PDA

View Full Version : விழித்திருப்பு

நாகரா
14-03-2008, 01:57 PM
மௌனத்தின் விரல்கள்
மந்திர வார்த்தைகளை
அழுத்திப் பிழிந்த இரசத்தை
விழிகள் உறிஞ்ச
மூளையில் மூளும் பெருந்தீயில்
மாயத்திரைகள் கரைய
மன இமை திறந்து
இருதயம் விழிக்கிறது.
சுழலும் இருதயச் சுடர்விழித்
தூய நோக்கில்
பட்டப்பகல் வெளிச்சமாய்த் தெரிகிறது
இகத்தில் பூரணமாய்ப் பொருந்திய
பராபர உண்மை.
உண்மை உணர்ந்த மெய்
பிறப்பெனும் கனவும்
இறப்பெனும் உறக்கமும்
கலைந்து
பேரின்பப் பெருவாழ்வில்
விழித்திருக்கிறது
ஜீவனுள்ள வார்த்தையாய்.

ஓவியன்
15-03-2008, 08:24 AM
என்னுடைய சிற்றறிவுக்கு கொஞ்சம் அப்பாற்பட்ட கவிதைக் கருவாகப் பட்டாலும், நிரந்தர நித்தியத்தைத் தேடி விழித்திருக்கும் விதத்தை விளக்கும் ஓர் கவிதையாக எனக்குப் படுகிறது....
கவிதையின் கருப்பொருளை இன்னும் கொஞ்சம் விளக்கின், அது பலருக்கும் பயனுளதாக அமையுமென்பது என் கருத்து.

நாகரா
29-03-2008, 07:32 AM

நான் என்று உம்மை அறியும் நீவிரே கவிதையின் கரு, ஓவியன் என்ற மனமாம் சிற்றறிவை விட்டு நான் என்ற இருதயப் பேரறிவைப் பற்றி, நிரந்தர நித்தியத்தில் விழித்திருப்பீர்!