PDA

View Full Version : புரிந்துகொள்ளுங்கள்!

நாகரா
11-03-2008, 02:26 PM
மனிதம் என்பது
கடவுளின் திட பாகம்

கடவுள் எனபது
மனிதத்தின் காலி பாகம்

திட பாகம் மெய்

காலி பாகம் உயிர்

திடம் காலியாகமல் இருக்க
காலியைத் திடமாய்ப் போற்று

உயிர்மெய் ஒருமை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14268) புரிந்தால்
மரணம் ஓர் மாபெரும் பொய்

அனுராகவன்
13-03-2008, 08:45 AM
ஆகா!! என்ன அருமையான தத்துவம்!
மிக குறைந்த வரிகளில்...
கடவுள் காலி(வெற்று)பாத்திரம்
மனிதன் திட(எண்ணம்)பாத்திரம்
அதனை அடைய காளிதான்(பரம்பொருள்) உற்ற தெய்வம்..
ஏன்னே!! உந்தன் மகிமை
கண்கள் அதை காண
எனக்கு இரு கண்கள்
போதாது..

நன்றி நாகரா...
என் வாழ்த்துக்கள்

நாகரா
13-03-2008, 10:11 AM

உமது பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அனு

kavitha
14-03-2008, 10:56 AM
நீங்கள் எழுதியகவிதைகளில் எனக்கு எளிதில் புரிந்த கவிதை இது தான் நாகரா.

"திடம் காலியாகமல் இருக்க
காலியைத் திடமாய்ப் போற்று"

திடம், காலி பலமுறை வந்தாலும்
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள் தருகிறது.
மிக நயமான வரிகள். நன்றி

நாகரா
14-03-2008, 02:00 PM
திடம், காலி பலமுறை வந்தாலும்
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள் தருகிறது.
மிக நயமான வரிகள். நன்றி

உமது பின்னூட்டத்துக்கு நன்றி, கவிதா.

செல்வா
14-03-2008, 03:48 PM
அண்ணா அருமையான சொல்லாட்சி உங்களிடம் இருக்கிறது. மொழியறிவும் மொழியாளுமையும் இருக்கிறது உங்களிடம். வாழ்த்துக்கள் அண்ணா....

மனிதமா? மனிதனா? - இரண்டும் பொருள் வேறு என நினைக்கிறேன்.
எனக்குத் தெரிந்த வரை மனிதம் என்பது மனிதத் தன்மை என்ன குணத்தைக் குறிக்கும் சொல்.. மனிதன் என்பது உருவைக்குறிக்கும் சொல்
மனிதம் எனும் போது ... திட வடிவம்..... குழம்புகிறதே அண்ணா...

நாகரா
15-03-2008, 04:03 AM

மனிதனைப் பொதுவாகக் குறிக்கவே மனிதம் என்று உபயோகித்தேன், செல்வா, மனிதன் என்று உபயோகித்திருந்தால் குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம், உமது வாழ்த்துக்களுக்கு நன்றி செல்வரே!

meera
15-03-2008, 11:20 PM
உயிர்மெய் ஒருமை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14268) புரிந்தால்
மரணம் ஓர் மாபெரும் பொய்
அருமை நாகரா நான் வாசித்த உங்களின் முதல் கவிதை இது.

மரணத்தை எண்ணி மரணிக்காமல் இருக்க ஒரு மருந்தாய் தந்திருக்கிறீர்கள்.:icon_b:

நாகரா
29-03-2008, 09:42 AM
அருமை நாகரா நான் வாசித்த உங்களின் முதல் கவிதை இது.

மரணத்தை எண்ணி மரணிக்காமல் இருக்க ஒரு மருந்தாய் தந்திருக்கிறீர்கள்.:icon_b:

நன்றி மீரா