PDA

View Full Version : மின்னஞ்சல் கதை - 4: கை கொடுக்கும் கை



பாரதி
10-03-2008, 04:37 PM
கை கொடுக்கும் கை

ஒரு சிறிய பெண்குழந்தையும் அவளது தந்தையும் ஒரு
ஆற்றுப்பாலத்தை கடந்து கொண்டிருந்தார்கள்.

பாலத்தின் நிலையை அறிந்து சற்றே பயந்த தந்தை, "ஆத்துல தவறி விழுந்துடாம இருக்குறதுக்கு என் கைய கெட்டியா பிடிச்சுக்கோம்மா.." என்றார்.

அவள் சொன்னாள் - "இல்லப்பா... நீங்க என் கைய பிடிச்சுக்கோங்க" என்றாள்.

கொஞ்சம் குழம்பிய தந்தை "ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்?" என்றார்.

"வித்தியாசம் இருக்குப்பா... பெரிய வித்தியாசம்!" என்றாள் அவள்.

" நான் உங்க கைய பிடிச்சுகிட்டு இருந்தா... ஏதாவது நடக்கும் போது ஒரு வேளை நான் உங்க கைய விட்டுறதுக்கு சான்ஸ் இருக்கு. ஆனா நீங்க என் கைய பிடிச்சுகிட்டு இருந்தா.. என்னதான் நடந்தாலும் என் கைய நீங்க விடமாட்டீங்கன்னு எனக்கு நிச்சயமா தெரியும்பா..!" என்றாள்.

எந்த ஒரு உறவிலும் நம்பிக்கை வெறும் குருட்டுத்தனமானதல்ல; மனங்களின் சந்திப்பில் இருக்கும் பிரிக்க முடியாத பிணைப்புதான் நம்பிக்கை.

ஆகவே நீங்கள் அன்பு செலுத்தும் உறவின் கையை இறுக பற்றிக்கொள்ளுங்கள்; அவர்கள் பற்றிக்கொள்ளட்டும் என்று காத்திருக்க வேண்டாம்.

அமரன்
10-03-2008, 04:43 PM
கதையின் ஆரம்பக்கோட்டைக் கடந்ததும் சிறுமியின் கூற்று என்னையும் அம்முதியவர் ஆக்கியது. ஆர்வம் மேலிட வேகமெடுத்த வாசிப்பு ஓட்டம் வெற்றிக்கோட்டை தொட்டபோது மலைத்தேன். காரம் அதிகமான கடுக்குக்கதை. நன்றி அண்ணா..

மதி
10-03-2008, 05:11 PM
இது நல்லதொரு கதை.. சிறுமியின் பார்வை வித்தியாசமானது. நம்பிக்கையை காட்டுகிறது..
பகிர்ந்தமைக்கு நன்றி...

aren
11-03-2008, 03:26 AM
என்னவொரு விஸ்தீரமான பார்வை இந்த சிறுமிக்கு. நல்ல படிப்பினை பாரதி. தொடர்ந்து கொடுங்கள்.

சிவா.ஜி
11-03-2008, 04:25 AM
நம்பிக்கை....மிக மிக அவசியம்.....பட்டுப்புடவையை இரவல் கொடுத்துவிட்டு நாற்காலியோடு அலைவதைப் போல இல்லாமல்....எந்த உறவுடனும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

பெரியதொரு கருத்து சொல்லும் சிறிய நச் கதை.நன்றி பாரதி.

யவனிகா
11-03-2008, 12:31 PM
பெரிய கதை சொல்வது எளிது...குட்டிக் கதையில் பெரிய பொருள் சொல்வது கடினம்...முல்லாக் கதைகள்,ஜென் கதைகள்,கலீல் கிப்ரான் கதைகள் போல....நச்சென்று முகமறையும் கருத்துகளோடு...மறக்கவே முடியாத கதைகள்...தொடருங்கள் அண்ணா...சிறுமியாய் விரல் பிடித்து உடன் பயணிக்கிறோம். கதைகள் முதியவராய் எங்களைப் பற்றி வழிநடத்தட்டும்.....

அல்லிராணி
11-03-2008, 12:34 PM
பாரதிக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை அக்கா!:D

யவனிகா
11-03-2008, 12:37 PM
பாரதிக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை அக்கா!:D

நீங்க வேற அல்லி, நான் அவர் கதைகளைத்தான் முதிர்ந்ததாகச் சொன்னேன்...நான் சிறுமின்னு சொல்ல ஒரு சான்ஸ் குடுக்க மாட்டீங்களே...:frown::frown::frown:

மனோஜ்
11-03-2008, 05:59 PM
சிறப்பான பொருள் பொதிந்த கதை பாரதி அண்ணா நன்றி

இளசு
20-03-2008, 07:33 PM
உன்னைக் கவர்பவை எவை என அறிவேன் பாரதி!

நீ என்னைக் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை!

பூமகள்
21-03-2008, 10:42 AM
சின்ன குழந்தையின் கூற்றின் பிடியில் இன்னும் மனம் மலைத்து நிற்கிறது.
அன்பின் வழியில், கை பிடிப்பது யார் முதலில்...??!! முன் செல்வது யார்? வழி நடத்துவது யார்??
இது போல பல கேள்விகளுக்கான விடை தெரிந்து கொண்டேன்.

குறுங்கதையில் நெடும்கருத்து..!!
அழகிய கதைகள் இன்னும் இன்னும் தர வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன் பாரதி அண்ணா. :)

பாரதி
22-03-2008, 07:33 AM
கருத்துக்கள் தந்த அமரன், மதி, ஆரென், சிவா.ஜி, யவனிகா, மனோஜ், அண்ணா, பூமகள் ஆகியோருக்கு நன்றி.