PDA

View Full Version : உன்னைப் பற்றியே என் கவிதை!.



lenram80
13-03-2008, 05:50 PM
காற்று தொட்டால் கூட சுருங்கும் தொட்டாச் சிணுங்கி,
நீ தொட்ட பிறகும் விரிந்தே இருக்கிறதே!
காற்றிலும் மெல்லியவள் நீ என்பதலா?
இல்லை
உன் ஸ்பரிசம் இன்னும் வேண்டும் என்பதலா?

தொட்டாச் சிணுங்கியே!
என்னவள் தொடும் போது மட்டும் நீ 'தொட்டாச் சிரிப்பி'யா?
அவளது ஸ்பரிசம் எனக்கு மட்டுமே சொந்தம்!
நீ மறுமுறை கேட்டால், கத்தி இன்றி வன்முறை சொந்தம்!
என்ன வன்முறை என்கிறாயா?
உன் மேல் உப்புநீர் ஊற்றுவேன்!
நான் என்ன சொல்கிறேன் என்று உனக்கு புரிந்தால் சரி!
இல்லையென்றால் கழிவோடு சேர்ந்து நீயும் மரி!


என்னவளே!
நீ உச்சரிக்கும் போது நாக்கு வலிக்குமாம்!
நீ கேட்கும் போது செவி அதிருமாம்!
வல்லின எழுத்துக்களை ஏன் படைத்தோம் என்று
தமிழ் தாய் கண்ணீர் வடிக்கிறாள்!
இனிமேல் துப்பாக்கிகள் "துமீல்" என்று தான் வெ(டி)திக்குமாம்!
வெடிகள் கூட தங்கள் பெயரை "வெதி"
என மாற்றச் சொல்லி மனு போடுகின்றனவாம்!

சூரியனில் தண்ணீர்!
உலகத்துக்கே ஆச்சரிய செய்தி!
எனக்கு மட்டும் சாதாரண செய்தி!
உன் தேகம் சுட்டதற்காக சூரியன் கண்ணீர் வடித்திருப்பான்!

ஹாலி வால் நட்சத்திரம் பாதை மாறியது!
இந்த செய்தி இப்போது,
உங்களுக்கும் சாதாரண செய்தி தானே?
நீங்கள் நினைப்பது சரிதான்!
என்னவளின் கண்ணில் படுவதற்காக
இப்படி மாற்றுப் பாதை பயணம்!
எந்த முனிவர் கொடுத்த சாபமோ?
இப்படி அலைந்து கொண்டே இருக்கிறது!
உன் பார்வை பட்ட பிறகாவது விமோசனம் கிட்டட்டும்!
நிலவோடு சேர்ந்து இதுவும் இனிமேல் பூமியைச் சுற்றட்டும்!

இந்த எழுத்துக்கள் கூட நீ படித்த பின்பு தான்
தங்களை 'கவிதை' என்று ஒத்துக் கொள்கின்றன!
என்னிடம் வந்து இப்படி சண்டை போடுகின்றன!
உன்னை பற்றி எழுதுபவை மட்டுமே கவிதையாம்!
கவிதையில் சேர்த்து எங்களை அழகுபடுத்து!
மற்றவை(குப்பை)களை எழுதி அசிங்கப்படுத்தாதே!

இனிமேல்,
உன்னைப் பற்றியே என் கவிதை!
உன் கைப் பற்றியே என் வாழ்க்கை!

.

சாம்பவி
31-05-2008, 08:00 AM
நீ மறுமுறை கேட்டால், கத்தி இன்றி வன்முறை சொந்தம்!
என்ன வன்முறை என்கிறாயா?
உன் மேல் உப்புநீர் ஊற்றுவேன்!
நான் என்ன சொல்கிறேன் என்று உனக்கு புரிந்தால் சரி!
இல்லையென்றால் கழிவோடு சேர்ந்து நீயும் மரி!



OMG....... :O:O:O:O:O:O !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

lenram80
03-06-2008, 01:30 PM
என்னங்க மீன்(Mean) பன்ரீங்க OMGன்னா?

shibly591
03-06-2008, 01:49 PM
கவிதை அழகோ அழகு...அப்படி ஒரு அழகு...வாழத்துக்கள்...உங்கள் பெயரை எப்படி உச்சரிப்பது..?

ஓவியன்
03-06-2008, 02:30 PM
கவிதை அழகோ அழகு...அப்படி ஒரு அழகு...வாழத்துக்கள்...உங்கள் பெயரை எப்படி உச்சரிப்பது..?

மன்றத்து உறவுகள் ராம் என்று அழைப்பார்கள் ஷிப்லி...!! :)

பூமகள்
03-06-2008, 03:47 PM
என்னங்க மீன்(Mean) பன்ரீங்க OMGன்னா?
சாம்பவி மேற்கோள் செய்த கவிதை வரிகளைப் படித்ததால்...:icon_rollout:
Oh.. My God..(OMG)!! என்று சொல்கிறாரென நினைக்கிறேன்..!! :icon_ush::icon_ush: