PDA

View Full Version : உப்பு காஃபி - காதல் கதை.



மன்மதன்
17-03-2008, 03:30 PM
ஆழமான காதல் கதை..

அவள் அழகான தேவதை. பல பேர் அவள் மீது காதல் கொண்டுள்ளனர்.

ஒருநாள் அவன், அவளை ஒரு பார்ட்டியில் பார்க்கிறான். அவனுக்கும் அழகுக்கு குறைச்சல் இல்லை. அந்த பெண்ணை பலரும் ரசிக்கின்றனர். ஆனால் ஒருவருக்கும் அவளிடம் பேச துணிச்சல் இல்லை.

பார்ட்டி முடிந்ததும் அவன் அவளிடம் சென்று 'என் கூட காபி சாப்பிட முடியுமா' என்று கேட்கிறான். நாகரீகம் கருதி அவளும் அதை மறுக்காமல் அவனுடன் சென்று ஒரு நல்ல ரெஸ்டாரண்டில் காபி சாப்பிடுகிறாள்.

அவனுக்கு அவளிடம் பேச வார்த்தைகள் எழவில்லை. அவளுக்கும் கூச்சமாக இருந்தது. அவள் நான் வீட்டிற்கு கிளம்புகிறேன் என்றாள்: உடனே அவன் சர்வரை கூப்பிட்டு 'கொஞ்சம் உப்பு கொண்டு வாங்க.. காப்பில போடணும்' என்று சொன்னான்.

அந்த ரெஸ்டாரண்டில் இருந்த அனைவரும் அவனையே கவனித்தனர்..அவனுக்கு வெட்கமாகி விட்டது..இருந்தாலும் அவன் அந்த உப்பை அவன் காப்பியில் போட்டு சாப்பிட்டான்.

அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'எப்படி இந்த பழக்கம் உனக்கு' அவனிடம் கேட்டாள்.

'நான் சிறுவயதில் இருந்தது கடற்கரையை ஒட்டிய கிராமத்தில். நான் சுவாசித்தது , உண்டது எல்லாமே உப்பைத்தான். எப்ப நான் காபி குடித்தாலும் அதில் உப்பை சேர்ப்பேன். அது என் பால்ய காலத்தை நினைவுபடுத்தும். என் பெற்றோர், என் கிராமம் என்று நான் என் பழைய உலகத்துக்கு செல்வேன்'

இதை சொல்லும்போதே அவன் கண்கள் கண்ணீரால் நிரம்பின.

அவளுக்கு இது ரொம்ப பிடித்திருந்தது. ஒருவன் தன் வீட்டை பத்தி நினைவுகொள்கிறான் என்றால் அவன் ரொம்ப நல்லவனாகத்தான் இருப்பான். குடும்பத்தை அக்கறையாக கவனித்துக் கொள்வான் என்று எண்ணினாள்..

அப்புறம் இருவரும் அடிக்கடி சந்தித்தார்கள். அவளுக்கு அவனை ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது. நல்ல குணம், அதிக அக்கறை, அதீத அன்பு என திக்கு முக்காடி போனாள். அந்த உப்பு காப்பிக்கு அடிக்கடி நன்றி சொல்வாள்.

இந்த கதை மற்ற காதல் கதை போலவே நன்றாக சென்றன.. இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர்.

அவள் அவனுக்கு எப்ப காபி கொடுத்தாலும் அதில் உப்பு போட்டுத்தான் கொடுப்பாள். அவனும் அதை அன்பாக குடிப்பான்..

பல பல வருடங்கள் கழித்து, கணவன் இருக்கும் தருவாயில் ஒரு கடிதம் எழுதி வைத்து, தான் இறந்த விட்ட பிறகு படிக்குமாறு கூறி, ஒருநாள் இறந்தும் விட்டான்..

அந்த கடிதம்

'என்னை மன்னித்துவிடு அன்பே. நான் ஒரே ஒரு தடவை உன்னிடம் பொய் சொல்லி இருக்கிறேன்.. நம் முதல் சந்திப்பில், தடுமாற்றத்தில் நாக்கு உளறி, சக்கரை என்பதற்கு பதிலாக உப்பு என்று சொல்லிவிட்டேன். அதை உடனே என்னால் மாற்றி சொல்ல முடியவில்லை. அதனால் அந்த உப்பு காபி குடித்தேன். உப்பு போட்ட காப்பி யாருக்குத்தான் பிடிக்கும்..எனக்கும் பிடிக்காதுதான்.. ஒவ்வொரு தடவையும் உன்னிடம் நான் அதை சொல்ல வருவேன். முடியவில்லை. உன் மீது நான் கொண்ட காதலால் அந்த உப்பு காபி கூட எனக்கு இனித்தது. எனக்கு இன்னொரு ஜென்மம் இருந்து, அதில் நீ என் மனைவியாக வந்தால், அந்த வாழ்க்கை முழுதும் நான் உப்பு காப்பி குடிக்க தயாராக இருக்கிறேன்....'


அந்த கடிதத்தை அவளின் கண்ணில் இருந்த வழிந்த உப்பு நீர் நனைத்தது..


(மெயிலில் வந்தது)

.

அக்னி
17-03-2008, 03:50 PM
ஏதேதோ உணர்வலைகள்.
ஒரு பொய்க்காக, வாழ்நாள் முழுவதும் காப்பியில் உப்பிட்டுக் குடித்ததை,
தண்டனை என்பதா? தியாகம் என்பதா? வறட்டுக் கௌரவம் என்பதா?
சொன்ன பொய்யை, கண்டறிய முடியாமல் வாழ்ந்ததை,
நம்பிக்கை என்பதா? மடமை என்பதா? புரிந்துணர்வின்மை என்பதா?

கதையாக இருந்தாலும், பல உணர்வுகளைத் தூண்டுகின்றது.
விடையில்லாத கேள்விகளை எழுப்புகின்றது.

பகிர்தலுக்கு நன்றி மன்மிஜி....

மன்மதன்
17-03-2008, 04:14 PM
எனக்கும் இதே எண்ணங்கள்தான் வந்தது..ஆனாலும் அந்த சூழ்நிலை.. அந்த nervous.. வாய் தவறி சொல்லிவிட்டு, அதை சமாளிக்க ஒரு கதை.. அதன் காரணமாக கிடைத்த காதல்.. அதை இழக்க விரும்பாத கணவன்.. இது தியாகம் இல்லை.. ஒருவேளை அது பொய் என்று சொன்னாள், இருவருக்குமிடையே சிறு விரிசல் ஏற்படலாம் என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம்.. என்னதான் இருந்தாலும்..
எனக்கு ரொம்ப பிடித்திருந்தது...

பூமகள்
17-03-2008, 05:18 PM
ஹூம்.. எல்லாவற்றிற்கும் மேல்... அடுத்த ஜென்மத்திலும்...அதே உப்புக் காப்பியை மனைவி கையால் குடிக்க விரும்பிய கணவர், உண்மையில் என் மனதில் உயர்ந்தே நிற்கிறார்.

டச்சிங் கதை.. பகிர்ந்தமைக்கு பாராட்டுகள் மதன் அண்ணா...!! :)

சாலைஜெயராமன்
17-03-2008, 05:52 PM
கதையாகப் பார்க்கவில்லை. உணர்ச்சிகளின் சங்கமமாக உணர்ந்தேன். தியாகத்திற்கு விலையேது?

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற முதுமொழிக்கு உகந்த உற்ற நட்பு,

பகிர்தலுக்கு நன்றி மன்மதன்

அறிஞர்
17-03-2008, 06:39 PM
அன்பிற்காக.... ஒரு சுவையை தியாகம் செய்வதில் தவறில்லை..

ரொம்ப டச்சிங்க்பா... நன்றி மன்மதா...

அன்புரசிகன்
17-03-2008, 06:52 PM
அவன் ஆயிரத்தில் ஒருவன்.....

பகிர்வுக்கு நன்றி.

இளசு
17-03-2008, 09:49 PM
சில முகமூடிகள் அழகானவை..
இன்னொரு முகத்தோலாகும் அளவுக்கு நிலையானவை!

அவனை ரசிக்க முடிகிறது எனக்கு!

பகிர்தலுக்கு நன்றி மன்மதன்!

பென்ஸ்
18-03-2008, 11:56 AM
இதற்கு முன்னமே வாசித்திருந்தும்,
தமிழில் அதுவும் உங்கள் அழகான எழுத்து நடையில் வாசிக்க தனி சுகம்தான்....

காதல் உப்பையும் இனிப்பாக்கி விடுகிறது,
உப்பு சப்பிலாத காதல் தான் இனிப்பில்லாமல் ஆகிவிடுகிறது.

சிவா.ஜி
18-03-2008, 12:58 PM
இந்த உப்பில் காதல் தெரிகிறது.தவறுதலாய்ச் சொன்னாலும் அப்படிச் சொன்னதாலேயே காதலும்,காதலியும் கிடைத்ததால் இரண்டையுமே இழக்க விரும்பாமல்...இறக்கும்வரை உப்பு போட்டுக்காப்பி குடித்ததை நினைக்கும்போது மனித மனங்களின் விசித்திரமான முகம் தெரிகிறது.

டச்சிங்கான கதை.பகிர்தலுக்கு நன்றி மன்மதன்.

மன்மதன்
18-03-2008, 01:00 PM
ஹூம்.. எல்லாவற்றிற்கும் மேல்... அடுத்த ஜென்மத்திலும்...அதே உப்புக் காப்பியை மனைவி கையால் குடிக்க விரும்பிய கணவர், உண்மையில் என் மனதில் உயர்ந்தே நிற்கிறார்.

டச்சிங் கதை.. பகிர்ந்தமைக்கு பாராட்டுகள் மதன் அண்ணா...!! :)


நன்றி பூ..

மன்மதன்
18-03-2008, 01:04 PM
கதையாகப் பார்க்கவில்லை. உணர்ச்சிகளின் சங்கமமாக உணர்ந்தேன். தியாகத்திற்கு விலையேது?

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற முதுமொழிக்கு உகந்த உற்ற நட்பு,

பகிர்தலுக்கு நன்றி மன்மதன்

பொருத்தமான் பின்னூட்டம்..நன்றி ஜெயராமன்..

மன்மதன்
18-03-2008, 01:19 PM
அன்பிற்காக.... ஒரு சுவையை தியாகம் செய்வதில் தவறில்லை..

ரொம்ப டச்சிங்க்பா... நன்றி மன்மதா...

நன்றி நண்பரே..

மன்மதன்
18-03-2008, 01:20 PM
அவன் ஆயிரத்தில் ஒருவன்.....

பகிர்வுக்கு நன்றி.

இல்லைபா.. அவன் லட்சத்தில் ஒருவன்...;)

நன்றி ரசிகரே..

மன்மதன்
18-03-2008, 01:21 PM
சில முகமூடிகள் அழகானவை..
இன்னொரு முகத்தோலாகும் அளவுக்கு நிலையானவை!

அவனை ரசிக்க முடிகிறது எனக்கு!

பகிர்தலுக்கு நன்றி மன்மதன்!

உண்மை வரிகள்.. நன்றி இளசு..

மன்மதன்
18-03-2008, 01:25 PM
இதற்கு முன்னமே வாசித்திருந்தும்,
தமிழில் அதுவும் உங்கள் அழகான எழுத்து நடையில் வாசிக்க தனி சுகம்தான்....

காதல் உப்பையும் இனிப்பாக்கி விடுகிறது,
உப்பு சப்பிலாத காதல் தான் இனிப்பில்லாமல் ஆகிவிடுகிறது.

நன்றி பென்ஸ்..

அழகான எழுத்து நடை என்றதற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..:ernaehrung004:

மன்மதன்
18-03-2008, 01:25 PM
இந்த உப்பில் காதல் தெரிகிறது.தவறுதலாய்ச் சொன்னாலும் அப்படிச் சொன்னதாலேயே காதலும்,காதலியும் கிடைத்ததால் இரண்டையுமே இழக்க விரும்பாமல்...இறக்கும்வரை உப்பு போட்டுக்காப்பி குடித்ததை நினைக்கும்போது மனித மனங்களின் விசித்திரமான முகம் தெரிகிறது.

டச்சிங்கான கதை.பகிர்தலுக்கு நன்றி மன்மதன்.


நன்றி சிவா..

meera
18-03-2008, 01:41 PM
கதை என்றாலும் மனதை தொட்டுச் சென்றது அந்த கணவரின் அன்பு.கடைசிவரை குறையாத காதல் நெகிழ வைத்தது.

கதை சொன்ன விதம் அழகு.
நன்றி மன்மதன்.

மன்மதன்
18-03-2008, 03:52 PM
கதை என்றாலும் மனதை தொட்டுச் சென்றது அந்த கணவரின் அன்பு.கடைசிவரை குறையாத காதல் நெகிழ வைத்தது.

கதை சொன்ன விதம் அழகு.
நன்றி மன்மதன்.

நன்றி மீரா.. நீ சொன்ன வரிகள் உனக்கே கிடைக்கட்டும்..:icon_b:

மனோஜ்
18-03-2008, 06:02 PM
அன்புக்கு ஈடு இனை இல்லை
அதற்காக உப்பு காப்பி கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் அதிலும் அன்புவெளிபடுத்தியது அருமை நன்றி மன்மதன் தந்தமைக்கு:icon_b:
உங்க தனிமடல் பார்க்கமாட்டிங்கலா

Keelai Naadaan
20-03-2008, 07:05 PM
இவ்வளவு சிறிய கதையிலும் இத்தனை ஆழமான காதலை சொல்லமுடியுமா?
அவள் இப்பொது சர்க்கரை போட்டு காபி குடிக்கிறாளா?

அருமை நன்பரே.

ஓவியன்
21-03-2008, 05:04 AM
ஆங்கிலத்தில் மெயிலில் பார்த்ததைத் தமிழில் மீள அசைபோட வைத்த மன்மி ஜிக்கு நன்றிகள்..!!

ஷீ-நிசி
21-03-2008, 06:41 AM
சூப்பர். மன்மதன்...

இதை கவிதையாய் வடிக்க ஆசைப்படுகிறேன்...