PDA

View Full Version : ஹைக்கூ - கொக்கு



ஆர்.ஈஸ்வரன்
16-03-2008, 10:07 AM
கொக்குக்கு
அசைவ விருந்து
வயலில் நீர்

இளசு
16-03-2008, 10:16 AM
காட்சிப்பா அழகு +அருமை.
உள்ளூர்த் தன்மையால் உள்ளார்ந்து ரசிக்க வைக்கிறது.

வாழ்த்துகள் ஈஸ்வரன்..

ஆர்.ஈஸ்வரன்
16-03-2008, 10:28 AM
[QUOTE=இளசு;335185]காட்சிப்பா அழகு +அருமை.
உள்ளூர்த் தன்மையால் உள்ளார்ந்து ரசிக்க வைக்கிறது.
மிக்க நன்றி

அனுராகவன்
16-03-2008, 10:36 AM
கொக்குக்கு
அசைவ விருந்து
வயலில் நீர்

எப்படி பொருள் கொள்வது..
சற்று விளக்களாமா...
எனக்கு புரியல..
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ஆனாலும் ஆழமாக பொருள் மட்டும் தெரியுது..
ஆனா புரியல.

ஆர்.ஈஸ்வரன்
18-03-2008, 12:54 PM
எப்படி பொருள் கொள்வது..
சற்று விளக்களாமா...
எனக்கு புரியல..
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ஆனாலும் ஆழமாக பொருள் மட்டும் தெரியுது..
ஆனா புரியல.

வயலுக்கு நீர் பாய்ச்சும்போது பத்து கொக்குகளுக்கு மேல் வரும். வயலில் தண்ணீர் படுகையில் அதன் உள்ளிருந்து பூரான், மற்றும் வேறு வகையான பூச்சிகள் வெளி வரும். அதைப் பார்த்து கொக்குகள் தின்றுவிடும்.
மற்றவை அவரவர்களுக்கு தகுந்தாற்போல் பொருள் படும்.

அமரன்
18-03-2008, 03:23 PM
காட்சிப்படுத்தும் கானமும் கவிஞர் தந்த பொழிப்புரையும் நன்று.
'அசைவ' வேண்டாத விருந்தாளி போல தெரிகிறது.
பாராட்டுகள் ஈஸ்வரன்.

ஆர்.ஈஸ்வரன்
19-03-2008, 11:08 AM
நன்றி அமரன் அவர்களே

வெற்றி
19-03-2008, 12:19 PM
கொக்குக்கு
அசைவ விருந்து
வயலில் நீர்

ரொம்ப நாள் ஆச்சு...நானும் பதிலுக்கு ஒன்று (உங்கள் பாணி..ஆனால் வேறு:icon_b: களம்)

கருத்த மேகம்
வறண்ட நதி
காத்திருக்கும் கொக்கு

மன்மதன்
19-03-2008, 12:54 PM
நல்ல காட்சிப்பா..

அருமையான ஹைக்கூ..

பாராட்டுகள்..!

மனோஜ்
19-03-2008, 12:58 PM
என்னமா ஹைக்கூ வாழ்த்துக்கள்

கண்மணி
29-03-2008, 12:52 AM
ஒரு சின்ன சந்தேகம்! கொக்கு சைவம் சாப்பிடுமா?.. வயலில் தானியங்கள் இதுமாதிரி.. (பாயாசம் சாப்பிடும்னு எல்.கே.ஜி கதையெல்லாம் சொல்லாதீங்க அண்ணாக்களே)

அறிஞர்
31-03-2008, 12:56 PM
நீர்பாய்ச்சல்..
வயலுக்கு சைவம்.
கொக்குக்கு அசைவம்.

அருமை அன்பரே..