PDA

View Full Version : ஏமாற்றங்களின் நெடும் பயணம்



shibly591
18-03-2008, 06:26 AM
தொடரும் ஏமாற்றங்களின்
நெடும் பயணத்தை
மீண்டும் புதுப்பித்திருக்கிறாய்
நீ………..

விடு
குட்டக்குட்ட குனியும்
என் இயலாமையை
சொல்ல வேண்டும்

வரங்களை சாபங்களாக்கிய
தேவதை உனக்காகவா
நான் கடுந்தவம் புரிந்தேன்…?

எனக்கு நிழல் தரும்
என்றெண்ணிய உன்
வார்த்தைகள்
சுட்டெரிக்கும் சூரியனாய்
பொசுக்குகிறது
என்னையும்
மனசையும்…..

பௌர்ணமி வானில்
நீ என்ன
வேண்டுமானாலும்
செய்..
ஆனால்
அமாவாசை வானின்
நட்சத்திரங்களை மட்டும் பிடுங்கி விடாதே…………

-நிந்தவூர் ஷிப்லி தென்கிழக்கு பல்கலை இலங்கை

அமரன்
18-03-2008, 08:44 AM
அன்பரே!
கவிதைகளை வாசிப்பவர்கள் தமது கருத்துகளை எழுத்தில் தருவது வழக்கம். குறையானாலும் நிறையானாலும் தயங்காது சொல்லிவிடுவார்கள் மன்ற மணிகள். முதன் முதலாக கருத்துக்கணிப்பு சாவடி திறந்துள்ளீர்கள். பரவாயில்லை.. தமிழை அங்கே பயன்படுத்தவில்லை. எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ளுங்கள்.

shibly591
18-03-2008, 09:00 AM
நன்றி.விமர்சனத்துக்கு பயந்தவன் எழுத நினைப்பது முட்டாள்தனம் இல்லையா ?எனது எழுத்தின் தவறுகளை இனங்கண்டு திருத்தவே கருத்துக்கணிப்பு சாவடி. நன்றி