PDA

View Full Version : ஹைக்கூ 08 - காகிதப் பூ



meera
15-03-2008, 11:14 AM
மரணமின்றி
மலர்ந்தேன்
-காகித பூ

சிவா.ஜி
15-03-2008, 01:18 PM
இது ஹைக்கூவிலும் ரொம்ப சின்னதா இருக்கே...மைக்ரோ ஹைக்கூ...ஆனா...மைண்ட்டுக்குள்ள..நுழைந்த ஹைக்கூ...
காகிதப்பூவுக்கு மரணமேது....மணமுமேது?

பூமகள்
15-03-2008, 01:29 PM
வானவில்லில் நிறப்பஞ்சம்..
காகிதப் பூக்களால்
ராக்கெட் செய்து அனுப்புங்களேன்...!!

ஆஹா...
சூப்பர் மீரா அக்கா..!!

கலக்குறீங்களே...!! :)

முரண் கவிதை ஒன்று தோன்றியது..

மரணமில்லா காகிதப் பூக்கள்
காற்று தூவிச் சென்றன..
மரணம் தோய்ந்த
சவப்பெட்டிகளின் மேல்..!!

இதை முரண் தொடரில் பதிக்கிறேன்.

நல்ல ஹைக்கூவுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்..!! :)

meera
15-03-2008, 02:19 PM
நன்றி சிவா அண்ணா

meera
15-03-2008, 02:21 PM
பூ உன் கவிதை அழகாய் இருக்கிறது. உன் விமர்சனத்திற்கு நன்றி.

ஷீ-நிசி
15-03-2008, 02:46 PM
நான் மலருமில்லை..
என்னில் தேனுமில்லை..

ஆனாலும்
மலர்(ந்)தேன்!

ரொம்ப யோசிக்கவைத்தது கவிதை... வாழ்த்துக்கள் மீரா!

இளசு
15-03-2008, 03:13 PM
இன்றியமையாததை இழந்தபின்
இறவாமை அமைந்து என்ன பயன்?

என்னை(யும்) யோசிக்கவைத்த குறும்பா..!
மீராவுக்கு வாழ்த்துகள்..

பாமகளின் முரண்பா - நன்று!


மீரா.. ஹக்கூ, ஹைக்கூ என தலைப்பிட்டால் போதுமா?
ஹைக்கூ (1) ஹைக்கூ ( 2) என தொடர் எண் தரவும் வேண்டுகிறேன்..


(ஹைக்கூ கவிதைக்கு தலைப்பு வைக்கணுமா வேண்டாமா??????)

அறிஞர்
15-03-2008, 03:52 PM
மரணமின்றி
மலர்ந்தேன்
-காகித பூ


நான் மலருமில்லை..
என்னில் தேனுமில்லை..

ஆனாலும்
மலர்(ந்)தேன்!

ரொம்ப யோசிக்கவைத்தது கவிதை... வாழ்த்துக்கள் மீரா!
அருமை தோழியே....
சிறிய வரிகளில்...
அதிக ஆழம்...
வாழ்த்துக்கள்....

ஷீ அருமை...

meera
15-03-2008, 11:01 PM
நன்றி ஷீ.

meera
15-03-2008, 11:06 PM
நன்றி இளசு அண்ணா,

இனி வரும் ஹைக்கூவிற்கு நீங்கள் கூறியது போல் வரிசை எண் தருகிறேன் அண்ணா.

ஹைக்குவிற்கு தலைப்பு வேண்டுமா எனக்கும் தெரியவில்லையே அண்ணா...............

meera
15-03-2008, 11:08 PM
நன்றி அறிஞர் சார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி

அனுராகவன்
15-03-2008, 11:19 PM
காகிதப்பூ கசங்கா பூ
மரணம் அதை
எரித்தால்(அ) சிதைத்தால்
மட்டுமே...
மிக நன்று ஹைக்கூ..
தொடர்ந்து படைங்கள்..
என் வாழ்த்து என்றுமே!!

meera
15-03-2008, 11:44 PM
நன்றி அனு

தமிழ் மகன்
16-03-2008, 12:18 AM
ஒரு நல்ல ஹைக்கூவைத்தொடங்கி பலரையும் கவிதை எழுதவைத்துவிட்டாரே! மீராவுக்கு என் வாழ்த்துக்கள்.உங்கள் ஆக்கம் அருமையாக இருந்தது.சிவா-ஜியின் மைக்ரோ ஹைகூவும் அருமை,பூமகளின் முரண் கவிதையும் மிக்க நன்று,ஷீ வும் அசத்திவிட்டார்.
எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

எழுத்துக்களுக்கிடையே குறியீடு வருகிறதே.என்னால் நெறிப்படுத்த முடியவில்லையே?மன்னிக்கவும்.

aren
16-03-2008, 02:51 AM
மரணமின்றி
மலர்ந்தேன்
-காகித பூ

மரத்தைக் கொன்றுவிட்டு
எனக்கு சாகாவரம்
- காகிதப்பூ

இது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

meera
16-03-2008, 03:55 AM
நன்றி தமிழ் மகன்.

உங்கள் வருகை நல்வரவாக வாழ்த்துகள்

meera
16-03-2008, 03:58 AM
நன்றி அண்ணா,

உங்க அளவு நான் யோசிக்கலை.

உங்க கவிதை நல்லா இருக்கு அண்ணா.

எல்லாரும் நல்ல பதில் கவிதை தந்தமைக்கு நன்றி

ஓவியன்
16-03-2008, 08:30 AM
மரணமின்றி
மலர்ந்தேன்
-காகித பூ

மரணம் மட்டும் இல்லாமலா
கூடவே
மணம்
குணம்
தேன்
என்று நிறைய விடயங்கள் இல்லாமலல்லவா மலர்ந்திருக்கின்றது.

நல்ல கவிதை மீரா ...!! :icon_b:

ஆர்.ஈஸ்வரன்
16-03-2008, 10:03 AM
மிக நன்று ஹைக்கூ..

franklinraja
16-03-2008, 05:53 PM
மரணமின்றி
மலர்ந்தேன்
-காகித பூ

மணமில்லை என்பதால் மரணமில்லையா..?
இல்லை.. இல்லை.. நல்ல மனம் இருந்தால் அவர் புகழுக்கு என்றும் மரணமில்லை....!!

(அப்பாடா, நானும் ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன்... ஹி.. ஹி.. ஹி...!! :D)

meera
16-03-2008, 10:10 PM
உண்மைதான் அண்ணா மணம்,குணம்,தேன் எதுவும் இல்லைதான்.ஆகவே அது காகித பூ.

விமர்சனத்திற்கு நன்றி அண்ணா.

meera
16-03-2008, 10:12 PM
நன்றி ஈஸ்வரன்

meera
16-03-2008, 10:13 PM
fராங்ளின் நலமா??


நீண்ட நாட்களாய் உங்களை கானோமே?

விமர்சனத்திற்கு நன்றி.

franklinraja
17-03-2008, 04:20 AM
fராங்ளின் நலமா??


நீண்ட நாட்களாய் உங்களை கானோமே?

விமர்சனத்திற்கு நன்றி.

நலமே மீரா.. தாங்களும் நலம்தானே..? :rolleyes:


ஆமாம் மீரா.. நீண்ட நாட்க்களாகிவிட்டது தான்...:frown:

மீண்டும் உங்கள் ஹைக்கூ படித்ததில் மிக்க மகிழ்ச்சி... :icon_b:

கண்மணி
18-03-2008, 10:29 AM
மரணமின்றி
மலர்ந்தேன்
-காகித பூ

சின்னப் பூ! மரணமில்லை யென சந்தோஷம் படுகிறதோ!

காகிதப் பூக்கள்.. மரித்து மலர்கின்றன.. மணமில்லாமல், (திரு)மணமில்லாமல். மனமில்லாமல்...

அதன் புன்முறுவல், விரக்தியில் நெளிந்த உதட்டுச் சிரிப்பு!
மரணமில்லாமலயே!:icon_b:

மன்மதன்
19-03-2008, 01:18 PM
மரணமின்றி
மலர்ந்தேன்
-காகித பூ

அருமை மீரா..:icon_b:

meera
19-03-2008, 01:51 PM
நன்றி கண்மனி.

அதற்க்கு மணமும் இல்லை மனமும் இல்லை.

meera
19-03-2008, 01:53 PM
நன்றி மன்மதன்.

ஆதி
19-03-2008, 02:13 PM
மரணம் இமைக்காத இதழ்கள்
மரணத்தை வென்ற மலர்கள்

கவிதைக்கு வாழ்த்துக்கள் மீரா

meera
21-03-2008, 10:18 PM
நன்றி ஆதி