PDA

View Full Version : ராணி! மகாராணி!ஷீ-நிசி
11-03-2008, 03:27 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/RaniMaharaniNew.jpg

என்னைப்போலவே...

வாசல் பெருக்கிட்டு,
பாத்திரம் துலக்கிட்டு..
துணிகளை துவைச்சிட்டு..
சமையலை செய்துட்டு...
வீடும் துடைச்சிட்டு..

கிளம்பிட்டாங்க..
எதிர்த்த வீட்டு ராணியக்கா,
துட்ட வாங்கிக்கிட்டு...

“மகாராணிக்கு
வேலை ஒன்னுமில்லையோ?!”

கிளம்ப முடியாம இருக்கேன்,
மாமியார்கிட்ட திட்ட வாங்கிகிட்டு....

நான்
ராணியா?! மகாராணியா?!

நாகரா
11-03-2008, 03:38 PM
சம்பளமில்லா வேலைக்காரிகளாய் வாழும்
இல்லத்தரசிகளின் இயலாமையை
அழகாய்க் கவிதையில் படம் பிடித்திருக்கிறீர்கள், நிசி
மனம் மாறுமா இந்த ஆணாதிக்க சமூகம்?

வாழ்த்துக்கள், ஷீ-நிசி

சிவா.ஜி
11-03-2008, 03:43 PM
அசத்தல்....பேருக்கு மகாராணி...ஆனால்....தளையறுக்க முடியாத...வேலைக்கார தேனீ....

எத்தனை மகாராணிகள்...அந்த சாதா ரணிகளைப் பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்..

எதர்ர்த்தமான எள்ளல் கவிதை...அருமை ஷீ....வாழ்த்துகள்.

ஷீ-நிசி
11-03-2008, 03:49 PM
நன்றி சாகரா...

நன்றி சிவா...

மிக நீண்ட இடைவெளியாகிவிட்டது கவிதை எழுதி, இன்று இணையத்தில் அமர்ந்ததும் மனதில் இந்த கரு கிடைத்தது. பகிர்ந்துகொண்டேன்..

நன்றி!

க.கமலக்கண்ணன்
11-03-2008, 06:23 PM
இல்லதரசிகளின்

இன்றை நிலையை மிக

இயற்கையாய் படம் பிடித்து

இயல்பாய் கதைவிதையும் படைத்திருக்கிறீர்கள்...

மனோஜ்
11-03-2008, 07:57 PM
இல்லது அரசி
இப்படி இல் லது அரசியாய் இருப்பதை அழகாய் வடித்துல்லீர்கள் ஷீ

அறிஞர்
12-03-2008, 01:11 AM
செய்த வேலைகள் சமம்...
ராணியக்காவுக்கு சம்பளம்.
மகாராணிக்கோ....

மகாராணிகளின் நிலை பரிதாபம் தான்......

ஷீ-நிசியின் பார்வையில்.. அடுத்த சமூக பிரச்சனை...

kavitha
12-03-2008, 11:49 AM
"வேலை செல்பவர்களுக்காவது வாரவிடுமுறை உண்டு..
இல்லத்தரசிகளுக்கு ஞாயிறு கூட கிடையாது" என்பதை உரைத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.


மகாராணிக்கு
வேலை ஒன்னுமில்லையோ?!
பெண்களின் கஷ்டத்தைக் கண்டு பெண்களே இரக்கப்படாத வரை விடிவுகாலம் என்பது கானல்நீர் தான்.

பூமகள்
12-03-2008, 11:55 AM
வேலைக்கு கூட எட்டுமணி நேரம் அதிக பட்சம் 14 மணி நேர வேலை என்று மணிக்கணக்கு இருக்கிறது..!!
விடுமுறைகள் இருக்கிறது.. மெடிக்கல் லீவ்.. கேசுவல் லீவ்... இப்படி பல..!!

ஆனால்..வீட்டில்... எல்லா நாளும்.. எல்லா நேரமும்.. எப்போதும்.. ரவுண்ட் தெ கிளாக்.. வேலை செய்தே ஆகனும்..!!

இதுல வேலையும் செய்துட்டு.. வேடிக்கை மட்டும் பார்ப்பவர்களிடமிருந்து வசவு சொல் வாங்கிட்டு.. அமைதியாக குடும்பம் நடத்தனும்.. கேட்டா பொண்ணுக்கு பொறுமை ரொம்ப அவசியம் என்று சொல்லி அடக்குவது..!!

ஹூம்,.................. பெண்ணின் பல பிரச்சனைகளை மற்றொரு பெண்ணால் தான் உண்மையாக புரிந்து உணர முடியும்.. அப்படி இருந்தும் இப்படி நடப்பது கொடுமையிலும் கொடுமை..!!

நல்ல கவிதை தந்த ஷீக்கு வாழ்த்துகள்.

செந்தமிழரசி
12-03-2008, 12:15 PM
பெண்மையின் நடைமுறை நிலையை நேர் கொண்டுவந்து நிறுத்தி செல்கிறது உங்கள் கவிதை. ராணிகளும் தங்கள் வீட்டில் மாகாராணிகள்தாம். மாகாராணிகள் நாளைய மாமியார்கள், தங்களுக்கு வரும் மாகாராணிகளை அவர்கள் எப்படி நடத்தப்போகிறார்கள் என்பதைப் பொருத்தே மாகாராணிகளின் நிலைமைகள் மாற்றமுறும். நேரத்தோடு வீட்டுக்கு கிளம்பும் ராணிகள் வீட்டுக்குச் சென்றதும் மாகாராணிகளாக மாறுவதும் உண்மை. மாகாராணிகள் நிலை மாறாவிட்டாலும் பரவாயில்லை நாளை மாகாராணிகளை இன்றைய மாகாராணிகள் உருவாக்காமல் இருந்தால் போதும். வாழ்த்துகள் கவிஞரே.

சுகந்தப்ரீதன்
12-03-2008, 12:41 PM
வந்துட்டோம்ல..வந்துட்டோம்லன்னு சொல்லி எப்படியோ அடிச்சி புடிச்சி வந்துட்டீங்க...!!

ரீ-என்ரி மாதிரி இருக்குது...!! தொடர்ந்து எழுதி கலக்குங்கள் கவிஞரே...!!

கவிதைக்கு வாழ்த்துக்கள்..நண்பரே...!!

அமரன்
12-03-2008, 12:54 PM
ஷீயின் கவிதைகளை மீளவும் வாசிப்பதில் மகிழ்ச்சி.
உலகம் மாறியபடியே உள்ளது..
இன்னும் மாறி முடியவில்லை..
பலதரப்பட்ட பின்னூட்டங்களும் அழகு.
பாராட்டுகள் அனைவருக்கும்.

யவனிகா
12-03-2008, 01:56 PM
கவிதையை விட லே அவுட் அழகா இருக்கு...இருவரின் முகபாவங்களும்...

அப்ப எங்களை மாதிரி ராணிமகாராணிகளின் நிலை...இன்னும் சூப்பர்.

உக்காந்து யோசிக்கவோ கழிவிரக்கப்படவோ நேரமில்லை.
கிரீடம் கொஞ்சம் பெரிசு...கழுத்து வழிக்குது...கிரீடமோகம் இறக்கி வைக்க முடியல....

வாழ்த்துக்கள் ஷீநிசி...இன்னும் எதிர்பார்க்கிறேன்,

ஷீ-நிசி
12-03-2008, 03:21 PM
நன்றி உறவுகளே!

இளசு
14-03-2008, 10:05 PM
சிம்மாசனத்தில் அமரவைத்து
செருப்பால் அடிப்பவர்கள் உண்டு
தாலிக்கயிறு எனப் பேர்வைத்து
தாம்புக்கயிறு பிணைப்பவர் உண்டு..

எல்லாமே எது கூட என
எடை போடுவதில் இருக்கிறது..
அம்மா என அழைக்கும்
அன்பு பிரஜைகளால்
இத்தனை இம்சைகளையும்
இன்னும் பொறுக்கிறாள் மகராணி!


''இன்ஸ்டண்ட் '' கவிதையும் ''பில்டர்'' தரத்தில் வழங்கிய
இனிய கவி ஷீக்கு பாராட்டுகள்!

leomohan
14-03-2008, 10:11 PM
நச் கவிதை ஷீநிசி.

எப்போதும் இரண்டு பெண்கள் ஒன்றாக இருப்பதில்லை. காரணம் மகள்-தாயாகட்டும், சகோதரி-சகோதரியாகட்டும், மாமியார்-மருமகள் ஆகட்டும் இன்னும் பல பெண் உறுவுகள் ஆகட்டும் இன்னொரு பெண்ணை வயது வித்தியாசம் பார்க்காமல் ஒரு போட்டியாகவோ அல்லது ஏற்றுக் கொள்ளமுடியாத உறவாகவோ தான் நினைக்கிறாள். இரண்டு பெண்கள் ஒற்றுமையாக இருப்பது இன்னமும் உலக அதியசம் தான்.

பல கொடுமைகளை அனுபவித்து மகனை பெற்று அவனுக்கு திருமணம் செய்து வைத்த பின் மருமகள் தாயாகி பிறகு மாமியாராகும் போது அதையல்லாம் மறந்துவிட்டு மறுபடியும் தன் மருமகளுக்கு அதே கொடுமை செய்வது எந்த உளவியல் பாதிப்பு என்பது என்று சரியாக விளங்கவில்லை.

காலம் மாறினாலும் காட்சி தொடருகிறது... வருத்தம் தான்.

ஷீ-நிசி
15-03-2008, 04:02 PM
நன்றி இளசு ஜி.

நன்றி மோகன் ஜி

பென்ஸ்
19-03-2008, 06:01 PM
ஷி..
மிக அருமை, அவஸ்தைபடும் ஒரு மருமகளை பற்றி சொல்லி இருக்கிறீர்கள்...
இது மகளுக்கும் , ஏன் மாமியாருக்கும் கூட நடக்கிறதே....
குடும்பம் என்று ஒரு அமைப்பில் அவரவருக்கு ஒவ்வொரு வேலை கொடுக்கப்படுகிறது, அதை அவரவர் சரியாக செய்யும் போது தவறில்லை. அடுத்தவர் என்ன செய்கிறர் என்ன்று கணக்கேடுக்க துவங்கும் போது பிரச்சினையாகிறது...
தன் சொந்த காலில் இல்லாமல் , டிப்பன்டன்ட்டாக இருக்கும் மருமகளை பலரும் "அட்வாண்டேஜ்" எடுத்து கொள்வது உண்டு... இன்று பெண்கள் பணிக்கு செல்வதால் இதேல்லாம் மாறி வருகிறது.

ஷீ-நிசி
24-03-2008, 07:07 AM
நன்றி பென்ஸ்