PDA

View Full Version : இன்னொரு பிரிவை நோக்கி…….



shibly591
17-03-2008, 08:22 AM
இன்னொரு பிரிவை நோக்கி…….

கடைசியில்
நிகழ்ந்தே விட்டது
உன்னோடான
பிரிவும்……

எதிர்பார்த்ததுதான்
இருந்தும்
இத்தனை
சீக்கிரமா…?

நீ
அடிக்கடி சொல்லும்
‘பிறகு சொல்கிறேன்’
என்பதை
சொல்லாமலே
போய்விட்டாய்

திருவிழாவில்
குழந்தையைத் தொலைத்த
தாயொருத்தியின்
பதை பதைப்பும்
அழுகையும்
எனக்கு இன்னும்
சில காலம்தான்…

பிறகு
இன்னொரு
பிரிவை நோக்கிய
உறவின் மீதான பயணம்
இயல்பாகவே நிகழ்ந்துவிடும் !


- நிந்தவூர் ஷிப்லி,
தென்கிழக்கு பல்கலை, இலங்கை

அனுராகவன்
17-03-2008, 08:30 AM
பிரிவின் துயரத்தை தாங்கயியலுமா ..
அந்த பிரிவு சொல்லாமல் என்றால் அஃதே துன்பம்
மிக அழகாக சொல்லிய கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்..
தங்கள் முத்தான முதல் கவிதை...
நன்றி நிந்தவூர் ஷிப்லி அவர்களே!!,

ஆதி
17-03-2008, 08:32 AM
முதல்முறை வாசித்த பிறகு பொறியில் தட்டிய எண்ணமிதுதான்

இந்த கவிதை வாழ்க்கையின் எதார்த்தத்தை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது.

பாராட்டுக்கள் ஷிப்லி

அன்புடன் ஆதி

சுகந்தப்ரீதன்
17-03-2008, 12:55 PM
பிறகு
இன்னொரு
பிரிவை நோக்கிய
உறவின் மீதான பயணம்
இயல்பாகவே நிகழ்ந்துவிடும் !

வாழ்த்துக்கள் ஷிப்லி...!!

உறவுகள் உருவாகும்போதே பிரிவுகளும் உறுதியாகி விடுகின்றன...!!
அவ்விரு நிகழ்வுக்குமான இடைவெளிதான் ஒவ்வொரு நிகழ்விலும் மாறுபடுமே ஒழிய என்றும் மாறாதது பிரிவு மட்டுமே..!!
அந்த யதார்த்தத்தை எளிமையாய் கவிதையில் சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.. தொடருங்கள்..!!

shibly591
24-07-2008, 07:36 PM
எனது கவிதைகளில் எனக்கு மிகுந்த மனநிறைவை தந்த கவிதை இது

நன்றி சுகந்தப்ரீதன்..

இளசு
24-07-2008, 10:15 PM
எதுவும் கடந்துபோகும்...

வாழ்வின் அடிநாதம் சொல்லும் கவிதை!

படைத்த உங்களையே ஈர்த்ததில் வியப்பென்ன?

பாராட்டுகள் ஷிப்லி!

பூமகள்
25-07-2008, 08:58 AM
இப்போது தான் உங்களின் வலை தளம் பார்த்து வியந்து வந்தேன்..
எத்தனை அழகிய கவிதைகள்... இந்தக் கவிதையும் நான் அங்கு படிச்சிட்டேனே...!!

இந்தக் கவிதைக்கான படத்தையும் இங்கு பதியுங்கள் ஷிப்லி அண்ணா...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிறக்கும் போதே இறப்பு நிச்சயமாக்கப் படுகிறது..
உறவுகள் இணையும் போதே 'வாழும்' அதன் வயதும் பிரிவு நோக்கி நகரத் துவங்குகிறது..

ஏனோ மனம் மட்டும் அதே இடத்தில் நின்று கொண்டு...

ரயில் பயண உறவுகள் பல வாழ்க்கைப் பயணத்தில் சந்திப்போம்..

சில உறவுகள்.. சில வருடங்கள்..
சில உறவுகள் சில மாதங்கள்..

ஆயினும்... பிரிவுக்கான வலியை தாங்கிக் கொள்ள நம் உள்ளத்தை தயாராக்கியபடியே பயணிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம்..

பாராட்டுகள் ஷிப்லி அண்ணா. :)

அமரன்
25-07-2008, 10:24 AM
பிரிவு வலி என்று ஒன்று இருப்பதால்தான் உறவுகள் பல நிலைத்திருக்கின்றன...
ஒவ்வொரு பிரிவும் அடுத்து தொடும் உறவை வலுவாக்கும் பிணைப்புச் சக்தி..

இப்படியும் சொல்லலாம்....
நமக்கு ஏற்பட்ட நோயே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட உதவுவது போல பிரிவுகளும்..

யதார்த்தம் என்றுமே அலாதியான அழகுதான்..
அது ஷில்பி போன்ற கவிஞர்கள் வாயிலாக வந்தால்.... பேரழகு.
பாராட்டுகிறேன்.

ஷீ-நிசி
26-07-2008, 01:47 AM
பிறகு
இன்னொரு
பிரிவை நோக்கிய
உறவின் மீதான பயணம்
இயல்பாகவே நிகழ்ந்துவிடும் !

வழக்கமாக இதுபோன்ற கவிதைகளின் இந்த வரியமைப்புகள் இருக்காது... காதலியை நினைத்தே வாடுவதை மட்டுமே சொல்வார்கள்.. வித்தியாசமாய் நிதர்சனத்தை, இயல்பை உங்கள் கவிதையில் சேர்த்திருக்கிறீர்கள். ரசித்தேன்!

வாழ்த்துக்கள்!

Keelai Naadaan
26-07-2008, 02:21 AM
சாரமுள்ள கவிதை. பாராட்டுகள் ஷிப்லி

உறவு பலப்படுவதெல்லாம்
பின் வரவிருக்கும்
பிரிவை நினத்து தானோ...?

shibly591
26-07-2008, 04:13 AM
நன்றி கீழை நாடன்....

நன்றி ஷீ...

நன்றி அமரன்...

நன்றி பூ மகள்

நன்றி இளசு

ஒவ்வொருவரின் விமர்சனங்களும் ஒவ்வொரு ரகம்..அத்தனையும் எனது அடுத்த படைப்புக்களை இன்னும் சிறப்பாகத்தரவேண்டும் என்கிற சவாலை எனக்கு ஏற்படுத்துகிறது...

நன்றிகள்...