PDA

View Full Version : அலையும் தேடல்கள்....................



shibly591
19-03-2008, 04:46 AM
தினமும் சந்திக்க நேர்கிறது
அந்தத்தெருமுனையில்
ஒரு காலிழந்த பிச்சைக்காரனை....

அவன் தட்டில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சிதறிக்கிடக்கின்றது
மனிதாபிமானம்....

பணம் போடும்
எல்லோரையும்
கும்பிடுகிறான் கடவுளைப்போல...

அவ்வப்போது நிறுத்தப்படும் வாகனம்
விரைந்து செல்லும் மனிதர்கள்
என்று
அவன் முயற்சி தொடர்ந்த கொண்டேயிருக்கிறது

அழுத கண்களோடோ
கவலை முகத்தோடோ
தோற்றுப்போன சலிப்போடோ
அவனை நான் இதுவரை கண்டதில்லை...

அவனது குடும்பம் பற்றி ஒரு முறை
விசாரித்துப்பார்த்தேன்
அதற்கு அவன் சொன்ன பதில்
பிச்சை போடுங்க சாமி....

தன்னைப்பற்றியே சிந்திக்க
நேரமற்ற உலகில்
அவனைப்பற்றி
யார்தான் சிந்திப்பார்களோ?????

இருந்தும்
வாழ்க்கையைவென்றுவிட்டோம்
என பீற்றிக்கொள்ளும் நமக்கும்
வாழவே அல்லல்படும்
அவனுக்கும் பெரிய வித்தியாசமில்லை...

நிம்மதியோடு அவன்
அலைகிறான் சில்லறைக்கு
நிம்மதியின்றி நாம்
அலைகிறோம் டாலருக்கு..........


நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com

meera
19-03-2008, 02:31 PM
ஷிப்லி அழகாய் ஆழமாய் ஒரு உண்மையை உறத்து கூறினீர்கள்.

உங்கள் கவிதை தொடர வாழ்த்துகள்.

மன்மதன்
19-03-2008, 02:38 PM
ரொம்ப யதார்த்தமாக இருக்கிறது..

மிக அருமை..