PDA

View Full Version : புதிய என்கோடிங்கில் தமிழ்மன்றம்!.இராசகுமாரன்
16-03-2008, 07:37 AM
இனிய நண்பர்களே,

நமது தளத்தின் தேடு பொறி (Search Engine)-யின் செயல் பாட்டை மேம்படுத்த வேண்டுமென்பது பலருடைய நெடுங்கால ஆவல், அதற்காக நமது மன்றத்தின் ”என்கோடிங்” முறை இன்று காலை முதல் மேம்படுத்தப் பட்டுள்ளது.

இதன் மூலம், இன்று முதல் பதிக்கப் படும் அனைத்து புதிய பதிப்புகளும் தேடு பொறியில் சரியாக கிடைக்கும்.

பழைய பதிப்புகளில் இந்த வசதி வேலை செய்ய வேண்டுமென்றால், அவற்றை திறந்து ஏதாவது ஒரு சிறிய மாற்றம் செய்து, அதாவது எங்காவது ஒரு முற்றுப் புள்ளி, கமா புள்ளி, காலி இடம் (ஸ்பேஸ்) விட்டு மீண்டும் சேமிக்கவும். (தற்போது உங்கள் திரிகளை நீங்களே மாற்றுமாறு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.)

ஒரு திரி புதிய என்கோடிங்கில் இருக்கிறதா அல்லது பழைய என்கோடிங்கில் இருக்கிறதா என்பதைக் காண IE7 --> View --> Encoding --> Western European என்று தேர்வு செய்து காணலாம். சரியாக படிக்க கூடிய எழுத்துக்கள் பழைய என்கோடிங் பதிப்புகள், படிக்க முடியாத எழுத்துக்கள் புதிய என்கோடிங் எழுத்துக்கள்.

ஒவ்வொரு முறையும் இவ்வாறு பார்க்க கடினமாக இருக்கும், அதனால் திருத்தப் படும் திரி தலைப்பின் முடிவில் ஒரு முற்றுப் புள்ளி வைத்து வருகிறோம். பதிப்புகளினுள் கடைசி வரியில் இரண்டு வெற்று வரிகள் விட்டு புள்ளி வைக்கிறோம். இத்தகைய திரிகளை / பதிப்புகளைக் கண்டால் அவை திருத்தப் பட்டு விட்டன என்று புரிந்து கொண்டு, நீங்கள் அவற்றை திருத்த முனைய வேண்டாம்.

தேடு பொறி மேம்பாட்டு வசதியுடன், நமக்கு கிடைத்துள்ள மற்றொரு வசதி, திரிகளின் தலைப்புகள் இனி அறைகுறையாக முடிவடையாது, பழைய திரிகளையும் திருத்தி நீட்டிக் கொள்ளலாம்.

இந்த மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள ஒரு சின்ன அசௌகரியம், பதிப்புகளில் ஒரு சில எழுத்துக்கள் ஒழுங்காக தோன்றாது. குறிப்பாக, சிங்கிள் கோட், ஹைஃபன், மற்றும் ஒரு சில சேர்ப்பு எழுத்துக்கள். இவற்றை நேரமிருப்பின் திருத்தவும், அல்லது நிர்வாக உறுப்பினர்கள் பின்னர் திருத்திப் பதிப்பார்கள்.

இந்த என்கோடிங் மாற்றத்திற்காக தமிழில் பெயர் வைத்துள்ளவர்கள் அனைவருடைய பெயர்களை மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டி வந்தது. 500-600 பேருடைய பெயர்களையும் உடனே தட்டச்சு செய்ய முடியாது. அதனால், கடந்த 6 மாதத்திற்குள் ஒரு முறையாவது வந்து சென்றவர்கள், அல்லது குறைந்த பட்சம் 10 பதிப்புகள் செய்தவர்கள் என்று தேர்வு செய்து ஏறக் குறைய 400 பேருடைய பெயர்களை மாற்றியுள்ளோம். மற்றவர்களின் பெயர்கள் இன்று அல்லது நாளை மாற்றப் படும்.

பிரச்சனைகள் ஏதும் தெரியவந்தால் உடனே நிர்வாகிக்கு தெரிவிக்கவும், அவர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி..!!

ஓவியன்
16-03-2008, 08:09 AM
''புதியன புகுதலும் பழையன கழிதலும் காலத்தின் நியதி'' என்பதற்கிணங்க நம் மன்றத்தின் மென்பொருள் முன்னேற்றத்தில் புதியனவற்றைப் புகுத்திவரும் அண்ணலுக்கு நன்றிகள் பல....!! :)
தமிழ் மன்றம் காலத்திற்கேற்ற மாற்றங்களை உள்வாங்கி காலத்தை வென்று வாழட்டும்.....!!:)

இளசு
16-03-2008, 09:35 AM
பதிவுக்களஞ்சியம் பெருகப் பெருக தேடுபொறியின் தேவை அவசியம் -அதிகம்.

அதற்காகத் தொலைநோக்குடன் அதைத் தருவிக்கும் தலைவருக்கு நன்றி.

சிறு தொல்லைகள் சிறுவிலையே.. சமாளிப்போம்!

மன்மதன்
16-03-2008, 10:55 AM
மன்றம் மென்மேலும் செழிக்கட்டும்..

தேவை அறிந்து மாற்றம் செய்து வரும் நண்பருக்கு நன்றிகள்.

அனுராகவன்
16-03-2008, 11:06 AM
ஓ நன்றி நண்பர்களே!!
நல்ல முயற்சி..!!

சூரியன்
16-03-2008, 11:21 AM
இதனால் மன்றம் மேலும் பொலிவுடன் தோன்றும் என்பதில் சந்தேகமில்லை.

அக்னி
16-03-2008, 01:21 PM
மன்ற மேம்பாட்டிற்கு சிரமம் பாராது சேவை செய்யும் இராசகுமாரன், மற்றும் நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
மன்றம் வளர்ச்சிப் படிகளில் ஏறிச் செல்கின்றது. அனைவரும் சேர்ந்தே பெருமைப்படுத்துவோம். வளர்ப்போம்.

leomohan
16-03-2008, 02:16 PM
அருமையான முயற்சி. என்னுடைய நீண்ட நாள் ஆசையும் கூட. நன்றி ராஜகுமார்.

ஷீ-நிசி
16-03-2008, 02:51 PM
மிக அவசியமான மாற்றம்.. நன்றி

அமரன்
16-03-2008, 03:06 PM
அவசிய சேவையை தந்த இராசகுமாரன் அண்ணாவுக்கு நன்றி.

அன்புரசிகன்
16-03-2008, 03:41 PM
மன்றத்தின் இன்னொரு பரிணாமவளர்ச்சி கண்டு மகிழ்ச்சி...

மனோஜ்
17-03-2008, 09:12 AM
சிறப்பான அமைப்பு செய்து தந்த இராசகுமாரன் அண்ணாவிற்கு நன்றி

Narathar
17-03-2008, 10:09 AM
மன்றம் நாளுக்கு நாள் மெறுகேறுவதைப்பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது

வாழ்த்துக்கள்

க.கமலக்கண்ணன்
17-03-2008, 10:15 AM
நிர்வாகிகளுக்கு நன்றி. பல புதிய தொழில் நுட்பத்தில் தமிழ்மன்றம் செழித்து வளரட்டும்...

meera
17-03-2008, 10:24 AM
நன்றி அண்ணா. இது ரொம்ப நல்ல விஷயம்.நானும் என் திரிகளை மாற்றுகிறேன்.

அறிஞர்
17-03-2008, 01:29 PM
நல்ல முயற்சி.. மன்றத்தின் வளர்ச்சியில் மற்றொரு படி.....

நேசம்
17-03-2008, 02:12 PM
நல்ல முயற்சிக்கு சில சங்கடங்களை மன்ற உறவுகள் பொருத்து கொள்ளுவார்கள்.பல புதிய வசதிகளுடன் மன்றம் செழிக்கட்டும்.