PDA

View Full Version : கண்ணீர் அருவி!கண்மணி
18-03-2008, 10:26 AM
என் மேல் பொழிந்த
பனித்துளிகளே
என்னுள் இறங்கி
இதயப் பாறையில்
இறங்க முடியாமல்
கண்ணின் வழியே
கசிந்து ஒடி
அலறுங்கள் அருவியாய்
என் இதயம் போலவே!!!

சுகந்தப்ரீதன்
18-03-2008, 03:13 PM
கண்மணி...கவிதை அருமை.. வாழ்த்துக்கள்..தொடருங்கள்..!!

கண்ணீர் கவிதைப் போட்டியில கலந்துக்காம போயிட்டீங்களே...அந்த போட்டியிலகூட இந்தமாதிரி ஒருகவிதை பாத்ததா எனக்கொரு ஞாபகம்..!!

கண்மணி
18-03-2008, 04:22 PM
கண்மணி...கவிதை அருமை.. வாழ்த்துக்கள்..தொடருங்கள்..!!

கண்ணீர் கவிதைப் போட்டியில கலந்துக்காம போயிட்டீங்களே...அந்த போட்டியிலகூட இந்தமாதிரி ஒருகவிதை பாத்ததா எனக்கொரு ஞாபகம்..!!

இது புதுவிதமான கருத்து..

அறிவியல் உண்மைகள் அடங்கிய கவிதை

செல்வா
18-03-2008, 05:15 PM
ம்..... இதயத்தால் தாங்கிக்கொள்ள முடியாத வேதனை கண்ணீராக வெளியேறுதுனு சொல்லலாமா..... ம்...
வாழ்த்துக்கள் கண்மணி அவர்களே... என்ன ஆளையே காணோம் கொஞ்சநாளா? உங்க கிசு கிசு இல்லாம மன்றம் ... தொய்வடைந்து போய் இருக்கு பாருங்க...

கண்மணி
18-03-2008, 05:21 PM
ம்..... இதயத்தால் தாங்கிக்கொள்ள முடியாத வேதனை கண்ணீராக வெளியேறுதுனு சொல்லலாமா..... ம்...
வாழ்த்துக்கள் கண்மணி அவர்களே... என்ன ஆளையே காணோம் கொஞ்சநாளா? உங்க கிசு கிசு இல்லாம மன்றம் ... தொய்வடைந்து போய் இருக்கு பாருங்க...

என் மேல் பொழிந்த பனித்துளிகளே


இதயத்தால் தாங்கிக்கொள்ள முடியாத வேதனை இதுவா?

இதயத்தால் தாங்கிக்கொள்ள முடியாத வேதனை அவங்க -------
:lachen001::lachen001::lachen001::lachen001:

இதயத்தின் நாலு அறைகளும் சிரிக்குது,, அதான் நாலு ஸ்மைலி :D

தாமரை அண்ணன் பேரைக் காப்பாத்துங்க செல்வா!!!

கண்மணி
18-03-2008, 05:44 PM
பாறையாய் இறுகிய என் இதயம்
உள்ளுக்குள் அலறி அழுது கொண்டு

அன்பு கொண்டவனே
உன் கரிசனப் பார்வைகளும்
அன்புச் செயல்களும்
காதல் அர்ச்சனைகளும்
இந்த இதயப் பாறையில் இறங்காது..

மலைமேல் பொழியும் பனித்துளிகள்
பாறைகளுக்குள் இறங்க முடியாமல்,
ஊற்றாய் இறங்கி
என் இதயம் போலவே அலறிக் கொண்டு
அருவியாய் விழுவதைப் போல

உன் அந்த அன்புச் செயல்கள்
கண்ணீராய் என் கண்கள் வழி
வெளியேறுகின்றன..

இதைத்தானுங்க அந்த வரிகளில் அடக்கி இருக்கிறேன்..

இன்னும் புரியலைன்னா! என்னை அடிக்க வராதீங்க..

அமரன்
18-03-2008, 06:23 PM
இதயம் பாறையான காரணம் என்னவோ.

கண்மணி
18-03-2008, 06:32 PM
பாறை உருவாக பலவழிகள்

1.. எரிமலையாய் வெடித்து வேதனை நெருப்புக் குழம்பு தெறித்து குளிர்ந்து இறுகி
2. அடுக்கடுக்காய் படிந்த மணல்கள் மன அழுத்தத்தில் இறுகி
3. தண்ணீராய் இருந்த மனம் சில்லென்று உறைந்து

ம்ம்.. உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக்கோங்க அமர்..

meera
18-03-2008, 10:22 PM
கண்மனி கவிதை அருமை.அதிலும் இந்த வரி அலறுங்கள் அருவியாய். வார்த்தைகளை கையாலுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே.

விளக்கம் அருமை

கண்மணி
19-03-2008, 12:53 AM
ஆமாக்கா, அம்பூட்டு மேல இருந்து கீழ விழற அருவி அலறிகிட்டே தானே விழும்,, ரோலர் கோஸ்டர்ல நாம வேகமா கீழ வர்ரோம்.. அப்ப எப்படி அலறரோம்...:traurig001::traurig001:

துளிர்க்கும் கண்ணீர் சிரிக்கும், :traurig001:தெறிக்கும் கண்ணீர் அலறும். :traurig001::traurig001:அலறுதா இல்லை சிரிக்குதா என்பது அந்தக் கண்ணில இருக்கிற கண்ணின் ஒளியை வச்சுத் தெரிஞ்சிக்கலாம் இல்லையா..
:medium-smiley-100::medium-smiley-100:

ஆனாக்கா இங்க பல ஜாம்பவான்கள் இருக்காங்க. தங்கச்சி கஷ்டப்பட்டு எழுதி இருக்காளேன்னு .. கண்ணில கண்ணீர் பூக்க :traurig001::traurig001:பார்த்துட்டு மௌனமா நகர்ந்திடறாங்க..

கசியும் கண்ணீர் :traurig001:இரக்கத்தாலும் கருணையினாலும்
வழியும் கண்ணீர் :traurig001:(அய்யய்ய இது அந்த வழியல் இல்லீங்க) வேதனையினால்
பெருகும் கண்ணீர் :traurig001:ஆற்றாமையினால்
சொட்டும் கண்ணீர், :traurig001: ..கண்ணிலேயே அடைந்து நிறைந்து கண்ணீரணை உடைத்து
வெள்ளமாய் ஓடும் கண்ணீர் :traurig001:என ஒவ்வொரு வகையான கண்ணீருக்கும் ஒவ்வொரு குணமிருக்கு. இல்லையா அக்கா..??:traurig001:
இதைப் படிச்சிட்டு உங்க கண்ணில
ஆனந்தக் கண்ணீர்..ஊறுது இல்லீங்களாக்கா???:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:

என்ன செய்யறதுக்கா.. இப்படி கவலைகளை கரைத்து
வடியும் கண்ணீர்:traurig001: ஒண்ணுதானே நமக்குத் துணை.படிச்சதும்
கண்ணீர் தளும்புது இல்லையா...??:traurig001::traurig001:

பூமகள்
19-03-2008, 12:01 PM
பாறையாகிய மனத்தில்
பதிய மறுத்த நீர்த்தாரைகள்..
ஓடிச் சென்று கலந்து
நின்றன கருவிழிக்குளத்தில்..!!
கசிந்து ஓடி கன்னத்தில்
பிரியாவிடை எழுதிச்
சென்றன பாசத்துளிகள்..!!

ஆஹா.. கண்மணி அக்கா.. அசத்திட்டீங்க..!!

இடர் பல கண்டு கல்லாகிப் போன இதயம்.. ஏற்க மறுத்தாலும்... பாறை இடுக்கில் வேர் விடும் புல்லாக பாசமும் ஏற்கப்படும்.. அதற்காக இந்த பனித்துளிகளால் நீர் நிரப்பி வளர்த்தட்டுமே..!!

கண்ணீர் பற்றிய விளக்கம் அருமை... அப்பா இத்தனை வகை கண்ணீரா???

பாராட்டுகள் கண்மணி அக்கா!

செல்வா
19-03-2008, 01:17 PM
முடியல...........

தாமரை
20-03-2008, 04:15 AM
சிந்தும் கண்ணீர்
உதிரும் கண்ணீர்
என இன்னும் சில கண்ணீரும் உண்டே கண்மணி

கண்கள் அழுதாலும்
கண்மணி சிரிக்கும்
கண்ணீரில் முகம் கழுவி

இல்லையா!!!

சிவா.ஜி
20-03-2008, 04:35 AM
பதிவை இட்ட உடனே வாசித்தேன்....அந்த நேரத்தில் எனக்கு சரியாக விளங்கிக்கொள்ளமுடியாததால்...ஏதாவது அச்சு பிச்சுன்னு பின்னூட்டம் போடக்கூடாது என்று அமைதியாய் இருந்துவிட்டேன்.உங்களின் விளக்கத்தைப் பார்த்தபிறகுதான்...இவ்ளோ விஷயம் இருக்கான்ன்னு தோணிச்சு.

சரிதான் கண்மணி...எந்த உணர்வுகளுக்கும் வடிகால் கண்ணீர்தானே.துக்கம்,கோபம்,ஆற்றாமை,பெருமிதம்,ஆனந்தம்,நெகிழ்ச்சி,கழிவிரக்கம்...என அனைத்தையும் இந்த அருவிதானே..அமைதியாகவும்,ஆர்ப்பரிப்புடனும் வெளிப்படுத்துகிறது.
இதயத்தின் மௌனமொழியை உப்பு மையால் கன்னக்காகிதத்தில் எழுதும் வாக்கியங்கள்.
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் கண்மணி.

கண்மணி
20-03-2008, 04:47 AM
அய்யோ சிவாஜி அண்ணா, இப்படியெல்லாமா ஃபீல் பண்ணி கண்ணீர் விடுவது...:traurig001::traurig001: ஓ சிவாஜின்னாலே ஓவர் ஃபீலிங் தானோ!!!!:icon_rollout::icon_rollout:

சிவா.ஜி
20-03-2008, 04:50 AM
அய்யோ சிவாஜி அண்ணா, இப்படியெல்லாமா ஃபீல் பண்ணி கண்ணீர் விடுவது...http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/ ஓ சிவாஜின்னாலே ஓவர் ஃபீலிங் தானோ!!!!http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/

யப்பா சாமி....இவங்க....அலம்பலைத் தாங்க முடி.......................ல்ல....!!
(என்னமா ஃபீல் பண்ண வெக்குறாங்கப்பா..)

மதி
20-03-2008, 05:21 AM
அட... கண்ணீர் புலம்பலா...
விதவிதமான கண்ணீர் பற்றி விளக்கங்கள்..

கண்மணியக்கா கலக்கறேள்..

கண்மணி
20-03-2008, 05:52 AM
இங்கே வந்து இரு சொட்டுக் கண்ணீர் உகுத்துச் சென்ற மதிக்கு நன்றி. .கண்ணீருடன்..

இளசு
20-03-2008, 06:49 AM
பெண்மணி.. அதிலும் கண்மணி
கண்ணீர் பற்றிச் சொன்னால்
சரியாய்த்தான் இருக்கும்!

கல்லிலே என்ன உண்டு கண்களா அறியும்?
கண்ணதாசன் கேள்விக்கு பதில் கிடைத்தது இன்று!

பாராட்டுகள் கண்மணி!

அனுராகவன்
20-03-2008, 06:59 AM
நன்றி கண்மணி..
உங்கள் கவிதை மிக நன்று..
தொடர்ந்து படைங்கள்...
அருமையான கவிதிறன் உள்ளது.

கண்மணி
20-03-2008, 09:52 AM
பெண்மணி.. அதிலும் கண்மணி
கண்ணீர் பற்றிச் சொன்னால்
சரியாய்த்தான் இருக்கும்!

கல்லிலே என்ன உண்டு கண்களா அறியும்?
கண்ணதாசன் கேள்விக்கு பதில் கிடைத்தது இன்று!

பாராட்டுகள் கண்மணி!


இளசு அண்ணாவின் விமர்சனம் கண்டு மிக மலர்ச்சி.. கண்ணீர் துளிகள் பனித்தது விழிக்கடையோரம்.

கண்மணி
20-03-2008, 11:45 AM
பாறையாகிய மனத்தில்
பதிய மறுத்த நீர்த்தாரைகள்..
ஓடிச் சென்று கலந்து
நின்றன கருவிழிக்குளத்தில்..!!
கசிந்து ஓடி கன்னத்தில்
பிரியாவிடை எழுதிச்
சென்றன பாசத்துளிகள்..!!

ஆஹா.. கண்மணி அக்கா.. அசத்திட்டீங்க..!!

இடர் பல கண்டு கல்லாகிப் போன இதயம்.. ஏற்க மறுத்தாலும்... பாறை இடுக்கில் வேர் விடும் புல்லாக பாசமும் ஏற்கப்படும்.. அதற்காக இந்த பனித்துளிகளால் நீர் நிரப்பி வளர்த்தட்டுமே..!!

கண்ணீர் பற்றிய விளக்கம் அருமை... அப்பா இத்தனை வகை கண்ணீரா???

பாராட்டுகள் கண்மணி அக்கா!

பூவக்கா,

பாறை இடுக்கில் துளிர்த்த அரச மரம் வேர்கொண்டு பாறையை உடைக்க முயற்சி செய்து, தானும் வளராமல் பாறையும் உடையாமல் ஆட்டுக்கும் மாட்டுக்கும் உணவாகி

காகங்களின் எச்சங்கள் தானே இந்த அரச மரத்திற்குக் காரணம்.. அந்தச் சிலைகளின் மீதும்தானே ஆயிரம் எச்சங்கள்.. ஒரு புல் கூட முளைப்பதில்லை அங்கே.. ஏன் தெரியுமா? கல்லிலும் ஈரம் உண்டு..

கண்ணீர் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் துயரக் கற்களில் எத்தனை கருவறைக்குள் எத்தனி கல்லறைக்குள்.. இன்னும் எத்தனை எத்தனை எங்கெங்கோ எப்படி எப்படியோ

ஆனால் கனக்கும் இதயத்தில் உள்ள பாறையைச் சுற்றி புல்லோ பூண்டோ முளைக்க கண்ணீர் மட்டும் போதுமா??:icon_b:

அமரன்
28-03-2008, 05:18 PM
கண்ணீர் அருவியாகக் கொட்டுது.
உயர்ந்த உள்ளம் உங்களது...
உள்ளங்கையில் ஏந்தும் எஜமான்
உங்களுக்கு நிச்சயம் கிடைப்பார்!

எண்ணம்
23-04-2008, 04:11 AM
கண்ணீர் அருவி வற்றாமல் கொட்டட்டும் கவிதையாய் இங்கு...
மிக அருமை..