PDA

View Full Version : உள்ளக் கதவு திறக்குமா...?



சிவா.ஜி
16-03-2008, 11:27 AM
பூட்டிய ஜன்னல் திறப்பில்
உடல்புழுக்கம் மறைந்து
மனப்புழுக்கம் மண்டியது
எதிர் ஜன்னலில் நீ...

உன்னைத் தொட்டு வந்த தென்றலும்
என்னை சுட்டுவிட்டு போகிறதே.

இந்த ஜன்னல் திறப்பின்
எதிரொலியா உன் ஜன்னல் அடைப்பு..?

எத்தனை முறை விண்ணப்பித்தும்
உன்னால் அங்கீகரிக்கப்படாத காதலை
எனக்குள் எத்தனைக் காலம்
அடைகாப்பேன்....

விடையறியாமல் இந்த வேள்வியில்
ஆகுதியாய் நானே ஆகுமுன்
உன் இதயம் இளகுமா...

அடைத்த தாழ் விலகுமா...
உள்ளக்கதவு திறக்குமா....
சிறிதேயாயினும்....
உனக்குள் காதல் சுரக்குமா...

அடைந்த ஜன்னலை விட்டு
அகலா பார்வையுடன்
இன்னும் ஒரு ஜென்மம்
இப்படியே நிற்பேன்....

.

யவனிகா
16-03-2008, 11:56 AM
வாழ்க்கைச் சிறைச்சாலையில்
காதலின் ஜன்னலாவது
திறக்காதா....

ஜன்னல் கவிதை...கதவைக் காட்டிலும் ஜன்னல்கள் ஏனோ முக்கியத்துவம் பெற்றுவிடுகினறன, நம் வாழ்நாளில்.

ஜன்னலின் அருகாமை எனக்குப் பிடித்த ஒன்று...கதவுகளின் வழியே காணும் உலகத்தை விட ஜன்னல்கள் காட்டும் உலகம் மாறுபட்டவை. ரசனைக்கு உரியவை...

உங்களின் கவிதையின் காதல் என்னைக் கவர்ந்ததை விட...சொல்லப்பட்ட ஜன்னல் உவமை மிகவும் கவர்ந்தது அண்ணா....

பாதி திறந்த ஜன்னல்...
சிவப்புத் தரையில் சூரியக் கதிர்கள்....
சிகை கோதும் வேப்பமரக் காற்று...
மெல்லியதாய் குரலெழுப்பும் பறவைகள்...
ஜன்னலோர பிரம்புக் கூடை...
கையில் பிடித்த புத்தகம்...

வாழ்க்கையண்ணா...வாழ்க்கை. புத்தகத்தை மூடி வைத்தவுடன் அப்படியே கூட மரித்துப் போகலாம்.

காதல் கவிதைக்கு ஜன்னலை உபயோகித்திருந்தீர்கள்..வாழ்க்கைக் கவிதைக்கு நான் பாத்திரமாக்கி விட்டேன்.

வாழ்த்துக்கள் அண்ணா...தொடர்ந்து எழுதுங்கள்...தாழ் விலகும்.

ஜெயாஸ்தா
16-03-2008, 12:08 PM
கவிதை மொத்தத்தையும் முதல் நான்கு வரிகளிலேயே மொத்தமாய் கொடுத்துவிட்டீர்கள் சிவா அண்ணா. 'ஆகுதி' என்றால் இடு பொருள் என்று அர்த்தமா?

எத்தனை ஜென்மம் இப்படியே நின்னாலும் அப்படியே நின்னுக்கிட்டே இருக்கவேண்டியதுதான்....! இந்த நாகரீக உலகில் காத்திருப்பு என்பது அடுத்த பேருந்துவரைக்கு மட்டும் இருக்க வேண்டும். இல்லையென்றால் காத்திருப்பிலேயே நம் வாழ்க்கை கரைந்துவிடும்.

சிவா.ஜி
16-03-2008, 12:11 PM
அட..அட..அட...என்ன ஒரு ரசனை என் தங்கைக்கு.....ரசிப்புத்திலகம்....அழகான கவிதையாய் ஜன்னலைப்பற்றின உங்கள் எண்ணக்கோர்வை...அசத்தல்.மிக அழகான பின்னூட்டம்.ரொம்ப நன்றிம்மா.

யவனிகா
16-03-2008, 12:15 PM
எத்தனை ஜென்மம் இப்படியே நின்னாலும் அப்படியே நின்னுக்கிட்டே இருக்கவேண்டியதுதான்....! இந்த நாகரீக உலகில் காத்திருப்பு என்பது அடுத்த பேருந்துவரைக்கு மட்டும் இருக்க வேண்டும். இல்லையென்றால் காத்திருப்பிலேயே நம் வாழ்க்கை கரைந்துவிடும்.

அமாமா....இத்தனை அறிவுரை சொல்லிட்டு இத்தனை ஜென்மமா முகவாய்ல வெச்ச கைய எடுக்கவே இல்லையே...
நீங்களுமா வெகேசன் போயிட்டீங்க?

சிவா.ஜி
16-03-2008, 12:16 PM
கவிதை மொத்தத்தையும் முதல் நான்கு வரிகளிலேயே மொத்தமாய் கொடுத்துவிட்டீர்கள் சிவா அண்ணா. \'ஆகுதி\' என்றால் இடு பொருள் என்று அர்த்தமா?

எத்தனை ஜென்மம் இப்படியே நின்னாலும் அப்படியே நின்னுக்கிட்டே இருக்கவேண்டியதுதான்....! இந்த நாகரீக உலகில் காத்திருப்பு என்பது அடுத்த பேருந்துவரைக்கு மட்டும் இருக்க வேண்டும். இல்லையென்றால் காத்திருப்பிலேயே நம் வாழ்க்கை கரைந்துவிடும்.

வாங்க ஜெயஸ்தா...முதல்ல ஒரு வரவேற்பு சலாம்.ரொம்ப நாளா ஆளையே காணோமே.....
ஆமாம் ஜெயஸ்தா...வேள்வித்தீயில் இடும் இடு பொருள்தான் ஆகுதி.
அப்புறம்...காத்திருப்புக்கு நீங்க சொன்ன பேருந்து உதாரணம்....சூப்பர்.நிஜ வாழ்க்கையில்....எந்த காத்திருப்புமே..சலிப்படைய வைப்பதுதான்...ஆனால் அதையும் மீறி சில காத்திருப்புகள்....சரித்திரமாகிவிடுகின்றன....சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்த்தேன் அதில் நாசர் அவருடைய காதலிக்காக 40 வருஷம் காத்துக்கொண்டிருப்பார்....நெஞ்சை நெகிழச் செய்த நடிப்பு நாசருடையது.

மீள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

ஜெயாஸ்தா
16-03-2008, 01:20 PM
அமாமா....இத்தனை அறிவுரை சொல்லிட்டு இத்தனை ஜென்மமா முகவாய்ல வெச்ச கைய எடுக்கவே இல்லையே...
நீங்களுமா வெகேசன் போயிட்டீங்க?
யோசித்தால்தான் புத்திசாலி ஆகலாம்ன்னு செத்துப்போன எங்க நன்னா (தாத்தா) சொல்லியிருக்கிறாரு அதான் யோசித்துக்கொண்டேயிருக்கிறேன்....ஹி...ஹி...ஹி..! அப்புறம் வொகேசன் போகல.....
கொஞ்சம் மதுரை, ராம்நாடுன்னு சுற்ற வேண்டியதாகிவிட்டது.


ஆனால் அதையும் மீறி சில காத்திருப்புகள்....சரித்திரமாகிவிடுகின்றன....சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்த்தேன் அதில் நாசர் அவருடைய காதலிக்காக 40 வருஷம் காத்துக்கொண்டிருப்பார்....நெஞ்சை நெகிழச் செய்த நடிப்பு நாசருடையது.

மீள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

நானும் அந்தப் படம் பார்த்தேன் அண்ணா. ஒரு நல்ல கதையை மிக மோசமான திரைக்கதையாக்குவது எப்படி என்பதற்கு சிறந்த உதாரணம் அந்தப்படம். அதே படத்திலும் கூட 40 வருடம் காத்திருந்த நாசருக்கு கடைசிவரை காதலி கிடைக்காமலேயே போய்விட்டாளே. திரைப்படத்திற்காக வேண்டுமானால் அந்தக் காதல் வென்றதாக சொல்லலாம்.

சுகந்தப்ரீதன்
17-03-2008, 12:26 PM
வாழ்த்துக்கள் அண்ணா...!!:mini023:

என்னவோ இப்பதான் காதலிக்க ஆரம்பிச்ச மாதிரி கவிதை எழுதிறீங்களே எப்படீணா...??:cool:



அடைந்த ஜன்னலை விட்டு
அகலா பார்வையுடன்
இன்னும் ஒரு ஜென்மம்
இப்படியே நிற்பேன்....

ஒருமணி நேரத்துக்குமேல ஓரிடத்துல நிக்கறதே பெரியவிசயம்.. இதுல ஒரு ஜென்மத்துக்கு மேலயா...? என்ன ஜென்மமய்யா இது..??:fragend005: காதல் வந்தா புத்தி போயிடும் சொல்லுறது... உண்மைதான்னு சிவா அண்ணா.. நல்லாவே கவிதையில படம்புடிச்சி போட்டுருக்காரு.. பாராட்டுக்கள் அண்ணாச்சி...!!:icon_b:

அமரன்
17-03-2008, 04:37 PM
சாளரம்....
குபு குபு தென்றலில்
நுழைவாயில்...

தென்றலின்
வேகம் தாங்கமுடியாதவர்கள்
சாளரத்தை
அடைத்து விடுவார்கள்.

நெடுநேரம் தட்டிப்பார்துவிட்டு
தென்றலும் அடங்கிவிடும்...

காதல் மரம் தாவணி துறக்கும்..
அனல் காற்றில் விரதமிருக்கும்..

உள்வேர்த்த நீர் ந்னைத்த
மனப்பூமியில் காதல் வேர்விடும்.

பருவகால நியதி இது..

பாராட்டுகள் சிவா!

சிவா.ஜி
18-03-2008, 04:14 AM
என்னவோ இப்பதான் காதலிக்க ஆரம்பிச்ச மாதிரி கவிதை எழுதிறீங்களே எப்படீணா...??http://www.tamilmantram.com:80/vb/


காதலுக்கு ஆரம்பம்...முடிவு என்று எதுவுமில்லையே சுகு....என்றும் காதல்...எப்போதும் காதல்...அதே மாதிரி காதல் கவிதைகளும்.....ஆமாதானே.....

நன்றி சுகு.

சிவா.ஜி
18-03-2008, 04:18 AM
சாளரம்....
குபு குபு தென்றலில்
நுழைவாயில்...


தென்றலில் குளிருள்ளவரை....சாளரத்திறப்பு.....சம்மதமே....சுட்டுவிட முட்டினால்...மூடுவிழா நிச்சயமே.....

மிக அழகான பின்னூட்டக்கவிதை அருமை அமரன்.வாழ்த்துக்கு நன்றி.

அமரன்
18-03-2008, 08:07 AM
தென்றலில் குளிருள்ளவரை....சாளரத்திறப்பு.....சம்மதமே....சுட்டுவிட முட்டினால்...மூடுவிழா நிச்சயமே.....
சாளரத்தை சாத்துவதும்
வெக்கையால் மருகுவதும்
வாடிக்கையானது..
மூடிய சாளரம் திறபடலாம்..

மாறாக
விசிறியை சுழல விட்டால்
காத்திருக்கும் சாளரம் பார்த்து
இன்னொரு சாளரம் திறக்கலாம்.

இல்லையா சிவா.