PDA

View Full Version : நெரிசல்..!!



ஓவியன்
16-03-2008, 08:38 AM
மொட்டை மாடிகளும்
நெரிசலில் தவிக்கின்றன
புதிது புதிதாய் முளைக்கும்
டிஷ் அண்டனாக்களால்...!!

ஓவியன்
16-03-2008, 08:43 AM
தொலைக்காட்சிப் பெட்டிகளும்
நெரிசலில் தவிக்கின்றன
புதிது புதிதாய் முளைக்கும்
டிவி சானல்களினால் ...!!

ஓவியன்
16-03-2008, 08:45 AM
டிவி சானல்களும்
நெரிசலில் தவிக்கின்றன
புதிது புதிதாய் முளைக்கும்
மெகா சீரியல்களால் ...!!

இளசு
16-03-2008, 09:40 AM
வைரமுத்து அண்மையில் சொன்னார் -
நெரிசலைத் தவிர்க்க ஒவ்வொரு மனிதனும்
சிறு இறக்கை ஊர்தியில் பறந்தே இனி பயணிப்பான் என...
அப்படிப் பறந்தாலும்
மதுராந்தக வான்பரப்பில் விபத்து என
மாலைமலரில் வரா நாளிருக்காது..

நெரிசல்களுக்காப் பஞ்சம்?
தொடரட்டும் ஓவிய விவரிப்புகள்..
பாராட்டுகள் ஓவியன்!

யவனிகா
16-03-2008, 09:48 AM
காதலும் தவிக்கிறது
கவிதைகளின்
நெரிசலால்..

என்னங்க ஓவியன்..என் தங்கச்சியக் கூப்பிட்டுட்டு மொட்டை மாடிக்கு காத்து வாங்க போயிருப்பீங்க...அங்க காலாற ரெண்டு ஸ்டெப் வெச்சு ஒரு டூயட் கூட பாட முடியாம.,டிஷ் வில்லன்கள்...அந்தக் கடுப்பில இறங்கி வந்தவுடன கவித..கவித..

கொஞ்ச நாள் அப்படித்தான் எல்லாம் நெரிசலாத் தான் தெரியும்....அப்புறம் தன்னால சரியாப் போகும்...

ஆர்.ஈஸ்வரன்
16-03-2008, 09:58 AM
நகரத்துப் பறவைகள்
மகிழ்ச்சியில் துள்ளட்டும்
டிஷ் அண்டனாக்களால்

சிவா.ஜி
16-03-2008, 10:00 AM
ஒன்றன்பின் ஒன்றாய் நெரிசல்களைப் பட்டியலிட்ட கவிதைகள் அருமை...எனக்குள்ளும் நெரிசல்கள்தான்...வேண்டாத..பலவேறு எண்ண ஓட்டங்களால்...வாழ்த்துகள் ஓவியன்.

அனுராகவன்
16-03-2008, 10:51 AM
நன்றி ஓவியன் அவர்களே!!
நெரிசல் எங்கும் உண்டு..
எதிலும் உண்டும் போல
கவி மிக அருமை..

பூமகள்
16-03-2008, 02:10 PM
பூங்கா மரங்களும்
நெரிசலால் தவிக்கின்றன..
காதல் ஜோடிகளின்
நெருக்கத்தால்...!!

வைரமுத்து அண்மையில் சொன்னார் -
நெரிசலைத் தவிர்க்க ஒவ்வொரு மனிதனும்
சிறு இறக்கை ஊர்தியில் பறந்தே இனி பயணிப்பான் என...
60 கிலோ எடையோடான இருவர் அமரக் கூடிய பறக்கும் காரை தயாரித்துவிட்டார்கள் இளசு அண்ணா.
சென்ற வாரம் தான் தொலைக்காட்சியில் கண்டேன்..!!

இனி எல்லாரும் வானத்தில் பறந்துட்டே, மொட்டை மாடியில் பார்க்கிங் செய்துட்டு.... வீட்டுக்குள் செல்வார்கள்..!!

அப்புறம் அங்கும் நெரிசல் தான்...!!

அழகான நெரிசல்கள் கவிதைகளாக...!!:icon_b:
ஆனால்.. இங்கே பல கவிதைகளால் நெரிசல் இருத்தல் பாராட்டத் தக்கது தானே..!!:rolleyes: :icon_b:

பாராட்டுகள் ஓவியன் அண்ணா...
அசத்துறீங்களே...!! :icon_rollout:

அமரன்
16-03-2008, 03:12 PM
மொட்டை மாடிகளும்
நெரிசலில் தவிக்கின்றன
புதிது புதிதாய் முளைக்கும்
டிஷ் அண்டனாக்களால்...!!
சன நெரிசலால்தானே இந்த நிலமை?
அளவோடு பெற்று வாழ்க்க மக்கா!!:)

கல் மரத் தோப்புக்குள்
தொழில் நுட்பம் கட்டிய கூடு.
அவசியமான நெரிசலே!

அமரன்
16-03-2008, 03:15 PM
தொலைக்காட்சிப் பெட்டிகளும்
நெரிசலில் தவிக்கின்றன
புதிது புதிதாய் முளைக்கும்
டிவி சானல்களினால் ...!!
தொலைக்காட்சிக்கு நெரிசல்
அடிக்கடி கைமாறும் ரிமோட்டினால்!
ரிமோட்டுக்கு நெரிசல்
அதிகரித்து செல்லும் சேனல்களால்!

அனுபவங்களை கவிதையாக்க துவங்கி இருக்கும் ஓவிக்கு ஒரு சல்யூட்!:)

அமரன்
16-03-2008, 03:17 PM
டிவி சானல்களும்
நெரிசலில் தவிக்கின்றன
புதிது புதிதாய் முளைக்கும்
மெகா சீரியல்களால் ...!!
பணவரத்து அதிகம்
பார்ப்பவர்கள்
மன நெருக்கும் தூரம்..

அப்படித்தானே ஓவியன்!

அமரன்
16-03-2008, 08:46 PM
உலகத் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகும் மெகாதொடர்
-நெரிசல்

meera
16-03-2008, 10:16 PM
டிவி சானல்களும்
நெரிசலில் தவிக்கின்றன
புதிது புதிதாய் முளைக்கும்
மெகா சீரியல்களால் ...!!

அண்ணா, அருமை.

எவ்ளோ சரியா சொல்லிட்டீங்க.இந்த மெகா சீரியல் தொல்லை தாங்கலை.......(நிஜமா நான் சீரியல் பார்க்கமாட்டேன் நம்புங்கப்பா!!!!!!!!):sprachlos020::sprachlos020:

ஓவியன்
17-03-2008, 03:44 AM
வைரமுத்து அண்மையில் சொன்னார் -
நெரிசலைத் தவிர்க்க ஒவ்வொரு மனிதனும்
சிறு இறக்கை ஊர்தியில் பறந்தே இனி பயணிப்பான் என...
அப்படிப் பறந்தாலும்
மதுராந்தக வான்பரப்பில் விபத்து என
மாலைமலரில் வரா நாளிருக்காது..

நெரிசல்களுக்காப் பஞ்சம்?
தொடரட்டும் ஓவிய விவரிப்புகள்..
பாராட்டுகள் ஓவியன்!

நான் சிறுவனாக இருந்த போது தீவிரமாக சித்திரக் கதைகளைப் படித்ததுண்டு. அப்போது ஸ்பைடர் என்ற ஒரு சித்திரக் கதை ஹீரோ(சில வேளைகளில் வில்லனும் கூட...) ஹெலிக் கார் என்ற பறக்கும் காரில் வருவார். அந்த நிலை எல்லோருக்கும் கிடைக்கும் காலம் நிச்சயமாக வரும்...

உற்சாக வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணா..!! :)

ஷீ-நிசி
17-03-2008, 04:25 AM
நல்ல கவிதை ஓவியன்....

நெறி படுத்திக்கொள்ளாதவரை நெரிசல் தீராது.

ஓவியன்
17-03-2008, 05:40 AM
என்னங்க ஓவியன்..என் தங்கச்சியக் கூப்பிட்டுட்டு மொட்டை மாடிக்கு காத்து வாங்க போயிருப்பீங்க...அங்க காலாற ரெண்டு ஸ்டெப் வெச்சு ஒரு டூயட் கூட பாட முடியாம.,டிஷ் வில்லன்கள்...அந்தக் கடுப்பில இறங்கி வந்தவுடன கவித..கவித....

ஹீ, ஹீ..!!!!

அக்கா, எப்படி இவ்வளவு க்ரீட்டா.....???? :D:D:D

சுகந்தப்ரீதன்
17-03-2008, 12:19 PM
வாழ்த்துக்கள்... அண்ணா...!!:icon_b:

கவிதைகளை நெரிசலுக்கு உள்ளாக்காமல் இடைவெளி விட்டு பதிந்தமைக்கு....!!:fragend005:

அதுசரி... அண்ணாச்சி ஏதோ நெரிசல்ல இருக்காரு போலிருக்கு..?:mini023:
இல்லண்ண இந்தநேரத்துல நெரிசல பத்தி இவருக்கு எப்படி நினைப்பு வருமாம்...??!:icon_rollout:

மன்மதன்
19-03-2008, 01:34 PM
டிவி சானல்களும்
நெரிசலில் தவிக்கின்றன
புதிது புதிதாய் முளைக்கும்
மெகா சீரியல்களால் ...!!

மெகா சீரியல்களும்
நெரிசலில் தவிக்கின்றன
புதிது புதிதாய் முளைக்கும்
விளம்பரங்களால்...!!

பூமகள்
19-03-2008, 01:41 PM
நெடுந்தொடர்களும் நெரிசலில்
தவித்து நடனமாடுகின்றன..
முன்பாடல் நீண்டு
நெரிசல் அதிகமாவதால்..!!

ஓவியன்
13-05-2008, 02:42 PM
சீரியல் முன் பாடல்களும்
நெரிசலில் தவிக்கின்றன
முழு நடிகர்களையுமதில்
உள்வாங்கும் எண்ணத்தால்...!!