PDA

View Full Version : பாலைவன கப்பல்



அனுராகவன்
13-03-2008, 09:10 AM
பாலைவன கப்பல்

பாலைவன சோலையிலே
நடமாடும் வண்டுகளே
தன்னந்தனி கூட்டத்திலே
தவழ்ந்து வரும் ஒட்டகமே
நெருஞ்சில் முட்களே
தேனிக்கு அழைப்பு ஏனோ!!
தங்கு தடையின்றி
சமுத்திரங்கள் சூழ்ந்திருக்க
ஏனோ!! ஒரு மூளையில்
வறண்ட ஒரு பூஞ்சோலை
அஃது மணற்மேடு
திட்டுகளும் புதைமணல்
ஆளிகளும் தடையின்றி
செல்லுமே ஒரு ஜீவன்
அஃதே ஒட்டகமே!!
உனக்கு கால்கள் என்ன?
பஞ்சு மெத்தையா?
எங்களை சுமக்க உனக்கு ஏன்?
அதனாலோ உன்னை
பாலைவன கப்பல் என்பேன்..

-அனு

க.கமலக்கண்ணன்
13-03-2008, 09:45 AM
பாலைவன கப்பலை பகட்டில்லாமல்

பார்த்து பார்த்து படைத்திட அனு அருமை அனு...

அனுராகவன்
13-03-2008, 11:58 PM
நன்றி கமலகண்ணன் அவர்களே!!
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி...
தொடர்ந்து வாருங்கள்

சிவா.ஜி
15-03-2008, 08:53 AM
அனு உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்...என்னவோ எழுதனுன்னு நினைக்கறீங்க....ஆனா....கவிதை எழுதுவது எப்படிங்கற (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8497)திரியைப் படிச்சீங்கன்னா...உங்களுக்கு அது ரொம்ப உதவியா இருக்கும்....தப்பா நினைச்சுக்காதீங்க.....

அமரன்
15-03-2008, 09:37 AM
ஒரு கவிஞன் எல்லாத்தைப் பற்றியும் எழுதக்கூடியவனாக இருக்கவேண்டும்.. அந்த வரிசையில் ஒட்டகத்துக்கு ஒரு கவிதை... பாலைவனச்சோலையிலே நடமாடும் வண்டு.. பாலைவனக் கப்பல்.. அழகான கற்பனைத் திறன்.:icon_b:

பொழுதே போகவில்லை என்று சொன்ன காலம் போய் பொழுது போதவில்லை என்ற காலம் இப்போது. சொல்ல வந்ததை சுருக்கமாக சொன்னாலே பாதி நயம் வந்துவிடும். நளினமாக சொல்லி விட்டால் முழு நயம் கிடைத்துவிடும்.

இக்கலை கைவர வாசிப்பு அதிகமாகவேண்டும். நானறிந்த மன்ற உறவுகள் சிலர், தமிழை தாமதமாகக் கற்று வாசிப்பின் மூலம் விற்பன்னர்களாக திகழ்கிறார்கள்.. படியுங்கள்.. படைப்பை திறனாய்வு செய்யுங்கள்.. இன்னும் சிறப்பாக உங்களால் எழுத முடியும்..

வாழ்த்துக்கள்...

இதையே இப்படி எழுதி இருக்கலாம்...

மணற்கடலில் நமைச் சுமக்கும்
கால் முளைத்த கப்பல்.
ஒட்டகம்.

நானும் மாணவனே அனு. சக மாணவி சிறந்தவராக வரவேண்டும் என்ற ஆசையே இந்தபதிவு. புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்..

ஷீ-நிசி
15-03-2008, 02:55 PM
ஒட்டகம்... பாலைவனத்தில் மிதக்கும் கப்பலாய் உவமானம்..
மிக அழகிய பார்வை..

அது மெல்ல நடந்து செல்லும் அழகு, ஒரு கப்பல் தண்ணீரில் ஆடுவது போலத்தான் தோன்றுகிறது.

வாழ்த்துக்கள் அனு! தொடருங்கள்!

இளசு
15-03-2008, 03:19 PM
ஆரம்பப்பள்ளியில் படித்த உவமை..
இங்கே அனுவின் கவிதையில் மீண்டும் கண்டபோது
''கானல் நீரில்'' மிதக்கும் கப்பல் உருவ(க)ம் கண்டேன்..

பாராட்டுகள் அனு....

meera
15-03-2008, 11:38 PM
பாராட்டுகள் அனு பாலைவன கப்பலுக்கு.....

அனுராகவன்
17-03-2008, 12:00 AM
அனு உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்...என்னவோ எழுதனுன்னு நினைக்கறீங்க....ஆனா....கவிதை எழுதுவது எப்படிங்கற (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8497)திரியைப் படிச்சீங்கன்னா...உங்களுக்கு அது ரொம்ப உதவியா இருக்கும்....தப்பா நினைச்சுக்காதீங்க.....

நன்றி சிவா.ஜி அவர்களே!!
நிச்சயம் படிக்கிறேன்..
உதவியதற்கு மிக்க நன்றி....
இதுக்கு போயி தப்பாவா..
என்னங்க..!!
உங்கள் ஊக்கத்திற்க்கு என் வாழ்த்துக்கள்!!