PDA

View Full Version : யாழ் குடாநாட்டில் விதவைகளின் எண்ணிக்கை



radiopriyan
18-03-2008, 06:10 PM
யாழ் குடாநாட்டில் தொடர்ந்துகொண்டுள்ள படுகொலைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட மரணங்களினால் கணவனை இழந்து வாழும்
யாழ் குடாநாட்டில்
.விதவைகளின் எண்ணிக்கை சுமார் 29 ஆயிரம் எனக்கூறப்படுகின்றது.

இந்த விதவைகளுள் 40 வயதிற்குட்பட்டவர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் எனவும் யாழ் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.

இவர்களுள் சுமார் 23 ஆயிரம் பேர் மாத வருமானமாக ஆயிரம் ரூபாவையோ அல்லது அதற்கு குறைவான தொகையினையோ மாத வருமானமாகப்பெறுகின்றனர். இவர்களில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் எவருடைய தயவுமின்றி தம் வாழ்க்கையினை நடாத்துகின்றார்கள்.

கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் தொடக்கம் தற்போது வரையில் 700 பேர் வரையில் விதவைகளாகியுள்ளார்கள். அதில் பெருவாரியானோர் படுகொலைகளின் காரணமாக தங்களது கணவனை இழந்தவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

இவர்கள் 21 வயதற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகமாககாணப்படுவதுடன், தென்மராட்சிப்பகுதியிலேயே அதிகளவிலான விதவைகள் காணப்படுவதாகவும் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் குடும்பத்தலைவனது இறப்பின் காரணமாக அந்தக்குடும்பங்களின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகக்காணப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.

நன்றி சங்கதி

அன்புரசிகன்
19-03-2008, 02:08 AM
நேற்றுக்கூட அமெரிக்கா பாதுகாப்பு உபகரணங்களை இலங்கை அரசிற்கு வழங்கியது என்ற செய்தி படித்தேன்....

என்னசெய்வது. நாம் வலியவனாக பிறக்கவில்லை. வலியவனாக வளரவாவது செய்வோம்....

சுகந்தப்ரீதன்
19-03-2008, 02:11 PM
"இப்படியான பதிவுகளுக்கு பதில் பதிய கூட மன்றில் உள்ளவர்களுக்கு மனசில்லை போல.."

மனசில்லை என்றில்லை நண்பரே..! அவர்களுக்கு உண்மை கசக்கிறது போலிருக்கு.. அதான் எதையும் உரைக்காமல் செல்கிறார்கள்..!!

என்னவன் விஜய்
19-03-2008, 04:12 PM
யாழ் குடாநாட்டில் தொடர்ந்துகொண்டுள்ள இனபடுகொலைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட மரணங்களினால் கணவனை இழந்து வாழும்
யாழ் குடாநாட்டில்
.......................


இது ஒவ்வொரு நாளும் நடந்தபடியினால் எண்ணிக்கை தெரியவில்லை, ஆனல் இதில் எண்ணிக்கையை பார்க்கும் போது........ உள்ளே தாக்குது வலி

அமரன்
19-03-2008, 08:05 PM
செய்தியை செய்தியாகப் பாருங்கள். அனுகூலம் இருப்பின் அலசுங்கள். சர்ச்சைப் பதிவுகளை தவிருங்கள்.

மன்றம் நடுநிலையானது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

அனைவருக்கும் நன்றி.

namsec
21-03-2008, 07:45 AM
வருத்தமான செய்தி சுட்டிகாட்டியமைக்கு நன்றி

இளசு
21-03-2008, 08:29 AM
போர், இனவெறித்தாக்குதல்களால் விளையும் கொடுமைகள் ஏராளம்.
பாதிக்கப்படுவது நம்மினம் என்றால் இன்னும் கூடுதல் வேதனை!

எல்லாரும் ஓர் நிறையாய் நிறைவான அமைதி திரும்பும் நாள் வேண்டுவோம்.

இதுபோன்ற கொடுமைகள் இனியாவது நிகழாமல் இருக்கட்டும்.

அமரன்
21-03-2008, 08:35 AM
மன்ற உறவுகளிடத்தில் பிளவையும் கசப்பையும் ஏற்படும் விதத்தில் அமைந்த பதிவுகளும் அதனுடன் தொடர்புடைய பதிவுகளும் அகற்றப்பட்டன.

புரிதலுடன் கூடிய அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

அறிஞர்
21-03-2008, 04:19 PM
மனதை கனக்க வைக்கும் செய்தி....
இந்த போர் எப்பொழுது முடியுமோ..
பலரின் வாழ்க்கைக்கு உண்மையான விடிவு வரவேண்டும் என்பதே... எம் விருப்பம்..

ராஜா
24-03-2008, 09:10 AM
என்ன கொடுமையடா சாமி ...... ஈழத் தமிழர் எமக்கு எப்பதான் விமோசனம் ?

"இப்படியான பதிவுகளுக்கு பதில் பதிய கூட மன்றில் உள்ளவர்களுக்கு மனசில்லை போல.."

மண்ணில் ஒரு நரகமாக விளங்கும் யாழில் எம்மவர் படும் துயரம் கண்டு வேறெதுவும் செய்ய இயலாமல் மனம் வெதும்பி நாங்கள் அனுசரிக்கும் மவுனம் தம்பி இது.. தவறாகக் கொள்ளாதீர்கள்..