PDA

View Full Version : கருக்கலைப்பு



shibly591
18-03-2008, 10:14 AM
ஜனனங்களுக்காய்
படைக்கப்பட்ட
கருவறைகள்..
இன்றோ
மரணங்களுக்கான
கல்லறையாய
புதிய பரிமாணம்

உயிரணுக்களின்
உயிர்கள்
அணுவணுவாய்
கொல்லப்படுகிறது
மருத்துவச் சித்ரவதைகளுடன்....

தொப்புள்கொடிகளே
தூக்குக்கயிறுகளாகின்றன
இந்தக்கருக்கலைப்பில்....“

மலர்களை தீயிட்டு
எரிப்பதைப்போல”
என்பதை தவிர
வேறெந்த உவமைகளும்
பொருந்தப் போவதில்லை
இந்த அகால மரணங்களுக்கு...

மனிதாபிமானம்
செத்துப்போய்விட்டதை
பகிரங்கமாய் பறைசாற்றுவதற்கா
சிசுக்கொலைகள்...?

உண்டான பிறகு
சிதைப்பதை விட்டுவிட்டு
உண்டாகும் முன்
சிந்தியுங்கள்

ஏனெனில்
நீங்கள்
சிதைப்பது உயிர்களை அல்ல
இவ்வுலகின்
நாளைய விடிவை !

நிந்தவூர் ஷிப்லி

க.கமலக்கண்ணன்
18-03-2008, 10:21 AM
நன்றாக இருக்கிறது உங்களின் படைப்பு தொடருங்கள்...

kavitha
18-03-2008, 10:24 AM
புக்களை தீயிட்டு
எரிப்பதைப்போல”
புக்களை? என்ன பொருள்?

shibly591
18-03-2008, 10:40 AM
தவறு திருத்தப்பட்டுள்ளது கவிதா...நன்றி

அமரன்
18-03-2008, 11:15 AM
ஆண்டாண்டு காலம் அழுது புலம்பினாலும் மாண்டவர் மீண்டு வருவதில்லை என்பது போல ஆண்டாண்டு காலமாக மிரட்டி, கெஞ்சிய பின்னர் இந்த சாக்கடையில் தாண்டவர்கள் (அமிழ்ந்தவர்கள்) தலை முடி கண்ணுக்குப் புலப்படுகிறது. முழு உருவமும் வெளிவரும் வரை இப்படியான கவிதைகளை பிரவசமாகிக்கொண்டுதான் இருக்கும்..

அரும்புகள் கருகுவது
அகால மரணம் அல்ல
அகாலக் கொலை.

பிரசவம் காணாமலே
சவமாக்கும் சண்டாளர்களை
கருவறுக்க பிரசவமாகட்டும்
இன்னும் பல இவ்வகை கவி.


பாராட்டுகள் ஷில்பி!

தொடர்வீர்கள் என்பதால் தொடர்கவிதை பகுதியில் இருக்கிறதோ..
தொடர்கிறது என்பதால் தொடர்கவிதை பக்கத்தில் இட்டீர்களோ..

சிவா.ஜி
18-03-2008, 11:23 AM
விதையிட்டு
நீர் விட்டு
வளமாக வளர
உரமிட்டு
பூக்குமுன்
பொசுக்கப்படும்
மலர்கள்....

கருவறையே
கல்லறையாகி
உயிர் கொடுத்தவரே
உயிரெடுக்கும் சோகம்.....

நிகழவேக்கூடாத ஒன்று...நிதம் நிகழ்கிறது மனிதம் கொன்று.
என்ன செய்வது....இங்குதான் எல்லாவற்றிற்கும் நியாயம் கற்பிக்கப் பட்டுவிடுகிறதே....கவிதையிலாவது..அந்த கலைந்துபோன கருவுக்காக கண்ணீர் விடுவோம்.
பாராட்டுகள் ஷில்பி.