PDA

View Full Version : கடவுள்!!!தாமரை
14-03-2008, 01:29 AM
கடவுளா
உன் இடுப்பு மாதிரி
இருக்கிறதா இல்லையா என
சர்ச்சைகளுடன்!

அனுராகவன்
14-03-2008, 03:06 AM
கடவுளா
உன் இடுப்பு மாதிரி
இருக்கிறதா!

யார் இடுப்பு மாதிரி..
கடவுள் ஒரு உருவமற்ற சக்தி...
கடவுள் வெளியில் இல்லை..
நீங்க தான் கடவுள்
இல்லையென்றால் இந்த கேள்வி வர முடியுமா..
கடவுளை கடந்து உட்சென்றால் அறியலாம்..
நாம் நம்ம மாட்டோம் என தெரிந்துதான்
கோயில் கட்டினர் முன்னோர்..
அதற்கு சில உருவம் வைத்து..தம்பி! இதுதான் கடவுள்
என்று சொன்னதால்தான் ஓ! அப்படியா..என்று கோயிலுக்கு சென்று நாம் கண்களை மூடி பிராத்தனை வைக்கிறோம்...
யாரவது கண் திறந்து செய்றோமா?
இல்லையே....
அப்ப நீங்க சொன்னது உன் காதலின் இடுப்புதானே..


இல்லையா என
சர்ச்சைகளுடன்!

அதான் இல்லை என்று நீங்களே சொல்லிவிட்டு பின் ஏன் இந்த சர்ச்சை..
தாமரை விளக்கம் தாங்க..

செந்தமிழரசி
14-03-2008, 03:20 AM
இது ஒரு திராவிட கால கவிதை

இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாட
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி ?

எங்கோ இப்படி படித்த நாடகம், திராவிட காலத்துக்குள் திரும்பவும் அழைத்து சென்று வந்தமைக்கு நன்றி திரு.தாமாரை அவர்களே. வாழ்த்துக்கள்.

தாமரை
14-03-2008, 06:05 AM
அதான் இல்லை என்று நீங்களே சொல்லிவிட்டு பின் ஏன் இந்த சர்ச்சை..
தாமரை விளக்கம் தாங்க..

ரொம்ப சீரியஸா எடுத்துகிட்டீங்க போல இருக்கு, விளக்கம்


கடவுள் யார்னு கேட்கிற ஒரு காதலிக்கு காதலன் கிண்டலா பதில் சொல்ற மாதிரி சின்னதா எழுதினேன்..

இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன அப்படின்னு மதி போட்ட பாட்டால எழுதினது...

கடவுள் மதம் ஆத்திகம் நாத்திகம் பத்தி என் எண்ணத்தைப் பற்றி தெரிஞ்சுக்கணுமா...

இந்தத் திரியில் படிங்க...


http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9946

ஸாரிங்க, தப்பா அர்த்தம் எடுத்துக்கற மாதிரி எழுதினதுக்கு!

யவனிகா
14-03-2008, 07:55 AM
அனாடமி, ஆன்மீகப்படி இருக்கு... இரண்டுமே!
கண்ணக்கட்டும் காதல், கண்ணை மறைக்கும் "தான்" படி இல்லை இரண்டுமே....
ரசித்தேன் தாமரை அண்ணா...

தோழி செந்தமிழரசி... உங்களுடைய தமிழாற்றலும், நினைவாற்றலும் அசர வைக்கிறது... கவிதைகளும் மனதைத் தொடுகின்றன. வாழ்த்துக்கள். தொடருங்கள்!!! மன்றத்தில் அனைவரும் என்னை அக்கா என்றே அழைக்கின்றனர்... நீங்களும் என்னை அவ்வாறு அழைக்கும் முன் நான் முந்திக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் அரசி அக்கா!!!

மதி
14-03-2008, 08:13 AM
அட..
அந்த பாட்டு இப்படியெல்லாம் கவித எழுத வைக்கிறதா...? ஆச்சர்யமா இருக்கு..

அமரன்
14-03-2008, 08:16 AM
கடவுளா
உன் இடுப்பு மாதிரி
இருக்கிறதா இல்லையா என
சர்ச்சைகளுடன்!
ஹி....ஹி....
இக்காலத்தில் கடவுள் இருக்கிறார் என்பவர்கள் பக்கம் வலுவானதோ அண்ணா..

தாமரை
14-03-2008, 08:26 AM
அட..
அந்த பாட்டு இப்படியெல்லாம் கவித எழுத வைக்கிறதா...? ஆச்சர்யமா இருக்கு..

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு கவிதை எழுதலாம் மதி...யவனிக்கா வை வேணும்னா கேட்டுப் பாரேன்.. :D:D:D

நுரையீரல்
14-03-2008, 08:31 AM
அட..
அந்த பாட்டு இப்படியெல்லாம் கவித எழுத வைக்கிறதா...? ஆச்சர்யமா இருக்கு..
இதுக்கே இப்படி
ஆச்சரியப்பட்டா எப்படி மதி..

எல்லாரும் எப்படி கவிதை
எழுதறாங்கறத நினைச்சே நான்
பல தடவை ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

நான் மேலே போட்டிருக்கிறது
யாரு ஸ்டைல் கவிதைனு
சொல்லு மதி....

மதி
14-03-2008, 09:34 AM
இதுக்கே இப்படி
ஆச்சரியப்பட்டா எப்படி மதி..

எல்லாரும் எப்படி கவிதை
எழுதறாங்கறத நினைச்சே நான்
பல தடவை ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

நான் மேலே போட்டிருக்கிறது
யாரு ஸ்டைல் கவிதைனு
சொல்லு மதி....

அநேகமா என் ஸ்டைல்...:D:D:D
எதுக்கு வம்பு..யாரையாவது சொல்லிகிட்டு?:icon_b:

நுரையீரல்
14-03-2008, 10:25 AM
அநேகமா என் ஸ்டைல்...:D:D:D
எதுக்கு வம்பு..யாரையாவது சொல்லிகிட்டு?:icon_b:
பரிட்சைல பாஸ் ஆனாலும் ஆன மதி,

மதி அதிகமாயிடுச்சு
மதிக்கு

எப்படி இருக்கு
எங்க விதை (என் கவிதை) இது தாமரை ஸ்டைல். ஒரு சொல் இரண்டு அர்த்தம்.

மதி
14-03-2008, 10:27 AM
பரிட்சைல பாஸ் ஆனாலும் ஆன மதி,

மதி அதிகமாயிடுச்சு
மதிக்கு

எப்படி இருக்கு
எங்க விதை (என் கவிதை) இது தாமரை ஸ்டைல். ஒரு சொல் இரண்டு அர்த்தம்.

ஹைய்யா...
இதுலேயும் பாஸ் பண்ணிட்டேன்....:icon_rollout::icon_rollout::icon_rollout:

யவனிகா
14-03-2008, 10:40 AM
எழுதலாம் மதி...யவனிக்கா வை வேணும்னா கேட்டுப் பாரேன்.. :D:D:D

மதி நீ பெரிய மகான் மதி...
பாட்டுக்கு பீட்டில நான் உன்னை வஞ்சம் புகழ்ந்ததுக்கு....
தாமரை இங்க என்னைத் தாக்கறாரு...
என்னே காலத்தின் கோலம்...
மகான் மதி...வாழ்க வாழ்க...

நுரை எழுதற கவிதைக்கெல்லாம் காப்பி ரைட் உனக்குத்தானமா?
கூடிய சீக்கிறம் உன்னை பெங்களூர் பஸ்ஸ்டாண்டில் எதிர்பார்க்கிறேன்....
ஞே ஞே ஞே ஞே......

kavitha
14-03-2008, 10:41 AM
போக்கிரி - "டோலு டோலு" பாடலிலும் இதே போன்ற வரிகள் வரும்.
புதுசா ஏதாவது முயற்சி பண்ணுங்க.... (கருத்தினையும் சேர்த்து தாங்க சொல்றேன்)

kavitha
14-03-2008, 10:45 AM
இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாட
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்கும்ப்ப் எந்தன் ஆவி ?

எங்கோ இப்படி படித்த நாடகம், படித்து சிலிர்த்துப்போனேன் செந்தமிழரசி. வாழ்த்துகள்

தாமரை
17-03-2008, 04:24 AM
போக்கிரி - "டோலு டோலு" பாடலிலும் இதே போன்ற வரிகள் வரும்.
புதுசா ஏதாவது முயற்சி பண்ணுங்க.... (கருத்தினையும் சேர்த்து தாங்க சொல்றேன்)

அனுவோட பின்னூட்டம் படிச்சதும் என்னடா நம்மா வாயில் இருந்து வேண்டாத வார்த்தைகள் வழுக்கி விழுந்திருச்சோன்னு ரொம்பக் கவலைப் பட்டேன் அக்கா! ஆனால் இந்த வார்த்தைப் பசங்களைக் பாருங்களேன். நம்ம 20/20 கிரிக்கெட் டீமாட்டாம் கவிதா பின்னூட்டக் கோப்பையோட வந்து நிக்கிதுங்க,,

இது வரை என்னுடைய வேறு எந்தப் பதிவுகளுமே உங்க பின்னூட்டத்தைச் சம்பாதித்ததில்லை.. இத்துணூந்து இருந்து கிட்டு இந்தக் கவிதை சாதிச்சுட்டது..

இப்படி சாதிச்ச அந்த வார்த்தைகளை அப்படியே ஃபிரேம் போட்டு வச்சுக்க வேணாமா!!!:D:D:D


:nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002:
:nature-smiley-002:கடவுள்!!! :nature-smiley-002:
:nature-smiley-002: :nature-smiley-002:
:nature-smiley-002: :nature-smiley-002:
:nature-smiley-002: :nature-smiley-002:
:nature-smiley-002:கடவுளா:nature-smiley-002:
:nature-smiley-002:உன் இடுப்பு மாதிரி:nature-smiley-002:
:nature-smiley-002:இருக்கிறதா இல்லையா என:nature-smiley-002:
:nature-smiley-002:சர்ச்சைகளுடன்!:nature-smiley-002:
:nature-smiley-002:__________________:nature-smiley-002:
:nature-smiley-002:தாமரை செல்வன்:nature-smiley-002:
:nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002::nature-smiley-002:


(கவிதை அவுட் லைன் உருவத்திற்கும்.. கவிதைக் கருவிற்கும் உள்ள சம்பந்தம் தற்செயலானதே!!!:D:D:D)

ஷீ-நிசி
17-03-2008, 04:30 AM
கடவுளா
உன் இடுப்பு மாதிரி
இருக்கிறதா இல்லையா என
சர்ச்சைகளுடன்!

இதை முதலில் படித்தவுடன் முதலில் ஒன்றும் புரியவில்லை.

பின்னர்தான் தெரிந்தது. கமா, கேள்விக்குறிகள் எவ்வளவு முக்கியம் என்று...

கடவுளா?!
உன் இடுப்பு மாதிரி
இருக்கிறதா, இல்லையா என
சர்ச்சைகளுடன்!

காதலர்களுக்கிடையே நிகழும் கிண்டல் கலந்த கவிதை வரிகள்..

தாமரை
18-03-2008, 02:20 AM
இது ஒரு திராவிட கால கவிதை

.

இப்ப என்ன காலம் செந்தமிழரசி?

செந்தமிழரசி
18-03-2008, 04:18 AM
இப்ப என்ன காலம் செந்தமிழரசி?

சங்க காலம், காவிய காலம், சமயகாலம், சிற்றிலக்கிய காலம், தேசிய காலம், திராவிட காலம், புதுகவிதை காலம் என்று கவிதைகளின் காலத்தை சொன்னேன் திரு.தாமரை. இப்ப பின் நவீனத்துவகாலம் என்று சொல்லலாம்.

kavitha
26-03-2008, 11:12 AM
இது வரை என்னுடைய வேறு எந்தப் பதிவுகளுமே உங்க பின்னூட்டத்தைச் சம்பாதித்ததில்லை.. இத்துணூந்து இருந்து கிட்டு இந்தக் கவிதை சாதிச்சுட்டது..

ம்ஹீம் என்னத்த சொல்றது! உங்களின் பல பதிவுகளை பக்கம் பக்கமாய் படித்திருக்கிறேன் தாமரை. (விவாதபக்கங்கள் உட்பட)


அப்போதெல்லாம் பாராட்டாமல் போனது எனது தவறுதான். அதற்காக இந்தக்கண்டன பின்னூட்டத்தினையா தாங்கள் ப்ரேம் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்!

நல்லா எழுதியிருக்கீங்க..சூப்பர்... ஆகா ஓகோ னு யார்வேண்டுமானாலும் எப்போ வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் கண்டிக்கவேண்டியவற்றை உடனே செய்யவேண்டும். தாமதித்தால் அது ஆபத்தில் முடியும். அதனால் தான் இத்தகைய பின்னூட்டங்கள் உடன் எழுதிவிடுகிறேன். நீங்கள் பக்குவமானாவர். இதைத்தவறென எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

மன்றம் மீது மதிப்பும், பதிவுகளில் அக்கறையும் உண்டு. அதனால் தான் இவ்வாறாக எழுதினேன். அத்துடன் பிடித்தவர்கள் தவறு செய்தால் அதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. சண்டை வந்தாலும் சரி... சொன்னால் தான் என் மனது ஆறும்.

முகஸ்துதியை விட உண்மையான, வெளிப்படையான கருத்துகளையே என் தோழமைகளிடம் விரும்புபவள் நான். அப்படியே செய்கையிலும்.

ஆதி
26-03-2008, 11:22 AM
சங்க காலம், காவிய காலம், சமயகாலம், சிற்றிலக்கிய காலம், தேசிய காலம், திராவிட காலம், புதுகவிதை காலம் என்று கவிதைகளின் காலத்தை சொன்னேன் திரு.தாமரை. இப்ப பின் நவீனத்துவகாலம் புதுக்கவிதை காலம்-3 என்று சொல்லலாம்.

அரசி ஒரு சின்ன திருத்தம், தற்போதைய இலக்கியங்களைப் புதுக்கவிதைகள் என்றேச் சொல்ல இயலாது, நவீன இலக்கியங்கள் என்றுதான் அதை அழைக்க வேண்டும், இந்த இலக்கிய காலத்தை புதுக்கவிதை காலம் 3 என்று அதனால் அழைக்க இயலாது. நவீனத்துவமும் கடந்து பின்னவீனத்துவம் வரைச் சென்றுவிட்டன இலக்கியக்கங்கள்..
பின்னவீனத்துவ இலக்கியவாதிகள், தங்கள் இலக்கியங்களுக்கு புதுக்கவிதைகளுக்கு இருக்கிற வரவேற்பு இல்லை என்று சொல்லிக் கொள்கிறார்களே தவிர தங்கள் படைப்புகளைப் புதுக்கவிதைகள் என்று சொல்வது இல்லை.. அதனால்தான் சொல்கிறேன் புதுக்கவிதை வேறு நவீனகவிதைகள் வேறு..

அப்பறம் தாமரையண்ணா தமாஸாக் கேட்ட கேள்விக்கு நீங்க சீரியஸா பதில் சொல்லிருக்கீங்க :)
அன்புடன் ஆதி

தாமரை
26-03-2008, 11:55 AM
கருத்துக்களை மனம் விட்டு மக்கள் பகிர்ந்துக்கணும் என்பது மட்டுமே என் ஆசை.. உணர்ச்சிகரமா ஆவேசமா சத்தம் போட்டு பேசுவதை விட மாற்றுக் கருத்துகளை ஆவேசமே இல்லாம சொல்ல முடியும்கற ஒரு ஆரோக்யமான சூழ்நிலையை மன்றத்தில் கொண்டுவர மன்றத்தில் என்னுடைய பலமணி நேரங்களை செலவிட்டு இருக்கேன் அக்கா...

நீங்க என்னை விமர்சனம் செய்யலையே! நான் எழுதிய சில வார்த்தைகளைப் பற்றி உங்கள் கருத்துகளை கொடுக்கறீங்க.. இதை நான் தவறாகவே எடுத்துக் கொள்ளமாட்டேன் அக்கா.:icon_b::icon_b::icon_b:

என்ன செய்வது! வஞ்சப் புகழ்ச்சி என்னுடன் பிறந்தது.. அதான் அப்படி ஒரு ஃபிரேம் போட்டேன்.. சமாளிப்பு அக்கா சமாளிப்பு..:lachen001::lachen001::lachen001:

என் கருத்துக்களை என்னை நாலு பேர் புகழணும்னு எனக்கு ஆசை கிடையாதுக்கா. அதுக்காகவும் நான் எழுதறதில்லை.. சொல்லப் போனா நான் மன்றத்தில் வாழ்பவன்.:huepfen024:. வந்து போறவன் இல்லை.. :sport009:

கன்னா பின்னான்னு திட்டினாலும் புன்னகையோட நிக்கிற மனதைக் கொடுத்தது இந்த மன்றம். :medium-smiley-065:

ஒரு விஷயம் கவிதாக்கா.. நல்லது கெட்டதுன்னு எதுக்கு விமர்சனத்தை தரம் பிரிக்கணும்.. ஒண்ணை மறக்கணும்.. இன்னொன்றை நினைவினில் வச்சுக்கணும். இதெல்லாம் தன் உணர்வுகள் மீது கட்டுப்பாடு இல்லாத ஒரு மனிதன் செய்ய வேண்டிய காரியம் அல்லவா.. :medium-smiley-088:

உங்க விமர்சனம் என்னைக் கோபப்படுத்திருச்சி.. உங்களுக்கு இருக்கு ஒரு நாளுன்னு :violent-smiley-010:வன்மம் வச்சுக்கறதும்.. நீ என்னைப் பாராட்டு நான் உன்னைப் பாராட்டறேன் :ernaehrung004: என்று வியாபாரம் செய்து கொள்ளுதலும் அறிவினைக் கொள்ளாமல் உணர்ச்சிகளைக் கொண்டு முடிவெடுப்பவர்கள் செய்ய வேண்டிய விஷயமாயிற்றே!!

ஒரு மனித மனசில என் வார்த்தைகள் ஏற்படுத்தும் சுவடுகள் தானே அவை.. என் முகத்தை ஒரு கண்ணாடியில் பார்த்துக்கற மாதிரி.. :medium-smiley-029:

கன்னத்தில் கரி பட்டிருந்தா தொடைச்சிக்கற மாதிரி, நம்மளைப் பார்த்து நாமளே ஒரு கேலிச்சிரிப்பு சிரிச்சுகிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்.. இல்லைன்னா அதே மையை கொஞ்சம் எடுத்து மீசை வரைஞ்சு சேஷ்டை பண்ணியும் பார்க்கலாம்.:Christo_pancho:

நான் பண்ணினது இரண்டாவது வகை.. கொஞ்சமாய் ஒரு கிண்டல்..:medium-smiley-006:

:icon_rollout::icon_rollout::icon_rollout:

என்ன சொல்ல வந்தேன்.. ம்ம்ம் அதாவது க்கும்ம்.. க்க்கும்.. :love-smiley-073: எப்ப எதைப் படிச்சாலும் மனசுல பட்டதைச் டக்குன்னு இப்படிச் சொல்லிடுங்கக்கா..

யவனிகா
26-03-2008, 02:38 PM
அதே மையை கொஞ்சம் எடுத்து மீசை வரைஞ்சு சேஷ்டை பண்ணியும் பார்க்கலாம்.:Christo_pancho:இந்தப் பதிவு மீசை...
அடுத்த பதிவு தாடியா?
சடாமுடி வரைய மை ஸ்டாக் இருக்கா?

kavinila
26-03-2008, 02:59 PM
நல்லாயிருக்குதுங்கோ......சின்ன கவிதை....பெரிய சிந்தனை:icon_b:

Keelai Naadaan
26-03-2008, 03:15 PM
தாமரை அவர்களின் கவிதையும் அருமை.
செந்தமிழரசி அவர்கள் மேற்கொள் காட்டியுள்ள பாடலும் அருமை. பாராட்டுகள்.

ஷீ-நிசி
26-03-2008, 04:55 PM
இதை முதலில் படித்தவுடன் முதலில் ஒன்றும் புரியவில்லை.

பின்னர்தான் தெரிந்தது. கமா, கேள்விக்குறிகள் எவ்வளவு முக்கியம் என்று...

கடவுளா?!
உன் இடுப்பு மாதிரி
இருக்கிறதா, இல்லையா என
சர்ச்சைகளுடன்!

காதலர்களுக்கிடையே நிகழும் கிண்டல் கலந்த கவிதை வரிகள்..

எல்லாம் தெரிந்தவர்களுக்கு, எண்ணங்களை சொல்வது வீண்தான். நன்றி!

பூமகள்
26-03-2008, 05:27 PM
என்ன செய்வது! வஞ்சப் புகழ்ச்சி என்னுடன் பிறந்தது.. அதான் அப்படி ஒரு ஃபிரேம் போட்டேன்.. சமாளிப்பு அக்கா சமாளிப்பு..:lachen001::lachen001::lachen001:
அய்யயோ..:sprachlos020: தங்கச்சி.. மலரு.. ஓடியாம்மா.. இங்கே பாரு நம்ம அண்ணனை...!! :eek::eek::eek:
இவரு புகழ்ந்தார்னா மறைமுகமா திட்டுறாருனு அர்த்தமாமே மலரு... அதனால இனி அண்ணன் என்ன சொன்னாலும் கொஞ்சம் யோசிச்சி பார்த்து புரிஞ்சிக்கனும்மா...!! :rolleyes: :icon_rollout:

நான் மன்றத்தில் வாழ்பவன்.:huepfen024:. வந்து போறவன் இல்லை.. :sport009:
சரிங்க அண்ணா.....:p:cool: அதுக்கு ஏன் இத்தனை தடவ குதிக்கிறீங்க...?? :cool::aetsch013:
அதான் தெரிஞ்ச விசயம் ஆச்சே... !!:icon_b::icon_b:
குதிச்சி குதிச்சி பாருங்க... காலு ரெண்டும் உங்க குதி தாங்காம இன்விசிபில் ஆயிடிச்சி...!! :D:D
முதல்ல உட்காந்து அதை விசிபில் ஆக்குங்க அண்ணா...!! :icon_rollout::icon_rollout:

(இந்த பதில் முற்றிலும் நகைச்சுவைக்காகவே எழுதியது தான்.. யார் மனதையும் புண்படுத்த அல்ல..!!:icon_ush::icon_ush:)

தாமரை
27-03-2008, 01:17 AM
எல்லாம் தெரிந்தவர்களுக்கு, எண்ணங்களை சொல்வது வீண்தான். நன்றி!


என்ன ஷீ இப்படி கோவிச்சுக்கிறீங்க.. விமர்சனத்திற்கு பதில் போட்டா ஒருத்தர் மனசு வருத்தப் படறார்.. போடலைன்னு இன்னொருத்தர் வருத்தப் படறார்..

ஷீ, கவிதையில பஞ்ச்வேஷன் இருக்கலாமா இல்லையா? நான் இதுவரைப் பார்த்ததில்லை. ஆச்சர்யக் குறியும் கேள்விக் குறியும் மட்டுமே புதுக்கவிஞர்களால் ஒரு பஞ்ச் கொடுக்க உபயோகப் படுத்தப்படுகின்றன..

நாம் சொல்வது தெளிவாய் ஒரு கருத்து மட்டுமே தோன்றனும் என்றால் பஞ்ச்வேஷன் போடுவது ஞாயம்தான், எனக்கு தான் மறைபொருள் வச்சு எழுதியே பழக்கமாயிற்றே.. அதான் இன்னொரு கருத்து உள்ளிருக்கட்டும் என்று பஞ்சுவேஷன் போடறதே இல்லை.

சரி என்னது மறைபொருள் இதிலன்னு கேட்கறீங்களா? விஷயம் தெரிஞ்சிடுச்சில்ல,.. அமரன் ஓடி வந்து பிரிச்சு மேஞ்சிடுவார் பாருங்க..:icon_ush:

ஷீ-நிசி
27-03-2008, 01:26 AM
நன்றி தாமரை அவர்களே!

ஏதோ கொஞ்சம் கொஞ்சம் கவிதை எழுதுகின்ற எனக்கும் கூட படிக்கும்போது உடனே புரிந்துகொள்ள சிரமமாயிருப்பதாக நான் கருதியதாலேயே அவ்வாறு என் எண்ணங்களை சொல்லியிருந்தேன். பஞ்சுவேஷன்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்று!

இந்த என் கருத்துக்கு நீங்கள் விளக்கம் அளிக்காமல், அதற்கு முன்னிருக்கும் பின்னூட்டங்களுக்கும், பின்னிருக்கும் பின்னூட்டங்களுக்கும் மறுமொழி கூறியிருந்ததால், நான் கூறின எண்ணங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றே என்னால் யூகித்துக்கொள்ளமுடிந்தது.

அதன் விளைவே அந்த மறுமொழி. தவறிருப்பின் மன்னியுங்கள்!

தாமரை
27-03-2008, 01:41 AM
இந்த என் கருத்துக்கு நீங்கள் விளக்கம் அளிக்காமல், அதற்கு முன்னிருக்கும் பின்னூட்டங்களுக்கும், பின்னிருக்கும் பின்னூட்டங்களுக்கும் மறுமொழி கூறியிருந்ததால், நான் கூறின எண்ணங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றே என்னால் யூகித்துக்கொள்ளமுடிந்தது.பிடிக்கவில்லையா?

" எல்லா விஷயங்களைப் பற்றியும் எனக்கு ஏதாவது ஒரு கருத்து இருந்தே ஆக வேண்டும் " என்று ஒரு கட்டாயம் இருக்கிறதா ஷீ..???

:icon_rollout::icon_rollout::icon_rollout:

எனக்கு பிடிக்காதது என்பது மிக மிக அரிது.. பிடிக்கலைன்னா கண்டிப்பா சொல்லிடுவேன்..

பிடிச்சதைச் சொல்லத்தானே இந்தப் பாழாப் போன மனசுக்கு அப்படி ஒர் வெட்கம்.. :D:D:D

செந்தமிழரசி
27-03-2008, 04:51 AM
அரசி ஒரு சின்ன திருத்தம், தற்போதைய இலக்கியங்களைப் புதுக்கவிதைகள் என்றேச் சொல்ல இயலாது, நவீன இலக்கியங்கள் என்றுதான் அதை அழைக்க வேண்டும், இந்த இலக்கிய காலத்தை புதுக்கவிதை காலம் 3 என்று அதனால் அழைக்க இயலாது. நவீனத்துவமும் கடந்து பின்னவீனத்துவம் வரைச் சென்றுவிட்டன இலக்கியக்கங்கள்..
பின்னவீனத்துவ இலக்கியவாதிகள், தங்கள் இலக்கியங்களுக்கு புதுக்கவிதைகளுக்கு இருக்கிற வரவேற்பு இல்லை என்று சொல்லிக் கொள்கிறார்களே தவிர தங்கள் படைப்புகளைப் புதுக்கவிதைகள் என்று சொல்வது இல்லை.. அதனால்தான் சொல்கிறேன் புதுக்கவிதை வேறு நவீனகவிதைகள் வேறு..
நவீனத்துவத்தை புதுக்கவிதை-2 என்று சொல்லுவார்கள். நீங்கள் சொல்லுவது சரிதான் ஆதி, பின்நவீனத்துவ இலக்கியவாதிகள் புதுக்கவிதை நவீனத்துவம் என்றுதான் பிரித்து வாதிடிகின்றார்கள், அழகியப் பெரியவன் அழகிய எடுத்துக்காட்டு அதற்கு. புதுக்கவிதை -3 என்பதை நீக்கிவிடுகிறேன் கவிஞரே.

நன்றி