன்புடன்
லதுஜா