PDA

View Full Version : என் வாழ்க்கை.



நம்பிகோபாலன்
16-03-2008, 07:52 PM
இருமனம் இணைந்தோம்
திருமணம் நடந்தது
இனிதே இல்லறம்
தொடங்க
வேலைகள் மாறினோம்
நீ காலையிலும்
நான் மாலையிலும்
நல்வழியாய் குடும்பம்
சென்றது குறுந்தகவலில்..
களைத்துப்போய் காலையில்
நான் வர
ஒரு நிமிடப் பார்வையில்
காதலைத் தெரிவித்து
நீ வேலைக்கு ஓட
அப்பாடா
வாரக் கடைசி
காப்பாற்றியது என்னவளே...
கல்யாணம் பிறந்தநாள்
நண்பர்கள்
என சேர்ந்த பொழுதும்
சோர்ந்தே பிரிந்தது
வாழ்வோம் வாழ்க்கையை....

.

சுகந்தப்ரீதன்
17-03-2008, 12:34 PM
கல்யானம் பிறந்தநாள்
நண்பர்கள்
என சேர்ந்த பொழுதும்
சோர்ந்தே பிரிந்தது
வாழ்வோம் வாழ்கையை....
ஆஹா... அருமை நம்பியாரே...!!

வாழ்க்கையை தேடுவதாக கூறி வாழ்க்கையை தொலைக்கும் நமக்கு எங்கே தெரிகிறது தேடும்பொருள் காலடியில் கண்டுக்கொள்ளப் படாமல் கிடக்கிறதென்று...??:mini023:

விரக்தியாய் வார்த்தைக்கொண்டு வாழ்க்கைத்துணையை அழைக்கிறீர்கள் வாழ்க்கையை வாழ்வதற்க்கு.. வாழ்த்துக்கள் நண்பரே.. வாழ்க்கை வாழ்வதற்க்கே..!!:icon_b:

நம்பிகோபாலன்
17-03-2008, 04:24 PM
நன்றி நண்பரே...நான் பணத்தை தேடி வாழ்க்கையை தொலைத்தவன்.....

அமரன்
17-03-2008, 05:03 PM
தயவுசெய்து யாரும்
சடங்குகளையும் சம்பிரதாயங்களையும்
அநாவசியம் என்காதீர்..
கேளிக்கைகளை கேலிகள்செய்யாதீர்...

வாழப் பணந்தேடி
தொலைத்த வாழ்க்கையை
கண்டெடுக்கும் இடங்களவை!

புலம்பெயர் தமிழனாக அனுபவ மூட்டை இந்தக்கவிதை.

மாற்று,
இது அவரவர் தமக்குத் தாமே சிருஷ்டித்த உலகம்.
கடவுளின் காரியதரிசிகளாக இருந்து செயல்படவேண்டியது அவர்தம்கடமை.

பாராட்டுகள் நம்பி..

நம்பிகோபாலன்
18-03-2008, 05:22 AM
நான் யார் மனதும் புண்பட எழுதவில்லை...
நாங்கள் இருவரும் வாரகடைசியில் சேர்ந்த பொழுதெல்லாம்,எங்கள் வீட்டில்
திருமணமோ அல்லது பிறந்தநாளொ இல்லை நன்பர்களோ வருவார்கள் ஆதலால் எங்களின் பிரிவை அப்படி எழுதிருக்கிறேன்.
தவறுகள் இருப்பின் மன்னிக்க...

அமரன்
18-03-2008, 09:05 AM
சாடும் நோக்கல்ல நம்பி!
படித்ததும் சட்டென்று தோன்றிய உணர்வு.

மனோஜ்
18-03-2008, 09:35 AM
வேகஉலகில் வேகமாக ஒடிடும் வாழ்வு
வாழ்கை வாழ வேகமாக தேடிடும் மனிதர்
கடைசில் திரும்பி பார்க்கும் முன் வாழ்கை
கையில் சிக்காத காணல் நீர்
உல்லதை கொண்டு வாழ்கை சுகித்திடு

அருமை நம்பி கவிதை

க.கமலக்கண்ணன்
18-03-2008, 09:39 AM
தற்போது உள்ள நிலையில் கணவனும் மனைவியும் வேலைக்க சென்றால் ஏற்படும் நிகழ்வுகள்... அருமை...