PDA

View Full Version : யாஹூ-வில் போட்டோ இணைப்பது எப்படி?

உதயா
13-03-2008, 02:04 PM
வணக்கம்...

பொதுவாக யாஹூவில் நாம் போட்டோ இனைத்து அன்புவோம், அதை பெரும் நபர், அந்த படத்தை save செய்து தான் முழு வடிவில் பார்க்கமுடியும். அந்த படத்தை நாம் எழுதும் message இடத்திலேயே பார்க்கும் படி எப்படி இனைப்பது. விளக்கம் கொடுங்களே பிலிஸ்.

அன்புரசிகன்
13-03-2008, 08:39 PM
படம் ஒன்றை இணைப்பாக அனுப்பினால் இயலாது. ஆனால் படம் கொண்ட இணையப்பக்கத்தினை அனுப்பினால் முடியும். (அநேகமாக நிக்கூட்ஸ் மின்னஞ்சல்கள் அவ்வாறே...)

உதயா
15-03-2008, 05:37 AM
எனக்கு அது போல் மெயில்கள் வந்திருக்கிறதே..

நூர்
23-03-2009, 12:30 PM
இன்னும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன். வந்த மெயில்களில் (saveசெய்யாமல்)படம் தெரியவில்லையா?

தலைப்பில் ''போட்டோ எப்படி இனைப்பது'' என்று இருக்கிறது!!!

ஓவியன்
24-03-2009, 02:07 PM
படங்களை அட்டாச் செய்வது போல இணைக்காமல், மின்னஞ்சலில் நாம் தட்டச்சு செய்யும் மின்னஞ்சலில் உடல் பகுதியிலேயே தொடர்ச்சியாக படங்களைப் ஒரே பார்வையில் பார்க்கும் படியாக அமைப்பது எப்படியென வினவுகிறாரென நினைக்கிறேன் நூர்....

அன்பு கூறியது போல, படங்கள் கொண்ட இணையப் பக்கங்களை அனுப்பினால் முடியுமென நம்புகிறேன்...

அக்னி
24-03-2009, 06:09 PM
நான் windows live mail ஐ நிறுவியுள்ளேன்.
அதன் மூலமாக மின்னஞ்சலின் உடலிலேயே படங்களைப் பதிக்கக்கூடியதாகவுள்ளது.
அதனை yahoo மின்னஞ்சலுக்கு forward செய்வதால் மேற்படி பெற்றுக்கொள்ளலாம்.

windows live mail ஊடாக yahoo வையும் இணைத்தால் நேரடியாகவே இதனைச் செய்யலாம் என நினைக்கின்றேன்.
அதற்கு yahoo mail plus இருத்தல் அவசியம். (காசு கேக்கிறாங்கப்பா...)
என்னிடம் இல்லாததால் முயற்சிக்க முடியவில்லை.

outlook இனூடாக இப்படிச் செய்ய இயலுமா எனத் தெரியவில்லை.
outlook இல் yahoo ஐ இணைப்பதற்கும் yahoo mail plus இருத்தல் அவசியம்.

http://overview.mail.yahoo.com/enhancements/mailplus (http://overview.mail.yahoo.com/enhancements/mailplus)

praveen
25-03-2009, 12:51 PM
படங்களை அட்டாச் செய்வது போல இணைக்காமல், மின்னஞ்சலில் நாம் தட்டச்சு செய்யும் மின்னஞ்சலில் உடல் பகுதியிலேயே தொடர்ச்சியாக படங்களைப் ஒரே பார்வையில் பார்க்கும் படியாக அமைப்பது எப்படியென வினவுகிறாரென நினைக்கிறேன் நூர்....

அன்பு கூறியது போல, படங்கள் கொண்ட இணையப் பக்கங்களை அனுப்பினால் முடியுமென நம்புகிறேன்...

பொதுவாக யாகூ மெயிலில் பார்ப்பவர் வைத்திருக்கும் செட்டிங்ஸை வைத்தே அட்டாச்மெண்ட் படம் பிரவுசரில் பார்க்கையிலே படமாக தெரியும். இது அவரவர் செட்டிங்க்ஸ் பொறுத்து மாறுபடும்.

இந்த படத்தை பார்த்தால் அது தெரியவரும்

முதல் படத்தில் (இரண்டையும் ஒன்றக்கி தந்திருக்கிறேன்) தேவையான செட்டிங்க்ஸ் எங்கே நிரந்தரமாக படம் தெரிய வேண்டும் என்பது
http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/toseepicinyahoomail.jpg

இரண்டாம் படத்தில் தற்காலிகமாக அந்த மின்னஞ்சலுக்கு மட்டும் படம் தெரிய.

நான் windows live mail ஐ நிறுவியுள்ளேன்.
அதன் மூலமாக மின்னஞ்சலின் உடலிலேயே படங்களைப் பதிக்கக்கூடியதாகவுள்ளது.
அதனை yahoo மின்னஞ்சலுக்கு forward செய்வதால் மேற்படி பெற்றுக்கொள்ளலாம்.

windows live mail ஊடாக yahoo வையும் இணைத்தால் நேரடியாகவே இதனைச் செய்யலாம் என நினைக்கின்றேன்.
அதற்கு yahoo mail plus இருத்தல் அவசியம். (காசு கேக்கிறாங்கப்பா...)
என்னிடம் இல்லாததால் முயற்சிக்க முடியவில்லை.

outlook இனூடாக இப்படிச் செய்ய இயலுமா எனத் தெரியவில்லை.
outlook இல் yahoo ஐ இணைப்பதற்கும் yahoo mail plus இருத்தல் அவசியம்.

நான் ஒரு கோக்குமாக்கு (கோல்மால் :)) வேலை செய்து எனது யாகூ மெயிலை 10 பைசா கட்டாமல் எந்த மென்பொருளும் உபயோகிக்காமால் எனது அவுட்லுக் எக்ஸ்பிரஸில் பெற்று அனுப்பி வைத்து கொண்டு தான் இருக்கிறேன்.

உங்கள் இமெயிலில் POP Access and Forwarding சென்று பாருங்கள், பிரிமியம் என்று வந்தால் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கும்,
(நான் முதலில் யாகூ.காம்-ல் தான் அக்கவுண்ட் வைத்திருந்தேன், இப்போதும் அப்படி தான், இந்த மாதிரி வேலை செய்வதற்காக யாகூ இந்தியாவில் லாகின் ஆனேன், அது உங்கள் புரபைலை இங்கே இறக்கட்டுமா என்று கேட்டு இறக்கி பின் மறைமுகமாக இந்த வசதி செய்து தந்தது, நாங்கல்லாம் பிரிமியம் மெம்பர்ஸ் எங்கே போனாலும் (ஒவியன் காதில் புகை வருகிறதா :)), இதே போல ஹாட்மெயிலில் எனக்கு பல வருடங்களாக அவுட்லுக் எக்ஸ்பிரஸ் வசதி உள்ளது, சென்ற வருடத்தோடு நிறுத்துவதாக சொன்னார்கள், ஆனால் இப்போதும் இலவசமாகவே பெற்றுக்கொண்டிருக்கிறேன், அது மட்டுமா, எனது ரிலையன்ஸ் மொபைலுக்கு MSNமெயில் அலர்ட்டையும் இலவசமாகவே பெற்று வருகிறேன்)

உங்கள் நாட்டிற்கு இந்த வசதி இல்லை என்று வந்தால் நல்லதா போச்சு.
உங்கள் அவுட்லுக் எக்ஸ்பிரஸில் இந்த மாதிரி செட்டிங்க்ஸ் கொடுத்து

pop.mail.yahoo.co.in
smtp.mail.yahoo.co.in

யூசர் நேம் பாஸ்வேர்டு கொடுத்து உபயோகித்து கொள்ளலாம், நான் அப்படித்தான் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன் :)

ஓவியன்
31-03-2009, 04:55 AM
நல்ல தகவல்களுக்கு மிக்க நன்றி பிரவின்..!!

விகடன்
31-03-2009, 05:05 AM
ந்நல்லதோர் தகவல்.
ஆனால் என்னுடைய மின்னஞ்சலிற்கு வேலை செய்யவில்லையே :(