PDA

View Full Version : எழுத்து



செந்தமிழரசி
11-03-2008, 08:30 AM
எழுத்துக்களுக்கும் எனக்கும்
இடையிலான சினேகம்
சிறு பொழுதுகளாலானதே.
வார்த்தைகளாய் பரிணமிக்கிற
எண்ணங்களை வளர்த்தெடுத்து
வரிகளாய்
வரியின் மீது வரிகளாய்
வர்ணிப்புகள் குழைத்து அடுக்கி
எழுதி முடித்த பிறகு சரிபார்க்கிறேன்
வெளியே எறியப்பட்டு
வெதும்பி தவிக்கிறது சுயம்.

அமரன்
11-03-2008, 08:39 AM
அதனால்த்தான்... எழுத்தாளன் ஒரு திறந்த புத்தகம் ஆகின்றான். பல்வேறுபட்ட காரணிகளால் புத்தகம் மிதிக்கப்பட்டு சேதாரமாக்கவும்படுகிறது. மதித்து பத்திரமாகப் பேணவும்படுகிறது. இதில் சுயத்தில் பங்கு அதிகமாகவே எனக்குத் தென்படுவது வழக்கம். பாராட்டுகள் செந்தமிழரசி. நிஜத்தின் பிரதி இக்கவிதை.

சுகந்தப்ரீதன்
11-03-2008, 08:39 AM
என்னுடைய எண்ணங்கள் கவிதையைப் அப்படியே உங்களுடைய எழுத்து கவிதையும் பிரதிபலிக்கிறது செந்தமிழ்...!!

வார்த்தைகள் கொண்டு வார்த்தெடுத்து இருக்கிறீர்கள்... எழுத்துகளை ஏடுகளில்...வாழ்த்துகள்.. தொடருங்கள்..!!

க.கமலக்கண்ணன்
11-03-2008, 09:38 AM
எண்ணங்களை மிக அழகாக

எழுத்துக்களாக்கி, எழுத்துக்களை

எளிமையான வார்த்தைகளாக்கி, வார்த்தைகளை

எழுச்சிமிக வரிகளாக்கி இனிமையான கவிதையாக்கிட்ட செந்தமிழரசி அருமை அருமை...

நாகரா
11-03-2008, 10:21 AM
வெளியே எறியப்பட்டு
வெதும்பி தவிக்கிற சுயம்
உள்ளே எழுகிறதும்
உவந்து களிக்கிறதும் நிஜந்தான்
செந்தமிழரசி

வாழ்த்துக்கள் நல்லதோர் கவிக்கு

செந்தமிழரசி
11-03-2008, 12:01 PM
அதனால்த்தான்... எழுத்தாளன் ஒரு திறந்த புத்தகம் ஆகின்றான். பல்வேறுபட்ட காரணிகளால் புத்தகம் மிதிக்கப்பட்டு சேதாரமாக்கவும்படுகிறது. மதித்து பத்திரமாகப் பேணவும்படுகிறது. இதில் சுயத்தில் பங்கு அதிகமாகவே எனக்குத் தென்படுவது வழக்கம். பாராட்டுகள் செந்தமிழரசி. நிஜத்தின் பிரதி இக்கவிதை.

பல்முகக் காரணிகளால் தன்னாலோ பிறராலோ அழுத்தப்பட்டு, எதுஎதுக்காகவோ தனக்கு தானே சாமாதானம் சொல்லி தன் சுயத்தை உள்ளிழுக்க வேண்டியுள்ளது இன்றையக் கலைஞனின் நிலை. இத்தனையும் கடந்து திமிறி தெறிக்கிற சுயம் அதிகப்படியான விமர்சனத்துக்குள்ளாகி அடங்கிவிடுகிறது ஒரு புள்ளியில். உற்று நோக்கி உரைத்த விமர்சனத்திற்கு நன்றிகள் பல நண்பரே.

சிவா.ஜி
11-03-2008, 12:12 PM
பெரும்பாலான சமயங்களில்...சுயத்தின் வெளிப்பாடு வெதும்பத்தான் செய்கிறது...ஓரெழுத்து எழுதுமுன் ஆயிரம் யோசனைகள்..எழுதி முடித்த பிறகு ஆயிரம் சிந்தனைகள்....இனி இந்த எழுத்து விமர்சனத்திற்கானது என வெளியேற்றியபின் ஆயிரம் கவலைகள்....
எழுத்தாளனின் பன்னிலை சங்கடங்கள்...அழகான வரிகளாய் வந்துள்ளது...வாழ்த்துகள் செந்தமிழரசி.

செந்தமிழரசி
12-03-2008, 11:23 AM
என்னுடைய எண்ணங்கள் கவிதையைப் அப்படியே உங்களுடைய எழுத்து கவிதையும் பிரதிபலிக்கிறது செந்தமிழ்...!!

வார்த்தைகள் கொண்டு வார்த்தெடுத்து இருக்கிறீர்கள்... எழுத்துகளை ஏடுகளில்...வாழ்த்துகள்.. தொடருங்கள்..!!

எனக்கு வெகுநாளாய் இருந்த வெதும்பல் அதை வார்த்தைப்படுத்தி கவிதையாக்கினேன். நன்றி தோழரே.

kavitha
14-03-2008, 11:04 AM
எழுதி முடித்த பிறகு சரிபார்க்கிறேன்
வெளியே எறியப்பட்டு
வெதும்பி தவிக்கிறது சுயம்.
இந்தவரிகள் வேறுகோணத்தைக்காட்டுகிறது தமிழரசி.
தன்னிச்சைக்கவிஞர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.
எனது கவிஞைத் தோழியின் கூற்றும் இஃதே. பல கவிதைத்தொகுப்புகள் வெளியிட்ட அவளது பதில்... "நான் எப்படி இந்தக்கவிதைகளையெல்லாம் எழுதினேன் என்பது எனக்கே தெரியவில்லை" என்பது. ஏனெனில் எதைப்பற்றி எழுதுகிறாளோ அதுவாகவே அவள் மாறிவிடுகிறாள். மீண்டும் தனது கவிதைகளை அவள் பரிசீலிக்கும்போது தொடர்பற்ற நிலையில் இருக்கிறாள். பல கவிதைகளை உதாரணத்திற்குச் சொல்லலாம். தாய்மை, இறப்பு, விவாகரத்து ... என அவள் எழுதிய கவிதைகள் அனைத்தும் பால்ய பருவத்தில் எழுதியது. படித்தால் யாருமே நம்ப மாட்டார்கள்.
உங்கள் கவிதைகளில் அவ்வாறு காணக்கிடைக்குமெனில் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள் தானே!
சுயம் இழப்பதற்காக வருந்தவேண்டாமே!

ஆர்.ஈஸ்வரன்
16-03-2008, 10:16 AM
பாராட்டுகள் செந்தமிழரசி

அனுராகவன்
16-03-2008, 10:48 AM
நன்றி செந்தமிழரசி அவர்களே!!
எழுத்துகளை இப்படி அள்ளி வீசி உள்ளீர்களே!!
பிரமாதம்..
தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்..
பாராட்டுகள் செந்தமிழரசி!!!